Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம் !

Featured Replies

130127171342_kaffirs_srilanka_512x288_bb

கஃபீர் இனப் பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன்

ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.

 

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள். 

இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை.

சிங்களவர்களாகவே கணக்கெடுப்பு

 

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் இருக்கிறார்கள். 

 

வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே சிலரும் வாழ்கிறார்கள்.

 

இலங்கையின் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆவணங்களில் கூட நாட்டில் மொத்தமாக எவ்வளவு கஃபீர் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான புள்ளி விபரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது இவர்களும் சிங்கள மக்களாகவே கருதப்பட்டு கணக்கெடுக்கப்பட்டதாகவும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

 

130127172130_kaffir_children_srilanka_51

 

கஃபீர் இனச் சிறுவர்கள்

இசையை ரசிக்கும் மக்கள்

கஃபீர் இன மக்கள் இசை மற்றும் நடனத்தை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களின் இசையின் அடிநாதத்தில் ஆப்பிரிக்க இசை வடிவத்தின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் இசையின் கலப்பும் உள்ளது.

 

அவர்களின் சமூக ஒன்றுகூடல்களில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகிக்கிறன. எனினும் இந்த மக்கள் எந்த அளவுக்கு இலங்கை சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.

 

130127171844_kaffirs_sri_lanka_512x288_b

 

இசையும் நடனமும் இவர்கள் வாழ்வில் ஒரு அங்கம்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130127_kaffirs_partone.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இலங்கையில்... நூற்றாண்டு காலமாக வசிக்கிறார்கள் என்று, இன்று தான் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்றது அண்ணே எல்லாத்தையும் கொண்டாந்து மிக்ஸ் பண்ணி விட்டா அடையாளமே தெரியாதில்ல.... நல்ல காலம் சுண்டல் வேளைக்கே தப்பி Australia க்கு ஓடி வந்திட்டன்..... இல்லைன்னா என்னையும் படம் எடுத்து இந்த நியூஸ் ல போட்டிருந்திருப்பாங்க :(

என்ன செய்றது அண்ணே எல்லாத்தையும் கொண்டாந்து மிக்ஸ் பண்ணி விட்டா அடையாளமே தெரியாதில்ல.... நல்ல காலம் சுண்டல் வேளைக்கே தப்பி Australia க்கு ஓடி வந்திட்டன்..... இல்லைன்னா என்னையும் படம் எடுத்து இந்த நியூஸ் ல போட்டிருந்திருப்பாங்க :(

 

சுண்டல் நீங்க கட்டுடல் காளை .பின் என் இந்த ஏக்கம் பாஸ்... :D

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திங்களா கட்டுடல் வேற இருக்கின்னு சொல்லி பயமுறுத்திரிங்க..... :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்றது அண்ணே எல்லாத்தையும் கொண்டாந்து மிக்ஸ் பண்ணி விட்டா அடையாளமே தெரியாதில்ல.... நல்ல காலம் சுண்டல் வேளைக்கே தப்பி Australia க்கு ஓடி வந்திட்டன்.....

இல்லைன்னா என்னையும் படம் எடுத்து இந்த நியூஸ் ல போட்டிருந்திருப்பாங்க :(

 

ஆப்பிரிக்கா கறுவலாக இருந்தால்.....

நீங்கள் கடலை   போடவேண்டிய  அவசியமே இல்லையே  சுண்டல்......... :wub:

விரைவில் தமிழனுக்கும் இதே நிலை தான்

  • தொடங்கியவர்

விரைவில் தமிழனுக்கும் இதே நிலை தான்

 

இருக்கலாம்.

ஆனால் எம்மால் இதை தடுக்க, எமக்கொன்று ஒரு அரசியல் அலகை பெறமுடியும், நிச்சயம் பெற்று எமது விதியை மாற்றமுடியும்.

 

காலம் கடந்து கொண்டிருக்கின்றது, ஆனால் கடக்கவில்லை.

எனக்கும் இவர்கள் இலங்கையில் இருப்பது பற்றி இன்று தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இவர்கள் இலங்கையில் இருப்பது பற்றி இன்று தான் தெரியும்.

சொந்தங்களை மறக்கக்கூடாது  :D

  • தொடங்கியவர்

கஃபீர்கள்: ஆடவர்கள் மிகக் குறைவாகவுள்ள ஒரு சமூகம்

 

இலங்கையில் மிகக் குறைந்த அளவில் வாழ்ந்து வரும் கஃபீர் சமூகத்தில் ஆண்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது அச்சமூகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

130203164845_kaffirs_sri_lanka_512x288_b

தனது பேத்தியுடன் கொஞ்சும் கஃபீன் இனப் பெண்மணி ஒருவர்

 

 



இம்மக்கள் பிறப்பால் இலங்கையர்களாகவும் உதிரத்தால் ஆப்பிரிக்கர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இங்கும் இல்லை, அங்கும் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.


இலங்கையில் மற்ற சமூகங்களின் ஆண் பெண் விகிதாச்சாரத்தை ஒப்பிடும் போது, கஃபீர் இனத்தில் அந்த ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகமாக உள்ளது.

 

அவர்களிடையே பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் மிகவும் குறைவாகவும் உள்ளனர். தமது சமூகத்தில் ஏன் ஆடவர்கள் குறைவாக உள்ளார்கள் என்பதை அம்மக்களால் குறிப்பிட்டு துல்லியமாக சொல்ல முடியாமல் உள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130203_kaffirs_package_parttwo.shtml



ஆனால், தமது இனத்து ஆடவர் மற்றும் பெண்கள் தொடர்ச்சியாக தமிழ், சிங்கள மற்றும் பறங்கியர் ஆகியோரிடையே திருமணம் செய்து வந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இலங்கைவாழ் கஃபீர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கோவிலகே லவுண்டி கிறிஸ்ட்டி கூறுகிறார்.


தலைமுறைகளைக் கடந்த ஒரு பிரச்சினையாக இது இருந்தாலும், இதற்கான தீர்வு என்ன என்பதை யாராலும் சுட்டிக்காட்ட முடியவில்லை.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த இன மக்களே இலங்கையில் இல்லாமல் போகும் ஒரு அபாயம் உள்ளது என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

 

 

 

 

  • தொடங்கியவர்

இலங்கையில் கஃபீர் சமூகத்தின் எதிர்காலம் என்ன ?

 

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வரும், கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களான கஃபீர் மக்களுக்கு, எதிர்காலம் என ஒன்று உள்ளதா என்பதே, அந்தச் சமூகத்தின் முன்னர் இன்று உள்ள மிகப் பெரிய கேள்வி.

 

130210181513_kaffir_kitchen_512x288_bbc_

கஃபீர் இன மக்களின் ஒரு வீட்டு சமயலரை.

அவர்கள் வாழ்க்கை நிலையின் ஒரு எடுத்துக்காட்டு.

 

 

ஆப்பிரிக்காவிலிருந்து 350 ஆண்டுகளுக்கும் முன்னர் இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்களின் வம்சாவளியினரான இம்மக்கள் பல பிரச்சினகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை விட, பிரச்சினைகளுக்கு நடுவே வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

 

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டும் அவர்களது வாழ்க்கையில், சமூக மற்றும் கலாச்சார ரீதியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

தலைமுடியை சீவுவது முதல் உடைகள் அணிவது வரை இம்மக்கள் சிங்களப் பெண்மணிகளின் சாயலைத்தான் பின்பற்றும் நிலை இன்றுள்ளது.

 

இதன் காரணமாக தாங்கள் தம்மை மெல்ல மெல்ல இழந்து வருவதாகவும், அது தடுக்க முடியாத ஒன்று எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

 

எனினும் பல ஆண்டுகளாக இந்த கஃபீர் இன மக்கள், தமிழ் மொழியிலேயே பாடசாலையில் கற்றும், பேசியும் வந்தனர் என இலங்கையிலுள்ள கஃபீர் சமூக நலச்சங்கத்தின் தலைவர் கோவிலகே கிறிஸ்ட்டி சுட்டிக்காட்டுகிறார்.

 

இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் இலங்கையில் கஃபீர் சமுகம் இல்லாமல் போய்விடக் கூடும் எனும் கவலைகள் தமக்கு இருப்பதாகவும் கிறிஸ்ட்டி கூறுகிறார்.

 

இந்த மக்கள் மிகவும் பலவீனமான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பு என்று சுட்டிக்காட்டுகிறார், உள்ளுர் சமூக ஒருங்கிணைப்பாளர் இர்ஷாத் ரஹமத்துல்லா.

 

கஃபீர் இன மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்புகள் ஆகியவை இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது எனவும் கூறும் இர்ஷாத் ரஹமத்துல்லா, பெரும்பான்மை சமூகத்துக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இம்மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.


இலங்கையில் இம்மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்து நமது சிவராமகிருஷ்ணன், தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடரின் மூன்றாம் மற்றும் நிறைவுப் பகுதியை இங்கே கேட்கலாம்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130210_kaffirs_partthree.shtml

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களும்+பெண்களும் சமமாக இருப்பதே நல்லது:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.