Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது புதிய தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா

Featured Replies

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தடவை ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அமெரிக்காவும் 23 நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130128_usgenevalanka.shtml

  • தொடங்கியவர்

US to bring new human rights resolution against Sri Lanka

The US will bring a fresh resolution to the UN Human Rights Council in a bid to force Sri Lanka to deliver on promises to probe its troops for war crimes, top US diplomats announced on Monday after talks with Colombo.

"The US has decided to sponsor a procedural resolution (against Sri Lanka) at the March 2013 sessions of the UNHRC," Deputy Assistant Secretary of State James Moore said, adding Colombo must do more to ensure accountability after decades of war.

http://timesofindia.indiatimes.com/world/south-asia/US-to-bring-new-human-rights-resolution-against-Sri-Lanka/articleshow/18225443.cms

  • தொடங்கியவர்

மூன்று பிரதி இராஜாங்க செயலாளர்களின் ஊடக சந்திப்பின் போது பிரதி இராஜாங்க செயலர் ஜேம்ஸ் ஆர். மூவர் ஆற்றிய ஆரம்ப உரை (முன்னரே தயாரிக்கப்பட்டது)

ஜனவரி 28, 2013

இலங்கைக்கு மீளவருகைதந்திருப்பதில் மிக்க மகிழ்சசி ; . இலங்கையை நெருக்கமாக அவதானிக்கின்ற வாஷிங்டனிலுள்ள எனது இரு சகாக்களுடன் இங்கு வருகை தந்தமை பாக்கியமாகும். இந்த விஜயத்தை ஏற்பாடுசெய்தமைக்காக தூதுவர் சிஸன் மற்றும் எமது இலங்கை நண்பர்களுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையுடன் அதன் சுதந்திர காலப்பகுதிக்கும் நீண்ட உறவை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை கொண்ட உறவை நாம் மதிப்பதுடன் அதே உணர்வுடனேயே நாம் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளோம்.

இலங்கைக்கு ஜனவரி 26ம் திகதி வருகை தந்த நாம், இலங்கை அரசாங்கம், இராணுவம் அரசியல் கட்சிகள்  மற்றும் சிவில் சமூகத்தவர்களுடன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆக்கபூர்வமானதும் வெளிப்படையானதுமான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ,  இராணுவ தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்ட நாம்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர்; லலித் வீரதுங்க மற்றும்
ஏனைய அதிகாரிகளைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கையுடனான ஐக்கிய அமெரிக்காவின் உறவானது பரந்ததும் ஆழமானதுமாகும்.

கண்ணிவெடி அகற்றல், கல்வி நிகழ்சித்திட்டங்கள், கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகள், சிவில் சமூகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கான உதவிகள் என இலங்கையுடன் பரந்துபட்ட ரீதியில் நாம் கைகோர்த்து செயற்படுகின்றோம் .

எமது அனைத்து சந்திப்புக்களின் போதும் நாம் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும்  தேசிய செயற்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முயற்சிகள் தொடர்பாக நாம் கலந்துரையாடியிருந்தோம்.

அத்தோடு நின்றுநிலைக்கும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான முயற்சிகளில் துரித முன்னேற்றம் காணப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச்சந்திப்புகளின் போது கலந்துரையாடியிருந்தோம். இதற்கு வெளிப்படையான ஆட்சி முறை முக்கியமென்பதுடன் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் உட்பட போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முறையாக முன்னெடுத்துச்செல்வதும் அவசியமாகும்.

வினைத்திறமிக்க சிவில் சமூகம், சுயாதீன நீதித்துறை, சுதந்திர ஊடகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பூரண மதிப்பளிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் நாம் கலந்துரையாடியிருந்தோம் .  வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் செப்டம்பரில் நடத்தஎண்ணியிருப்பதனை நாம் வரவேறகின்றோம். அத்துடன் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச ;சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் ஊக்குவிக்கின்றோம்.

இலங்கைவாழ் அனைத்து சமூகத்தவர்களும் சமமான உரிமைகள்; மற்றும்  கௌரவத்தை அனுபவிக்கக்கூடிய வகையிலும் பாதுகாப்பு மற்றும் சுபீட்சகரமான எதிர்காலத்தை பகிர்நதுகொள்ளக்கூடியதுமாகவிருக்க வேண்டும் என இலங்கையின் நீண்டகால நண்பன் என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.

http://photos.state.gov/libraries/sri-lanka/5/pdfs/Opening_Statement_TriDAS-Tamil.pdf

Edited by akootha

இந்தியாவுக்கு வழமையாக காட்டுகிற தண்ணியை பார்த்து அமெரிக்க இலேசில் மசியாது போலிருக்கு.

பிரேணை வருமோ இல்லையோ தெரியாது. ஆனால் அது என்ன செய்ய போகிறது என்ற கேள்வி ஏற்கனே பலமாக எழும்பிவிட்டது.

பிரேரணை எதுவும் செய்யாவிடாலும், தன்னை கைமுணுவை விட பெரிய அரசராக வர்ணிப்பவர்களின் பெருமையை இறுக்கமாக குத்தும். அந்த வேதனையை உணர்ந்துதான் ஆக வேண்டும்.

  • தொடங்கியவர்

 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ,  இராணுவ தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்ட நாம்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர்; லலித் வீரதுங்க மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்.

மகிந்த சந்திப்பை தவிர்த்தாலும் தங்கள் நிலைமையை தாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பதையும் என்ன செய்தால் தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக கூறி இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு வழமையாக காட்டுகிற தண்ணியை பார்த்து அமெரிக்க இலேசில் மசியாது போலிருக்கு.

பிரேணை வருமோ இல்லையோ தெரியாது. ஆனால் அது என்ன செய்ய போகிறது என்ற கேள்வி ஏற்கனே பலமாக எழும்பிவிட்டது.

பிரேரணை எதுவும் செய்யாவிடாலும், தன்னை கைமுணுவை விட பெரிய அரசராக வர்ணிப்பவர்களின் பெருமையை இறுக்கமாக குத்தும். அந்த வேதனையை உணர்ந்துதான் ஆக வேண்டும்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் அக்கறை - சீனா.

இந்த மூன்று வருட காலத்தில் சீனாவின் வளர்ச்சி அதன் ஆதிக்கம் என்பனவற்றை இந்தியா கண்ணை மூடியே பார்த்தவண்ணம் உள்ளது. ஆனால், அமெரிக்காவும் அப்படியே  இருந்தால் சீனா மேலும் தனது பலத்தை வளர்க்க விட்டதாக அமைந்துவிடும்.

பிரேரணை என்பது அமெரிக்காவிற்கு கிடைத்த சந்தர்ப்பம் அதை அமேரிக்கா தவற விடவிரும்பாது.

புலிகள் சம்பந்தமாக அமெரிக்காவின் கொள்கை பிழையானது. இதை திருத்த தமிழரிடம் பலமான அரசியல் அமைப்பு இருக்கவில்லை. அதில் நாங்கள், தாயகமக்கள், கூட்டமைப்பு, புலிகள் வரைக்கும் பொறுப்பு.

இலங்கையில் பலதடவைகள், சட்டத்தை கையில் எடுத்து , இலங்கையின்  சிங்கள இனத்தவரும், முஸ்லீம் இனத்தவரும் இனக்கலவரங்களை தொடக்கி நடத்தியிருக்கிறார்கள். இனக்கலவரத்தை இலங்கையில் நடத்தாத ஒரு இனம் தமிழர் மட்டுமே.

அமெரிக்கா புலிகளை பயங்கரவாதிகளாக நினைத்து தடை செய்தபோது இலங்கையின் முதல் இனகலவரத்தின் வன்முறையை சட்டரீதியக கையாண்டவர்கள் தமிழர் என்ற சரித்திரத்தை தெரிந்திருக்கவிலை. இந்திய உதவி கிடக்கும் வரை JVP நடத்திய பயங்கரவாதத்திலிருந்து இலங்கைத்தலைவர்களை பாதுகாத்தவர்கள் தமிழர் என்ற சரித்திரம் அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கவில்லை. 1956 வரை இலங்கையின், சட்டம், ஒழுங்கு, பொருளாதாரம் என்பவற்றை காப்பாறிவர்கள் என்ற சரித்திரம் அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கவில்லை.

ஆயுதம் இல்லாமல் வெற்றிகளை அடுக்கிக்கொண்டு போனதும், தற்கொலை முறையை பாவித்ததும் புலிகளை கண்டு சில நாடுகள் பயந்ததிற்கு காரணம். அமெரிக்கா ஒரு படி மேலே சென்று, புலிகள் வென்றால் தமிழ் ஈழத்தில் இன்னொரு ஷியா சட்டத்தை, இன்னொரு வடகொறியாவை அமைக்க போகிறார்கள் என்ற பிழையான அனுமானத்தை வைத்துதுதான் தமது கொள்கைகளை இயக்கினார்கள்.

அவர்கள் நாடு பிரிந்த பின்னர் வடக்கு கிழக்கில் ஒரு பயங்கரவாத நாட்டைதான் கற்பனை பண்ணிப்பார்த்தார்கள். இலங்கையின் ஜனநாயகம் இதுவரை அங்கிருந்த மிகப் பலவீனமான இனமான தமிழர்களால்தான் பாதுக்காக்கப்பட்டு வந்தது என்பதை அவர்கள் கண்டிருந்திருக்கவில்லை. இன்று தமிழரை ஒடுக்கி இலங்கையின் ஜனநாயகத்தை சிதைத்த பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலவேறு நடவடிக்கைகைளை எடுத்து வருகின்றனர்: அதில் மக்களுக்கு உதவுதல் மிக முக்கியமான ஒன்றாகும்.

அதேவேளை அரசியல் தீர்வு ஒன்று சாத்தியமானால் மட்டுமே அந்த மக்களுக்கு நிலையான நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

எனவே இந்த ஐ.நா. அழுத்தங்கள் ஊடாக சிங்களத்தை அரசியல் தீர்விற்கு சம்மதிக்க வைப்பதில் நாமும் அழுத்தங்களை தரவேண்டும், தருபவர்களுக்கு உதவவேண்டும்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிட்டால் ...இதுவே இறுதி சந்தர்ப்பமாக அமைந்துவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

People comment on twitter that this resolution US is going to bring is very weak. US leaves India to sort out it's backyard.

தனி தமிழ் ஈழத்திற்கான முதலாவது படியாக அமைய வேணும்

  • தொடங்கியவர்

People comment on twitter that this resolution US is going to bring is very weak. US leaves India to sort out it's backyard.

  It is not the US left India in its' backyard. India itself left in the front and backyards  :D 

Perhaps India was told about these actions last March should Sri Lanka fail to meet certain criteria, and Sri Lanka did fail. India has not only influence over Sri Lanka but also on USA.

போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விசாரணைக்கு வழிவகுத்தால் பரவாயில்லை.

ஆனால் இலங்கை அரசாங்கமே குற்றவாளி. அப்படியிருக்க அவர்கள் படையினர் மீது விசாரணை செய்ய வேண்டுமென்று பலவந்தப்படுத்தும் நோக்கோடு பிரேரணை கொண்டுவருவதென்பது கேலிக்குரியது.

அப்படியே கொண்டுவந்தாலும் அதை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என்பது இவர்களுக்கு தெரியாதா என்ன?

Edited by துளசி

 தெரியும், தெரிந்து தான் வலையை விரிக்கிறார்கள்.

சிங்களம் எந்த ஒரு விசாரணையையும் விசாரிக்க மறுப்பதுடன் பொதுமக்கள் கொல்லப்படவும் இல்லை என கூறி உள்ளது. இதனால் எந்த நாடும் சிங்களத்திற்கு ஆதரவு தர பின்னிப்பதுடன் சர்வதேச விசாரணைக்கு ஆதரவும் தர வேண்டிய நிலை ஏற்படும்.

It is not the US left India in its' backyard. India itself left in the front and backyards :D

Perhaps India was told about these actions last March should Sri Lanka fail to meet certain criteria, and Sri Lanka did fail. India has not only influence over Sri Lanka but also on USA.

That's 100% true, the influence India had over theUSA was the main cause for the distraction of a Tamil state

  • தொடங்கியவர்

அமெரிக்க பிரதிநிதிகளின் விஜயம் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும்; விக்கிரமபாகு கருணாரட்ன

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களது அபிலாசைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கமாக அமைய வேண்டும் என நவசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அமெரிக்காவின் நிதி உதவியினாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இயங்கி வருகின்றது. எனவே நிச்சயம் அந்த நாட்டின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியும் என்று நவசமாஜக் கட்சியின் தலைவரான விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

இருப்பினும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.

அத்துடன் நாட்டில் மனித உரிமை மீறல்கள் , நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாமை தொடர்பில் அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டிலேயே உள்ளது.

எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நிச்சயம் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா ஐ.நா வில் முன்வைக்கும் .ஆனால் இந்த அரசாங்கம் அமெரிக்காவின் பணத்தில் ஓடுகின்றது எனவே அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தம் எவ்வாறு இருக்கப்போகின்றது எனத் தெரியாது.

இருப்பினும் இந்தியா உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் அக்கறை கொள்ளவில்லை தமிழரைப் பயன்படுத்தி இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அதன் மூலம் காணிகளை கொள்ளையடிப்பதையும் , வர்த்தகத்தை விஸ்தீரணப்படுத்தவுமே இந்தியா முயல்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=418941800529574178

Edited by akootha

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான அறிக்கை அல்ல

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மாநாட்டில் சமர்பிக்கப்படும் அறிக்கையானது இலங்கைக்கு எதிரான  அறிக்கை அல்லவென என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் கிறிஸ்டோபர் கீல் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

இந்த அறிக்கையானது நாட்டின் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

http://www.hirunews.lk/tamil/52352

இருப்பினும் இந்தியா உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் அக்கறை கொள்ளவில்லை தமிழரைப் பயன்படுத்தி இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அதன் மூலம் காணிகளை கொள்ளையடிப்பதையும் , வர்த்தகத்தை விஸ்தீரணப்படுத்தவுமே இந்தியா முயல்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.dailynews.lk/2013/01/28/bus01.asp

A team of reputed entrepreneurs from United States will arrive in Sri Lanka to explore the possibility of investing in Sri Lanka Sri Lanka’s Ambassador to the US and Mexico Jaliya C. Wickramasuriya told Daily News that these investors are involved in oil exploration and related services, power generation, tourism, and other areas.

  Too little and too late ?

Super!

What about the Trincomalee oil tank farm? America badly needs such a good facility and India should be ousted out of there too. :D

உள்ளற கரையெல்லாம் அமெரிக்கா உள்ளட்டு, அம்பாந்தோட்டைக்குள்ளாலும் திருகாணி போட போகிறது. அங்கு சீனா கல்லடிச்சு முடிய அமெரிக்கன் கப்பல்கள் வந்து முகாமிட்டாலும் இடலாம். 

இதனால்த்தான் டவ்வி ஜோன் இலங்கையின் முதலீட்டு தளத்தை தாக்கி அழித்தவர். யானை வருமுன்னே மணி ஒசை வந்தது.  

பிப்ரவரி 28 டெட் லன். ஓடியாடி எதுவோ செய்து முடியுங்கோ. 

  • தொடங்கியவர்

அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன?
ஜன 30, 2013
        
எனவே, சிறீலங்காவின் விடயத்தில் அமெரிக்கா வித்தியாசமான முறையில் செயற்பட வேண்டுமென்று சர்வதேசம் பூராகவுமுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் எப்படிச் செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் தெளிவான நிலைப்பாடொன்று இருக்கலாம். ஆனால், புலம்பெயர் தமிழ் மக்கள் முயற்சி செய்வது ஈழத்தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையலாம்.

புலம்பெயர் தமிழ் மக்கள்  அந்தந்த நாடுகளிலுள்ள அமெரிக்கா தூதரகங்களுக்கு முன்பாக அமைதியான முறையில் ஒன்றுகூடி அமெரிக்காவிற்கு அழுத்தமொன்றைக் கொடுக்க வேண்டும். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு இலத்திரனியல் கடிதம் (ஈ-மெயில்) மற்றும் தந்தி என்பன அனுப்புவதன் மூலமும் இதனைச் சாதிக்க முடியும். இந்த விடயங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் அக்கறை எடுக்க வேண்டுமென்று ஈழத்தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=40&t=116015&qpid=855871

  • தொடங்கியவர்

இலங்கை மனித உரிமையை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முன்வருகிறது

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை உறுதி செய்வதற்கு, தமது அமைப்பு உதவிகளை வழங்கும் என  ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி திட்டத்தின் பிரதி இலங்கைப் பணிப்பாளர் என்ரிக்கோ கவேக்லியா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதும், அதனை மேம்படுத்துவதுமே 2013 -2017ம் ஆண்டு வரையிலான முக்கிய இலக்காகும் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

கண்காணிப்பு, முறைப்பாடுகள், விசாரணைகள், விழிப்புணர்வு ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவும் இணைந்து, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு 15 மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளன.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களது நலனை கருத்திற் கொண்டு இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை பிராந்திய இணைப்பு அதிகாரிகள் மக்களை சிக்கலின்றி சந்திப்பதற்கு மோட்டார் சைக்களின் பயனுள்ளதாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=804831803030493028

  • கருத்துக்கள உறவுகள்

காரமான ப்ரேரணை மூலத்தை தயார் செய்வார்கள்..! இந்திய ராஜதந்திரிகள் மீண்டும் நீரூற்றி குளிர்விப்பார்கள்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.