Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னகர்கிறது இராணுவப் பாதுகாப்பு வேலி; வலி. வடக்கு மக்கள் அச்சத்தில்

Featured Replies

வலி. வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை 150 மீற்றர் தூரம் வரை முன்னகர்த்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முன் நகர்வால் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் மீண்டும் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கியுள்ளன.

வலி. வடக்கில் 24 கிராமசேவையாளர் பிரிவுகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. இந்த 24 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நிரந்தரப் பாது காப்பு வேலிகள் முதலில் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை முதல், தொண்டமானாறு தொடங்கி காங்கேசன்துறை வரையான நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்கு உள்பக்கமாக உள்ள மண் அணை தரைமட்டமாக்கப்பட்டது. இதன்போது இதற்குள் அடங்கும் வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்குப் பின்புறமாக பளை வீமன்காமம் பாடசாலை அமைந்துள்ளது. இந்தப் பாடசாலையிலிருந்து கிட்டத்தட்ட 200 மீற்றருக்கு அப்பால் முதலில் நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு வேலிக்கு வெளியில் உள்ள பிரதே\த்தில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்கு வெளியில் உள்ள மாவிட்டபுரம் ரயில் நிலையத்தையும் புனரமைப்பதற்காகத் தண்ட வாளங்களும் போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல், நிரந்தரப் பாதுகாப்பு வேலியை முன்நகர்த்தும் நடவடிக்கையை படையினர் மேற்கொண்டுள்ளனர். இதன் பிரகாரம் முன்னர் வேலி இருந்த இடத்திலிருந்து 150 மீற்றர் வரை தற்போது அது முன்நகர்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நிரந்தரப் பாதுகாப்பு வேலி பளை வீமன்காமம் பாடசாலைக்கு மிக அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படையினரால் மீளக்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட சில பகுதிகள் மீண்டும், நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நிரந்தரப் பாதுகாப்பு வேலி ரயில் தண்டவாளத்துக்கு வெளிப்புறமாக காங்கேசன்துறை வரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ரயில் பாதைப் புனரமைப்பிலும் பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=856601807402886727



நட்டாற்றில் நாம் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=116144

  • கருத்துக்கள உறவுகள்

817947967valigamam_north_new_road.jpg

யாழ் வலிகாமம் மக்களை ஆசை காட்டி ஏமாற்றிய இராணுவம்! நடுத்தெருவில் மக்கள்

யாழ் வலிகாமம் வடக்கில் ஜனவரி மாதமளவில் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு பிரதேசத்தில் நிரந்தர எல்லைக்கான கொங்றீட் தூண் வேலியும், அதனையொட்டியதாக புதிய வீதியொன்றும் அமைக்கப்படுவதாக அந்தப் பகுதிகளைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

செப்டம்பர் மாதம் நடைபெற்ற வலிகாமம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பலாலி விமான தளத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ள அதியுயர் இராணுவ பாதுகாப்புப் பிரதேசத்தின் ஒரு பகுதி அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, இந்த அனுமதி ஜனவரி மாதம் கிடைக்கும் என இடம்பெயர்ந்த குடும்பங்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், கடந்த மூன்று தினங்களாக அந்தப் பகுதியில் புதிய வீதியமைக்கும் பணியும், நிரந்தர வேலி அமைக்கும் பணியும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான வீதி அமைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வீடுகள் உடைக்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். மீள்குடியேற்றத்திற்கென அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுவன், வீமன்காமம் போன்ற பகுதிகளில் கைவிடப்பட்டுள்ள தமது வீடுகள், காணிகளைத் துப்பரவு செய்வதற்காகச் சென்ற மக்கள், மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பகுதியில் அதன் எல்லையில் இராணுவத்தினர் வீதி மற்றும் நிரந்தர வேலி அமைப்பதையும் அந்த இடங்களில் இருந்த வீடுகள் உடைக்கப்படுவதையும் நேரில் கண்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். 

சிலர் தமது வீடுகள் உடைப்பதை ஆட்சேபித்து அவற்றை உடைக்க வேண்டாம் என்று இராணுவத்தினரிடம் கோரிய போதிலும், மேலிடத்து உத்தரவுக்கமைவாகவே தாங்கள் இதனைச் செய்வதாக அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். 

அத்துடன் குறிபபிட்ட சில இடங்களில் முன்னர் இருந்த இராணுவ உயர்பாதுகாப்பு பிரதேசத்திற்கான எல்லை 150 மீற்றர் தூரம் முன்னால் நகர்த்தப்பட்டிருப்பதாகவும் சுகிர்தன் தெரிவித்திருக்கின்றார். 

இந்த விடயம் குறித்து பிரதேச செயலாளர், யாழ் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறையிட்டும் எதுவும் நடக்காததையடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோரிடம் தாங்கள் முறையிட்டிருந்த போதிலும் எல்லைகளை நிரந்தரமாணிக்கும் பணியும், பொதுமக்களின் வீடுகளை உடைப்பதுவும் நிறுத்தப்படவில்லை என்று வலி வடக்கு பிரதேச தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோருக்கும் இதுபற்றி முறையிடப்பட்டிருக்கின்றது. 

(பீபீசி

)

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவ பிரசன்ன​ம் காரணமாகவே வடக்கில் இயல்பு நிலை திரும்பவில்லை

 

sri_lanka_war_civilians-300x168.jpgசிவில் சமூகத்தின் மீதான தனது தாக்குதல்களை தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசாங்கம், 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கத் தவறிவிட்டது என்று 2013 ஆம் ஆண்டுக்கான தனது உலக அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

அரபு வசந்தத்துக்கு பின்னரான நிலைமைகள் உட்பட, 90 க்கும் அதிகமான நாடுகளில் கடந்த வருட மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது 665 பக்க அறிக்கையில் அந்த அமைப்பு ஆராய்ந்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டில் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் எந்த விதமான அடிப்படை முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பலவிதமான சட்டங்கள் ஒழுங்குவிதிகளில் தடுத்து வைப்பதற்கான அதிகாரம் பரந்துபட்ட அளவில் நிலைத்திருப்பதாகவும்,அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் குற்றச்சாட்டு எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறுபான்மை தமிழர்கள் மீது பாதுகாப்புப் படைகள் சகட்டு மேனிக்கு கைதுகள் மற்றும் சித்ரவதைகளை மேற்கொள்வதாகவும், பாலியல் வல்லுறவுகள் கூட மேற்கொள்ளப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டதாக கூறப்படும் தமிழர்கள் நாடுகடத்தப்படும் போது அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு அறிக்கை கூறியுள்ளது.

மனித உரிமைக் குழுக்களின் செயற்பாட்டால் வடக்கில் வாழும் தமிழர்கள் பல பலன்களைப் பெறும் அதேவேளையில், இராணுவ பிரசன்னம் காரணமாக அங்கு நிலைமை வழமைக்கு திரும்பாமல் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அடிப்படை உரிமைகளின் கீழ் போர் நடந்த வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களின் ன் பல பிரச்சினைகளை அரசாங்கம் கையாள வேண்டியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனரான பிரட் அடம்ஸ் கூறியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு மார்ச் மாதத்தில் வரவிருக்கும் நிலையில் இலங்கை அங்குள்ள மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்த நிறையச் செய்ய வேண்டியுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கூட்டமைப்பின் தலைமை இந்திய அரச காட்டுமிராண்டிகளின் எடுபிடியாக இருக்கும் வரை இது போன்ற ஆக்கிரமிப்புகள் தொடரச் செய்யும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.