Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக எல்லைகளில் பதட்டம் ,படை குவிப்பு: வைகோ தலைமையில் 1500 பேர் ரெயில்களில் டெல்லிநோக்கி படையெடுப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Vaiko-going-delhi-070312-264-150.jpg

இனவழிப்பு செய்த மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார்.

  

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ராஜபக்ஷவின் வருகைக்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ராஜபக்ஷ நாளை இரவு திருப்பதி வரும்போதும், நாளை மறுநாள் சாமி தரிசனம் செய்யும்போதும் 2 நாட்கள் திருப்பதியில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முற்றுகை போராட்டம் நடத்துகிறது. திருப்பதியில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் தொண்டர்கள் செல்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவை ஓட்டி உள்ள எல்லையோர கிராமங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 1000 பேர் நாளை காலையில் திருப்பதி புறப்பட்டு செல்கிறார்கள். ம.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் வேலூர், திருவள்ளூர் மாவட்டம் வழியாக நாளை காலை ஆந்திராவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் எந்தவித பாதுகாப்பும் போடப்படவில்லை. இதையொட்டி திருப்பதி திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் எல்லைகளில் பொலிஸார் நிறுத்தப்படுகிறார்கள். திருப்பதி மலைப் பாதையில் வாகனங்களை தீவிர வாகன சோதனைக்கு பின்னரே பொலிஸார் அனுமதிக்கின்றனர்.

போராட்டக்காரர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆந்திர பொலிஸார் சட்டம் ஒழங்கு பாதிக்கப்படும் எனக் கருதி தமிழக பொலிஸார் உதவியை நாடினால் எல்லையில் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் பொலிஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆந்திராவில் தமிழக எல்லையோர பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆந்திர பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர வாகன சோதனைக்கு பிறகே ஆந்திரா மாநிலத்துக்கு வாகனங்கள் அனு மதிக்கப்படுகின்றன.

டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க.வினர் சுமார் 1500 பேர் ரெயில்களில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்கள். நாளை காலையில் அனைவரும் ஜந்தர்மந்தரில் கூடுகிறார்கள். அங்கிருந்து வைகோ தலைமையில் பிரதமர் வீடு நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்கிறார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாட்டில் இருந்து எந்தெந்த ரெயில்களில் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பது ரகசிய பொலிஸ் மூலம் டெல்லி பொலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜந்தர்மந்தர் மைதானத்திலேயே அனைவரையும் கைது செய்ய டெல்லி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ராஜபக்ஷ வருகையை கண்டித்து வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

 

Vaiko-going-delhi-070312-264-001.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=75532&category=TamilNews&language=tamil

************** கருணாநிதி வீட்டுக்குள் கறுப்புச் சட்டை போட்டபடி எண்ணிக்கை தெரியாத பெண்டாட்டிமாருடன் பயங்கரவாதி ராஜபக்சவின் வருகையை கொண்டாடுகிறார்!

 

வைகோ தனது கட்சியினருடன் தன்னாலான முயற்சிகளை மனப்பூர்வமாக செய்து ஒரு உயர்ந்த மனிதனாக காட்சியளிக்கிறார்!

Edited by nunavilan

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து

 

ராஜபக்‌ஷவின் வருகையைக் கண்டித்து, செங்கல்பட்டில் மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை சென்று கொண்டிருந்த சோழன் விரைவுவண்டியை மறித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

 

இதே போல் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜபக்‌ஷவின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அவ்வப்போது இலங்கை அதிபருக்கு வரவேற்பை அளிக்கும் மத்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

 

549261_532337410139593_2117260317_n.jpg



46698_485472084821911_1100226895_n.jpg

         
                

இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை கண்டித்து சாலை மறியலில் பல்கலைக்கழக மாணவர்கள்!camera_icon.jpeg
                    
             
                                 

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று
குவித்து தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இன வெறி அரசின் அதிபர்
இராஜபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் வகுப்புகள் தொடங்கியவுடன்
தமிழியல் துறை வாயிலிலிருந்து ஒவ்வொரு வகுப்பாக மாணவர்கள் வெளியேறி
கலைத்துறை, அறிவியல் புலம், பொறியியல் புலம் என ஆயிரக்கணக்கான மாணவர்கள்
திரண்டனர். இனக்கொலை குற்றவாளி இராஜபக்‌ஷ வருகைக்கு சிவப்புக் கம்பளம்
விரிக்கும் இந்திய அரசின் தமிழினப் பகையை கண்டித்து முழக்கமிட்டபடி
அண்ணாமலைப் பல்கலைக் மொழிப்போர் ஈகி இராசேந்திரன் சிலை துவங்கி பேரணீயாக
வந்து சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சாலை மறியலில்
ஈடுபட்டனர்.

     
                    

போராடிய மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும்
மாணவர்களுக்கும் வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சாலையில்
அமர்ந்து மாணவர்கள் நட்த்திய போராட்டத்தால் போக்குவரத்து சிறிது நேரம்
பாதிக்கப்பட்டது. பிறகு தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு மாணவர்கள்
கலைந்து சென்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் இப் போராட்டத்தை
ஒருங்கிணைத்த தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் வே.சுப்பிரமணிய சிவா இது
குறித்து ' ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொலை வெறியன்
இராஜபக்சேவை இந்திய அரசு மீண்டும் மீண்டும் வரவழைத்து தமிழர்களை
இழிவுப்படுத்துகிறது.


 

பன்னாட்டு நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சிங்கள அரசுக்கு இராணுவப் பயிற்சி, பண உதவி,
போர்க் கருவிகள் வழங்குவது என முற்றாக இந்திய அரசு தமிழினப்படுகொலைக்கு
துணை நின்றுள்ளது. எனவே போர்க்குற்ற விசாரணையில் சிங்கள அரசோடு இந்திய
அரசும் விசாரிக்கப்பட வேண்டும். சிங்கள படைக்கு பயிற்சிகள் வழங்குவதையும்,
சிங்கள அரசின் இராணுவ தளபதிகள், அரசியல் தலைவர்களை இந்தியாவில் வரவேற்பதை
கைவிட வேண்டும் ' என்று கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=75521&category=TamilNews&language=tamil

 


salai%20mariyal-070213-seithy1.JPG


 


salai%20mariyal-070213-seithy2.JPG

 

salai%20mariyal-070213-seithy3.JPG

                   

 

Edited by மகம்

மெல்ல மெல்ல தொடங்கி தமிழ் நாடு வடமானிலங்களில் ஒன்றாகும். 

 

தனது நண்பன் ராசபஷாவை காப்பாற்ற சோனியா தமிழ்நாட்டை பிரித்துவிடவேண்டி வரும். அண்ணா காலத்தில் தமிழ் நாட்டு இளைஞ்ஞர்களுக்கு தமிழ் அரசியல் உணர்வு இருக்க இல்லை. அண்ணா இருக்கும் போது உரமும் போட்டு தண்ணீரும் வார்த்துவிட்டுத்தான் கட்டிலில் படுத்தார். இனி இனி கருணாநிதி போன்றவர்கள் பதவிக்கு வருவதெல்லாம் கடினம். 



தமிழ் இனி மெல்லச்சாகது. இனி மெல்ல மெல்ல பொங்கும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து டெல்லியில் மதிமுக சார்பில் போராட்டம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்துக்கு எதிர்ப்பு :வைகோ கைது

 

vaiko2.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, டில்லி பொலிசார் கைது செய்துள்ள சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வைகோ அறிவித்தார். இதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சுமார் 1000 தொண்டர்கள் டெல்லியில் குவிந்தனர்.

 

அவர்கள் அனைவரும் இன்று காலையில் ஜந்தர்மந்தரில் திரண்டனர். பிரதமர் இல்லம் இருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலையில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் பொலிஸ் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார். அதன்படி அனைவரும் பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்டனர். அப்போது வைகோ உள்பட அனைவரையும் பொலிசார் கைது செய்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்கள் தன்மானம் மிக்க ஒரு தலைவர். நன்றி உங்களுக்கு!!

இப்பத்தான் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்குது இனித்தான் இந்திய கிந்தி ஆதிக்க சக்திகளுக்கும் விளங்கும்.

 

வைகோ அவர்கள் தன்மானம் மிக்க ஒரு தலைவர். நன்றி உங்களுக்கு!!

 

உண்மை............. நன்றி ஐயா

தமிழகத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்- கைது!


சென்னை/கோவை/நெல்லை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்கை அதிபர் மகிந்த
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக பல இடங்களில் மாணவர்கள்
போராட்டத்தில் குதித்தனர்.

கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி
வருகின்றனர். இன்று அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல்
நெல்லையில் மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள்
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் 41 பேரை போலீசார் கைது
செய்தனர்.

சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திண்டிவனம் அரசு கலைக்
கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக் கழக மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியினர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசியி்ல் கொடும்பாவி எரிப்பு

இதேபோல நெல்லை மாவட்டம் தென்காசியிலும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம்
நடந்தது. அப்போது ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/08/tamilnadu-students-protest-against-rajapaksa-visit-169445.html
 
இந்திய வருகைக்கு எதிர்ப்பு எதிரொலி: டெல்லி வராமல் புத்தகயா சென்றார்
ராஜபக்சே




கொழும்பு: மதிமுகவினர் டெல்லியில் போராட்டம் நடத்தியதை அடுத்து டெல்லி
செல்லாமல் பிளானை மாற்றி புத்தகயா சென்று வழிபட்டார் இலங்கை அதிபர்
ராஜபக்சே.

பீகார் மாநிலம் புத்தகயாவிற்கும், திருப்பதிக்கும் சென்று வழிபடுவதற்காக
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லி சென்று
பின்னர் புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க
மதிமுகவினர் டெல்லியில் முகாமிட்டது தெரியவரவே பிளான் ‘பி' க்கு மாறினார்
ராஜபக்சே.

தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்சே தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக நேரடியாக
ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு சென்று அங்கிருந்து தனியார் பிரத்யேக
விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற
‘மகா போதி' புத்தர் ஆலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். அவருடன் பீகார்
முதல்வர் நிதீஷ் குமார் சென்று வழிபட்டார்.

கறுப்புக் கொடி காட்டிய எம்.எல்.ஏ

இதனிடையே பீகார் மாநிலத்தில் அதிபர் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி
காட்டும் போராட்டம் நடைபெற்றது. புத்தகயாவுக்கு சென்ற ராஜபக்சேவுக்கு அம்
மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவான சோம்பிரகாஷ்சிங், தலைமையில் விமான
நிலையத்தில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

புத்தயகா கோயிலும் சோம்பிரகாஷ் சிங் தலைமையில் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சோம்பிரகாஷ்சிங் உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்சேவை ஹிட்லராக
அண்மையில் வர்ணித்திருந்தார் சோம்பிரகாஷ்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை திருப்பதி தரிசனம்

இன்று மாலை திருப்பதி செல்லும் ராஜபக்சே, அங்கிருந்து சாலை வழியாக
திருமலைக்கு செல்கிறார். இரவு மலையிலேயே தங்குயிருக்கும் அவர் நாளை
அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். பின்னர் காலை
ஒன்பது மணிக்கு சிறப்பு விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியிலும்,
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன என்பது
குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/08/srilanka-rajapakse-changes-his-plan-india-visit-169403.html

 

Edited by மகம்

தமிழினக்கொலையாளி மகிந்த ராசபக்சா வருகைக்கு தமிழ்நாட்டில் பரவலாகக் காட்டப்பட்ட எதிர்ப்பு மகிழ்ச்சி தருவதாகும்.அதுவும் மாணவர்கள் ‍‍ --  இளம்
தலைமுறையினர் -- பெருமளவில் அந்த எதிர்ப்பைக் காட்டியது மிகுந்த‌ நம்பிக்கை தரும் அறிகுறி. தமிழ்த்தேசியஉணர்வு இளம்தலைமுறையினரிடம்
கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்திருக்கிறது என்று நம்பலாம்.மகிந்தா டெல்கி செல்லாமலே கொழும்பு திரும்புவது டெல்கி ஆளும்வர்க்கத்தினரிடம் ஏதோ
சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது.இது காலத்தின் கட்டாயம்.இன்னும் பல கட்டாயங்கள் காலப்போக்கில் ஏற்படும்.தமிழ்நாட்டில் உண்மையான,உரமான‌
எழுச்சி ஏற்படும்போது ஈழத்தமிழர்க்கும்,உலகத்தமிழர்க்கும் ஏற்றங்கள் பல‌ ஏற்படுதல் நிச்சயம்.தியாகி முத்துக்குமாரன் முதலானவர்கள் வேண்டியதும்
அதுதான்.

பல மக்களை ஒன்றுசேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் வைகோ அவர்களுக்கு நன்றி.

மாணவர்கள், சாதாரண மக்கள் என கலந்துகொண்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி.

சிரமங்களைப் பாராது தமிழக எல்லை தாண்டி வைகோ தலைமையிலான போராட்டங்களில் கலந்துகொண்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் நன்றிகள்!

தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் நன்றிகள்!

தனியொரு பெண்ணாக போராட்டக் களத்தில் கயல்விழி ! 

இன்று ராஜபக்சே வருகையை கண்டித்து சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கியது தமிழர் எழுச்சி இயக்கம். அப்போராட்டத்தில் சாலையில் படுத்து தனது பலமான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் வழக்கறிஞர் கயல்விழி. 

தமிழர் உரிமைக்காக களத்தில் நின்று போராடுபவர்கள் கயல்விழியை தெரியாமல் இருக்க முடியாது . தமிழுக்காகவே தங்கள் வாழ்கையை அர்ப்பணித்த குடுப்பம் அது . இறுதி மூச்சி வரை தமிழுக்காக உழைத்த பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் பேத்தி இவர் . மூன்று தமிழர் தூக்கு தீர்ப்பு வந்த போது அவர்கள் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தவர் இவர். தமிழர் உரிமை பிரச்சனை எதுவாக இருந்தாலும் களத்தில் வந்து போராடும் குணம் படைத்த தமிழ்ப்பெண் கயல்விழி. 

இவரை போன்று ஒவ்வொரு தமிழ் பெண்ணும் தங்கள் மொழிகாக்க , தமிழ் இனம் காக்க , தமிழ் மண் காக்க போராட முன்வர வேண்டும். பெண்கள் வீதிக்கு வந்து போராட கூடாது என்பது இல்லை . பெண்கள் போராட வந்தால் நிச்சயம் நம் போராட்டம் வெற்றி பெரும் . இவரது குடும்பம் போல் ஒவ்வொரு குடும்பமும் தமிழ்நாட்டில் மாறிவிட்டால் தமிழர் விடுதலை என்பது தொலை தூரத்தில் இல்லை. தமிழர் உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து விடலாம் . வாழ்த்துவோம் சகோதரி கயல்விழியை . போற்றுவோம் அவரது வீரத்தை .

 

https://www.facebook.com/photo.php?fbid=599280136753507&set=a.143979972283528.27906.100000145796525&type=1&theater



ஈழத்தமிழர்களை படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சே திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இறங்கி, பலத்த இராணுவ பாதுகாப்புடன் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பத்மாவதி விடுதிக்கு அழைத்துச் சென்ற போது, மாலை 6.15 மணிக்கு வாகனத்திற்கு முன்னால், 200 க்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும், மகளிர் அணி சகோதரிகளும், மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, கொடியவன் ராஜபக்சேவின் படத்தை தீயிட்டு கொளுத்தினர்.
மிகுந்த பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டதால், ராஜபக்சே வந்த வாகனம் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலர்களும், இராணுவ வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தவர்களை சுற்றி வளைத்தனர். அதன் பின்பு பாதுகாப்பு சரி செய்யப்பட்டு 25 நிமிடங்கள் காலதாமதத்திற்கு பின், கொடியவன் ராஜபக்சே தான் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

 

http://www.newsalai.com/details/MDMK-cadres-block-rajapakse-vehicle-at-thirupathi-200-arrested.html



போராட்டம் இது போராட்டம் ! முன் அறிவிப்பு ஏதுமின்றி அண்ணா சாலையில் திடீரென்று அமர்ந்து போராட்டம் நடத்தி போக்குவரத்தை நிறுத்தி சிங்கள கொடியை எரித்து ராஜபச்சே மன்மோகன் உருவ பொம்மைகளை எரித்த தமிழர் எழுச்சி இயக்க தோழர்களுக்கு நம் புரட்சி வாழ்த்துகள் ! 
-------------------------------------------
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.இதனால் தபால் நிலையம் இழுத்து மூடப்பட்டது. மேலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ,இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஆகியோரின் கொடும்பாவிகள் அண்ணா சாலையில் கொளுத்தப்பட்டன. இத்துடன் இலங்கையின் தேசியக்கொடியும் கொளுத்தப்பட்டன. இதனை காவல் துறையினர் தடுக்க முற்ப்பட்டனர்.ஆனால் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வேலுமணி அவர்கள் எங்களின் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தால் நாங்கள் அனைவரும் தீக்குளிப்போம் என அறிவித்ததால் காவல் துறையினர் ஒதுங்கி நின்றனர்

 

 

 

http://www.newsalai.com/details/Protest-against-Rajapakse-annasalai-traffic-blocked.html

பல தகவல்களுக்கு நன்றி... கயல்விழி என்ற அந்த பெண்ணுக்கு மற்றும் ஏனையோருக்கும் நன்றியுடன் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..
 

போராட்டம் இது போராட்டம் ! முன் அறிவிப்பு ஏதுமின்றி அண்ணா சாலையில் திடீரென்று அமர்ந்து போராட்டம் நடத்தி போக்குவரத்தை நிறுத்தி சிங்கள கொடியை எரித்து ராஜபச்சே மன்மோகன் உருவ பொம்மைகளை எரித்த தமிழர் எழுச்சி இயக்க தோழர்களுக்கு நம் புரட்சி வாழ்த்துகள் !

முன்னறிவுப்பு இருப்பின் அதற்கேற்ப பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கும். :rolleyes:  முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென நுழைந்து போராட்டம் நடத்தியவர்களுக்கு பாராட்டுகள். :D


 

சோனியவுக்கு அடிமை சேவகம் செய்யும் பிரதமர் பதவி ஆசையால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் திணிக்கும் அடக்கு முறைக்கு, துணை போய், விழிப்புணர்வை உண்டாக்கிகொண்டிருக்கும் சிதம்பரம், மற்றும் ஞனதேசிகன் போன்ற தமிழ் நாட்டு காங்கிரசுக்குகளுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.