Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு அதிகாரம் இலங்கை வழங்காது; பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

paja.jpg

இலங்கையில் தமிழர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். 

 

தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்து தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்காமலிருக்கவே இலங்கை அரசு முயற்சிக்கிறது என இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
மேலும், இலங்கையில் தமிழர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட ராஜ்நாத் சிங், ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியுள்ளது எனவும், 13ஆவது திருத்தத்தை நீக்கி தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்காமலிருக்கவே இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
 
பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சில தினங்களிலேயே ராஜ்நாத் சிங் இந்த அதிரடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்து சமுத்திரத்தில் சீனா பலமாக நிலைகொள்வதற்கு இலங்கை உதவிகளை தாராளமாக வழங்குகிறது எனச் சாடிய அவர், இந்தியாவைப் பலவீனப்படுத்தும் இந்த முயற்சியில் இலங்கைக்குப் பாகிஸ்தானும் துணைபோகிறது எனவும் கண்டனம் தெரிவித்தார்.
 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை அரசுடன் உரிய பேச்சு நடத்த வேண்டும். 
 
காவிரி நதிநீர் விகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கருத்து வெளியிட்டார். 
 

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிங்களம் பற்றி இவ்வாறு கூறுவது என்பது நம்பிக்கை தருவதாக உள்ளது.

 

தொடர்ந்தும் வட மாநிலங்களில் எமது நிலைமைகள் பற்றி எடுத்து கூறிவரும் உறவுகளுக்கு நன்றிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

இதன்காரணமாகத்தான் ஆயுதப்போர் தேவைப்பட்டது என்பது உபரித் தகவல்.. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க நடவடிக்கைகளை இலங்கை அவசரமாக முன்னெடுக்க வேண்டும்

indian-express.pngநல்லிணக்க நடவடிக்கைகளை முன் நகர்த்த வேண்டியதன் அவசரத்தை இந்த வாரம் வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா அழுத்தியுரைக்க வேண்டும் என்று த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

"தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பான வார்த்தையை ராஜபக்ஷ கௌரவிப்பது அவசியம்' என்று மகுடமிட்டு அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;  தமிழர்களுக்கு அதிகளவான  அரசியல் சுயாட்சி வழங்குவதை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.  உள்நாட்டு  யுத்தத்தைத் தொடர்ந்து நாட்டின்  நல்லிணக்க நடவடிக்கைகளின் அங்கமாக சிறுபான்மையினருக்கு அதிகார வலுவூட்டுவது தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. அந்த நீண்டகால வாக்குறுதிக்கு ஆதரவளிப்பதிலிருந்தும் அவர் பின்வாங்கிச் சென்றிருக்கிறார்.

தோற்கடிக்கப்பட்ட  சிறுபான்மையினச் சமூகத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை நடத்துமாறும் சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்து வருகின்றதற்கு மத்தியில் ராஜபக்ஷவின் தீர்மானம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஐ.நா. மதிப்பீடுகளின் பிரகாரம் யுத்த காலத்தில் 80 ஆயிரத்துக்கும் 1 இலட்சத்துக்கும் இடைப்பட்ட தொகையினராக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்தத் தொகை இதிலும் அதிகமானதென ஏனைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக  தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. பேரவையுடன் முரண்படும் நடவடிக்கையாக சர்வதேச மனித உரிமைகள் குழுவினரை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை எனக் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இலங்கை தெரிவித்திருந்தது.  பிரதம நீதியரசர் பதவி நீக்கம் தொடர்பான சர்ச்சையின்  பின்னர் இலங்கைக்கு சர்வதேச மனித உரிமைகள் குழுவினர் விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். மகாநாடுகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளில் பங்கேற்பதை நோக்கமாக  விஜயம் கொண்டிருக்கவில்லை. 

மாறாக இலங்கையின் இறைமைக்குள் ஊடுருவும் மறைமுகமான நடவடிக்கையாகவே அது காணப்படுகிறது என்று வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உத்தேச விஜயத்தின் உண்மையான நோக்கம் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகளை பரிசீலிப்பது என்றும் இதற்கு பிரதம நீதியரசரின் பதவி நீக்க விவகாரத்தை போர்வையாக காட்டப்படுகிறது என்ற தொனியைக் கொண்டதாக இந்த அறிக்கை காணப்படுகிறது.

இந்தியாவுக்கு மதரீதியான விஜயத்தை ராஜபக்ஷ இந்த வாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

இதன்போது நல்லிணக்க நடவடிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டிய அவசரம் தொடர்பாக இந்தியா அவருக்கு அழுத்தி உரைக்க வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பாரம்பரியமாக நெருக்கமாக உள்ளன. ஆனால், கடந்த வருடம் ஜெனீவாவில்  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததைத் தொடர்ந்து உறவுகளில் நெருடல் ஏற்பட்டிருந்தது. சரியான நடவடிக்கை எடுக்காவிடின்  பேரவையில் அமெரிக்காவுடன் இணைந்து  இந்தியாவும் வாக்களிக்கும் என்று இலங்கைக்கு இந்தியா கூறுவது அவசியம்.

எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் சமப்படுத்துவதற்கு சீனர்களின் ஆதரவை ராஜபக்ஷ பெற்று வருவதாக தென்படுகிறது. ஆனால், சர்வதேச சமூகத்தை அந்நியப்படுத்திக் கொண்டு சீனாவின் மடியில் விழுவது நீண்ட கால அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு நல்லதொரு அறிகுறியாக அமையமாட்டாது.

உந்த சிங்கள அரசுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறவையளுக்கு என்னும் தெரியவில்லையே அவையளுக்காக வக்காளத்து வேற வந்குகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.