Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் என்ன நடக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஓரிரு தடவை அங்கே மூக்கை நுளைத்து, துர்மணம் தாங்காமல், ஓடிவந்துவிட்டேன். தூயவனின் கருத்துகளில் உண்மை இருக்கிறது. முருகனின் கூற்றுப்படி, காந்தி மகானின் "ஆதிவாசி" செயல்களையே நாம் நடைமுறைப் படுத்த முயலவேண்டும். என்னைப்போல் அங்கே போனவர்கள் தலைதெறிக்க திரும்பிவிடுவார்கள். டாவின்சி கோட் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே அந்தப் படத்திற்கு வசூலை ஏற்படுத்தியதில்லையா.

யாழ் களத்தில் குப்பைகொட்டி கிளறி அந்தக்குப்பையை திரும்ப பயனுடையதாக மாற்ற முயல்வதில் பயனில்லை என்பது என் கருத்து.

அல்லிகா :idea:

எனக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருக்கு

1. தூயவன் தரப்பு சொல்வது போல இங்க தே.... தளத்து விடயங்களை போடுறதால அவைக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படுகுது உண்மை

2. தெளிவற்ற போக்குடையவர்கள் அதில |போடப்பற விடங்களை நம்புவதற்கு சான்ஸ் இருக்கு

3. இப்படியான தளங்களை பற்றி தெரியாதவர்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்துற மாதிரி

அடுத்த தரப்பின் விவாதப்படி

1. அவர்களது பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தலாம்

2. அதைப்பற்றி தெளிவாக விளக்குவதன் மூலம் அப்படியான தளங்களின் ஈனச்செயலை வெளிக்கொண்டு வரலாம்

இதில எது இப்ப முக்கியம் என்பது எனக்கு சரியாக தெரியவில்லை இரண்டு தரப்புமே சரியாத்தனே இருக்கு

இருபக்கம் சொல்பவர்களின் கருத்தும் நியாயமாக இருக்கிறது. இதற்கான தீர்வை யார் ஆய்ந்து நல்குவார்.

இது ஒரு இணையத்தளங்களில் உலாவும் ஒரு இந்திய சகோதரரின் கருத்து, இங்கு பொருந்துவதால் இங்கு இணைக்கிறேன்.

At 3:27 PM, கிவியன் said...

"புலிகளை பற்றிய அபிப்ராயம் உலகளவில் ஒரு பயங்கரவாத குழுவாகவே உள்ளது. எத்தனை பேருக்கு ஈழத்தில் உள்ள பிரச்சனை சரியாக புரிந்து கொண்டுள்ளனர்? தமிழருக்குள்ளாகவே பிரிவினைகள் உள்ள போது, உதாரணத்துக்கு இந்த சமீபத்திய ஆனந்தசங்காரீயின் (http://www.asiantribune.com/index.php?q=node/776)ஆசியாட்ரிபியுனில் வந்துள்ள கட்டுறையை பாருங்கள், வெளிஉலகுக்கு இலங்கை அரசு தமிழர்களுக்கு செய்யும் கொடுமைகள் தெரிய வாய்ப்பே இல்லை. அதே ஆசியா ட்ரிபியுனலில் குணசேகரா (http://www.asiantribune.com/index.php?q=node/641) என்பவரின் கட்டுறையையும் பாருங்கள். தமிழருக்காக இந்த மாதிரி பல ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு யாரும் மறுப்போ, விளக்கமோ செய்வதில்லை.

அங்கு தமிழருக்கு நடந்த, நடக்கும் கொடுமைகளை யாராவது பாரபட்சமின்றி பதிவு செய்ய வேண்டும்."

தூயவன் புலிகள் இவர்களுக்கு மறுப்பு கூறுவதில்லை என்பது உண்மதான். அவர்களுக்கு இவர்கள் நரிகள்.

நரிகளை புலிகள் போருக்கு அழைத்தால் புலிக்கு இழுக்கு, நரிகளை எலிகள் போருக்கு அழைத்தால்?

போர் என்று நான் இங்கு குறிப்பிடுவது தர்க்கப்போர். :lol:

எலிகள் என்று கூறிவிட்டேன் என்று எவரும் என்னோடு சண்டைக்கு வரவேண்டாம் அவரவருக்கு பிடித்தமானதை போட்டு வாசிக்கவும். :lol::lol::lol:

இங்குடப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்,

எனது கருத்து,

தேசியம் என்பதுவோ அன்றி தமிழ் ஈழம் என்பதுவோ ஒரு கருத்தின் மேல் இருந்து கட்டப்பட்ட அரசியற்கோட்பாடுகள்.உலகில் இவ்வாறே எல்லா அரசியல் இயக்கங்களும் கருத்து நிலைகளில் இருந்தே கட்டப்படுகின்றன.

ஆகவே ஒரு எதிர் அரசியல் இயக்கம் கட்டப்படும் சாத்தியக் கூறுகள் கருத்து நிலைகளில் இருந்தே தோன்றுகின்றன.இவை தோன்றுவதற்கான அடிப்படைகளையே இந்த எதிர்ப் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன.அதனாலயே எதிர் அரசியற் சக்திகள் இப்படியான வானொலிகளை ,இணயத் தளங்களை ஊக்குவிக்கின்றன.இது களத்தில் சாத்தியப் படாதா நிலையில்,புலத்தில் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.இவ்வாறான எதிர் அரசியற் பிரச்சாரத்திற்கு இங்குள்ள அரசாங்கங்கள் மறைமுகமான ஆதாரவை வழங்கியும் வருகின்றன,இது ஜன நாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற பேரால் நடந்து வருகிறது.

தமிழ் ஈழத்தின் எதிர் நிலை அரசியல் புலத்தில் இருந்தே தோன்றப் போகிறது,இதை நாங்கள் அடி நிலையிலயே கருத்தியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டிய நிலை இருக்கிறது.இந்த ஆபத்தை உணராமல் தீக் கோழிகள் போல் தலையைக் கவுட்டுக் கொண்டிருப்பது இந்தச் சக்திகள் வளர்வதிலயே முடியும்.

புலத்தில் குறைந்து வரும் தீவிரமான ஆதாரவாளர்களின் தொகை , எமக்கேன் தேவயில்லாத பிரச்சினை என்ற ரீதியில் ஒதுங்குபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருவது, இந்த எதிர் நிலை அரசியற் பிரச்சாரமும் ஒரு காரணமாக இருப்பது அதற்கான ,எதிர் நிலை பிரச்சாரங்கள் இல்லாமல் இருப்பது முதல் நிலைக் காரணம்.இதற்கு இங்கே இருக்கும் தேசிய ஊடகங்கள் தீக் கோழி மன நிலையில் இருப்பது அடிப்படைக் காரணம்.

இங்கே இது வேண்டாம் என்று சொல்லுபவர் தமிழ் மணத்தில் பறுவாயில்லை என்று சொல்வதன் காரணம் புரியவில்லை.யாழ்க் களமும் தமிழ் மணமும் இணயத்தில் தான் இருக்கின்றன.

இன்று அரசியல் முதிர்ச்சி பெற்ற விவாதங்கள் தமிழ்மணத்தில் நடக்கின்றன.இன்று யாழ்க் களத்தின் நிலைய்யைப் பார்த்தால் அரட்டை,புதினம் ,சங்கதிகளில் இருந்து வெட்டி ஒட்டுதல் இதற்கு மேல் எந்த வித அரசியற் கருத்தாடல்களும் நிகழ்வதில்லை.அப்படி நிகழ்ந்தால் அது முதிர்ச்சி அற்ற நாயே, பேயே என்னும் நிலையில் ஆனா வசை பாடலாகவே இருக்கிறது.

இங்குடப்பட்ட கருத்துக்களில் இருந்து எனக்குத் தெரிவது பலர் தமது கருத்தாடும் வல்லமையிலும்,அரசியற் தெளிவின்மையையையும் மறைக்க இங்கே இது வேண்டாம் என்று சொல்லுவதாகவே படுகிறது.கருணாவின் தளம்பலுக்கு அடிப்படை தேசிய விடுதலை சம்பந்தமான அரசியல் தெளிவின்மையே.

யாழ்க் களத்தில் அரசியல் முதிர்ச்சியை எதிர் பார்தது எனது தவறாக இருக்கலாம்,ஆகவே மேற் குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படயில் இந்தப் பதிவை எடுத்துவிடுகிறேன்,அதோடு இனியும் இவ்வாறான அரசியற் கருத்தாடல்களில் ஈடுபட்டு எனது நேரத்தை இங்கே வீணடிக்க விரும்பவில்லை.

அவ்வாறு எவருக்காவது அரசியல் ரீதியான கருத்தாடல்களில் ஈடுபட விரும்பின் தமிழ் மணத்தில் ஈழபாரதி,தமிழ் சசி,வெற்றி,கொழுவி,இன்னும் பலரது பதிவுகளையும் பின்னுட்டங்களையும் பார்க்கவும். நானும் எதேனும் பேரில் பதிவுகளை இடலாம், அல்லது இட்டுக்கொண்டிருக்கலாம்.

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

உங்களுக்கும் என்னை மாதிரி குழப்பம் தானா பிருந்தன் அண்ணா

உண்மைதான் எமக்கு எதிராக பல சிங்களவர்கள் தமிழ் இன துரோகிகள் சர்வதேச ஊடகங்களில எழுதுபவற்றுக்கு

எமது எதிர்ப்பை காட்டுவது சரியான குறைவு இதுக்கு காரணமாக

1. இப்படியான ஊடகங்கள் பற்றிய அறிவு எம்மிடையே குறைவு

2. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதால என்ன பெரிசா நடக்கப்போகுது என்ற மனபாவம்

3. எனக்கு என்ன என்ற அலட்சியம்

4. பிருந்தன் அண்ணா சொன்ன மாதிரி அவற்றை கணக்கில எடுக்காமல் விடுவது

இதற்கான தீர்வாக நாரதர் அங்கிள் சொல்லுற மாதிரி

இப்படியான ஊடகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் முலம் எமது எதிர்ப்பை காட்டலாம்

எதிரிகளின் துரோகிகளின் எதிர்பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் இங்கு போட்டுவிவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை கவனத்தில் எடுங்கள். உதாரணத்திற்கு கருணா குழு புலிகளின் முகாமை தாக்கி 15 புலிகளை கொன்றுவிட்டார்கள் என்று அவ்வப்போது ஊழையிடுவார்கள். இல்லாவிட்டால் ஒரு காலக் கெடுவை தந்து அதற்குள் கிழக்கை கைப்பற்ற போறம் என்று பொழுது போக புஸ்வாணம் விடுவினம். அவற்றிற்கு இங்கு பதில் விமர்சனங்கள் தேவையில்லை. இது போன்றவற்றிற்கு பதில் எழுதினால் எங்கள் தரம் தான் குறையும்.

ஆனால் சில சாதுரியமாக தயாரிக்கப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களிற்கு விமர்சனங்கள் விளக்கங்கள் தேவை. உதாரணத்திற்கு http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11773

டி பி எஸ் ஜெயராச்சின் விபச்சாரத்தனம் சிலரால் பக்குவமாக ஆராயப்பட்டு விளக்கமாக பதில் கருத்துக்கள் எழுதப்பட்டதால் தான் வெளிக்கொண்டுவரப்பட்டது முறையடிக்கப்பட்டது அன்றி படம் பாத்து முடிஞ்சு வெளியில் வரும் பொழுது அடிச்சு கால் முறிச்சு அல்ல.

இந்த கீழ்நிலைப் பிரச்சாரங்களை புலிகள் கவனித்து பதில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த தரத்திற்கு அவர்கள் இறங்கினால் அதுவே எதிரிகளிற்கும் துரோகிகளிற்கும் வெற்றியாகிவிடும். தரமான 1ஆவது நிலை ஊடகங்களும் இந்த நிலையில் இறங்கி இவர்களிற்கு விமர்சனங்கள் வைக்க முடியாது. இந்த விடையத்தில் 1 முறை Tamil Guardian பிழைவிட்டது டிபிஎஸ் இன் விபச்சாரத்தை விமர்சிக்க முயன்று.

தங்கையே.. எதிர்ப்பை இங்கு வைப்பதிலும்..குறித்த தளங்களில் அங்கையே வைப்பதற்கு வசதி இருக்கிறதா...அங்கு வைப்பதுதான் சிறந்தது. பிபிசி இணையத்தளத்தைப் பாருங்கள்.. ஒரு செய்தி தொடர்பான விமர்சனங்களை வாசகர்களிடம் கோரும் போது அதை அந்த இடத்தில் தான் பதியச் சொல்வார்கள். அப்போதுதான் வாசகர்களுக்கு அந்த இடத்தில் கருத்தியல் ஒப்பீட்டுக்கு சந்தர்ப்பம் இருக்கும். அதை செய்யமுடியவில்லை என்றாலோ..அல்லது அதற்கான சந்தர்ப்பம் அங்கில்லை என்றாலோ...அவர்களின் எழுத்துப் பற்றி அதிகம் அலட்டத் தேவையில்லை. புகழிடத்தில் இருப்பவர்களில் பலரும் பல காலக் கட்டங்களில் தாயகத்தை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியவர்கள். எல்லோரிடமும் நாம் தேசியம் தாயகப் பற்றுறுதியை எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமன்றி ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் தான் போராட்டத்தின் மீது தங்கள் பார்வையை வைத்திருக்கிறார்கள்..பலரும் போராட்டத்தின் விருத்தி நிலை..தற்போதைய வடிவம்..மாற்றங்கள்..என்று எதையும் அறியாதவர்களாகவே இருக்க்கின்றனர். அந்த வகையில் இப்படியான மலினக் கருத்துக்களை காவுவது இப்படி குழம்பிய நிலையில் இருப்பவர்களை மேலும் குழப்புவதோடு போராட்ட அவசியங்கள் பற்றி பகரப்படுவது தவிர்க்கப்படும். கருத்துக்கள் தொடர்பில் நம்பகத்தன்மைக்கும் நீண்ட விளக்கங்களை வியாக்கியானங்களைச் செய்ய வேண்டிய அவசியம் எழும்.

இதே மாதிரியான பிரச்சாரங்களை இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் இருந்த போது இந்திய இராணுவ ஒட்டுக் குழுக்கள் பாடசாலை மட்டங்களில் கூட வலிந்து திணித்தன. அதை என்ன செய்தோம். வாங்கிப் படிச்சு விமர்சனம் சொல்லேல்ல..கிழிச்சு குப்பையில் போட்டோம். காரணம்..நமக்கு தெரிந்திருந்தது இவர்கள் எழுதும் எழுத்து எமக்கும் எமது விடுதலைக்கும் ஒரு போதும் உதவாது என்று. ஆனால் புகழிடத்தில் நிலமை சற்று மாறுபட்டதே. காரணம் இங்கு எப்படியும் வாழலாம் என்ற நிலை இருக்கும் போது இதுதான் வாழ்க்கை என்று நியதிட்டு வாழத் தேவையில்லை. இப்படியான மனோ நிலையில் உள்ளவர்களைக் குழப்பத்தான் இப்படியான மலினப் பிரச்சாரங்கள் புகழிடத்தில் கூலிக்கு நிகழ்த்தப்படுகின்றன.

எனவே இப்படியான பிரச்சார அம்சங்களை கருத்தாக எடுத்து காவித் திரிவதிலும்...அவற்றினூடு அரசியல் முதிர்ச்சி தேடுவதிலும்..காலத்துக்கு ஒவ்வாத கருத்தியலை அந்த இடத்தில் எதிர்ப்பதோடு அதன் பரவலை ஊக்கிவிக்கும் நமது செயல்களைக் கட்டுப்படுத்துவதே சிறப்பு...! இதுதான் எமது நிலைப்பாடு. அதனடிப்படையில் தான் இங்கு கருத்துக்களை முன்வைக்கின்றோம். :P :idea:

என்ன நடக்கிறது இங்கே. சிலநாட்களாகவே சாக்கடைக்கழிவுகள் யாழில் வந்து விழுகிறது. அன்று பெண்கள் பற்றிய "மனநோயாளி" இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (லண்டன்) ஆக்கம்காணப்பட்டது அதுதான் கடைசியும் முதலும் என்று நினைத்தேன். இந்த இணையத்தளங்களைப்ற்றியோ அதில் வரும் ஆக்கங்களைப்பற்றியோ விவாதிப்பதற்கு எதுவுமே இல்லை. முடிந்தமுடிவு இந்த ஈ, இலையான், இணையத்தளங்கள் மனநோயாளிகளின் புலம்பல்

வேடிக்கை என்னவென்றால் நம்மவர்களுக்கே குழப்பமாக இருக்குதாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்குடப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்,

எனது கருத்து,

தேசியம் என்பதுவோ அன்றி தமிழ் ஈழம் என்பதுவோ ஒரு கருத்தின் மேல் இருந்து கட்டப்பட்ட அரசியற்கோட்பாடுகள்.உலகில் இவ்வாறே எல்லா அரசியல் இயக்கங்களும் கருத்து நிலைகளில் இருந்தே கட்டப்படுகின்றன.

ஆகவே ஒரு எதிர் அரசியல் இயக்கம் கட்டப்படும் சாத்தியக் கூறுகள் கருத்து நிலைகளில் இருந்தே தோன்றுகின்றன.இவை தோன்றுவதற்கான அடிப்படைகளையே இந்த எதிர்ப் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன.அதனாலயே எதிர் அரசியற் சக்திகள் இப்படியான வானொலிகளை ,இணயத் தளங்களை ஊக்குவிக்கின்றன.இது களத்தில் சாத்தியப் படாதா நிலையில்,புலத்தில் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.இவ்வாறான எதிர் அரசியற் பிரச்சாரத்திற்கு இங்குள்ள அரசாங்கங்கள் மறைமுகமான ஆதாரவை வழங்கியும் வருகின்றன,இது ஜன நாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற பேரால் நடந்து வருகிறது.

தமிழ் ஈழத்தின் எதிர் நிலை அரசியல் புலத்தில் இருந்தே தோன்றப் போகிறது,இதை நாங்கள் அடி நிலையிலயே கருத்தியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டிய நிலை இருக்கிறது.இந்த ஆபத்தை உணராமல் தீக் கோழிகள் போல் தலையைக் கவுட்டுக் கொண்டிருப்பது இந்தச் சக்திகள் வளர்வதிலயே முடியும்.

புலத்தில் குறைந்து வரும் தீவிரமான ஆதாரவாளர்களின் தொகை , எமக்கேன் தேவயில்லாத பிரச்சினை என்ற ரீதியில் ஒதுங்குபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருவது, இந்த எதிர் நிலை அரசியற் பிரச்சாரமும் ஒரு காரணமாக இருப்பது அதற்கான ,எதிர் நிலை பிரச்சாரங்கள் இல்லாமல் இருப்பது முதல் நிலைக் காரணம்.இதற்கு இங்கே இருக்கும் தேசிய ஊடகங்கள் தீக் கோழி மன நிலையில் இருப்பது அடிப்படைக் காரணம்.

இங்கே இது வேண்டாம் என்று சொல்லுபவர் தமிழ் மணத்தில் பறுவாயில்லை என்று சொல்வதன் காரணம் புரியவில்லை.யாழ்க் களமும் தமிழ் மணமும் இணயத்தில் தான் இருக்கின்றன.

இங்குடப்பட்ட கருத்துக்களில் இருந்து எனக்குத் தெரிவது பலர் தமது கருத்தாடும் வல்லமையிலும்,அரசியற் தெளிவின்மையையையும் மறைக்க இங்கே இது வேண்டாம் என்று சொல்லுவதாகவே படுகிறது.கருணாவின் தளம்பலுக்கு அடிப்படை தேசிய விடுதலை சம்பந்தமான அரசியல் தெளிவின்மையே.

யாழ்க் களத்தில் அரசியல் முதிர்ச்சியை எதிர் பார்தது எனது தவறாக இருக்கலாம்,ஆகவே மேற் குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படயில் இந்தப் பதிவை எடுத்துவிடுகிறேன்,அதோடு இனியும் இவ்வாறான அரசியற் கருத்தாடல்களில் ஈடுபட்டு எனது நேரத்தை இங்கே வீணடிக்க விரும்பவில்லை.

அவ்வாறு எவருக்காவது அரசியல் ரீதியான கருத்தாடல்களில் ஈடுபட விரும்பின் தமிழ் மணத்தில் ஈழபாரதி,தமிழ் சசி,வெற்றி,கொழுவி,இன்னும் பலரது பதிவுகளையும் பின்னுட்டங்களையும் பார்க்கவும். நானும் எதேனும் பேரில் பதிவுகளை இடலாம், அல்லது இட்டுக்கொண்டிருக்கலாம்.

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

உங்களின் கருத்தை வரவேற்கின்றேன். நான் சொன்னது என் எண்ணங்கள் மட்டுமே! இவர்களால் சமுதாயத்தில் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்று கருதினால் விவாதியுங்கள். இந்தக் குப்பைகளை நடுவீட்டில் வைத்துக் கிளற எனக்கு விருப்பமில்லை. நான் இயலுமானவரை ஒதுங்கிக் கொள்கின்றேன்.

மேலே இங்கே விவாதிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லோரும் சிறப்பான பதிலடியைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தமிழ்மணத்தில் இந்த இணைப்புக்களைப் பார்ப்பவர்களுக்கு தமிழ்மணத்தில் பதிலடி கொடுத்தால் தான் பொருந்தும் என்பதும் என் கருத்து. தமிழ்மணத்திற்கு வருபவர்கள் எல்லோரும் யாழ் வருவார்கள் என்றோ, யாழ் வருபவர்கள் எல்லோரும் தமிழ் மணம் வருவார்கள் என்றோ இல்லையே!

நான் அது பற்றி இங்கே கதைக்க வேண்டாம் என்ற எண்ணத்தை விடுவிக்கின்றேன். அது உங்களது தனிப்பட்ட விருப்புவெறுப்பாகும்!. அதில் நான் தலையிடுவதில் இருந்து ஒதுங்குகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் சில காலங்களாக நாரதர் சொன்னது போல், அரட்டையும், வெட்டியொட்டுதலுமே நடக்கின்றன என்பது உண்மை. விவாதத்துக்கு பொருந்தமா என்று கூட வெட்டியொட்டப்படும் செய்திகள் கருதப்படுவது கூட இல்லை. ஏதோ இணைப்பு என்ற வகையிலேயே அமைகின்றன.

அவ்வாறே அரட்டையும் மிகமிக அதிகமாகி விட்டது. ஒரு தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போய்க் கொண்டிருக்கின்றது. அதில் குற்றவாளியாக நானும் இருப்பதால் அது குறித்தான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இயலுமானவரை அரட்டைகளைக் குறைத்து ஆக்கத்தினை ஊக்கப்படுத்துவோம்.

மாதத்தில் இரண்டு தடவையாவது சுய ஆக்கம் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன்! :wink:

  • தொடங்கியவர்

மாதத்தில் இரண்டு தடவையாவது சுய ஆக்கம் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன்!

மிச்சம் 28 29 நாட்கள் என்ன இராமாயினம் எழுதா போறிங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாதத்தில் இரண்டு தடவையாவது சுய ஆக்கம் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன்!

நம்ப முடியவில்லை வில்லை வில்லை.. என்ன து}யவன் ஆங்கிலம் கற்பிக்கப்போறியளா.. (படிச்சு முடிஞ்சிட்டுதா.. ) எதிர்பார்க்கிறோம்.. போடுங்கோ. :wink: :P . (அரட்டை என்று விரட்ட முதல் தலைமறைவாகிறன்.)

என்ன கேள்வி இது வினித் அண்ணா மற்ற நாளில அரட்டைதான் :oops: :P

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் 28 29 நாட்கள் என்ன இராமாயினம் எழுதா போறிங்களா?

விளக்கம் குறைவா? 2 தடவை என்று சொன்னேனே தவிர, இரண்டு நாள் என்றேனா? ஏனப்பா என் வாழ்வில் 2 நாளை இழக்க வைக்கின்றீர்கள்! :wink:

நம்ப முடியவில்லை வில்லை வில்லை.. என்ன து}யவன் ஆங்கிலம் கற்பிக்கப்போறியளா.. (படிச்சு முடிஞ்சிட்டுதா.. ) எதிர்பார்க்கிறோம்.. போடுங்கோ. :wink: :P . (அரட்டை என்று விரட்ட முதல் தலைமறைவாகிறன்.)

திருந்தப் போறன் என்றார்...அவராவது திருந்தட்டன் விடுங்களன். இடையில வந்து குழப்பிக் கொண்டு. கோவிக்கப் போகிறார் தூயவன். :wink: :P

தவறுதலான பதிவுக்கு வருந்துகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.