Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொழுப்பு குறைஞ்சுட்டுது: நிழலி

Featured Replies

  • தொடங்கியவர்

முட்டை, அதுவும் மஞ்சள் கரு

கொழுப்புக் கூடியது எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் பத்து சாப்பிட்டும்

கொழுப்பு குறைஞ்சிருக்கேண்டால் பாதாம் பருப்பு நல்லா வேலை செய்யுது போல.

நோமலாவே ஒரு டைப்பாத் திரியிறனியல், ஆமென்ட் வேற அடிச்சால் சொல்லி

வேலையில்லை.

சாப்பிட்டாப் பிறகு பாதாம் பால் குடிச்ச அனுபவம் இருக்கா? இல்லை எண்டால் ஒருக்கா அமுல் படுத்திப் பாருங்கோ.

மற்றது எழு நாளும் தண்ணியா? கவனம், லிவர் லீவிலை போகப்போகுது...

நான் முட்டை வாங்கும் போது ஒமேகா 3 (Omega 3) என்று போடப்பட்டுள்ளதைத் தான் வாங்குவது. Omega 3 ஆனது நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்று பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளனர்.

பாதாம் பால் இன்னும் குடித்துப் பார்க்கவில்லை. எதைச் சாப்பிட்ட பிறகு பாதாம்பால் குடிப்பது (சாப்பாடு என்று சொன்னது சாப்பாட்டைத் தானே?)

..அடப்பாவி நான் 7 நாளும் தண்ணி என்று எங்கு சொல்லியிருக்கின்றேன். 7 நாட்களில் 2 நாட்கள் மட்டும்தான் என்று தண்ணி என்பதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கின்றேன் என்றுதான் எழுதியிருக்கின்றேன். விடுமுறைகள் வார நாட்களில் வந்தால் மட்டும் இந்த விதி தளர்த்தப்படும். மற்றது, இப்ப அதிகம் எடுப்பது ரெட் வைன் மட்டும்தான். Red wine கில்மாவுக்கும் அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

உடம்பில உள்ள கொழுப்பைக் கரைக்கலாம். மனதில உள்ளத எப்பிடிக் கரைக்கிறது எண்டு யாரும் சொன்னீங்கள் எண்டால் நல்லது. :D

தன்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களை தன் மனதில் இருந்து வடிகட்டினால் மனதில் இருக்கும் கொழுப்பும் கரையும் சுமோ.

நட்ஸ்சால் கொலஸ்ரோலை குறைக்கலாம் என்பது செய்தி

இந்த விடயத்தில் பாதாம் பருப்பை விட Walnut நல்லது என்பார்கள். பாதாம் பருப்பை ஏன் நான் தேர்ந்தெடுத்து உண்கின்றேன் என்பதை உங்களை மாதிரி குழந்தைகளுக்கு விளக்க மாட்டேன்.

பார்க்க: http://www.mayoclinic.com/health/cholesterol/CL00002

. அத்தோடு ஒரு கோப்பை (அளவான கோப்பைதான்) சாப்பிட்டால், திரும்பவும் போட்டுச் சாப்பிடுவதில்லை!

நானும் இதனை தவறாமல் கடைப்பிடிப்பதுண்டு. ஆனால் ஆட்டு இறைச்சி சமைக்கும் போது ஒரு கோப்பை அளவுக்கு அதனை சாப்பிட்டு விட்டித்தான் ஒரு கோப்பை சோறு சாப்பிடுவது. :icon_mrgreen:

அதில் ஒரு மாற்றம் கறி சமைக்கும்போது தாளிப்பதைதவிர்த்து விடுவார் எனது மனைவி.

நாம் கூடுதலாக நல்லெண்ணையில் தான் தாளிப்பது மற்றும் மீன் / கோழி பொரிப்பது எல்லாம்.

எம்மை போன்ற சிங்கிள் சிங்கங்களுக்கு கொழுப்பு குறைக்க ஏதும் வழி இருக்கா?

சிம்பிள்... ஒரு வாரத்தில் ஒரு சில நாட்களாவது ஓடி உடற்பயிற்சி செய்யுங்கள். அல்லது temporary ஆக ஒருத்தியை (அல்லது ஒருத்தனை) ஏற்பாடு செய்யுங்கள். :)

நல்ல பதிவு

நிழலி, முன்னைய பின்னைய கொலஸ்ட்ரோல் அளவுகளையும் பதிவிடுங்கள்.

கொழுப்பு இருக்கா இல்லையா என்று குடும்ப மருத்துவரிடம் கேட்பதுடன் சரி...கனக்க கேட்டு மண்டை காய்வதில்லை தப்பிலி. (2 வருடங்களுக்கு முன் 4.0 என்று சொன்ன மாதிரி ஒரு நினைவு)

  • தொடங்கியவர்

பழைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் ஒரு கம் பேக்கர் பிரியர்.மைக் டொனால்ட் இல்லாவிட்டால் உயிரையே விட்டுவிடுவார்.அப்படி பட்ட ஒருவர் இன்று சைவ உணவுகளையே தேடி சாப்பிடுகிறார்.பால் கூட குடிக்க கூடாது என்கிறார் என்றால் பாருங்களேன்.

 

எனவே ஆடு மாடுகளை சாப்பிடுவதை விட்டு ஆடு மாடு சாப்பிடுவதை சாப்பிட்டால் நல்லது.

http://www.youtube.com/watch?v=R3ied_AD4iE

 

ஆள் ஒன்றுக்கு பத்து என்று நல்லா ஆண்டு அனுபவிச்சுப் போட்டு இப்ப சொல்லும்... நானும் கையும் களவுமாக பிடிபட்டு கொஞ்ச காலம் போன பிறகு இவற்றை எல்லாம் விடுறன் ஈழப்பிரியன் அண்ணா (இவனுக்குப் போய் சொன்னேனே என்று உங்கள் தலையை சுவரில் மோத வேண்டும் போல இருக்குத்தானே) :)

 

மற்றபடி, உணவில் கண்டிப்பாக ஒரு மரக்கறியாவது வேண்டும் எனக்கு. நிறைய கீரை வகைகளை சேர்ப்பதுண்டு. பழங்களில் அப்பிளைத் தவிர் மிச்ச எல்லாம் சாப்பிடுவன். அப்பிளை மட்டும் கண்ணில காட்டக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 2 வருடங்களுக்கு முன்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யும் போது என் உடம்பில் கொழுப்பு கூடியுள்ளதாக மருத்துவர் சொல்லியிருந்தார் ("உங்களுக்கு கொழுப்பு கூட இல்லாட்டித்தான் அதிசயம்" என்று என் மனைவி சொல்லியிருந்தார். அதுவும் *** இல் கொழுப்பு கூட என்று).  Cholesterol இல் இருக்கும் triglycerides அதிகரித்துள்ளதாகவும், அது கூடாது என்றும் மருத்துவர் சொல்லியிருந்தார். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் (high blood pressure: BP) இருப்பதால் கொலஸ்ரோல் அதிகரிப்பு என்பது சாவை வெத்தலை பாக்கு சுண்ணாம்பு தடவி புகையிலையும் போட்டு வரவேற்பது மாதிரியான விடயம்.

 

கொழுப்பு குறைய மருந்து எழுதித் தருவதாக மருத்துவர் சொன்னபோது வேண்டாம் மருந்து இல்லாமல் குறைக்க முயல்கின்றேன் என்று கூறியிருந்தேன்.

 

கடந்த வாரம் மீண்டும் இரத்த பரிசோதனை செய்யும் போது கொழுப்பு குறைந்துவிட்டது என்றும் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இரத்தம் இருக்கு என்றும் பதில் வந்தது. நான் மேற்கொண்ட சின்ன சின்ன விடயங்களும் உணவு முறையில் ஏற்படுத்திய சின்ன சின்ன மாற்றங்களும் எனக்கு நல்ல தீர்வை தந்துள்ளன.

 

நான் ஏற்படுத்திய சின்ன சின்ன மாற்றங்களை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். ஒரு சிலருக்காவது பிரயோசனப்படும். நான் ஆடு, மாடு, கணவாய் (கருவாடு) என்று எந்த உணவையும் விட்டு வைக்காமல் வெளுத்துக் கட்டும் ஒரு ஆள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படி இருந்தும் கொழுப்பு குறைந்து இருக்கு.

 

ஆடு, மாடு சாப்பிட்டால்... கொழுப்பு வரும் நிழலி.

கணவாய், மீன் போன்ற‌ கடல் உணவுகளில்... கொழுப்புக் குறைவு.

நீங்கள் அதிகமாக... ஆட்டை, மாட்டை சாப்பிட்டாலும்... அளவுடன் விஸ்கி அடித்துக் கொண்டிருப்பதால்...

உங்கள், கொழுப்பு கரைஞ்சிருக்கும் என்று, நம்புகின்றேன்.

அல்லது... யாழில், உங்களது கொழுப்பை ஆராவது... கரைத்திருக்கலாம்...

மே... பீ... ரதி.

ஹஹாஹா.... :rolleyes:  :D  :lol:  :icon_idea:

  • தொடங்கியவர்

"உணவே மருந்து என்பதுடன் மனமே மருந்து என்பதையும் நம்புங்கள்."

 

 

இந்த விவாதத்தையும் ஒருக்காப் பாருங்கள். :icon_idea:

 

நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன். எனக்கு ஏனோ தெரியாது கோபிநாத்தின் இப்படியான நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன். எனக்கு ஏனோ தெரியாது கோபிநாத்தின் இப்படியான நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை.

 

கோபிநாத் அருமையான ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர். அவரை, எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

கிடைக்கும்... நேரங்களில், அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நானும், மனைவியும் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதனை தவறாமல் கடைப்பிடிப்பதுண்டு. ஆனால் ஆட்டு இறைச்சி சமைக்கும் போது ஒரு கோப்பை அளவுக்கு அதனை சாப்பிட்டு விட்டித்தான் ஒரு கோப்பை சோறு சாப்பிடுவது.  :icon_mrgreen:

:D  :D

உடம்பில் கொழுப்பை உருவாக்குவதில் ஆட்டிறைச்சி முதன்மை வகிக்கிறது நிழலி.

  • தொடங்கியவர்

:D  :D

உடம்பில் கொழுப்பை உருவாக்குவதில் ஆட்டிறைச்சி முதன்மை வகிக்கிறது நிழலி.

 

ஓம் நுணா...ஆனால் அதே மாதிரி அதற்கான உடற்பயிற்சியினையும் கிரமமாக செய்து கொண்டு வந்தால் எல்லாத்தையும் சமாளிக்கலாம். அதோட எப்பவும் Balanced உணவு முறை நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பகலிலை சாப்பிடுறது  எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு இரவுநேரம் ஒரு துண்டு பாணோடை காலத்தை கொண்டுபோங்கோ!!! உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராது.கொஞ்சநாளைக்கு கஸ்ரம்தான்...போகப்போக எல்லாம் பழக்கத்துக்கு வரும்....படுக்க போற நேரம் பசிக்கிறமாதிரியிருந்தால் ஒரு அப்பிளை கையில் எடுத்து தின்னுங்கள்.பிரச்சனை ஒண்டுமே வராது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

நான் முட்டை வாங்கும் போது ஒமேகா 3 (Omega 3) என்று போடப்பட்டுள்ளதைத் தான் வாங்குவது. Omega 3 ஆனது நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்று பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளனர்.

பாதாம் பால் இன்னும் குடித்துப் பார்க்கவில்லை. எதைச் சாப்பிட்ட பிறகு பாதாம்பால் குடிப்பது (சாப்பாடு என்று சொன்னது சாப்பாட்டைத் தானே?)

..அடப்பாவி நான் 7 நாளும் தண்ணி என்று எங்கு சொல்லியிருக்கின்றேன். 7 நாட்களில் 2 நாட்கள் மட்டும்தான் என்று தண்ணி என்பதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கின்றேன் என்றுதான் எழுதியிருக்கின்றேன். விடுமுறைகள் வார நாட்களில் வந்தால் மட்டும் இந்த விதி தளர்த்தப்படும். மற்றது, இப்ப அதிகம் எடுப்பது ரெட் வைன் மட்டும்தான். Red wine கில்மாவுக்கும் அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

 

 

 

Ingredient Name Unit Quantity   alomnds

number

20

cardamom powder

pinch

1

milk

ml

1000

rose water

0

2 drops

safforn

0

as needed

 

Soak badam in water for 2hrs.

remove the skin  and add to blender,add some milk and blend it to a fine paste

Heat the balance milk and add the paste of badam, boil for 15min and keep mixing.

Add saffron to the boiling milk mix well then add sugar,cardamom powder, rose essence mix again.

Once it done pour in a bowl to cool down.

If required add some cold milk and mix.

Pour in a glass sprinkle cardamom powder, badam mashed.

serve chillied.

 

அப்பிடி எண்டால் சரி ஆனால் நீங்கள் ரெண்டுநாளில எழு நாளுக்குமாச் சேத்து எக்கவுண்ட குளோஸ் பண்ணுவியல் எண்டு நினைச்சன் :rolleyes: . மற்றது சாப்பாடு எண்டு சொன்னது சாப்பாட்டைத்தான் (என்னமா அலையுறாங்கப்பா  :D :D :D )

  • கருத்துக்கள உறவுகள்

 பகலிலை சாப்பிடுறது  எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு இரவுநேரம் ஒரு துண்டு பாணோடை காலத்தை கொண்டுபோங்கோ!!! உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராது.கொஞ்சநாளைக்கு கஸ்ரம்தான்...போகப்போக எல்லாம் பழக்கத்துக்கு வரும்....படுக்க போற நேரம் பசிக்கிறமாதிரியிருந்தால் ஒரு அப்பிளை கையில் எடுத்து தின்னுங்கள்.பிரச்சனை ஒண்டுமே வராது. <_<

 

நீங்கள் வேற கு.சா அண்ணா. அப்பிள்  எண்டால் ஐயோ எண்டுற மனிசனிட்ட உதச் சொல்லுறியள்.

 

நல்ல விஷயம் நிழலி .  உங்கள் அனுபவ பாடம் ஏனையவர்களுக்கும் உதவலாம்.

 

 

 

உயர் குருதி அழுத்த மருந்துகள் எடுப்பவர்கள் Grapefruit, (Sour oranges, such as Seville, or their juice, may have an effect
similar to grapefruit juice.)  சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

தேசிக்காய், இனிப்பு தோடம் பழம், tangerines என்பவை பதிப்பை கொடுக்காது என நம்ப படுகிறது.

 

Most other citrus fruits, such as lemons, limes, citrons, naturally sweet oranges and tangerines are not thought
to have this effect. However, tangellos, a hybrid of grapefruit, may also interfere with drugs.

 

Grapefruit, /Sour oranges (Seville,) குருதி அழுத்தம் மட்டுமல்ல வெறும் பல நோய்களுக்கான மருத்துகளின் செயற்பாட்டை பதிக்கலாம்.

 

These effects are known to be caused by the combination of grapefruit
and its juice with certain drugs and health products used in the
treatment of medical conditions, including, but not limited to:


                

  • Angina;
  • Anxiety;
  • Cancer;
  • Convulsions;
  • Depression;
  • Erectile dysfunction;
  • Gastrointestinal reflux;
  • High blood pressure;
  • High lipid (cholesterol) levels;
  • HIV/AIDS;
  • Infections;
  • Irregular heart rhythms;
  • Organ graft rejections; and
  • Psychotic problems.

http://www.hc-sc.gc.ca/hl-vs/iyh-vsv/food-aliment/grapefruit-pamplemousse-eng.php

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.