Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன்

Featured Replies

m4.jpg

இலங்கை தூதரகம் முன் வாசல் கதவை உடைத்த மலேசிய தமிழர்கள் !

இலங்கைத் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இலங்கை கொடியை பயத்தில் அகற்றி விட்டார்கள்!

m3.jpg

http://www.newsalai.com/details/Tamils-siege-malaysia-sri-lanka-embassy-door-broken.html

  • Replies 225
  • Views 30.6k
  • Created
  • Last Reply

மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே மலேசியாவில் கதிர்காமரின் தந்திரங்களால் எழுப்பட்டிருந்த உருவகங்களால் K.P. ஒருவருக்கும் தெரியால் கைது செய்யப்பட்டு தாய்லாந்துக்கு அனுப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்டார்.  புலத்து தமிழருக்கும் சில ஊடகங்களுக்கும், தன்னார்வ நிறுவனங்களுக்கும் மூன்று வருடங்கள் எடுத்தன, கதிகாமர் கட்டி வைத்த கோட்டையை உடைத்து இலங்கையின் அரச குடும்பம் எத்தகையது என்று காட்டிக்கொடுக்க.

  • கருத்துக்கள உறவுகள்
 |  புதன்கிழமை, 27, பிப்ரவரி 2013 (11:46 IST)
 
பாலசந்திரனிடம் நடத்தப்பட்ட கடைசி விசாரணை
 
 இறுதிகட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளன. பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும் இந்த டி.வி.தான் வெளியிட்டது. 
 
‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். 
 
 பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? 
 
பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள். 
 
உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்களை எடுத்த இரண்டு சிங்களப்படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்பட்டவை. அவர்கள் இருவரும் 53ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.
 
எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் ரகசியமாக எடுத்தவைதான். 
 
இறுதிக்கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 
 
2009 மே மாதம் 18-ந் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் ராணுவம் கொளுத்தியது. அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்திருக்கிறார். காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53ம் படையில் சரணடைந்தனர். 
 
மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர். சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார். 
 
கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கிறார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பிவிட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்து விடலாம். எல்லோரையும்போல அவனையும் கொன்று விடலாம்’ என்று கோத்த பாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார். 
 
அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவதும்தான் அந்த படைப்பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்று விட்டனர். 
 
பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது. 
 
பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா? 
 
பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும் போது இடையில் அம்மாவைக் காணோம். அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டியபோதுகூட, தன்னைச் சுடப்போசிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. 
 
வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே? 
 
அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத் தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை. இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை.

பாலச்சந்திரனுக்கு வீரவணக்கம்..

மறுமலர்ச்சி நிறைவு பொதுக்கூட்டம் மறைமலை நகரில் தொடங்கியது.. முதல் நிகழ்ச்சியாக வைகோ, கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், ஜவாஹிருல்லா, தெக்லான் பாகவி உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்கள், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் சுடரேந்தி பாலச்சந்திரனுக்கு வீரவணக்கம்

 

https://www.facebook.com/photo.php?fbid=487530251306926&set=a.487530181306933.1073741825.145371905522764&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

7afcf09834ffde3e6ef35cc974885726.gif



 

Edited by பையன்26

இனி இலங்கை?
ஆக்கம்: பாரதி தம்பி, ஓவியம்: பாரதிராஜா


கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்... நிறையப் பார்த்துவிட்டோம்.

 

ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத்தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது.

 

'இவை அசைக்க முடியாத போர்க் குற்ற ஆவணங்கள்’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். கடந்த ஆண்டு 'கில்லிங் ஃபீல்ட்ஸ்’ என்ற பெயரில் இலங்கையின் கோர முகத்தை வெளிக்கொண்டுவந்த சேனல் 4 தொலைக்காட்சிதான், இந்த ஆண்டு 'நோ ஃபயர் ஸோன்’ என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட புகைப்படங்கள், கேணல் ரமேஷ் அடித்துக் கொல்லப்படும் பதறவைக்கும் காட்சி உள்ளிட்ட பல முக்கியமான ஆதாரங்கள் இதில் உள்ளன. இந்தப் படங்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே, ''இது ஒரு சாட்சியமற்ற போர் என்று கடந்த ஆண்டு குறிப்பிட்டேன். இலங்கை அரசு அப்படித் தான் இதை நடத்தியது. நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஆதாரங்கள் இரண்டு இலங்கை ராணுவ வீரர்களால், அவர்களின் செல்போன்கள் மூலம் எடுக்கப்பட்டவை. இலங்கையை விட்டு வெளியேறி வந்திருக்கும் அவர்களிடம் இருந்து இதைப் பெற்றுதான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார்.

 

இலங்கை யுத்தம் நடைபெற்றபோது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அமைதி காத்த மேற்கத்திய நாடுகளும், அவர்களின் ஊடகங்களும் இப்போது பதறுகின்றன. தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்ததைப் போல, 'இலங்கை ஒரு போர்க் குற்றம் புரிந்த நாடு’ என்கிறார்கள். பல நாடுகள் இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றன.

 

ஏதேனும் ஒரு வகையில் நீதியையும் தீர்வையும் தேடும் தமிழர் ஆதரவு அரசியல் சக்திகள், இந்த உலகளாவிய ஆதரவை இலங்கைக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசோ, 'அனைத்தும் பொய்’ என்று போகிற போக்கில் நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தின் கோபமும் எதிர்ப்பும் இலங்கையைத் துரும்பு அளவுக்குக்கூடச் சலனப்படுத்தவில்லை.

 

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றம் குறித்த விவாதங்கள் விரிவாக நடைபெறவிருக்கின்றன.

 

இதில் பங்கேற்பதற்காக இலங்கை, தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருந்து பல தமிழ் அரசியல் குழுக் கள் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளன. இந்தக் கூட்டத்தின் இறுதி முடிவு இலங்கைக்கு ஓர் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு.

 

ஆனால், யதார்த்தம் என்ன?

 

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தில், 'நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்’ என்று அமெரிக்கா கண்டிப்பு காட்டியது. அதைப் பெரிய வெற்றியாக எல்லோரும் பேசினார்கள். நல்லிணக்க ஆணைக் குழு என்பது வேறு ஒன்றும் இல்லை...

 

இலங்கை அரசே ஒரு குழு அமைத்து, தன்னைத்தானே விசாரித்துக் கொண்டது. அப்படி விசாரித்து தமிழர்களுக்குச் சில சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்த அந்தக் குழு பரிந்துரைத்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் தீர்ப்பு. இந்த ஒரு வருடத்தில் அந்தக் கண்துடைப்பு பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு அமல்படுத்தவில்லை. இந்த நிலையில்தான் மறுபடியும் ஐ.நா. கூட்டம் நடக்கிறது. இப்போது என்ன நடக்கும்?

 

''நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மேலும் ஓர் ஆண்டு அவகாசம் கேட்பார்கள். நிச்சயம் அதற்கு அனுமதி அளிக்கப்படும். அதைத் தாண்டி சேனல் 4-ன் ஆதாரங்களால் சில சர்ச்சைகள் உருவாகலாம். இதற்காக, பெயரளவுக்கு இலங்கையை மேற்கத்திய நாடுகள் கண்டிக் கும். அதைப் பெரிய வெற்றியாக நாம் கொண்டா டலாம். ஆனால், அதனால் இலங்கைக்குச் சிறு ஆபத்தும் நேராது. ஏனெனில், இலங்கையை இந்தியா மட்டும் பாதுகாக்கவில்லை. சீனா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையை அரண்போலக் காக்கின்றன!'' என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

 

இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ப்பது பலருக்கு வியப்பை அளிக்கலாம். 'இலங்கை மீது விசாரணை வேண்டும்; நடவடிக்கை வேண்டும்’ என்ற அமெரிக்காவின் சமீபகாலப் போக்குகளை வைத்துப் பார்க்கும்போது இது முரணாகத் தோன்றலாம். ஆனால், நடைமுறையில் சீனாவின் செல்வாக்கு, இலங்கைத் தீவில் எல்லை கடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கையைச் செல்லமாகக் குட்டிவைக்க அமெரிக்கா நினைக்கிறது; தண்டிப்பதற்கு அல்ல! இதற்கு உதாரணம் ஒன்றும் சொல்ல முடியும்... 2009 இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த இலங்கை ராணுவ ஜெனரல்களில் ஒருவர் சாவேந்திர சில்வா. போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? அதே அமெரிக்க ராணுவத்துக்கு, பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகரமாக முறியடிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறார். இதுதான் இலங்கையைத் தண்டிக்கக் கோரும் அமெரிக்காவின் நிஜ முகம்! இன்னொரு புறம், இத்தகைய ஆதாரங்களை முன்வைத்து இந்திய அரசை மனம் இரங்கவைத்துவிடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பிணங்களைக் கண்டு பதறாத காங்கிரஸ் அரசின் 'கூட்டு மனசாட்சி’, பாலச்சந்திரனின் ஒரே சடலத்தில் விழித்தெழும் என நம்புவது அரசியல் அறியாமை. எந்த இந்திய அரசு தமிழீ ழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ... அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.

 

இந்த விவகாரம் தொடர்பாக இன்னொரு கோணத்தையும் நாம் மனதில்கொள்ள வேண்டும்.

 

சேனல் 4 ஈழப் போர் தொடர்பான ஆதாரங்களைப் படிப்படியாக வெளியிடும் பரபரப்பு உத்தி, மிகவும் ஆபத்தானது. பாலச்சந்திரன் குண்டு துளைக்கப்பட்டு சடலமாக விழுந்துகிடக்கும் புகைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதை வெளியிட்ட சேனல் 4-தான் இப்போது பாலச்சந்திரன் உயிரோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது. ''இந்தப் புகைப்படங்கள் ஒரே கேமராவால் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை. உண்மையானவை'' என்று சொல்கிறார் கேலம் மெக்ரே. எனில், நிச்சயம் கடந்த வருடமே பாலச் சந்திரன் உயிருடன் உள்ள புகைப்படமும் அவர் களிடம் இருந்திருக்கிறது. அடுத்த ஆண்டு பாலச் சந்திரன் கொல்லப்பட்ட வீடியோகூட வரலாம். இதை மெக்ரேவும் ஒப்புக்கொள்கிறார்.

 

''எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பொருத்த மான நேரத்தில் வெளியிடுவோம்'' என்கிறார். 'பொருத்தமான நேரம்’ என அவர் சொல்வதன் பொருள் என்ன? அடுத்த ஆண்டு ஜெனிவா கூட்டமா? இங்கிலாந்து அரசு, கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 3.8 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள ஆயுதங்களை இலங்கை ராணுவத்துக்கு வியாபாரம் செய்திருக்கிறது. ஒரு பக்கம் இலங்கை யின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஆயுத வியாபாரம் செய்யும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது சேனல் 4-ன் ஆவணப்படம் சிறு விமர்சனத்தையும் வைக்கவில்லை.

 

தமிழர் அமைப்புகளும் இதைப் பற்றி எதுவும் கேட்காமல் 'யாரோ ஒருவர் செய்தால் சரிதான்’ என்று ஒதுங்கிப்போகிறார்கள். ஆனால், நிதர்சன யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு, நமக்கான நீதியை யாரேனும் பெற்றுத் தருவார்கள் என நம்பியிருக்காமல், இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அதுதான் தீர்வுக்கான வழி. மற்றபடி மனசாட்சியைத் தட்டி எழுப்பி நியாயம் பெறுவ தற்கு இலங்கையையும் இந்தியாவையும் நியாய வான்கள் ஆட்சி செலுத்தவில்லை. இலங்கை, பிணங்களின் தேசம். ராஜபக்ஷே, சுடுகாட்டின் அரசன்!

 

மூலம்: விகடன் - பங்குனி 6, 2013
பிரசுரித்த நாள்: Feb 28, 2013 14:05:37 GMT

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பணி நிமித்தமாக சந்தித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் பேச்சுவாக்கில் பாலச்சந்திரம் படுகொலையைப் பற்றி பேசினார், “ ரொம்ப கஷ்டமா இருக்குங்க பார்த்தப்ப.. உங்களுக்கேல்லாம் அவரு பெரிய தலைவர்ன்னு சொல்ரீங்க, ஆனா தமிழ் நாட்டுல ஒரு ரியாக்ஸனும் இல்லையே. படத்த பார்த்தப்ப எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு”ன்னார்.. நான் அங்கே நடந்த இனப்படுகொலை, தமிழீழம் பற்றி சிறிது பேசினேன், எதையும் அவர் காதில் வாங்கியதாக தெரியவில்லை, “இவ்வளவு நடந்த்து எதுவும் எங்களுக்கு தெரியலையே, எந்த மீடியாவிலையும் வரலையே? “ ன்னார்.

 

நான் சொன்னேன் ‘இல்லைங்க எந்த மீடியாவும் எங்களுக்கு சப்போர்ட்டா வரலை”.. கொஞ்ச நேரம் யோசிச்சவர் பிறகு சொன்னார், “ எல்லாஞ்சரிங்க, நாங்க மதிக்கிற தலைவரோட குழந்தைக்கு இந்த மாதிரி நடந்திருந்தா இன்னேரம் ஆந்திரா பத்தி எறிஞ்சிட்டு இருக்கும்… ஈழமெல்லாம் விடுங்க, இதுக்கு நாலு சாத்து சாத்தி இருந்தா எல்லாமே கிடைக்குமில்ல. மீடியா வந்து நின்னுருக்குமுல்ல.. எதுவும் செய்யாம எப்படிங்க நடக்கும்.. . குழந்தையை கொன்னவன விட்டு வச்சுட்டு, போராட்டம் கீராட்டம்னு சொல்றீங்களே ..ஒரு கடைய திறக்க வுட்டுறக்க மாட்டோம், எங்க ஊர்ல…. இலங்கை தூதரகமெல்லாம் வேற ஊருக்கு அனுப்பி இருப்போம். ராஜபக்சே அடுத்து திருப்பது வரட்டும் இருக்கு ”ன்னு கோபமாகச் சொன்னார்..

 

வேறொரு வங்காளி நண்பர் சொன்னார், “ it look sad man, he looks like my son, he is of his age too.. horrible, I cudnt forget the innocent eyes” .

 

நாம் தமிழனா இருந்து என்ன சாதிச்சோம்னு கேட்காம கேட்டாங்க.. அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு நமக்கு யோக்கியதை இருக்கிறதா எனத் தெரிய்வில்லை.

 

”வீதிக்கு வராமல் விதிகள் மாறாது” என மற்றவருக்கு அட்வைஸ் செய்வோம். ஆளுக்கு ஒரு “லைக்”, “ஒரு ஷேர்” பண்ணி முடிஞ்சா ’இரண்டு வரி’ எழுதி நமது அரசியல் கடமையை நிறைவேற்றுவோம்.

 

 

- Thirumurugan Gandhi

ஈழத்தமிழர் வெள்ளைகாரன் ஆட்சியில் நல்லா இருந்ததற்கு காரணம் சில காரியங்களை நன்றாக அவர்களால் செய்ய முடியும் என்பதனால்த்தான். கிட்டத்தட்ட எல்லோரும் தன் தன் அலுவல்களை நன்றாக செய்ய தெரிந்தவர்கள். அந்த நேரம் ஒரு ஒழுங்கான ஆட்சி இருந்தது. அதில் அவனவன் அலுவலை பார்க்கத்தெரிந்தவன் எல்லாம் முன்னால் போனான். இன்று அடிவடிதனம் மட்டும் தான் இருக்கு. அதனால் அவனவன் அலுவலை பார்பதற்காக துரோகியாக மாறியவன் எல்லாம் மந்திரியாகிவிட்டன். ஒட்டித்தப்ப தெரிந்தவன் ஓடித்தப்பிவிட்டான். மற்றவர்கள் கூரை முகட்டைத்தான் பார்க்க முடிகிறது.  :(

28viko.jpg

 

மறைமலைநகரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் முகமூடியை

400 மாணவ, மாணவிகளுக்கு அணிவித்து பன்னாட்டு நீதி கேட்டு முழக்கமிடுகிறார்

மதிமுக பொதுச்செயலர் வைகோ.

உரிமைக்காக உலக சமூக தமிழர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் வகையில் பாலசந்திரனின் ஒளிபிரகாசிக்கும் கண்களுடன் முகமூடி அணிந்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற போராட்டக்களத்தில் நீதி கேட்கும் மாணவ, மாணவிகளே உங்களின் குரல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனசாட்சியை தொட்டு நியாயம்  கேட்கும் வகையில் பன்னாட்டு நீதி கிடைக்க வேண்டும்.

 

உலக நாடுகள் இந்த காட்சியைப் பார்த்து ராஜபட்சவை நீதிமன்ற கூண்டில் ஏற்றவேண்டும். ஒளிபொருந்திய கண்களுடன் உட்கார்ந்து எதையோ பார்த்த வண்ணம் பிஞ்சு விரல்களால் சாப்பிடும் காட்சியைப் பார்த்தும், சிங்கள ராணுவத்தினர் கண்முன்னே 5 பேரை சுட்டுக்கொன்றதும் இல்லாமல், அருகில் இருந்த பாலச்சந்திரனின் மார்பில் சுட்டுக்கொன்றுள்ள கொடுமைகளை இனியும் பார்த்து இருக்கமாட்டோம். நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

 

http://dinamani.com/tamilnadu/article1483376.ece

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முகப்புத்தகத்தில், கிடைத்த படம்!

 

 

14049_612825365409599_1505484693_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் - சவேந்திர சில்வா
01 மார்ச் 2013
 
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமை பேரவையில் ஈழவாதிகள்  முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தாம் உரிய பதிலை வழங்க போவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
இந்த பொய்யான குற்றச்சாட்டை  இராணுவத்தின் மீது சுமத்த ஏன் நான்கு வருடங்கள் தாமதமானது என தான் கேள்வி எழுப்ப போவதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
அதேவேளை மனித உரிமை பேரவையில் இன்றைய தினம், பாலச்சந்திரன் சம்பந்தமான புகைப்படங்கள் அடங்கிய நோ பையர் ஷோன் திரைப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்கிய செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரேவை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தான் சவால் விடுப்பதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
 
இதனிடையே குறித்த வீடியோ திரைப்படம் மனித உரிமை பேரவையின் மண்டபம் ஒன்றில் திரையிடப்பட உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு  இலங்கை மனித உரிமை பேரவையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவேந்திராவுக்கு உண்மைகள் தெரியவில்லை போலும். இந்தியா சுப்பிரமணிய சாமியை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கம் பொன்சேக்காவை போட்டுக்கொடுத்து மகிந்ததாவையும், கோத்தாவையும் தப்பும் படி சொல்வதற்கு போல் உள்ளது. இதைதான் சாமி பேட்டிகளிலும் சொன்னவர். தமிழ்நாட்டில் சாமி மாதிரியும் நிதானமான அரசியல் வாதிகள் இருப்பதை அறிந்திராத பொன்சேக்கா தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்றவர் :lol: . இன்றைக்கு சாமி பொன்சேக்காவை இலக்கு வைக்கிறார் போலிருக்கிறது.

எனவே பொன்சேக்கா எந்த பக்கம் என்று தெரியாமல் சவேந்திரா பேசினால் ஆபத்து. பொன்சேக்கா இலங்கை அரசின் ஆணைதான் பிடிபட்ட புலிகள் சுட்டுக்கொல்லபட்டது என்று கூறியது ஐ.நா உள்ளக விசாரணையிலும் இருக்கிறது. சவேந்திராவை போட்டுகொடுக்க ரம்புக்க காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல்

 

சிங்கள இனவெறி படையினரை கண்டித்தும் பாலகன் 12 வயது பாலச்சந்திரனை படுகொலை செய்ததைக் கண்டித்தும் பாலச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி இன்று (01.03.2013) மாலை 6.00 மணிக்கு மெரினா கடற்கரையில். கண்ணகி சிலை அருகில் நடைபெற உள்ளது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.நல்லகண்ணு உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பல முக்கியத் தலைவர்கள் கலந்து பங்கேற்க உள்ளர்கள்.

ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்கின்றனர். பல்வேறு மாணவ அமைப்புகளும் பொதுமக்களும் கலந்துகொள்ள உள்ளதாக போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தெரிவித்துள்ளார்.

 

http://www.sankathi24.com/news/27528/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் கலங்காதவர் இல்லை - சுப.வீ. உருக்கம்!

577259_487200001359885_1993225227_n.jpg

601594_487204508026101_218576072_n.jpg

 

தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்?.

Why Balachandran had to die

 

Balachandran did not represent a threat to Sri Lanka in any shape or form and would not have made a difference to Sri Lanka’s victory. Nothing was to be gained by the execution of this child. And yet, Balachandran was killed; shot five times at close range. It was an act imbued with momentous significance. In executing Balachandran, the Sinhala military was also annihilating the Tamils’ struggle and affirming to itself its complete dominance over the Tamil people. The Sri Lankan military’s abuses cannot be seen as individualised violations. Rather they are part of the state’s collective targeting of the Tamil population.

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=7163

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். கையாலாகத எங்களால்...............கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கவே முடிகிறது...............................

 

:((

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் செல்லப் பிள்ளை பாலச்சந்திரன்

 

 

 

 

Edited by தமிழரசு

பாலச்சந்திரன் கொலை கேட்டு உலகமே அதிர்கிறது. சிங்களத்தின் கொடூர முகம் கண்டு சினக்கிறது. தமிழினம் தலை நிமிரட்டும்.

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HFpv93YTWtg

  • கருத்துக்கள உறவுகள்
விளையாடக் கூட ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறக்கும் பாடிகார்ட்
Posted by: Sudha Published: Monday, March 4, 2013, 10:36 [iST]
 
கொழும்பு: இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் அமையக் கூடாது. அதுவும் குழந்தைப் பிராயம் அமையவே கூடாது. அப்படிப்பட்ட சோகமான வாழ்வை வாழ்ந்து முடித்துள்ளான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன்.
பிரபாகரன் குடும்பத்தின் கதி என்ன என்பது பெரும் சோகமான மர்மமாக உள்ளது. மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டு விட்டார். மற்றவர்கள் குறித்துத் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றவர்கள் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சார்லஸ் ஆண்டனியாவது போரிட்டு உயிரிழந்தார். ஆனால் பாலச்சந்திரன் மரணம்... இதயத்தைப் பதற வைப்பதாக உள்ளது அந்த பாலகனின் கடைசி நிமிடங்கள்.
உயிருடன் பிடித்து உட்கார வைத்து, பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்து, துடிக்க துடிக்க நெஞ்சில் புல்லட்களை இறக்கி கொடூரமாகக் கொன்றுள்ளனர் இதயமே இல்லாத மனிதப் பதர்கள்.
இந்த நிலையில் பாலச்சந்திரனின் சிறு பிராயத்து வாழ்க்கை குறித்து அவரது பாடிகார்டுகளில் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளார். சுடரொலி பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது...

http://tamil.oneindia.in/news/2013/03/04/srilanka-balachandran-was-lonely-kid-bodyguard-170797.html

733856_440278306049515_1310420225_n.jpg



கேலிச்சித்திரம் என்று சொல்கிறோம்.உலகை உலுக்கிய முக்கிய படைப்பு வடிவம் அது.கோடுகளால் வார்க்கப்பட்ட கூராயுதம்.உலகை ஏமாற்ற நினைக்கும் கொடுங்கோலன் ராஜபட்சே இக்கேலிச் சித்திரத்தைப் பார்த்து வெட்கித் தலை குனியட்டும்.கார்ட்டூனிஸ்ட் மதிக்கு நன்றி.தமிழ் உணர்வுள்ள அனைவரும் இதை அனைவருக்கும் பகிர்வோம்.இதுவும் கூட அநீதிக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்தான்....

563467_433934250020042_388694104_n.jpg

313324_10200312985322992_135336788_n.jpg

அவன் ஒரு குழந்தைப் பிள்ளை

 

அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.
எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது.

பாலச்சந்திரனோடு பழகிய பொழுதுகள் - வாய் திறக்கிறார் மெய்ப்பாதுகாவலர்

நாம் பார்த்துப் பழகியவைதான். அவற்றை நேரடியாகவும், நிழற்படமாகவும், காணொலியாகவும், பார்த்திருக்கின்றோம். கேட்டிருக்கின்றோம். மரணத்தைக் கட்டிப்பிடித்தபடியே வாழ்வதைத் தான் வாழ்வென்கின்றோம்.

அதுவும், துப்பாக்கி மரணங்கள் மூவேளைக்கும் பொதுவானவை. அதனால் தான் மரணங்கள் பற்றிய செய்திகள் உப்பற்றவைகளாக மாறிவிட்டன. உலக நாடுகளுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்தான் அது தற்போதைக்கு ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்தவகையான மனப்போக்கு நிலைகளுக்குள்ளும் அவனின் படம் விளம்பரப் பொருளாகியிருக்கின்றது.

அந்தப் படத்துக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் என்பது தலையாய அம்சம். பாலச்சந்திரன் எனப்பட்ட 12 வயதே ஆன அந்த சிறுவனின் படம்  மீதான அதிர்வுகள் ஐ.நா. வரை கேட்டிருக்கின்றது. உள்ளூரளவிலும் கடந்த இரு வாரங்களாக பல கோணங்களில் எழுதித் தீர்த்தாயிற்று.

ஆயினும் இப்போது தான் சிறுவனுடன் நெருக்கமானவர்கள் வாய்திறக்கத் தயாராகியிருக்கின்றனர். இலங்கையில் இல்லாத அவர்கள் மறைவாயிருந்து பாலச்சந்திரனுடன் பழகிய பொழுதுகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக உரையாடல் வடிவில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிரப்பட்ட ஓர் உரையாடல் இங்கு கட்டுரை வடிவம் பெறுகின்றது. "அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான்.

3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான். எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான்.

காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது. ''அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களையும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார்.

"தலைவர்' வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளில் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்த அதிக இளைஞர்கள் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த நேரமது. இவரும் மட்டக்களப்புக்காரர்.

"தலைவர்' அதிகம் நேசித்த ஊர்க்காரர் தான் என்றபடியால் தன்னையும் மெய்ப்பாதுகாப்புப் பணியில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். இன்னும் சில காலத்தில் "தலைவரின்' குடும்பத்துக் கான பாதுகாவலராக்கப்படுகின்றார்.

தலைவரின் வீட்டுக்கு மெய்ப்பாதுகாவலராக போனதுபற்றி....?

ஆரம்பத்தில் எனக்கும் "தலைவர்' என்றால் பயமாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அந்த நிலைமாறி தலைவரின் மென்மையான பக்கங்களை உணரத் தொடங்கினேன். பயம் போய் அவரை பார்க்கும் நாளுக்காக ஏங்கத் தொடங்கினோம்.

குடும்பத்துடன் இருப்பதற்காக "தலைவர்' வீடு வரும் நாளுக்காகவும், "தலைவரின் கையால் சமைத்துப் போடும் கோழிக் கறிக்கும்  இடியப்பத்துக்காகவும்' காத்திருக்கத் தொடங்கினோம். (அந்தக் கால நினைவில் நனைகின்றார்) "அக்கா' (பிரபாகரனின் மனைவி) அன்று சமைக்கமாட்டா. அல்லது தலைவர் சமைக்க விடமாட்டார்.

எல்லோருக்கும் தன்கையால் சமைத்து தானே பகிர்வார். சில வேளைகளில் அவருக்கே இடியப்பம் இல்லாமல் போய்விடும். அந்த அதிசய மனிதருக்குள் இவ்வளவு அபரிமிதமான சமையல் கலையை கற்பித்தது யார் என்ற வினாக்களுக்கான விடை தேடுதலில் பல நாள் இரவுக் காவலரண் பொழுதுகள் முடிந்தன.

தலைவரின் பிள்ளைகளுக்கும் போராளிகளுக்குமான உறவு நிலை பற்றிச் சொல்லுங்கள்...?

தலைவரின் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ் வொரு மாதிரி. நாங்கள் முதலில் கண்டது தம்பியைத் தான் (சார்ள்ஸை சொல்கின்றார்) தம்பி சின்னனில கொஞ்சம் சோம்பேறி. நல்ல குண்டா இருப்பார்.

அவ்வளவு குழப்படி இல்ல. பாண்டியன் ஸ்பெசல் ஐஸ் கிறீம்ல ஒரே நேரத்தில 2 சாப்பிடுவார். கராட்டி, விளையாட்டு, ஓடுறது, பாடுறது எண்ட விஷயங்களில பெரிய வல்லமையானவர் இல்லை. வளர வளர கொம்பியூட்டரோடதான் அதிகமா இருப்பார்.

அதுக்குப் பிறகு தங்கச்சி. படிப்பைத் தவிர அவாவுக்கு வேற எதுவும் தெரியாது. புத்தகங்களுக்குள்ள நாள்களை முடிச்சிருவா. அதுக்குப் பிறகுதான் பாலா. யாருமே எதிர்பாக்காத நேரத்தில பிறந்ததாக சொல்லு வாங்க. அவனும் ஆச்சரியம்தான்.

சரி தலைவரின் கடைக்குட்டி பாலாவோடு பழகிய பொழுதுகள் எப்படியிருந்தன...?

1996 ஆம் ஆண்டு தான் பாலா பூமிக்கு வந்தான். சண்டை கிளை கொண்டிருந்த நேரம். வன்னியில் பல இடங்களிலிலும் தாக்குதல் களங்கள் திறக்கப்பட்டிருந்தன. முள்ளியவளையில் பாலா பிறந்தான். அப்பா அதிக நாள் பாலாவை பார்க்க வரவில்லை.

ஆனாலும் அப்பம்மா, அப்பப்பா (பிரபாகரனின் பெற்றோர்) பாலாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர். மற்றைய பிள்ளைகளை விட இவன் மீது மூத்தவர்களின் கவனிப்பு அதிகம் இருந்தது. பாலா அங்கிள், அன்ரி (பாலசிங்கம் அடேல் தம்பதி) கூட சில காலம் இருந்தார்கள்.

இவர்கள் யாரையும் பாலா அதிகம் விரும்பாமல் வளர்ந்ததுதான் ஆச்சரியம். தீத்தி விடும் உணவை அதிகம் நிராகரிப்பவன் பாலா. (கொஞ்ச நேரம் பாலாவின் குழந்தை பிராயம் நினைவில் தவழ்ந்தவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உரையாடலுக்கு வந்தார்..)

பாலா அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும் போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் எங்களின் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.

எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது.

அதற்குப் பின்னர் அவன் தகர அடைப்பு வேலிக்குள்ளும், பனையோலை வேலி அடைப்பு வீட்டுக்குள்ளும் வாழ விரும்பவில்லை. காவலரண்களுக்கு ஓடி வருவதையே பெரும்பாலும் செய்யத் தொடங்கினான்.

பாலச்சந்திரனும் தலைவரும் சந்திக்கும் தருணங்கள் எப்படி இருந்தன..?

(எந்தக் கேள்விக்கும் நின்று நிதானித்து பதில் தந்தவர் இதற்கு மட்டும் சிரிப்பை தந்தார்).  பாலா பிறந்து சில காலங்களின் பின்னரே "தலைவர்' வந்து பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் இடுப்புக்கு மேலாக சாரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கதிரையில் அமர்ந்தார்.

மடியில் தூக்கி வைத்து பாலாவைக் கொஞ்சத் தொடங்கினார். பாலா சொல்லி வைத்தால் போல அப்பாவின் மடியை "நாசம்' செய்தான். அதுவே அவன் வெளிப்படுத்திய அப்பா மீதான முதல் கோபம் என்றார் அக்கா (தலைவரின் மனைவி). அப்பா கோபிக்கவில்லை. தானே அதனை சுத்தப்படுத்தினார்.

எல்லோரும் ஓடிவந்து பாலாவையும், அப்பாவையும் சுத்தப்படுத்த முனைந்தார்கள்.  தலைவர் சொன்னார், "என்ர பிள்ளை நானே செய்யிறன்''. அன்று முதல் பல தடவைகள் பாலாவை தலைவர் சுத்தம் செய்த பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆக தலைவர், நல்ல அப்பாவும் கூட!

அப்பா ஒரு முறை வீடு வந்திருந்தார். தனது பிஸ்டலை மேசை லாச்சிக்குள் வைத்து விட்டு "பாத் ரூம்' போய்விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா யாரும் கவனிக்காத நேரத்தில் பிஸ்டலை விளையாட்டுப் பொருளாக்கினான். வீட்டிலிருந்த அனைவரும் அலறினார்கள். அப்பா அப்போதும் எந்தப் பயமும் காட்டாது இலகுவாக அதனை எடுத்துக் கொண்டார்.

அது சரி, பாலா யாரோடு விளையாடப் போவான்?

பாலாவுடன் விளையாட சொர்ணம் அண்ணை, சங்கர் அண்ணை வீட்டுப் பிள்ளைகள் எப்போதாவது வருவார்கள். அவனுக்கு அவர்களுடனான விளையாட்டு போதுமானதாக இருக்காது. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தன்னுடன் விளையாட வரச்சொல்லி எங்களை அழைப்பான். வராவிட்டால் வேலிக்கு வெளியே போகப் போவதாக வெருட்டுவான். வெருட்டியதை செய்தும் இருக்கின்றான். நாங்கள் வீட்டு சமையலுக்காக விறகு வெட்டப் போவோம்.

"சும்மா நானும் உங்களோட வரட்டோ?'' என்ற கெஞ்சலை அள்ளி வீசுவான். அனைவரும் பொறுப்பெடுத்து கூட்டிப் போவோம். மரக்குற்றியில் அமர்ந்து காலாட்டிய படி எதையாவது கொறித்தபடி வேலியற்ற வெளியை ரசித்துக் கொண்டிருப்பான் பாலா. அவன் வெளியில் போய் எல்லாப் பிள்ளைகளையும் போல வாழவே அதிகம் விரும்பினான்.

பள்ளிக்கூடத்தில் பாலா எப்படி...?

ஆரம்பக் கற்றலை புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு பாடசாலையில் தான் பாலா படிக்கத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் போல அதிகம் படிக்க ஆசைப்பட்டான் பாலா.

வகுப்பறை மேசைகளிலும், கரும்பலகையிலும் அ, ஆ வை கிறுக்கி விளையாட அவன் ஆசைபட்டான். அங்கு சில நண்பர்கள் பாடசாலைப் படலை வரை மட்டும் கிடைத்தார்கள். பிறகு கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்க்கப்பட்டான்.

முன்பிருந்ததை விட பாலாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வகுப்பறையில் அதிகம் அமைதி காத்தான். அதற்கான காரணத்தை அவன் சொல்லவேயில்லை. பாலா அதிகம் கேள்விகள் கேட்டான். வகுப்பறையில் சேமிக்கப்பட்ட முழுச் சந்தேகங்களுக்குமான விடைகளை எம்மிடம் தேடினான்.

அந்தக் காலத்தில் பாலாவுக்கு காலைச் சாப்பாட்டைக் "பொக்ஸில்' கொடுத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் தானியச் சாப்பாடுதான் இருக்கும். அங்கு சாப்பிடுவதற்கு அவனுக்கு பெரும் வெட்கம். எல்லாப் பிள்ளைகளும் சர்வ சாதாரணமாகச் சாப்பிடுவார்கள்.

ஆனால் பாலா அசாதாரணமாக சாப்பிடுவான். புத்தக பையினுள்ளும், புத்தகங்களுக்குள்ளும் மறைத்து வைத்துச் சாப்பிடுவதில் மகா கெட்டிக்காரன். பொது இடங்களில் அதிகம் வெட்கம், பயம் கொண்டவனாக பாலா வளர்ந்தான்.

ஒரு முறை அவனுக்கு பிறந்த நாள் வந்தது. நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ரொபி கொடுக்க விரும்பினான். நாமும் வாங்கிக் கொடுத்தோம். அதைக் கொடுக்கும்போது சில ஆசிரியர்கள் இரண்டு, மூன்று ரொபிகள் எடுத்தனர். "எல்லாருக்கும் குடுக்க வேணும், ஒன்டு மட்டும் எடுங்கோ'' என்று சொல்லி ஏனையவற்றை திரும்ப வாங்கிக் கொண்டான் பாலா.

பாலா ஏதாவது அபாயங்களில் சிக்கியதுண்டா?

பெரிதாக அப்படியொன்றும் நடக்கவில்லை. கிளிநொச்சியில் ஒருமுறை பாலா வசித்த வீட்டுக்கு அருகில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஆசிரியை ஒருவரும் அவரது இரண்டு மகன்மாரும் கொல்லப்பட்டார்கள்.

அதற்குப் பக்கத்து வீட்டில் பாலாவும், அக்காவும், தங்கச்சியும் இருந்தார்கள். அந்த சம்பவத்தோடு வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு என்று பாலாவின் இருப்பிடம் மாறிக் கொண்டிருந்தது.

இறுதியாக முள்ளிவாய்க்கால் வந்து சேர்ந்தான் பாலா. (அதற்குப் பின்னர் அவரால் தொடர்ந்து உரையாட முடியாமல் இருந்தது. என்ன கேட்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. நீண்ட அமைதிக்குப் பின்னர் கடைசிக் கேள்வியை தயங்கித் தயங்கித் தொடுத்தோம்.)

இறுதியில் பாலாவுக்கு ஏன் இப்படி நடந்தது? (அதற்கும் நீண்ட மௌனம். பின்னர் இரண்டு வரிகளில் பதில் வந்தது.)

அது எனக்குத் தெரியாது. நான் கடைசி நேரத்தில பாலாவுடன் இல்லை.  (அவரைப் போலவே எங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாலாவைக் காக்க முடியாத குற்ற உணர்ச்சியில் அவர் மட்டுமல்ல நாங்களும் கூனிக்குறுகிப் போனோம். பிறகு எப்படி உரையாடலைத் தொடர முடியும்.)

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2760746806788856

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.