Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தோல்வி உறுதியானதால், 10 அதிகாரிகளை அனுப்பி விட்டு ஒதுங்குகிறது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சிறிலங்கா இந்தக் கூட்டத்தொடருக்கு முக்கியத்துவமளிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவோ, பரப்புரைகளை முறியடிக்கவோ முடியாது என்று உணர்ந்த நிலையில், வெறும் 10 அதிகாரிகளைக் கொண்ட குழுவை மட்டும் ஜெனிவாவுக்கு அனுப்ப சிறிலங்கா முடிவு செய்துள்ளது. 

அதுவும், ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவே இம்முறை சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்கவுள்ளார். 

கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க, அமைச்சர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோரை ஜெனிவாவுக்கு அனுப்பி கடுமையான பரப்புரைகளை சிறிலங்கா மேற்கொண்டது. 

எனினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்திருந்தது. 

இம்முறையும், அமெரிக்காவுடன் வெற்றிபெற முடியாது என்று உணர்ந்த நிலையிலேயே வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஒதுங்க சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

 

பலர் உதவிகளுடன் 'எல்லாமே முடிந்துவிட்டது' என்ற நிலையில் இருந்து மீள்படும் சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது.

 

கடந்த காலங்களில் பல மில்லியன்களை செலவழித்த சிங்களம் இந்த இடத்தில் பின்வாங்குவது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும். இதில் இருந்து அதற்கு அரசியல் இராஜதந்திர தோல்விகளே கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கூட்டம் எல்லா இடத்திலும் அவ மானப் பட்டு ஓடனும்.. தோல்வியை கண்டு தங்கலுக்குள் தாங்கள் புடுங்கு பட்டு அடி பட்டு சாகனும்...

நடப்பது ஒரு கயிறு இழுத்தல் போட்டி போன்றது.

 

அவர்கள் தோற்றாலும் அவர்களுக்கு நாடு இருக்கும், வாழ்வு இருக்கும்.

நாங்கள் தோற்றால் - அடையாளமே இல்லாமல் போய்விடுவோம்.

 

எனவே, எமக்கு போராடினால் தான் வாழ்வே!

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவர்கள் இப்படி நேரடியாக பிடிபடாமல் நழுவினால் இன்னும் தீர்வுக்கான நாட்களை இழுத்தடித்து நீர்த்துப்போகச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்குமல்லவா???? சர்வதேசம் என்ன செய்யப்போகுது???

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சர்வதேச விசாரணையை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு போகும். விசாரணையை முன்னெடுப்பதற்கான செயற்பாடு அங்கிருந்தே வரவேண்டும். அங்கே ரஷ்யா, சீனாவின் வீட்டோ அதிகாரங்களை வைத்து விளையாட தீர்மானித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சர்வதேச விசாரணையை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாதுகாப்பு கவுன்சிலுக்கு போகும். விசாரணையை முன்னெடுப்பதற்கான செயற்பாடு அங்கிருந்தே வரவேண்டும். அங்கே ரஷ்யா, சீனாவின் வீட்டோ அதிகாரங்களை வைத்து விளையாட தீர்மானித்துள்ளார்கள்.

சரி, சீனாவும் ரஷியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்!

 

ஒரு மனித உரிமை, சம்பந்தமான பிரச்னைக்கு இந்த நாடுகள் வீட்டோவைப் பாவித்தால், அது இந்த நாடுகளைப் பற்றிய உலகத்தின் பார்வையை, மாற்றிவிடும்!

 

நாகரிக உலகில், இந்த நாடுகளின் 'இமேஜ்' பாதிக்கப் படும்!

 

ஒரு சிறிய நாடான சிங்களத்திற்காக, இதை அவர்கள் முன்வந்து செய்வார்களா?  :o

அது சரி இவர்கள் இப்படி நேரடியாக பிடிபடாமல் நழுவினால் இன்னும் தீர்வுக்கான நாட்களை இழுத்தடித்து நீர்த்துப்போகச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்குமல்லவா???? சர்வதேசம் என்ன செய்யப்போகுது???

 

மிக முக்கியமான கேள்வி.

நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமைகளை (போர்குற்ற - வரலாற்று ஆதாரங்களை சேகரிப்பது, அறிந்தவர்கள் அனைவரிடமும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கொடூரங்களை விபரிப்பது, ஈழத் தமிழர்களுக்கு உகந்த தீர்வு என்ன என்பதை கூறுவது, ........., போன்றவற்றை) இடைவிடாது செய்யவேண்டும்.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் போர்க்குற்றத்தை முன்னிறுத்தி நிரந்தர தீர்வுத் திட்டம் பற்றிய நகர்வுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சீனாவும் ரஷியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்!

 

ஒரு மனித உரிமை, சம்பந்தமான பிரச்னைக்கு இந்த நாடுகள் வீட்டோவைப் பாவித்தால், அது இந்த நாடுகளைப் பற்றிய உலகத்தின் பார்வையை, மாற்றிவிடும்!

 

நாகரிக உலகில், இந்த நாடுகளின் 'இமேஜ்' பாதிக்கப் படும்!

 

ஒரு சிறிய நாடான சிங்களத்திற்காக, இதை அவர்கள் முன்வந்து செய்வார்களா?  :o

 

புங்கை..

 

இந்த இரு நாடுகளுக்கும் இமேஜ் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. சிரியாவில் இன்னும் மிண்டு கொடுப்பது இவர்கள்தான்.. ஆனால் சிரியாவில் மேற்குலகால் நடத்தப்படும் குழப்பங்கள் சரி என்று சொல்ல வரவில்லை. மேற்குலக ஊடகத் தாக்கம், பொதுவான மக்கள் அபிப்பிராயம் எல்லாம் ஆசாத்தை எதிர்ப்பதாகவே உள்ளது. ஆனாலும் சீனாவும், ரஷ்யாவும் தொடர்ந்து முட்டுக் கொடுக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எமது ஒற்றுமையான  உந்து தள்ளுதல்களிலேயே தங்கியுள்ளது.

 

இங்கு விவசாயி விக்கால் நான்கு பெயர்களைத்தான் எழுதமுடிந்துள்ளது.

நாம் ஐந்தாவதாகவேண்டும் என்று சொல்லவில்லை

அவர்களுக்கு பின்னாலாவது நிற்போமா.............

நான் நிற்பேன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.