Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைக்கறி சமைத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதா? - கவிஞர் வைரமுத்து

Featured Replies

balachandran_01.JPG

 

பிள்ளைக்கறி சமைத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதா?
- கவிஞர் வைரமுத்து

சர்வதேசச் சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை இலங்கையில் விழுகிறது. வேலுப்பிள்ள
பிரபாகரனின் மகன் 12 வயது பாலசந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட
சாட்சியங்களைக் காணும் போது இருதயம் ஒரு கணம் நின்று விட்டது;
என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது.

பால்வடியும் முகம்;
பளபளக்கும் மேனி; கனவுகளின் ஈரம் காயாத கண்கள். மிருகம் கூட அவனைக் கண்டு
ஒதுங்கிப் போயிருக்குமே எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை
ராணுவத்திற்கு? மரணம் நெருங்கும் போது என்னதான் நினைத்திருக்குமோ அந்தக்
கொலைக்களத்துக் குலக்கொழுந்து ? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி
முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான். வாழைத்தண்டு மார்பில்
வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப் போன தோட்டாக்கள். கண்கள் என்ற
உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன்.

ஒரு
பிள்ளையைக் கொல்லவா பீரங்கி ? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு ? போர்க்
குற்றங்களை மறைக்கும் இலங்கை இன்று ஒரு சர்வதேசச் சாட்சியத்தின் முன்னால்
தலைகுனிந்து நிற்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே கோயில் கோயிலாகச் சென்று
கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப்
போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா இருக்கும்
தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள் ?

இந்த நூற்றாண்டை
நினைத்தே நான் வெட்கப்படுகிறேன். மனிதன் வானத்திற்குப்
போய்க்கொண்டிருக்கிறான். மனிதம் பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் வெட்கித் தலைகுனியட்டும். ஐ.நா சபை இது குறித்து ஆழ்ந்த கவலை
கொள்ளட்டும்; தீர்வு சொல்லட்டும்.

பால்முகம் மாறாத பாலகனே !
பாலசந்திரனே ! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி ஆனவனே ! அழுகிறோம்; சாவை
மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து
சிந்திய ரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து.

-கவிஞர் வைரமுத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாலகனின் மரணமும் எமதுவிடுதலைப்போராட்டமும் நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பால்முகம் மாறாத பாலகனே !
பாலசந்திரனே ! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி ஆனவனே ! அழுகிறோம்; சாவை
மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து
சிந்திய ரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலகனின் மரணமும் எமதுவிடுதலைப்போராட்டமும் நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட விடயம்.

இரன்டும் வேறு வேறு தரப்பினரால்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிப்பேரரசே.....பிள்ளைகறி...சமைத்து விட்டு..இந்துக்கடவுளிடம் தமிழகமருகே வந்து பாவ விமோசனம் செய்கிறான்...இது நாம் னாதியற்றவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு செல்கிறான்....

  • கருத்துக்கள உறவுகள்

balachandran_01.JPG

 

இந்த நூற்றாண்டை

நினைத்தே நான் வெட்கப்படுகிறேன். மனிதன் வானத்திற்குப்

போய்க்கொண்டிருக்கிறான். மனிதம் பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது.

உலக நாடுகள் வெட்கித் தலைகுனியட்டும். ஐ.நா சபை இது குறித்து ஆழ்ந்த கவலை

கொள்ளட்டும்; தீர்வு சொல்லட்டும்.

.

-கவிஞர் வைரமுத்து

அவர்கள் கவலை கொள்வார்கள்

அவர்கள் தீர்வு சொல்லமாட்டார்கள்

கண்டனம் மட்டும் தெரிவிப்பார்கள்

 

நாங்கள் தான் எங்களுக்காப் போராடவேண்டும் 

உங்கள் உதவியுடன்.

தாய்த் தமிழகம் என்று ஈழத் தமிழனுக்காக ஒன்றிணைகின்றதோ 

அன்றே   கிடைக்கும் விடுதலை எங்களுக்கு

 

கவிதைக்கு நன்றி கவிப்பேரரசே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.