Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சையாகிறது எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்ச்சியில் ராதிகா சிற்சபைஈசன் தேசக்கொடி போர்த்திய விவகாரம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகன்,

மன்னிக்கவும், உங்கட கருத்துக்களை பார்க்கும் போது  கொழும்பு 7, இல் இருந்து வந்தவர் போல கதைக்கிறீர்கள்..இத்தகைய கதைகள் ஒரு வெற்றிகரமான ஒரு குடியேறியாக வaள எந்த வகையிலும் உதவாது.

நான் அந்தளவு எழுதிய பிற்பாடும், லக்கும்/மட்டையும் என்றீர்கள் என்றால் உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களை மாதிரி ராதிகா ஹை ஸ்கூல் போனதில் இருந்து என்ன செய்தவ என்று தெரியாது- நேர இருந்து பார்த்தவன் அல்ல. ஆனால் அவருடைய வெற்றியில் இருந்து ஒரு குடியேறி என்ன தகவலை எடுக்க முடியும் என்று அறிவதற்குரிய அனுபவம் உண்டு.

அடிப்படையில் சேரகூடாத கூட்டங்களுடன் சேரக்கூடாது ...இங்கே யாழில் உள்ளது மாதிரி விசர் கூட்டங்களில் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லுகிறமாதிரி தேசியத்தை சொல்லிக்கொண்டுதான் எலேச்டின் இல் நிற்கவேண்டும் என்றால்., சுயேச்சையாக தான் நிற்க வேண்டும்-முதலில் அப்படியும்  நிற்க விடுவார்களோ தெரியாது-.

கனடாவில எந்த ஒரு இடத்திலும் தமிழர்கள் தனித்து நின்று ஒரு பிரதி நிதியை தெரிவு செய்யக்கூடியவாறு செறிவாக இல்லை என்பதை விளங்க வேண்டும்...தேசிய கட்சிகள் உடன் சேர்ந்து, தமிழர் கூடுதலாக இருக்கிற இடங்களில் போட்டி போட வேண்டும்...அதன் பிறகு முதலில் சரியான கட்சியை  தேரிய வேண்டும், எங்கட ஆக்கள், கிம் கரியன்ஸ் நல்லம் எண்டு லிபரல் சேர்ந்தால்- அவர் நல்லவர், ஆனால் அவர் எப்ப தன்னுடைய இடத்தை விட்டுத்தருவார்? இப்படி கனக்க எழுதலாம்..

நீங்களே சொன்னீர்களே, லய்டன் இன் தனிப்பட்ட செல்வாக்கு என்று; அதுதான் ...அதை எடுக்க வேண்டும், காப்பர் உடன் 2 படம் எடுத்தவுடன் கோன்சவடிவ் இல போட்டி போட சிட் தரமாட்டார்கள், தந்தாலும் காப்பர் வந்து விசேட கவனமெடுத்து எங்களுக்காக கதைக்க மாட்டார்...இப்படி கனக்க ...

மற்றது, உது எல்லாம் முடிந்த பிறகு, நம்மாக்களுக்கு , தேசியம், தமிழ் தாயகம், தன்னச்சி, புங்குடுதீவு, நெடுந்தீவு, சித்தப்பா, பெரியப்பா, அந்த பள்ளிக்கூடம், இந்த பள்ளிக்கூடம் , பழைய மாணவர் சங்கம் ..........இப்படியே போய்  தானும் தனக்கு வோட்டு போட்டு,-கோயிலுக்கும் ஒரு நேத்தியை வைச்சுப்போட்டு இருக்க வேண்டும்- ..நான் என்னுடைய பிளான்ஐ சொல்லிபோட்டன் போல கிடக்கு.. :(

மிச்சத்திர்ற்கு பிறகு வாறன்...

உங்கட கதையள பார்கையில் உரில சொல்லுவினம், சந்திரனை பார்த்து  எதோ குலைத்தது என்று என்று சொல்லுவினம் ...சரியான உதாரணமாய் இருக்கிறேன் என்று நினைத்து  சந்தோசப்படுங்கோ ...

எரிமலை- வொல்கனோ நீங்கள் எழுதியது உங்களுக்கே விளங்குகிறதா என்று ஒரு முறை திரும்பவும் வாசித்துப் பாருங்கள்.

நீங்கள் மேலே எழுதியதைப் பார்க்கும்போது, உங்களுக்குப் பல விடயங்களில் பரிச்சயம் இல்லாதது போல் தெரிகிறது. ராதிகாவின் வெற்றி சந்தர்ப்பவசத்தால் அமைந்த ஒன்றேயன்றி அவரின் திறமையால் வந்ததல்ல. அவர் தனியே என்.டி.பி. கட்சியின் உதவியோடு மட்டும் தேர்தலில் நின்றிருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். வெற்றி பெற்றபின்னரான அவரின் செயற்பாடுகளை நீங்கள் அவதானித்துப் பார்ப்பீர்களாயின் உங்களுக்கே அது விளங்கும்.

”ஊரில சொல்லுவார்கள் தானறியாச் சிங்களம் தன் பிடரிக்கு ஆபத்து” என்று. இது உங்களுக்கும் அவருக்கும் மிகவும் நன்றாகவே பொருந்துகிறது.

உங்கள் கடைசி வரியில் நீங்கள் யாரென்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். அந்த வரையிலும் எனக்கு சந்தோசமே. 

கனேடிய தேசிய கொடியை போர்த்தியது பிழையான நடவடிக்கை.

உதாரணமாக ஈழ தமிழர்களின் தேசிய கொடியான புலிக்கொடியை போர்த்தி வரவேற்றிருந்தால் எமக்கு அது பிழை என்று தெரிந்திருக்கும். அதே போல் கனேடியர்களை பொறுத்தவரை கனேடிய தேசிய கொடியை போர்த்தி வரவேற்றதை பிழையான ஒரு செயலாக பார்ப்பார்கள்.

தமிழச்சி அக்கா சொன்னது போல் கனேடிய ஊடகங்களுக்கு இச்செய்தி சென்றிருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்கலாம். ஆனால் கனேடிய ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை என்பதால் பெரிதுபடுத்தாமல் விடுவதே நல்லது. அருகிலிருப்பவர்கள் தவறை அவருக்கு சுட்டிக்காட்டுங்கள்.
 
அல்வாயன் அண்ணா சொல்வதும் சரி. அதாவது பாலச்சந்திரன் படம் வெளிவந்த இந்த நேரத்தில் நாம் எம்மால் முடிந்தவரை அதற்கான செய்திகளுக்கும் பரப்புரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Edited by துளசி

வணக்கம்  காதல் நலமா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் ஆனால் எமது தேசியக்கொடியை போர்த்தியிருந்தாலும் அதே சூழலே உருவாகியிருக்கும். இதுவே அங்குள்ள சூழல் .........................எதுவும் செய்யமுடியாது .................அதற்காக மதிப்புக்குரிய ராதிகா அவர்களை தவறாக பார்ப்பதே எம் தவறு என்பதே எனது கருத்து, நன்றி........................

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் எங்கட ஆக்களுக்கு அடுத்தவன் சொத்தை தங்கட என்றதில ரெம்ப பிரியம். தங்கட சொத்த எவன் திருடிக் கொண்டு போனாலும் அது கண்ணில தெரிவதே இல்லை..!

கனடா கொடியை கனடா தமிழர்கள் என்போர் வடிவமைக்கவும் இல்ல.. அவர்களின் வழித்தோன்றலா அது வரவும் இல்ல. கனடா வந்த ஒரு இந்திய கலைஞனை அந்த நாட்டின் கொடியைப் போர்த்தி கெளரவிப்பதில்.. என்ன பிரச்சனைன்னும் புரியல்ல.

எங்கட தமிழீழ தேசியக் கொடியை சர்வதேசத்தில பறக்க விடாத ஒளிச்சி வை என்றப்போ வராத கருத்துக்கள் எல்லாம் இப்ப வருது..??! எங்கட தமிழீழ தேசியக் கொடியை போராளிகளின் கழுத்தை வெட்டி அந்த இரத்தத்தில் சிங்களவன் நனைச்சுப் போடேக்க வராத ஆத்திரம் எல்லாம்.. சா.. மரியாதை.. மனிதாபிமானம் எல்லாம் கனடா கொடி மேல வருகுது..???!

அப்படிப் பார்க்கேக்க.. தமிழர்களுக்கும் கனடாக்கும்.. ஒரு பில்லியன் காலம் தொடர்பு இருக்குமோ..????! :lol::icon_idea:

87576292-sri-lankan.jpg

எங்கட பூர்வீக வழி வந்த கொடி இப்படிக் கிடக்குது.. அதுக்கு எவனும் கருத்துக் கணிப்பும் நடத்திறதில்ல அதைப் பற்றி கவலைப்படுறதும் இல்ல..! ஆனால் சிங்களவனுக்குத் தெரியுது.. எதை அவமதிக்கனுன்னு.. எதைப் புறக்கணிக்கனுன்னு..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. தமிழீழ தேசியக்கொடிக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை..

ராதிகா ஒரு கனேடிய எம்பி.. நாளை இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டால் குடிவரவாளர்களுக்கு "கனேடிய அறிவு" போதாது என்று ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ஏற்கனவே ஒருமுறை ராதிகாவுக்கு இது நடந்ததுதான்.

இவரின் செயற்பாடுகள் பின்னாளில் மற்றவர்களுக்கும் ஒரு தாக்கத்தைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதே ஆதங்கம். அவரைத் திட்டுவது நோக்கமல்ல.. அவருக்கும் அவரால் வருங்கால தமிழ் அரசியலாளருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற ஒரு நல்ல எண்ணமே காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தேசிய கொடியை போர்த்தியது பிழையான நடவடிக்கை.

உதாரணமாக ஈழ தமிழர்களின் தேசிய கொடியான புலிக்கொடியை போர்த்தி வரவேற்றிருந்தால் எமக்கு அது பிழை என்று தெரிந்திருக்கும். அதே போல் கனேடியர்களை பொறுத்தவரை கனேடிய தேசிய கொடியை போர்த்தி வரவேற்றதை பிழையான ஒரு செயலாக பார்ப்பார்கள்.

தமிழச்சி அக்கா சொன்னது போல் கனேடிய ஊடகங்களுக்கு இச்செய்தி சென்றிருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்கலாம். ஆனால் கனேடிய ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை என்பதால் பெரிதுபடுத்தாமல் விடுவதே நல்லது. அருகிலிருப்பவர்கள் தவறை அவருக்கு சுட்டிக்காட்டுங்கள்.

அல்வாயன் அண்ணா சொல்வதும் சரி. அதாவது பாலச்சந்திரன் படம் வெளிவந்த இந்த நேரத்தில் நாம் எம்மால் முடிந்தவரை அதற்கான செய்திகளுக்கும் பரப்புரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சரியாக சொன்னீர்கள் சகோதரி 

ராதிகா ஒரு கனேடிய எம்பி.. நாளை இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டால் குடிவரவாளர்களுக்கு "கனேடிய அறிவு" போதாது என்று ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ஏற்கனவே ஒருமுறை ராதிகாவுக்கு இது நடந்ததுதான்.

இவரின் செயற்பாடுகள் பின்னாளில் மற்றவர்களுக்கும் ஒரு தாக்கத்தைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதே ஆதங்கம். அவரைத் திட்டுவது நோக்கமல்ல.. அவருக்கும் அவரால் வருங்கால தமிழ் அரசியலாளருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற ஒரு நல்ல எண்ணமே காரணம்.

ஏற்க்கக்கூடிய காரணம்தான். 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. தமிழீழ தேசியக்கொடிக்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை..

ராதிகா ஒரு கனேடிய எம்பி.. நாளை இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டால் குடிவரவாளர்களுக்கு "கனேடிய அறிவு" போதாது என்று ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ஏற்கனவே ஒருமுறை ராதிகாவுக்கு இது நடந்ததுதான்.

இவரின் செயற்பாடுகள் பின்னாளில் மற்றவர்களுக்கும் ஒரு தாக்கத்தைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதே ஆதங்கம். அவரைத் திட்டுவது நோக்கமல்ல.. அவருக்கும் அவரால் வருங்கால தமிழ் அரசியலாளருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற ஒரு நல்ல எண்ணமே காரணம்.

26809118.1.png

http://designer.inktastic.com/Shop/Canada-Day.1314/Canadian-Flag.22933/Underwear.7?Find=White

இப்படி எல்லாம் கனடிய தேசியக் கொடி பறப்பதை அனுமதித்துள்ள கனடியர்கள்..  ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞனுக்கு தங்கள் கொடியை பேர்த்தியதை இட்டு பெருமைப் படுவார்களா.. சிறுமைப் படுவார்களா..???! :lol::D

இவற்றைப் பார்த்தும் முகம் சுழிப்பார்கள்.. ஆனால் கண்டும் காணாமலும் இருந்துவிடுவார்கள்.. ஏனென்றால்.. இதைமாதிரி செய்து அனுப்புபவர்கள் யார்? :rolleyes:

INKtastic, Inc. • 5214 Cleveland Rd • Wooster, Ohio 44691 • 330-345-0911

பெரியண்ணன்.. :D

இதே உடை சீனாவில் இருந்து வந்தால் கரகாட்டம் ஆடிவிடுவார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் சிங்கக் கொடியையே தமிழினத் தலைவர் சம்பந்தர்

சிங்களவர்களுடன் கூட்டாகக் கையில் தூக்கிப் பிடித்திருந்தார்.

ராதிகா சிற்சபேசன் அவர்கள் கனடாவின் தேசியக் கொடியை இளைய ராஜாவிற்கு

மரியாதையின்  நிமித்தம் போர்த்தினார்.

எல்லாவற்றையும் மன்னிப்போம் மறப்போம் 

கனடாக்காரனே சும்மா இருக்கின்றான் .

நாங்கள் என்னவெண்டால் கனாடா எங்களுக்குத் தான் சொந்தம் 

எங்கடை தேசியக் கோடியை அவர் அவமானப் படுத்தி விட்டார்

எண்ட கணக்கிலை நிக்கிறோம் 

தனிப்பட்ட பழிவாங்கல்களை தீர்த்துக் கொள்ள ராதிகா சிற்சபேசன்  அனுமதித்தது 

அவருடைய அரசியல் அனுபவத்தைக் காட்டுகின்றது

நேற்று நியுஜெர்சியில் இளையராஜாவிற்கு உருத்தி அண்ணை புலிக்கொடி போர்த்தி புலம் பெயர் தமிழர்களின் ஆசையை தீர்த்துவிட்டாராம் .

26809118.1.png

http://designer.inktastic.com/Shop/Canada-Day.1314/Canadian-Flag.22933/Underwear.7?Find=White

இப்படி எல்லாம் கனடிய தேசியக் கொடி பறப்பதை அனுமதித்துள்ள கனடியர்கள்..  ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞனுக்கு தங்கள் கொடியை பேர்த்தியதை இட்டு பெருமைப் படுவார்களா.. சிறுமைப் படுவார்களா..???! :lol::D

.சில மாதங்களுக்கு முன்னர் Readers digest உம் இப்படியான ஒரு படத்தை தன் முகப்பு படமாக போட்டு வெளியிட்டு இருந்தது. எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இதே போல பல வருடங்களுக்கு முன்னர் American beauty என்ற ஆங்கிலப் படத்திலும் அமெரிக்க கொடியை காட்டியிருந்தனர். பல பத்திரிகைகள் விமர்சித்து இருந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.