Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"

Featured Replies

"உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"
====================

ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட இலங்கை பத்துக்கோடி தமிழர்களைப்
பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின்
ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும்,
ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும்
யுத்த களம் சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பென்டன்ற்
பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு
புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம்
போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப்
போயுள்ளர்கள்.

12 வயதுப் பாலகனான பாலச்சந்திரனது படுகொலையும்,
அது நடாத்தப்பட்ட விதமும் மனித உரிமை ஆவலர்களை உசுப்பேற்றி விட்டுள்ளது.
உலகின் மனச்சாட்சியை உலுக்கியுள்ள அந்தப் பாலகனின் பரிதாபகரமான நிலைக்கு,
அவன் தேசியத் தலைவர் அவர்களது மகனாகப் பிறந்தது மட்டுமே காரணமாக
அமைந்திருக்கிறது. 2009 மே 19 ம் திகதி பாலச்சந்திரன் படுகொலை
செய்யப்பட்டுள்ளார் என்று புகைப்படத்தினை ஆய்வு செய்த நிபுணர்கள்
உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலம்
நிறைவுக்கு வந்து, ஈழத் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப் படுகொலையை
சிஙகளம் வெற்றியாகக் கொண்டாடிய தினங்களில் பாலச்சந்திரன் இறந்து கிடந்த
கோரக் காட்சி தமிழ் மக்களின் மனங்களை வலி கொள்ள வைத்தது.

இந்தப்
படத்தைப் போர்க்குற்ற ஆதாரமாக இணைத்துக் கொண்ட சனல் 4 தொலைக்காட்சி
நிறுவனம். தனது 'இலங்கையின் கொலைக் களங்கள்' என்ற ஆவணப் படத்தில் ஆய்வு
செய்து, அது ஒரு படுகொலை என்று உறுதிப்படுத்தித் தகவல் வெளியிட்டது.


பின்னர் வெளியான புகைப்படங்கள், பாலச்சந்திரன் முன்னிலையில், அவரைப்
பாதுகாப்பாகப் போர்க் களத்திலிருந்து அழைத்துவந்த நான்கு இளைஞர்கள் முதலில்
சுட்டுக் கொல்லப்பட்டு, அதன் பின்னர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை
உறுதிப்படுத்தியது.

இந்த ஆதாரங்களையெல்லாம் நிராகரித்த இலங்கை
அரசு, அந்தப் படங்கள் எல்லாம் போலியானவை என்று நிராகரித்திருந்தது.
பாலச்சந்திரன் போர்க்களத்தில் தப்பாக்கிச் சூட்டில் அகப்பட்டு
இறந்திருக்கலாம் என்ற காரணத்தையும் அது கூறியிருந்தது.

ஆனால்,
தற்போது வெளிவந்துள்ள பாலச்சந்திரனின் இரண்டு புகைப்படங்கள், அவர்
இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பதுங்கு குழி ஒன்றில் இருத்தி வைக்கப்பட்டு,
பின்னர் பக்கத்திலிருந்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்து
கொள்வதற்குப் போதுமானதாக உள்ளது.

இந்தப் படங்களையும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்று சிங்கள அரசாங்கம் வழமை போலவே மறுத்துள்ளது.


இந்த நிலையில், உலகத் தமிழர்களது உணர்வுகளை ஒன்றிணைத்து, இலங்கை அரசு
நிகழ்த்திய இன அழிப்பினை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழீழ
மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் பாரிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு
உள்ளது. தமிழகம் எப்போதும் போலவே உணர்ச்சிகளால் பொங்கி எழுந்தவண்ணமே
உள்ளது.

தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிங்கள
ஆட்சியாளாகளின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களைக் கண்டித்து நீதி
கோரிப் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள்.

தமிழக முதல்வர்
செல்வி ஜெயலலிதா அவர்கள் சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடாத்த
வேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை
விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த உணர்வுமயமான
காலத்தைச் சரியாகக் கையாண்டு, தமது இலக்கினை அடைவதற்கான முழு முயற்சியிலும்
புலம்பெயர் தமிழர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசு மீது ஒன்றிணைந்த உலகத் தமிழர்கள் போர்ப் பிரகடனத்தை அறிவிக்க வேண்டும்.

ஜனநாயக முறைமையான இந்தப் போர் ஒருமுகப்படுத்தப்பட்டு, இலங்கைக்கான பொருளாதார இலக்குகளைத் தகர்க்க வேண்டும்.


இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் பகிஸ்கரிக்க வேண்டும். இலங்கை விமானப்
பயணங்களை நிராகரிக்க வேண்டும். இலங்கைக்கான உல்லாசப் பயணத்திற்கு எதிரான
பிரச்சாரங்களைப் பாரிய அளவில் மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக,
பாலகன் பாலச்சந்திரனின் மீது புலம்பெயர் தமிழர்கள் உறுதி எடுத்துக்கொள்ள
வேண்டும், எந்தத் தடை வரினும், எந்த இடர் வரினும் எங்களுக்கான ஜனநாயகப்
போர்க்களத்தில் உறுதியுடன் நின்று, சிங்கள தேசத்தை வென்று எங்கள் தேசத்தை
மீட்டு உனக்குக் காணிக்கையாக்குவோமென்று...!

- அகத்தியன்
548730_341075322663053_667697082_n.jpg
- முகநூல் -
 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் கொதித்துப்போயிருக்கையில், புலத்தில் இப்பொழுது ஒரே மயான அமைதி....!

 

புலத்தில் தமிழர்கள் வீதியில் இறங்கி போராடுகையில், தமிழகத்தில் அனைவரும் 'மானாட..மயிலாட' குலுக்கலில் மெய்மறதி...!!

 

இரண்டு சக்திகளும், எப்பொழுது காலத்தின் அத்தியாவசிய தருணமறிந்து ஒரே கோட்டில் பயணித்து காரியம் சாதிப்பது?

 

ஐ.நா சபையின் மனித உரிமை ஒன்றுகூடலுக்கு முன், மிகக் காத்திரமான அழுத்தம் தமிழர்களிடமிருந்து பிரயோகிகப்பட்டாயாக வேண்டும்.

 

பூனைக்கு யார் மணி கட்டுவது?

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தருள வேண்டும் வன்னியன்.கனடாவில் இன்னும் இசைஞானியின் காச்சல் ஓய்ந்து விடவில்லை. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலும் சமாந்தரமாகப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்கிற ராஜவன்னியன் அண்ணாவுடைய கருத்தே என்னுடையதும். இது ஒரு synergy ஐக் கொண்டுவரும்..

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தருள வேண்டும் வன்னியன்.கனடாவில் இன்னும் இசைஞானியின் காச்சல் ஓய்ந்து விடவில்லை. :icon_mrgreen:

 

:rolleyes::lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.