Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபத்தை தூக்கிய அமீரின் ஆதிபகவன்... 500 அரங்குகளில் வெளியீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22-aadhi-bhagavan65-300.jpg
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது.

மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது.

கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.

சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.

http://tamil.oneindia.in/movies/news/2013/02/ameerin-aadhi-bhagavan-kicked-viswaroopam-2-weeks-170280.html

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அமீரின் ஆதிபகவன் - விமர்சனம்

நடிப்பு: ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்

ஒளிப்பதிவு: தேவராஜ்

இசை: யுவன் சங்கர் ராஜா

பிஆர்ஓ: நிகில்

தயாரிப்பு: ஜெ அன்பழகன்

எழுத்து - இயக்கம்: அமீர்

கிட்டத்தட்ட ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் அமீர் படம் ஆதி பகவன். என்னதான் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள் என எச்சரிக்கப்பட்டாலும், பருத்திவீரன் மாதிரி ஒரு படம் தந்த இயக்குநரின் படைப்பைக் காண குறைந்தபட்ச ஆவலாவது ரசிகர்களுக்கு இருக்கும் அல்லவா..

ஆனால் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு ஒரு விசிட்டிங் கார்டாகவும், அமீருக்கு தனக்குத் தானே போட்டுக் கொண்ட ரெட் கார்டாகவும் அமைந்துள்ளது.

தமிழ் சினிமா பல முறை பார்த்துவிட்ட இரட்டைவேட ஆள் மாறாட்டக் கதைதான் ஆதிபகவன்.

தாய்லாந்தில் மிகப் பெரிய டானாக, எந்த குற்றத்துக்கும் அஞ்சாதவராக வலம் வரும் ஆதி (ஜெயம் ரவி 1), நீத்து சந்திராவை ஒரு பாரில் பார்க்கிறார். இரண்டாவது சந்திப்பில் அவரைப் பிடித்துப் போகிறது. ஆதரவற்ற, பல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணான அவரை காப்பாற்றி, திருமணம் செய்யும் அளவுக்குப் போகிறார். அப்போது தன் தந்தையைக் காண மும்பைக்கு வருமாறு நீத்து அழைக்க, அதை ஏற்று ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்புகிறார்.

அப்போதுதான் நீத்து சந்திரா ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போகவில்லை... கொலை செய்யத்தான் என்பது தெரிகிறது. கதைக்களம் மும்பைக்குப் போகிறது. அங்கே கொடூர தாதாவாக, திருநங்கைத்தனம் நிரம்பிய பகவான் (ஜெயம் ரவி 2). பகவான் என்று தப்பாக நினைத்து ஆதியை போட்டுத் தள்ள போலீஸ், மைனிங் தாதாக்கள் என பெரிய கூட்டமே தேட, அதிலிருந்தெல்லாம் எப்படி ஆதி தப்பிக்கிறார் என்பது மீதிக் கதை.

ஆதி, பகவன் என இரு பாத்திரங்களில் ஜெயம் ரவி. ஆதியாக வரும்போது அவரது தோற்றமும், உடைகளும், உடல் மொழியும் செம மேன்லி! நீத்து சந்திராவை காப்பாற்ற அவர் போடும் சண்டையும் அருமை.

ஆனால் இந்த வேடத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது, ஜெயம் ரவியின் அந்த திருநங்கை பகவான் பாத்திரம். அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் பிரகாஷ்ராஜ் முன்பே செய்துவிட்டாரே என்பதுதான் மைனஸ்.

ஒரு நடிகராக, ஹீரோவாக ஜெயம் ரவிக்கு இது முக்கிய படம். வெறும் லவ்வர் பாய் அல்லது ரெடிமேட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றவர் என்ற இமேஜை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்தப் படம்.

ஹூரோயின் நீத்து சந்திரா. இரண்டாம் பாதியில் இவர்தான் வில்லி எனும் அளவுக்கு டெரர் காட்டியிருக்கிறார். அதுவும் ஜெயம் ரவியுடன் மோதும் காட்சியில் அசத்தியிருக்கிறார். அமீர் படத்தில்தான் இதெல்லாம் சாத்தியம். ஆனாலும் இம்புட்டு இம்புட்டு.. சிகரெட் ஆகாது ஆத்தா!!

இந்த மூன்று பாத்திரங்கள் தவிர, மற்ற எல்லாருமே துணைநடிகர்கள் ரேஞ்சுக்குத்தான் வருகிறார்கள். எனவே அவர்களின் நடிப்பு அல்லது முக்கியத்துவம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, சுதா சந்திரன் உள்பட.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சாக்ஷி ஆடும் அந்த க்ளப் டான்ஸ் மற்றும் காற்றிலே பாடலும் கேட்கும்படி உள்ளன. தேவராஜின் ஒளிப்பதிவு, அமீர் சொன்ன மாதிரி ஒரு Raw Action படமாக ஆதிபகவனைக் காட்டியிருக்கிறது.

பல காட்சிகள் நம்பும்படி இல்லை என்று வெளியில் வந்து சொன்னாலும், பார்க்கும்போது நம்பும் அளவுக்கு வித்தை காட்டியிருப்பது அமீரின் கைவண்ணம்.

ஆனால் நீத்து சந்திரா வரும் இரண்டாவது காட்சியிலேயே அவரது பாத்திரம் இதுதான் என்று ஓரளவு கணிக்க முடிகிறது.

படத்தின் முதல் பாதி முழுக்க எதையோ அழுத்தமாக சொல்ல வருவதுபோன்ற பாவலா தெரிகிறது. ஆனால் எதுவுமே இல்லை. அதேபோலத்தான் இரண்டாவது பாதியும். படத்தின் இந்த தன்மைதான், பார்வையாளர்களை திருப்தியற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

காட்சிகளின் மெதுவான நகர்வு ரொம்ப நேரம் ஊமைக்குத்து வாங்கியதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துப்பாக்கி சண்டைக் காட்சிகள் அனைத்துமே காதுல பூ ரகம்.

இப்படி ஒரு படத்தைத் தர அமீர் 5 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை... ஆறுமாதமே அதிகம்.

ஆதிபகவன் பார்த்த பிறகும், இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் அமீர்... உங்களால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்!

-எஸ்.ஷங்கர்

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நாட்களுக்கு முன் பதியப்பட்ட  பாலச்சந்திரன் திரியை இதுவரை பார்வையிட்டோர் 8,388.
ஆனால் நேற்று பதியப்பட்ட இந்த உதவாக்கரை திரியை பார்வையிட்டோர் இதுவரை 5,853.

விளங்கி உருப்பட்ட மாதிரிதான்.

இதில் ஈழக்கனவு வேறு...!

என்ன கொடுமை, பிரபாகரா...!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு Entertainment முக்கியமா இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நாட்களுக்கு முன் பதியப்பட்ட  பாலச்சந்திரன் திரியை இதுவரை பார்வையிட்டோர் 8,388.

ஆனால் நேற்று பதியப்பட்ட இந்த உதவாக்கரை திரியை பார்வையிட்டோர் இதுவரை 5,853.

விளங்கி உருப்பட்ட மாதிரிதான்.

இதில் ஈழக்கனவு வேறு...!

என்ன கொடுமை, பிரபாகரா...!! :wub:

நாம் தமிழகத்தை நேசிக்கின்றோம்

அவர்களைப்பின் பற்றுகின்றோம் என்று எடுத்துக்கொள்ளலாமா வன்னியன் ஐயா...

:(

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழகத்தை நேசிக்கின்றோம்

அவர்களைப் பின்பற்றுகின்றோம் என்று எடுத்துக்கொள்ளலாமா வன்னியன் ஐயா...

'சைக்கிள் கேப்'ல, ஊசியேத்துறதுன்னு முடிவோட இருக்கீங்க...!

ஐந்து நாட்களுக்கு முன் பதியப்பட்ட  பாலச்சந்திரன் திரியை இதுவரை பார்வையிட்டோர் 8,388.

ஆனால் நேற்று பதியப்பட்ட இந்த உதவாக்கரை திரியை பார்வையிட்டோர் இதுவரை 5,853.

விளங்கி உருப்பட்ட மாதிரிதான்.

இதில் ஈழக்கனவு வேறு...!

என்ன கொடுமை, பிரபாகரா...!! :wub:

யாழில் பதியும் செய்திகளில் சிலவற்றை  Google News (http://news.google.co.in/?edchanged=1&ned=ta_in&authuser=0) இன் தமிழ் பதிப்பில் இணைப்பார்கள். அதனால் அதன் மூலம் உள்ளே வருபவர்கள் அந்த செய்தியை மட்டும் பார்த்து விட்டு போவார்கள். இந்த செய்தியின் யாழ் இணைப்பினை நேற்று கூகிள் இணைத்து இருந்தமையால் சில மணிகளில் ஆயிரக்கணக்கோனோரை சென்றடைந்து இருக்கு. முக்கியமாக தமிழகத்தினை சேர்ந்த செய்திகளை இங்கு இணைத்து அதனை கூகிள் இணைக்கும் போது அதிக எண்ணிக்கையானோர் பார்வையிடுகின்றனர். அத்துடன் ஒரே செய்தி பல தளங்களில் வரும் போதும் குறிப்பிட்ட செய்திக்குரிய திரியை வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

விளக்கத்துக்கு நன்றிகள் பல‌

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நாட்களுக்கு முன் பதியப்பட்ட  பாலச்சந்திரன் திரியை இதுவரை பார்வையிட்டோர் 8,388.

ஆனால் நேற்று பதியப்பட்ட இந்த உதவாக்கரை திரியை பார்வையிட்டோர் இதுவரை 5,853.

விளங்கி உருப்பட்ட மாதிரிதான்.

இதில் ஈழக்கனவு வேறு...!

என்ன கொடுமை, பிரபாகரா...!! :wub:

ஈழ உனர்வு எல்லாருக்கும் அப்படியே தான் இருக்கு...2008 2009திலை இருந்த போல.... என்ன ஒரு சின்னக் குழப்பம் 2009ம்பதுக்கு பிறக்கு யாரை நம்புவது யாரை நம்மக் கூடாது என்று... சகோதரன் பாலச்சந்திரனின் கொலை மறு படியும் ஈழ தமிழர்களின் இரத்தத்தை கொதிக்க வைத்து விட்டது.....2009பது ஓடை எல்லாமே முடிஞ்சு போச்சு என்று இருந்த எனமக்கு சனல் 4 மீண்டும் ஒரு உற்சாகத்தை தந்து இருக்கு....!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பதியும் செய்திகளில் சிலவற்றை  Google News (http://news.google.co.in/?edchanged=1&ned=ta_in&authuser=0) இன் தமிழ் பதிப்பில் இணைப்பார்கள். அதனால் அதன் மூலம் உள்ளே வருபவர்கள் அந்த செய்தியை மட்டும் பார்த்து விட்டு போவார்கள். இந்த செய்தியின் யாழ் இணைப்பினை நேற்று கூகிள் இணைத்து இருந்தமையால் சில மணிகளில் ஆயிரக்கணக்கோனோரை சென்றடைந்து இருக்கு. முக்கியமாக தமிழகத்தினை சேர்ந்த செய்திகளை இங்கு இணைத்து அதனை கூகிள் இணைக்கும் போது அதிக எண்ணிக்கையானோர் பார்வையிடுகின்றனர். அத்துடன் ஒரே செய்தி பல தளங்களில் வரும் போதும் குறிப்பிட்ட செய்திக்குரிய திரியை வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

ஓ..அப்படியும் ஒரு பொறி இணைப்பு இருக்கா? தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.

ஆனாலும் தமிழினம் சிதைக்கப்பட்ட துயரமான செய்திகள் வறுத்தெடுக்கும் நிலையில், இப்படி தறிகெட்டு அலைவது கொஞ்சம் ஓவர்தான். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.