Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு : புதுச்சேரியில் எடுக்கப்பட்ட லைப் ஆஃப் பை படத்திற்கு 2 விருதுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது.

விருதுகள் விபரம் :

சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன்

சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ்

சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை

சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை

சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை)

சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா

சிறந்த மேக் ஆப் : லிசா வெஸ்ட்கோட்

சிறந்த சிகை அலங்காரம் : ஜூலி டார்ட்னெல்

Dinamalar

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

11-power-star-srinivasan-45-30.jpgOscars.jpg

 

"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்திருந்த, பவ‌ர்ஸ்ரார் சீனிவாசனுக்கும் ஒரு ஆஸ்கார் பரிசை கொடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2013 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவைகள்!!!
Posted by: Maha Published: Monday, February 25, 2013, 9:58 [iST]
அகாடமி விருதுகள் அல்லது ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் விருது, மிகவும் பிரபலமான, அனைத்து திரையுலகினரும் தங்கள் வாழ்நாளில் பெற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு பெரிய விருது. இந்த விருதுக்கு, உலகில் உள்ள அனைத்து மொழிகளில் உள்ள சிறந்த படங்களும், நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும் தேர்ந்தெடுக்கப்பவர்.
இந்த வருடம் 85-வது ஆஸ்கர் விருது என்பதால், எந்த படம், நடிகர், நடிகை மற்றும் பலர், ஆஸ்கர் விருதுகளை வெல்லப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருப்போம். அவ்வாறு வெற்றிப் பெற்றவர்களைப் பார்ப்பதற்கு முன், இந்த ஆஸ்கருக்கு எந்த படங்கள், நடிகைகள், நடிகர்கள், துணை நடிகர்கள், துணை நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்ற பட்டியலைப் பார்ப்போமா!!!
 
ஆஸ்கர் 2013 ஆம் ஆண்டின் சிறந்த படம் பரிந்துரைக்கப்பட்டவைகள்:
* அர்கோ (Argo)
* அமர் (Amour)
* பீஸ்ட்ஸ் ஆப் தி சதன் வைல்டு (Beasts of the Southern Wild)
* டிஜாங்கோ அன்செயிண்டு (Django Unchained)
* லெஸ் மிஸ்ரபில்ஸ் (Les Miserables)
* லைப் ஆப் பை (Life of Pi)
* லிங்கன் (Lincoln)
* சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் (Silver Linings Playbook)
* ஜீரோ டார்க் தர்டி (Zero Dark Thirty)
 
ஆஸ்கர் 2013 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
* சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் படத்தின் நடிகரான ப்ராட்லி கூப்பர் (Bradley Cooper) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
* டேனியல் டே-லூயிஸ் (Daniel Day-Lewis), லிங்கன் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
* லெஸ் மிஸ்ரபில்ஸ் படத்திற்காக ஹியூ ஜாக்மென் (Hugh Jackman) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
* தி மாஸ்டர் படத்தில் நடித்த ஜாக்குயின் போனிக்ஸ் (Joaquin Phoenix)ஆஸ்கரின் சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
* டென்சல் வாஷிங்டன் (Denzel Washington), ப்லைட் படத்தில் சிறப்பாக நடித்து ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
சிறந்த நடிகை ஆஸ்கர் 2013 பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
* ஜெஸிக்கா சாஸ்டின் (Jessica Chastain), ஜீரோ டார்க் தர்டி படம்
* ஜெனிஃபர் லாரன்ஸ் (Jennifer Lawrence), சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் படம்
* எமானுல்லே ரீவா (Emmanuelle Riva), அமர் படம்
* நாமி வாட்ஸ் (Naomi Watts), தி இம்பாஸிபிள் (The Impossible) படம்
* குவென்ஜாயின் வாலிஸ் (Quvenzhanளூ Wallis), பீஸ்ட்ஸ் ஆப் தி சதன் வைல்டு படம்
 
சிறந்த துணை நடிகர் ஆஸ்கர் 2013 பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
* அலன் அர்கின் (Alan Arkin), அர்கோ படம்
* ராபர்ட் டி நிரோ (Robert De Niro), சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் படம்
* பிலிப் சைமர் ஹாஃப்மேன் (Philip Seymour Hoffman), தி மாஸ்டர் படம்
* டாமி லீ ஜான்ஸ் (Tommy Lee Jones), லிங்கன் படம்
* கிறிஸ்டப் வால்ட்ஸ் (Christoph Waltz), டிஜாங்கோ அன்செயிண்டு படம்
 
சிறந்த துணை நடிகை ஆஸ்கர் 2013 பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
* அமி ஏதம்ஸ் (Amy Adams), தி மாஸ்டர் படம்
* சாலி ஃப்ல்டு (Sally Field), லிங்கன் படம்
* அனி ஹாத்வே (Anne Hathaway), லெஸ் மிஸ்ரபில்ஸ் படம்
* ஹெலன் ஹன்ட் (Helen Hunt), தி செஷன்ஸ் (The Sessions) படம்
* ஜாக்கி வீவர் (Jacki Weaver), சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் படம்
 
சிறந்த இயக்குநர் ஆஸ்கர் 2013 பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
* மைகேல் ஹானீக் (Michael Haneke), அமர் படம்
* அங் லீ (Ang Lee), லைப் ஆப் பை படம்
* டேவிட் ஓ. ருசெல் (David O. Russell), சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் படம்
* ஸ்டீவென் ஸ்பெல்பெர்க் (Steven Spielberg), லிங்கன்
* பென் ஜெட்லின் (Benh Zeitlin), பீஸ்ட்ஸ் ஆப் தி சதன் வைல்டு படம்
 
  • கருத்துக்கள உறவுகள்
திங்கட்கிழமை, 25, பிப்ரவரி 2013 (18:16 IST)
ஆஸ்கர் விருது பெற வந்த போது 
படிக்கட்டில் தடுக்கி விழுந்த நடிகை! 
osgar---77766.jpg
 
 
லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற வந்த நடிகை ஜெனிபர் லாரன்ஸ், படிக்கட்டில் ஏறும் போது தடுக்கி விழுந்தார்.
 
சில்வர் லினிங்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும், மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியோடும் எழுந்து வந்தார் ஜெனிபர் லாரன்ஸ். அவர் படிக்கட்டுகளில் ஏறும் போது கால் தடுக்கி விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் படிக்கட்டுகளை ஊன்றிக் கொண்டு எழுந்தார். 
 
தடுக்கி விழுந்ததால் வெட்கமடைந்த ஜெனிபர், சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து, நான் விருது வாங்கும் போது அனைவரும் எழுந்து நிற்கிறீர்கள். எனக்கு சந்தோஷமாக உள்ளது என்று, அவர் விழும் போது பதற்றத்தில் அனைவரும் எழுந்து நின்ற விதத்தைப் பார்த்து நகைச்சுவையாகப் பேசினார். இதற்கு அவர் உடுத்திக் கொண்டு வந்த மிகச் சிறிய ஆடையே காரணம் என்று கூறப்படுகிறது.

 

Edited by இணையவன்
இரண்டாகப் பதியப்பட்ட படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு என்னாச்சு........

 

இத்தனை  தடவை  படம் காட்டுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு என்னாச்சு........

 

இத்தனை  தடவை  படம் காட்டுகிறார்

ஆஆஆஆ............... இதென்ன இப்படி.!

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

எடிட் பண்ண போனால் இத்தனை படங்களை  காணவில்லையே!

குறிப்பிட்ட படங்களே இருக்கிறது.

LIFE OF PI இற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்தது ,சிறந்த இயக்குனர் உட்பட .

மிஷேல் ஒபாமா வந்து சிறந்த படத்திற்கான விருதை கொடுத்தது யாரும் எதிர்பாராத ஒன்று .

அனேக விருதுகள் நான் எதிர்பார்த்தது போல தான் இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

11-power-star-srinivasan-45-30.jpgOscars.jpg

 

"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்திருந்த, பவ‌ர்ஸ்ரார் சீனிவாசனுக்கும் ஒரு ஆஸ்கார் பரிசை கொடுத்திருக்கலாம்.

நியாயமான கவலை...மூன்றுகோடி ரசிகர்களை வைத்திருக்கும் ஒருவருக்கு..எந்த ஒரு விருதும் குடுக்காமல்..ஒஸ்கார் குழுவினர் அவமதித்துவிட்டனர்... :D

  • கருத்துக்கள உறவுகள்

 
ஆஸ்கர் விருது பெற வந்த போது 
படிக்கட்டில் தடுக்கி விழுந்த நடிகை! 
 
osgar---77766.jpg

 

இது தான் சொல்லுறது..  ரெம்ப சீனு போடக் கூடாதுன்னு. போட்டா இப்படித்தான் சிலிப் ஆக்கிடும்..! :lol::D

 

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 25, பிப்ரவரி 2013 (18:16 IST)
ஆஸ்கர் விருது பெற வந்த போது 
படிக்கட்டில் தடுக்கி விழுந்த நடிகை! 
 
லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற வந்த நடிகை ஜெனிபர் லாரன்ஸ், படிக்கட்டில் ஏறும் போது தடுக்கி விழுந்தார்.
------

 

அளவில்லாத நீளமான சட்டை போட்டால்... தடக்கி விழுவினம் தானே... :D  :lol: 

நாங்க, எட்டுமுழ வேட்டி கட்டுறம், பெண்கள் 16 முழச் சீலை கட்டுகிறார்கள் ஒரு நாளாவது தடக்கி விழவில்லையே...smiley-cool05-01.gif

Edited by தமிழ் சிறி

அளவில்லாத நீளமான சட்டை போட்டால்... தடக்கி விழுவினம் தானே... :D  :lol: 

நாங்க, எட்டுமுழ வேட்டி கட்டுறம், பெண்கள் 16 முழச் சீலை கட்டுகிறார்கள் ஒரு நாளாவது தடக்கி விழவில்லையே...smiley-cool05-01.gif

நீங்க கட்டுறனீங்களா நார் எடுத்தெல்லோ விழாமல் இறுக்கி கட்டுகின்றனீங்கள், :D

 

சத்தியமா இடுப்புபட்டியில்லாமல் என்னால் கட்டமுடியாதப்பா smiley-cool05-01.gif

சிறந்த இசைக்காக ஆஸ்கார் விருது பெற்ற தமிழர்

  • Thursday, Feb 28, 2013 6:28 pm

oscar-awards.jpg

சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள ‘லைப் ஆப் பை’ படத்திற்கான , இசை சேர்ப்பு பணியில் தானும் இடம் பெற்றது, பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாக சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்ரவணம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சிறந்த சினிமாவிற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ‘லைப் ஆப் பை’ என்ற படம் சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசைஅமைப்பாளர், சிறந்த விஷுவல் எபக்ட் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்ற உலகில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதுவை, மூணாறு ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படம் இந்தியாவின் கதைக்களத்தை கொண்டதாகும். கடல் பயணத்தில் போது புயலால் உடைந்து போன படகில் ஒரு புலியுடன் 200 நாட்கள் பயணப்படும் இளைஞனின் கதையே ‘லைப் ஆப் பை’ ஆகும். விருதுகளைப் பெற்றவர்களுக்கு இணையான மகிழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்வரணம் பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சாய் ஸ்வரணம் முதுநிலை கணினி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, ஐடிஐயில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

 

    

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.