Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குத் தேர்தல் தானாம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு.. பெரியண்ணன் இந்தியா அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: ஜெனிவா தீர்மானத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது: சல்மான் குர்ஷித் கைவிரிப்பு..!

டெல்லி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார். ராஜ்யசபாவில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் முடிவில் சல்மான் குர்ஷித் பேசுகையில், இலங்கை அண்டை நாடு. வேறு ஒரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது.

இலங்கையில் போர் நடைபெற்ற காலம் அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காலமாகும். போர் தொடர்பான வெளியான காட்சிகள் மனதைப் பிசைகின்றன. உறுப்பினர்கள் உருக்கமான கருத்தை நாங்கள் மதிக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சனை என்பது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. நாட்டின் மொத்த பிரச்சனையாக கருதுகிறோம். அமெரிக்கா ஒரு விஷயம் செய்கிறது என்பதற்காக நாமும் அப்படி செய்ய வேண்டும் என்பது அல்ல.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நாம் ஆதரித்தோம். அதன் பின்னர் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதும் அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அந்த ஜெனிவா தீர்மானம் பற்றிய எம்.பிக்களின் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும். தற்போது எதுவும் சொல்ல முடியாது. இலங்கையைப் பொறுத்தவரையில் எதிரி நாடு என்று நாம் சொல்ல முடியாது.

ஆசியாவின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படவே இந்தியா விரும்புகிறது. இந்தியா பெரியண்ணன் என்ற நிலையோடு நடந்து கொள்ள முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு 13-வது அரசியல் திருத்தம் தான் அடிப்படையானது. தமிழருக்குத் தன்னாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. தமிழர்கள் வாழும் வடக்கில் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல்தான் அரசியல் தீர்வாக இருக்கும் என்றார். சல்மான் குர்ஷித்தின் பேச்சுக்கு தொடர்ந்து திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவின் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே ஆகியோர் தமிழருக்கு தன்னாட்சி உரிமை வழங்க முடியாது. இலங்கையின் அரசியல் சாசன திருத்தம் 13-வது திருத்தத்துக்கு இடமே இல்லை என்று கூறியிருப்பது பற்றி பாஜகவின் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் சுட்டிக் காட்டினர். இதற்கும் மழுப்பலாகவே பதிலளித்தார் சல்மான் குர்ஷித். இதேபோல் இலங்கையை எதிரிநாடு என்று சொல்ல முடியாது என்று குர்ஷித் பேசியதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/27/india-govt-committed-bringing-justice-tamils-srilanka-170539.html

Edited by nedukkalapoovan

பெரியண்ணா அப்படி கூறியதே நல்ல விடயம் தான்.

 

இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்த்தப்படல் வேண்டும்.



541583_426917287386825_1847996246_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரின்  கருத்தா இது???

 

இத்தனை  நடந்தும் எதுவும் தெரியாதது போல்.....???

பொய்பேசவென்றே  படித்திருப்பார்கள் போலுள்ளது :(

ஆனால் இனி  இது எடுபடாது

ஆசியாவின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படவே இந்தியா விரும்புகிறது. இந்தியா பெரியண்ணன் என்ற நிலையோடு நடந்து கொள்ள முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு 13-வது அரசியல் திருத்தம் தான் அடிப்படையானது. தமிழருக்குத் தன்னாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. தமிழர்கள் வாழும் வடக்கில் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல்தான் அரசியல் தீர்வாக இருக்கும் என்றார். சல்மான் குர்ஷித்தின் பேச்சுக்கு தொடர்ந்து திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவின் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 
பிரேரணை பரந்து பட்ட முயற்சி. 13ம் திருத்த வடமாகாண தேர்தல் அரசியல் தீர்வு சம்பந்தமானது. எனவே சல்மான் குர்ஷித் சொல்லவதை மேற்குநாடுகள் அப்படியே நிறைவேற்றா. 
 
தேர்தல்த் திகதி அறிவிக்கப்பட்டதின் காரணம் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. அமர்வுகள். இதற்கும் இந்தியாவும் சல்மான் தொடர்பு போட்டால் அது தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எல்லோருக்கும் அதன் உண்மை புரியும். 

 

இந்தியாவில் மத்தியில் அழுத்தம் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் காங்கிரசால் இலங்கையில் பெரியண்ணன் பாத்திரம் நடிக்க முடியாது என்பது தெரியும். அதனால் மட்டுமே அவர்கள் ஐ.நாவை பாவிக்கும் படி கிண்டிப் பார்க்கிறார்கள். இது சல்மானுக்கு விளங்கவில்லை. இவர், எல்லோரும் கவனமும் எங்கோ திரும்ப, காங்கிரஸ் திரும்ப ரஜிவ்காலத்தில் கோழி பிடிக்கும் முயற்சியில் இந்தியா இலங்கைக்கு வந்தது போல  வருவது பற்றிக்கதைக்கிறார் போலும்.

 

இந்தியாவுக்கு நாணயகயிற்றை எடுக்க முடியுதோ இல்லையோ, அரசியலில் இனி இலங்கையின் மிஞ்சியிருக்கும் வரலாறு ஒரு நாட்டை அண்டித்தான். இலங்கை இனிமேலைய காலங்களில் அணி சேரா நாடு அல்ல.  சோவியத்தை சூழ்ந்த கம்யூனிச நாடுகள் இப்போ இல்லை. எனவே அந்தக்காலப் பாணி அணிகள் இனி இல்லை. சீனா தனக்கு அதாரவாளர்களை சேர்க்க முயல்கிறது. இது ஆதர்வாளர்கள் மட்டுமே. சோவியத் கால கட்டமைப்பு அல்ல. மேற்கு நாடுகளிடம் கட்டமைப்பு ஒருக்காலும் இருக்கவில்லை. நேட்டோ மாதிரி உறவு இயங்கங்கள்தான். (ஆனால் அவை மிக பலமானை) சீனா நேடோவையும் விட அமைப்பு குறந்த ஆதரவாளர்களை தேடுகிறது. மிகுதி படிக்கு தான் தனியத்தான் நிற்கும். இதில் இந்தியா அப்படி ஒரு உறவு இயக்கத்தை தென் கிழக்கசியாவில் ஏற்படுத்த கனவு காண்கிறது.  இப்போதைய அரசியல் சூழலில் அது சாத்தியம் இல்லை. 

 

இலங்கை தென்கிழக்காசியாவில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இதில் மேற்கு நாடுகள், இந்திய கூட்டு, சீனா மூன்றுக்கும் இலங்கை காதல் காட்டி ஏமாற்றுகிறது. ஆனால் இதை ராஜபக்சா அரசினால் தொடர முடியாமல் சிரமப்படப்போகும் காலம் வந்து கொண்டிருக்கிறது. ராஜபக்சா சகோதரங்களுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாமையால் இந்த மூன்றையும் கொண்டு இழுக்க அவர்களுக்கு முடியாது. கதிர்காமர் என்ற திறமையான கப்டடினின் கப்பலுக்குள் ஏறிய கடல் கொள்ளையர்கள் மாலுமிகளை கொலை செய்து கப்பலை கைப்பற்றி வைத்திருக்கின்றனர். ஆனல் இவர்களுக்கு. அதை கரைக்கு கொண்டுவரும் அரசியல் திறமை இல்லை.  இதனால் சுருக்கிய பாய்கள் விரிக்கப்படாமல் கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கிறது.  இவர்களை காபாற்ற ஒரு மாலுமி வந்து சேர்ந்தால் அது இந்தியாக் கூட்டு, சீனாக் கூட்டு, மேற்கு நாடுகள் கூட்டு என்றில் ஒன்றாகத்தான் இருக்க முடியும். அல்லது ஒன்றும் இல்லை என்று காலவரையறை இன்றி நடுக்கடலில் தத்தளிக்கும். ஆனால் சிங்கபூர் போன்று மூன்றுக்கும் கூட்டாக இருக்காது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

salman%20kursith.jpg

தமிழினப்படுகொலை குறித்து நடைபெற்றுவரும் ஐ.நா.மனித உரிமைகள் அமர்வில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக சிறப்பு கவனயீர்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஒன்று

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில் அதில் உரையாற்றிய எம்.பி.களிற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்; சிறிலங்காவை எதிரி நாடாக கருத முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

சிறில்ங்காவில் போர்நடைபெற்றது சிறிலங்காவின் வரலாற்றில் மோசமான காலம் எனக் குறிப்பிட்ட சல்மான் குரஷித் தமிழர்களிற்கு உரிமைகள் கிடைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜனநாயக முறையில் பிரச்சினைகள் அணுகப்படுகின்றது. தமிழர்கள மீதான தாக்குதல் வருத்தமளிக்கின்றது. 

குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றோம். அமெரிக்கா சுதந்திரமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவும் சுதந்திரமான நடவடிக்கையை எடுக்கும். சிறிலங்காவை எதிரி நாடாக கருத முடியாது. ஜெனீவா தீர்மான விடையத்தில் மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளிக்கபடும். சிறிலங்கா பிரச்சினை தமிழக மக்களிற்கு மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரிற்கும் கவலையளிக்கின்றது. 

தமிழர்களிற்கு தன்னாட்சியளிக்கும் தீர்வுகுறித்து சிறிலங்காவை வலியுறுத்தி வருகின்றோம். அரசியல் முறையில் தீர்வுகான 13வது சட்டப்பிரிவை அமல்படுத்த வலியுறுத்தப்படுகின்றது. {.நா.தீர்மானம் குறித்து தற்போது கூறஇயலாது. வேறு நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது. இந்தப்பிரச்சினை தேர்தல் மூலமே முடிவுகான முடியும்.  

இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். 

தமிழக மக்களது உணர்வுகளை இந்தியா மீண்டும் புறக்கண்த்துள்ளமையையே இந்தப் பேச்சு காட்டுகின்றது. இதனை கண்டித்து தமிழக எம்.பி.கள் வெளிநடப்புச் செய்துள்ளார்கள். 

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19207:2013-02-27-13-31-08&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.