Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நழுவியது இந்தியா - அமெரிக்காவுடனேயே பேசித் தீர்க்குமாறு சிறிலங்காவுக்கு ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Salman-Khursheed.jpg

ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்காவுடனேயே பேசும்படி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இந்திய நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க இணக்கம் ஒன்றை எட்டுவதற்கு, ஜெனிவா தீர்மான வரைபு தொடர்பாக, அமெரிக்காவுடன் சிறிலங்கா நேரடிப் பேச்சு நடத்த இந்தியா ஊக்குவிக்கப் போவதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மான வரைபில், இந்தியாவே திருத்தம் செய்து, அதன் கடுமையைக் குறைத்திருந்தது. 

இம்முறையும், அதேபோன்று அமெரிக்காவின் தீர்மான வரைபின் இறுக்கத்தைக் குறைக்க, இந்தியாவின் உதவியை சிறிலங்கா நாடியுள்ளதாகத் தெரிகிறது. 

இது குறித்து புதுடெல்லியுடன் பேசுவதற்கு, சிறிலங்கா அரசின் உயர் மட்டப் பிரதிநிதி அல்லது குழுவொன்று இந்தியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்தநிலையிலேயே, ஜெனிவா தீர்மான வரைபு தொடர்பாக, அமெரிக்காவுடனேயே பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது. 

இந்தியாவின் இந்தப் பதில், சிறிலங்கா அரசுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

http://www.puthinappalakai.com/view.php?20130228107871

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஈமெயில் தொடர்பு ஏற்படுத்தபோவது உறுதி.. :D ஐநா அலுவலகம் இலங்கையில் அமைக்கப்படும். சீன ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து இலங்கை பிரிக்கப்பட்டு மேற்குலகப் பைக்குள் போடப்படும்..! :D

அப்ப ஈமெயில் தொடர்பு ஏற்படுத்தபோவது உறுதி.. :D ஐநா அலுவலகம் இலங்கையில் அமைக்கப்படும். சீன ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து இலங்கை பிரிக்கப்பட்டு மேற்குலகப் பைக்குள் போடப்படும்..! :D

ஒண்டும் நடக்காது... 

 

அடுத்த வருசக் கூட்டத்துக்கு முன்னம் நாங்கள் இப்பிடித்தான் எழுதுவம்...   :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் நடக்காது... 

 

அடுத்த வருசக் கூட்டத்துக்கு முன்னம் நாங்கள் இப்பிடித்தான் எழுதுவம்...   :(

 

ஒண்டும் நடக்காது என்பது சரியல்ல.. :unsure: இவர்களால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்காது என்பதே சரி.. :D ஆனால் இந்தப் பாதையில்தான் எமக்கான விடிவும் இருக்கு.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் நடக்காது என்பது சரியல்ல.. :unsure: இவர்களால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்காது என்பதே சரி.. :D ஆனால் இந்தப் பாதையில்தான் எமக்கான விடிவும் இருக்கு.. :rolleyes:

 

இது ஒவ்வொன்றும் வெவ்வேறு எப்பி சோட்டாக்கும்  
 
கிளைமாக்ஸ் எப்ப வரும் என்றுதான் தெரியவில்லை ..

அமெரிக்கா பிலிபைன் சர்வாதிகாரி மார்கஸ் பேணாண்டோ, இமெல்டா பேணாண்டோவை  தப்பி ஓடவிட்டது மாதிரி தப்பி ஓட விடாமல் மனசாட்சியை பாவித்து அரச குடும்பத்தையும் பொன்சேக்காவையும் தண்டிக்க வேண்டும்முலக சர்வாதிகாரிகளுக்கு பாடமாக, இவர்களை சர்வதேச கோட்டில் கையளிக்க வேண்டும். அப்போது அசாத் தானாக பதவி விலகுவார்.

ஒண்டும் நடக்காது... 

 

அடுத்த வருசக் கூட்டத்துக்கு முன்னம் நாங்கள் இப்பிடித்தான் எழுதுவம்...   :(

 

இம்முறையும் ஜெனீவா பிரேரணையால் தமிழர்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது என்று நினைக்கிறேன். ஆனால் போன வருடத்தை விட இவ்வருடம் அரசியல் ரீதியாக சிறு முன்னேற்றம் ஏற்படும்.

தமிழர்களை பொறுத்தவரை விடுதலை என்பது உடனேயே சாத்தியமில்லை. எனவே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது ஒவ்வொன்றுமே எமக்கான படிக்கல்கள் தான். அவற்றை ஒவ்வொன்றாக தாண்டி சென்று ஒரு நாள் எமது இலக்கை அடைய வேண்டும்.

என்றாவது காற்று எமது பக்கம் வீசும் என்று நம்பி அதற்குரிய முயற்சிகளை இன்றிலிருந்தே தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக இன்றே எமது பக்கம் வீசும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்னும் 'நழுவவில்லை'!

 

அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை, நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டுள்ளது!

 

எந்த அளவுக்கு, அமெரிக்கா விட்டுக்கொடுப்புக்களைச் செய்யும் என்பது, இறுதி வடிவம் வரும்போது தான் தெரியும்! :o

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.asiantribune.com/node/61850

 

draft of the procedural resolution by US against Sri Lanka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Subramanya swamy is going to washington tomorrow to talk about unhrc resolution - he tweeted

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு
ஆதரவாக ஓட்டுப்போட வேண்டும் என தமிழக கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,
இந்த விவகாரத்தை கௌரவ பிரச்சினையாக நினைக்காமல் மனிதாபிமானத்துடன் செயல்பட
வேண்டும் என இலங்கையை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெனிவாவில்
நடைபெறும் ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில், இலங்கையில் நடந்த போர்க்குற்றம்
மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது.

இந்த
தீர்மானத்துக்கு ஆதரவாக  வாக்களிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் மத்திய
அரசை வலியுறத்தி வருகின்றன. மேலும் இதனை வலியுறுத்தி வரும் 12ம் தேதி  பொது
வேலைநிறுத்தம்  அறிவித்துள்ளது.

ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானம் குறித்து, பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடம்
பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,

அமெரிக்காவுடன்
இணைந்து இலங்கை செயல்பட்டு அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு தீர்மானத்தை கொண்டு
வர வேண்டும். இதன் பின்னர் இந்தியா ஒரு முடிவு எடுக்கும்.

இந்த நேரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கூறியுள்ளேன்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

இது மனிதாபிமான விவகாரம். இதில் ஒவ்வொருவரும் தனது நிலையில் விடாப்பிடியாக இருக்கக்கூடாது.

இந்த
விவகாரத்தில், பேச்சுவார்த்தை நடத்த முடியுமானால், பேச்சுவார்த்தை நடத்தி
ஒருமித்த தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என கூறினார்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13166:india-srilanka-fight&catid=36:tamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thirumurugan Gandhi on Facebook

 

ராபர்ட் பிளேக் எனப்படும் அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான அதிகாரியின் அமைதிப் பேச்சுவார்த்தை காலகட்டத்திலிருந்து 2009 மார்ச் மாதம் 11ம் தேதி கொழும்புவில் “பிரபாகரன் அழிவிற்கு பிறகு இலங்கை அரசு தமிழர்களுக்கு தீர்வு அளிக்கவில்லையெனில் அமெரிக்கா அமைதியாக இருக்காது” என்பதையும், “பின் லாடனும், பிரபாகரனும் கொல்லப்படுவது அவசியம், அவர்கள் பயங்கரவாதிகள் “ என்றும் , சென்னையில் அதே 2009 மார்ச் மாதத்தில் “இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும், அதற்கான உதவிகளை இலங்கைக்கு செய்வோம்” என்று சொன்னதையும் மறந்து விட முடியாது. 

ஹுகோ சாவேஸ் ராஜபக்சேவிற்கு ஆதரவாக அவரைச் சந்தித்ததை மறக்காத நாம், தமிழர்களை காக்கிறோம் என்று வெளியில் கூறிவிட்டு இலங்கையோடு கைகோர்த்து அமெரிக்க இன்று வரை செயல்படுவதையும் மறந்து விடக் கூடாது. ஹுகோ சாவேஸின் செயல்பாடு என்பது ராஜபக்சேவின் கைகுளுக்கியதோடு நிற்கிறது. ஒபாமாவின் செயல்பாடு ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்கள் இணக்கமாக வாழவேண்டும் என்கிற கட்டாயத்தினை தமிழர்கள் மீதி திணிக்கிறது (2009 ஆகஸ்டில் இருந்தே இந்த நிலைப்பாட்டினை தமிழர்களிட்த்தில் முன்வைக்கிறார்கள். மேலதிக விபரங்களை தமிழ்னெட்டில் பார்க்க முடிகிறது) . மேலும், இனப்படுகொலை-போர்க்குற்றம் சாட்டப்பட்ட இலங்கை ராணுவ அதிகாரியை தனக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வெகு சமீபத்தில் நியமித்ததையும் நாம் மறக்க முடியாது. 

மன காயத்துடன் இருக்கும் நம்மிடம் நேரடியாக எதிரியின் அருகே நின்று நமக்கு எதிரியாக தோற்றமளிக்கக் கூடியவர்களை எதிர்க்கும் அதே நேரம் நமக்கு அருகே அமர்ந்து ஆதரவு வார்த்தைகள் கூறி நமது விடுதலையை அழிக்கும் யுக்தி படைத்தவர்களை விட்டுவிட முடியாது. முன்னவரை விட பின்னவரே மிக மிக ஆபத்தானவர். இந்தியா இதுவரை தமிழர்களுக்கு எதிரான கருத்தினை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் அதை செயலில் காட்டி இருக்கிறது. அதே யுக்தியே அமெரிக்காவின் யுக்தியும். மறுபடியும் அடிபட்டே புரிந்து கொள்ளப் போகிறோமா எனத் தெரியவில்லை.. பாலஸ்தீன விடுதலை என்பது அமெரிக்காவின் துணையுடன் வெல்லப்பட வில்லை... 

சர்வதேசத்தின் கருத்தியல் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கான விவாதங்கள் பாலஸ்தீன - இசுரேல் 1993 அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2000 வருடத்திற்கு மேல்பட்டே உண்டாகின. அதுவரை சர்வதேசம் மேற்குலகம்-லத்தின் அமெரிக்க நாடுகள் பாலஸ்தீன மக்களிடத்தில் ஆதரவு காட்டவில்லை.. இன்று இது சாத்தியமானதற்கு (ஐ. நா பொது அவையில் பங்கேற்பு நாடாக/பிரதேசமாக அறிவிக்கப்பட்ட்தற்கு) காரணம் மிகச் சிறு நாடுகள் தங்களது நேர்மையான செயல்பாடுகள் மூலமாக சாத்தியப்படுத்தப் பட்டது. 

விரிவான அரசியல் தளத்திலேயே நமது அரசியலை நகர்த்திச் செல்லமுடியும். தமிழீழ அரசியல் என்பது ராஜபக்சேவுடன் மட்டுமே முடிந்து விடக்கூடியதல்ல. பல நாடுகள், நபர்கள், அரசுகள், நிறுவன்ங்கள் என பின்னிப் பினைந்து கிடக்கிற சமகால அரசியல் நிகழ்வு. சிறு சிறு எளிமையான முடிவுகளால் நம்மைச் சூழந்துள்ள அரசியலை புரிந்து கொண்டு வென்று விடமுடியாது. 

அமெரிக்காவினை எதிர்ப்பதாக இலங்கை காட்டிக் கொண்டு நடித்துவருகிறது. அதன் மூலமாக அது ஈட்டிய சர்வதேச உதவிகளை , அம்பலப்படுத்துவதன் மூலமாகவே முறியடிக்க முடியும். அது பல தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. மலேசியாவில் தமிழர்களுக்கு விரோதமான நிலைப்பாடெடுத்த, தமிழர்கள் கோவிலை அகற்ற உத்திரவிட்ட இப்ராகிம் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறப்போவதாக சொல்கிறார்கள். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் நிகழ்ந்த தமிழர்கள் மாநாட்டில் “ இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு, அது தண்டிக்கப்பட வேண்டும்” என முழங்கினார். தான் அதிகாரத்திற்கு வரும் போது அதற்கான ஆவன செய்வதாக உறுதி அளித்தார். தவறான புரிதலால் நிலைப்பாடினை தவறாக எடுத்த்தாக சொன்னவர் அவர். உலகில் இது பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. நமக்கு இவர்கள் நிரந்தர எதிரிகள் அல்ல. ஆனால் எவர் நமது வரலாற்றினைப் புரிந்து நமக்கு ஆதரவாக இருப்பதைப் போன்றதொரு செயல்பாட்டின் மூலமாக இலங்கைக்கு துணை செய்கிறார்களோ, எவர் நமது விடுதலையை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சிகளை செய்கிறார்களோ, எவர் நமது விடுதலைப் போராளிகளை களத்திலும், வெளியிலும் முடக்க வேலை செய்தார்களோ, எவர் நம்மை இன்னும் அகதிகளுக்கான பாதுகாப்பினை வழங்க மறுத்து திருப்பி அனுப்புகிறார்களோ அவர்களே நமது உண்மையான நீண்டகால எதிரிகள். 
நமக்கு இனிப்பு வழங்குபவர்கள் நண்பர்களுமல்ல, கசப்பினை அளித்தவர்கள் நிரந்தர எதிரியுமல்ல. விவாதிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.