Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா

Featured Replies

முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 10:30 ஜிஎம்டி

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும்

முஸ்லிம்கடைகள், சிங்களப் பெண்களை மலடாக்கும் ஒரு ரகசியப் பொருள் கலக்கப்பட்ட மிட்டாய்களை விற்பதாகக்கூட சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். :lol:

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஆலோசகராக இருந்த ஹரிம் பீரிஸ், இந்தப் பிரச்சாரத்தை, 1930களில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார். பொதுபலசேனா அமைப்பை அரசாங்க அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்றபோதிலும், அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள ஒருசில தரப்புக்களில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

பள்ளிவாசல் மீது தாக்குதல்

இதற்கிடையே கேகாலை மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

கேகாலை நகரில் இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினர், இந்த நகரின் பிரதான மசூதியை கல்லெறிந்து தாக்கியிருக்கின்றனர் என்று பொலிசார் கூறினர்.

இலங்கையில் முஸ்லீம் மற்றும் கிறித்தவ வழிபாட்டிடங்கள் சமீப காலங்களில் இது போன்றே தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. இதைச் செய்தவர்கள் புத்தமத கடும்போக்குவாதிகள் என்று தோன்றுகிறது. இவர்கள் இலங்கையின் சிங்கள பௌத்தமதத் தன்மையை வலியுறுத்துகிறார்கள். மேலும், சிறுபான்மையினர் நாட்டின் பெரும்பான்மை இனத்தையும், அவர்களின் அடையாளத்தையும் அச்சுறுத்தக்கூடாது என்றும் கூறிவருகிறார்கள்.

இதற்கிடையே சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் இப்படியான நடவடிக்கைகளை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130228_nohalalbbs.shtml

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அடிசக்கை எண்டானாம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஹலால் சான்றிதழ் உள்ள உணைவைச் சாப்பிடுவதில் சிங்களவர்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை!  

சிங்கள இனவாதம் கொழுந்துவிட்டு எரியும்போது சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து அரசியல் ரீதியாக எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

  • தொடங்கியவர்

முஸ்லீம்கள் கலால் மட்டும்தான் சாப்பிடவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது என்ற பொது பல சேனாவின் வாதம் சரியானதே. பள்ளிவாயால்கள் மீது யாரும் கல்லெறிய முடியாது. அது சொத்து சேதமட்டுமின்றி மத எதிர்ப்பின் அடையாளமும்.

முஸ்லீம்கடைகளில் காலால் விற்கப்படுவதை பொதுபல சேனா எதிர்க்கக்கூடாது.  பௌத்த நலன் விரும்பி அமைப்பென்ற முறையில் பௌத்தக்கடைகளாக இனம் காணப்பட்ட  கடைகளில் கலால் விற்கப்படுவதை பொதுபல சேனா ஆட்சேபிக்கலாம்.

Edited by மல்லையூரான்

ஒரு ஊரில ஒருவன் இருந்தானாம்.

பக்கத்து வீட்டிற்கு இன்னொருவன் வந்து நெருப்பு வைக்கும் போது கண்டு களித்தானாம். தன் பங்குக்கு தானும் நல்லா எண்ணெய் ஊற்றினானாம்.

பக்கத்து வீட்டுக்காரன் வெந்து வேகி கதறும் போது இவன் தன் சொந்தங்களிடம் எல்லாம் உதவிகள் கேட்டு இன்னும் இன்னும் எண்ணெய் ஊற்றி எரிவதை ரசித்தானாம்.

பக்கத்து வீடு எரிந்து இனி இல்லையென்று ஆன பிறகு அந்த நெருப்பு இப்ப இவன் வீட்டுக்கும் பரவி வருகுதாம்.

இப்பதான் குத்துது குடையுது, ஐயோ எரியுதே என்று பதறுகின்றானாம்.

நெருப்பு வைத்தவனுக்கு ஒரே  கொண்டாட்டமாம். வெந்தவனும் வேகிக்கொண்டு இருப்பவனும் ஒரு நாளும் ஒன்றாகப் போவதில்லை என்ற கொண்டாட்டமாம் அவனுக்கு.

  • தொடங்கியவர்

.

நெருப்பு வைத்தவனுக்கு ஒரே  கொண்டாட்டமாம். வெந்தவனும் வேகிக்கொண்டு இருப்பவனும் ஒரு நாளும் ஒன்றாகப் போவதில்லை என்ற கொண்டாட்டமாம் அவனுக்கு.

உண்மை. இதுதான் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

அவை எதிர்பார்த்தது.. பத்த வைக்கிறவன் வைக்கட்டும்.. இடையில வேகிறது வெந்து சாக.. மிச்ச சொச்சத்திற்கு.. தண்ணி ஊத்தி மொத்த ஊரையும் நமதாக்கிடுவம் என்று. பத்த வைச்சவன்.. பைத்தியக்காரனே...! அவன் இவையிட சைக்கிள் காப்பில கடா வெட்டிற புத்திக்கு வைச்சானில்ல ஆப்பு..!

என்ன பாவங்கள்.. உதுகளையும் அயலவர்.. சகோதரம்.. புட்டும் தேங்காப்பூவும் என்றதுகள்.. நிஜமாவே அரவணைக்க நின்றதுகள்.. கருகி வெந்து போயிட்டுதுகள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஹலால் சான்றிதழ் உள்ள உணைவைச் சாப்பிடுவதில் சிங்களவர்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை!  

சிங்களவனுக்கு ஹலால் பிரச்சினை இல்லை..... முஸ்லீம்கள் தான் பிரச்சினை....

ஹலால் சான்றிதழ் உள்ள உணைவைச் சாப்பிடுவதில் சிங்களவர்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை!  

சிங்களவனுக்கு ஹலால் பிரச்சினை இல்லை..... முஸ்லீம்கள் தான் பிரச்சினை....

Edited by thanga

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.