Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது: "போஸ்டன் குளோப்" தலையங்கம்

இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது.

போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்:

இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் புலிகளுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு ஏற்கனவே முறிவடையும் நிலைமையை மேலும் சீர்குலைத்து மற்றொரு இரத்தகளரிக்கு இட்டுச் செல்லக் கூடும்.

உலக நாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான், இருதரப்பாரையும் நோர்வேயின் அனுசரணையின் கீழ் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"நல்ல சூழ்நிலைகளிலும் மோசமான சூழ்நிலைகளிலும் இலங்கை விடயத்தில் நோர்வே உறுதியாக இருந்துள்ளது" என்று நோர்வே அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் புலிகளின் தலைவர்கள் மீண்டும் போரைத் தொடங்காதவாறு தடுத்து பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயற்பட முடியும்.

பழையனவற்றை மறந்து அமைதியை உருவாக்குவதற்காக இருதரப்பினரும் சமரசங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சிங்களப் பெரும்பான்மையினத்தவரின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நியாயப்பூர்வமான முறைமைகளைக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள், படுகொலைகளால் அரச அதிகாரிகள், பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதல்களால் அது பயங்கரவாத வன்முறையாக்கப்பட்டு இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளானது புறக்கணிக்கப்படும் நிலை உருவானது.

அரசியல் வழித் தீர்வு தேவையாக உள்ளது.

சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள

இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ்படிதலிலிருந்து

வடக்கு - கிழக்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யக் கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பை உள்ளடக்கியதாக இத்தீர்வு இருக்க வேண்டும்.

தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் அண்மையில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தத் தீர்வு பற்றி மேலோட்டமாகக் கூறியிருந்தார்.

"தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நாம் நிராகரித்த போதிலும், தமிழ் இன மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பவை நியாயப்பூர்வமான கோரிக்கையாகும்" என்று தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழும் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளமையானது அமெரிக்காவின் கொள்கையில் வரவேற்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியாகும்.

இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாத்து-

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதித்து

செயற்படும் வகையிலான நெகிழ்வான ஒரு கூட்டமைப்பை உருவாக்க

நோர்வேயின் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்-

  • Replies 105
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலங்கள் தான் ஒருவனுடைய ஆளுமையைத் தீர்மானிக்கின்றன என்பதை வரலாறுகள் தெளிவுபடுத்துகின்றன.

பாஞ்சு பாஞ்ச அறிக்கைவிட்டவை ஆனா பரமி குலத்துங்காவிற்கு :roll:

களைச்சுப் போச்சினமே இல்லைட்டி கொஞ்சம் தொளிவு பிறந்திருக்கோ? :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பிறக்குது எண்டுதான் நினைக்கிறேன். அமெரிக்காவிலிருக்கும் சில தமிழர் அமைப்புக்களின் விடாமுயற்சி. அவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

அவயழுக்கு விளங்கி இருக்கும், இப்படி அறிக்கை விடுறது என்றால் தொடர்ந்து விட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று.

ம்.. அமெரிக்கா இஸ்ரேல் பேர்சூட்டி யூதராஜ்யம் உருவாக்கினது மாதிரி தமிழீழ புலி ராஜ்யம் உருவாக்கி பெயர் சூட்டிறதுதான் பாக்கியெண்டு சொல்லிறமாதிரித் தெரியிது..

:wink: :wink:

ம்.. அமெரிக்கா இஸ்ரேல் பேர்சூட்டி யூதராஜ்யம் உருவாக்கினது மாதிரி தமிழீழ புலி ராஜ்யம் உருவாக்கி பெயர் சூட்டிறதுதான் பாக்கியெண்டு சொல்லிறமாதிரித் தெரியிது..

:wink: :wink:

இலகுவாக உருவாக்கலாம் திருகோணமலையை கொடுத்தால் நீர் ஓமோ கொடுக்க? :P :P :P

முதலிலை அமெரிக்கன் புலியளை உந்த பயங்கரவாத பட்டியலிலையிருந்து நீக்கட்டும்.. அதுக்குப்பிறகுகூட அரசாங்கம் தானே குடுக்கிறது பற்றி தீர்மானிக்கோணும்.. என்னை குடுப்பியோவெண்டு கேக்குறியள்..

:?:

இலகுவாக உருவாக்கலாம் திருகோணமலையை கொடுத்தால் நீர் ஓமோ கொடுக்க? :P :P :P

*******எப்படா புலிகள் அழிவார்கள் தமிழ்மக்களின் தலையில் முளகாய் அரைக்க :twisted: :twisted:

முதலிலை அமெரிக்கன் புலியளை உந்த பயங்கரவாத பட்டியலிலையிருந்து நீக்கட்டும்.. அதுக்குப்பிறகுகூட அரசாங்கம் தானே குடுக்கிறது பற்றி தீர்மானிக்கோணும்.. என்னை குடுப்பியோவெண்டு கேக்குறியள்..

:?:

*****

ஓமோம்.. ***** குறைச்சுக்குடுக்கிறதெல்லாம

******** :P :P

ஓமோம்.. கூட்டிக்குடுக்கிறது குறைச்சுக்குடுக்கிறதெல்லாம

நம்மில் சிலருக்கு ஒரு பெரிய பிரச்சனை

கெட்டது சொன்னாலும்

அதில் ஏதாவது சொட்டை தேடுவார்கள்.

நல்லது சொன்னாலும்

அதில் ஏதாவது சொட்டை தேடுவார்கள்

அதுதான் ஏன் என்று புரியவில்லை?

என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

இதை ஏற்கனவே ஓரிடத்தில் சொல்லியிருக்கிறேன்.

யாழ்பாண கோட்டையை பிடிப்பதற்கு

அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த

அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து

தாக்குல் நடத்தின என்பது அனைவரும் அறிந்ததே.

யாழ்பாண கோட்டையை பிடித்த போது

அங்கிருந்த சிறீலங்கா படையினர்

தப்பி ஓடினர்..............

அங்கே புலிக்கொடி நாட்டப்பட்டது.

அது இந்திய தமிழ் பத்திரிகைகளில்

செய்தியாக வெளிவந்த போது

தமிழீழம் கிடைத்து விட்டதாய்

பெங்களூர் தமிழர்கள் கொண்டாடினார்கள்.

அப்போது நான் அங்கு இருந்தேன்.

அவர்களது உணர்வுகளைப் பார்த்து புல்லரித்துப் போனேன்

ஆனால்....................

அந்த பாமர மக்கள்

அப்படி நடந்து கொண்டதற்கு காரணம்.

சினிமாவில் இரண்டு படைகள்

போரிட்டு வெற்றிக்கு அறிகுறியாக

யார் கொடி நாட்டுகிறார்களோ

அந்த நாடு அல்லது பகுதி அவர்களுக்கு சொந்தமாகிவிடும்

நிலை கொண்ட சினிமா காட்சிகளின் பாதிப்பேயாகும்....................

இப்படியும் ஒரு காலம் இருந்தது.

அது ஆரம்ப அரச ஆட்சி மற்றும்

படையெடுப்புகளை கொண்டு பல தேசங்களை

அடிமைப்படுத்திக் கொண்ட காலம் எனலாம்.............

ஆனால்

இன்று நாகரீகத்தால் வளர்ந்த

சர்வதேச சமூகம்

பல கட்டுப்பாடுகளை நியதிகளை வகுத்திருக்கிறது.

அவற்றை மீறும் பட்சத்தில்

பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

உலக ஜாம்பவானான அமெரிக்காவே

ஈராக் மீது தாக்குதல்களை நடத்த

உலக நாடுகளின் அனுதாபத்தையும்

அங்கிகாரத்தையும் உதவிகளையும்

பெற்ற பின்னரே களத்தில் இறங்கியது.

அமெரிக்காவோடு

நெருக்கமற்றதும்

நட்பு நிலை கொண்டிராததுமாக இருந்த நாடுகளையும்

அமெரிக்கா தன் வசம் ஈர்க்கவும்

தனக்கு இணக்கமானவிதத்தில் நட்பை உருவாக்கவும்

அல்கொய்தா பின்லாடனின்

செப்டம்பர் 11

தாக்குதல் காரணமாகியது.

அதை அமெரிக்கா அரசியல் சாணக்கியத்தோடு முறையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இவற்றை நாமெல்லாம் ஒரு முறை சிந்திப்பது நல்லது.

எந்த ஒரு இனமும்

ஒரு நாடு கிடைக்க

போரிடுவதோ அல்லது எல்லைகளை தனதாக்கி

வைத்துக் கொள்வதோ மட்டும் போதுமானதல்ல.

அதற்கு மேலே எத்தனையோ..................?

அவை பலருக்கு தெரிவதில்லை.

பலர் தாம் நினைப்பதை எல்லாம் எழுதுகிறார்கள்.

அதை அரசியல் தெரிந்த யாராவது

படித்தால் நமது அரசியல் ஞானத்தை பார்த்து

நிச்சயம் சிரிக்கவே செய்வார்கள்.

உதாரணத்துக்கு

பாலஸ்தீனத்தை இந்தியா அங்கிகரித்த போதிலும்

இன்னும் போர் ஒன்று தொடர்கதையாக

தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஏகப்பட்ட

பலம் வாய்ந்த அரேபிய நாடுகள்

பாலஸ்தீனத்தை சுற்றி உள்ளன.

இருந்தும் என்ன நிலை?

அடுத்து

அப்கானிஸ்தான் தலிபான்களின் நிலை என்னவாகியது?

அவர்களை யாருமே முறையாக அங்கிகரிக்கவில்லை.

அடுத்து

துருக்கியின் குருதிஸ்தான்?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அது போல

தமிழீழம் என்பது போராட்டத்தால் மட்டும்

கிடைத்து விடப் போவதில்லை.

முறையான அரசியல் அணுகுமுறைகள்

உலக நாடுகளின் கவனயீர்ப்பு

அவர்களின் அங்கிகாரம்

ஆகியவையூடாகவே நீண்டதொரு

பயணத்தை தொடர வேண்டியுள்ளது.

நம்மால் யாருக்கும் பாடம் கற்பிக்க முடியாது.

ஆனால்

பலரது ஆதரவுடன் மட்டுமே நம்மால்

உலக வரை படத்தில்

நமது

தாயகத்தின் வரைபடத்தை

இணைக்க முடியும்.

அதற்கு உலகெங்கும் பரவி வாழும்

அனைத்து தமிழர்களதும் தார்மீக ஆதரவும் தேவை.

நமது பிரச்சனைகளை எடுத்துக் கூற

இவர்களது குரல்கள் மற்றும் பேனாக்கள் இன்றியமையாதவை.

யாழ் களம் போன்ற களங்களில் எழுதுவோரது

போனக்களில் இருந்து

என்ன கசிகிறதோ

அதுவும் எமக்கு எதிரான ஒரு சிலருக்கு

ஒரு துருப்பு சீட்டாய் ஆகிவிடும்.

இன்று

எதிர்க்கும்

உலகத்தின் பார்வையை

நம் பக்கம் கொண்டு வர வேண்டிய பொறுப்பு

நம் அனைவருக்கும் உண்டு.

குடிப்பதற்கு தண்ணீரைக் கூட

மலேசியாவிலிருந்து பெற வேண்டிய நிலையில்

ஒன்றுமேயில்லா ஒரு மீனவ கிராமம் போல

சிங்கையின் சிற்பி லீ குவான்யூ அவர்கள் கரங்களுக்கு

கிடைத்த வெற்று பிரதேசமான சிங்கப்பூர் வெற்றி தேசமாக மாற எவ்வளவோ போராட வேண்டியிருந்தது.

இன்று மலேசியாவே

சிங்கப்பூரைத்தான் பின்பற்றி முன்னேறுகிறது.

அன்று

முதன் முறையாக ஐநா சபையில்

லீ குவான்யூ அவர்கள் பேசும் போது

leekuanyew.jpg

"பல பிலியன் சனத் தொகை கொண்ட

நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த சபையில்

ஒரு லட்சம் சனத்தொகை கொண்ட

மிகச் சிறிய ஒரு நாட்டிலிருந்து பேச வந்திருக்கிறேன்."

என்று மெளனப் புன்னகையோடு பவ்யமாக சொன்ன போது

முழு சபையே எழுந்து நின்று ஆர்ப்பரித்தது.

உலகத்தின் பார்வையை

நம் பக்கம் கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பு

நம் அனைவருக்கும் உண்டு.

நன்றி!

நன்றி அஜீவன் அண்ணா

அன்பு அஜீவன் (கொழும்புத் தமிழர்)

எல்லா இயக்கங்களும் சேர்ந்து அடிச்சு பிடிச்ச யாழ்பாணக் கோட்டையிலை புலிக்கொடியை மாத்திரம் ஏத்தினது ஒரு தவறான விழையம் தான். அடுத்த முறை EPDP PLOTE கொடிகளை ஏத்துவம். கவலைப்படாதேங்கோ. :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு அஜீவன் (கொழும்புத் தமிழர்)

எல்லா இயக்கங்களும் சேர்ந்து அடிச்சு பிடிச்ச யாழ்பாணக் கோட்டையிலை புலிக்கொடியை மாத்திரம் ஏத்தினது ஒரு தவறான விழையம் தான். அடுத்த முறை EPDP PLOTE கொடிகளை ஏத்துவம். கவலைப்படாதேங்கோ

ம் விட்டா சிங்கக்கொடியும் ஏத்துவியள்போல கிடக்கு. அதுசரி பௌத்தக்கொடியை மறந்துபோனீங்கள்.

கோட்டை எல்லா இயக்கமுமா பிடித்து :P :P :P

நல்ல காலம் எல்லா இயக்கமும் தான் ஆனையிறவும் அடிதார்கள் என்று சொல்லவில்லை

அது எப்பவோ 85க்கு முன்னம் ஒருக்கா அடிக்க எல்லா இயக்கமும் சுத்தி நிண்டது தான் அதில சில இயக்கம் சோறு வாங்கி கொண்டு இந்தியா போய்ட்டினம் சில்லது நகை பறித்து கொண்டு போனர்கள் சிலர் படிக்கும் மானவிகளை கடத்தி கொண்டு இந்தியா போனர்கள் இப்படி பல கோட்டை நாயகர்கள் தான் யாழ் களத்தில் இப்ப அடிபாடுக்கு வந்து நிக்குறார்கள் :P :P

அன்பு அஜீவன் (கொழும்புத் தமிழர்)

எல்லா இயக்கங்களும் சேர்ந்து அடிச்சு பிடிச்ச யாழ்பாணக் கோட்டையிலை புலிக்கொடியை மாத்திரம் ஏத்தினது ஒரு தவறான விழையம் தான். அடுத்த முறை EPDP PLOTE கொடிகளை ஏத்துவம். கவலைப்படாதேங்கோ. :cry:

எனக்குத் தெரிந்து ஏத்தின கொடியை மட்டும்தான் குறிப்பிடலாம்.

எனக்குத் தெரியாம ஏத்தியிருந்தா

சொல்லுங்க குறுக்ஸ் :lol:

ரிலே ஓட்டத்தில நாலு பேர் ஓடுறம்

கேடயம் கொடுக்கும் போது

ஓருவர்தான் போய் வாங்கிறார்.

ரிலேயில ஓடுறதுக்கு போட்டி போடலாம்.

கேடயம் வாங்கிறதுக்கில்ல அன்பே.............

அதுதான் நம்ம பிரச்சனையே?........:P

அன்பு அஜீவன் (கொழும்புத் தமிழர்)

நான் இப்ப சுவிஸ் தமிழர் :P

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது 1965 இல். இந்தக் காலப்பகுதியில் வியட்நாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இந்தோனேசியாவில் சோவியத் யூனியன் 1966 வரை இருந்தது.

அந்தக் காலப் பகுதியில் Malacca Straights இன் முக்கியத்துவம் என்ன அது சிங்கையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தது? :?

இவை எல்லாம் சிங்கப்பூரின் அங்கீகரத்திற்கு உதவியிருக்காது என்று தான் நினைக்கிறன். :roll:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண கோட்டையை பிடிப்பதற்கு

அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்த

அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து

தாக்குல் நடத்தின என்பது அனைவரும் அறிந்ததே.

யாழ்பாண கோட்டையை பிடித்த போது

அங்கிருந்த சிறீலங்கா படையினர்

தப்பி ஓடினர்..............

அங்கே புலிக்கொடி நாட்டப்பட்டது.

யாழ்ப்பாண கோட்டை தாக்கியழிக்கப்பட அங்கிருந்த படையினரை மீட்க குறிகட்டுவான் மண்டைதீவு பகுதிகளால் இராணுவம் தரையிறக்கப்பட்டு கோட்டை இராணுவம் பண்ணை பக்கமாக கடலால் தப்பியோடி மண்டை தீவில் நின்ற இராணுவத்துடன் இணைந்து கொண்டனர் இந்த தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள் மட்டுமே யாழ் கோட்டையில் எங்கள் புலிக்கொடி ஒருநாள் பறக்கும் என்று தியாகி திலீபனின் கனவை நினைவாக்கி கோட்டையில் புலிகள் திலீபனின் நினைவுநாளன்று புலிக்கொடியை ஏற்றினார்கள் இதுதான் நடந்தது

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததா ஒரு விடயம் அந்நநேரம் இருந்த இயக்கங்களில் புலிகள் இயக்கத்தை தவிர்த்து பார்தால் ஒரு முழுமையான ஒரு முகாம் அல்லது காவல் நிலையம் மீதான தாக்குதலை ரெலோ இயக்கம் மட்டுமே செய்திருந்தது அது சாகச்சேரி காவல் நிலையம் மீதான தாக்குதல் அடுத்ததாக முறிகண்டியில் வைத்து இராணுவம் சென்ற இரயில் மீதானது இரண்டும் தாஸ் இராணுவ பொறுப்பில் இருந்தபோது நடாத்தப்பட்டது மற்றபடி வேறு எந்த இயக்கங்களும் எவ்வித முழுமையான ஒரு தாக்குதலையும் நடாத்தவில்லை மற்றபடி யாழ் கோட்டை முகாமையும் பலாலி காரை நகர் எண்டு எல்லா முகாமை சுத்தியும் எல்லா இயக்கமும் காவல் நிண்டவைதான் ஆனால் ஆமி வெளிக்கிட்டால் அதிலை நிண்டு அடிபட்ட ஒரேயொரு இயக்கம் எது எண்டு நான் சொல்லிதான் தெரியவேணும் எண்டு

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது 1965 இல். இந்தக் காலப்பகுதியில் வியட்நாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இந்தோனேசியாவில் சோவியத் யூனியன் 1966 வரை இருந்தது.

அந்தக் காலப் பகுதியில் Malacca Straights இன் முக்கியத்துவம் என்ன அது சிங்கையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தது? :?

இவை எல்லாம் சிங்கப்பூரின் அங்கீகரத்திற்கு உதவியிருக்காது என்று தான் நினைக்கிறன். :roll:

எனக்கு இது பற்றி பெரிதாகத் தெரியாது.

இருந்தாலும் சிங்கப்பூர் உருவாகும் போது

சில அரசியல் மற்றும் அரசியல் (ஸ்ரைக்)போராட்டங்கள்

போன்றவற்றுக்கு

சிங்கப்பூர் அதிபராக இருந்த அமரர்.தேவன் நாயர் அவர்களது ஒத்துழைப்பு முக்கியமாக இருந்தது.

இவர் கரங்களில்தான் அன்றைய மலேசிய நாட்டு யூனியன்கள் இருந்தன.

அது அவர்களது போராட்டத்துக்கு அன்று இன்றியமையாதாக இருந்தது.

சிங்கப்பூர் டுடே என்ற ஒரு டாக்கியுமன்றி படத்தை

உருவாக்கும் வாய்ப்பின் போது எனக்கு கிடைத்த தகவல்கள் இவை.

அன்று இது பற்றிய தேடலுக்கான வயது மற்றும் சிங்கப்பூர் பற்றிய தெளிவு எனக்கு இருக்கவில்லை.

இதை லீ அவர்களே

" இப்போது நினைத்துப் பார்க்கும் பொழுது துங்கு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார். என்றுதான் தோன்றுகிறது. (துங்கு என்பது மலேசியப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மானைக் குறிக்கிறது.)

இவரது ஆட்சியின் கீழ்தான் சிங்கப்புூர் மலேசியாவில் இருந்து பிரிந்து ஆட்சியமைப்பை நெகிழ்ச்சியுள்ளதாக்கும் யோசனையை நான் முன்வைத்தேன்.

"இல்லை வெட்டொன்று துண்டு இரண்டாக செல்வோம். நீங்கள் உங்கள் வழியில் போங்கள்"

என்று அவர் சொன்னார்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...1745&highlight=

நன்றி: KING ELLALAN

என்று அவரது புத்தகத்தில் லீ அவர்களே எழுதியிருப்பதிலிருந்தே

புரிந்துணர்வோடு இருவர் பிரிந்து போகும் போது

ஏனைய சமூகத்துக்கு பிரச்சனையாக இருந்திருக்காது

என்றே நினைக்கிறேன்.

உங்களுக்கு விடை கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

1965லிருந்த உலகமல்ல 2006ல் குறுக்ஸ்..........

இலங்கையை றோல் மொடலாகக் கொண்டு அன்று உருவானது சிங்கப்பூர்.

இன்று?????????? :oops:

உவர் சாத்திரியார் திருப்பி பொய்சொல்லுறார்.

யாழ்கோட்டையை ENDLF தான் பிடிச்சது என்று உலகப்பிரசித்தி பெற்ற இந்துவின் ஆசிரியர் ராமே எழுதியிருக்கிறார். அதை விட அறளைபெயர்ந்த சங்கரி வேறை TBC அடசி BBC தமிழ் ஓசைக்கு ஒரு நீண்ட செவ்வியிலை விளங்கப்படுத்திறார்.

வேணும் எண்டா சொல்லுங்கோ லிங் தாறன் :P

அவரது புத்தகத்தில் லீ அவர்களே எழுதியிருப்பதிலிருந்தே  

புரிந்துணர்வோடு இருவர் பிரிந்து போகும் போது

ஏனைய சமூகத்துக்கு பிரச்சனையாக இருந்திருக்காது

என்றே நினைக்கிறேன்.

உங்களுக்கு விடை கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

1965லிருந்த உலகமல்ல 2006ல் குறுக்ஸ்..........

இலங்கையை றோல் மொடலாகக் கொண்டு அன்று உருவானது சிங்கப்பூர்.

இன்று?????????? :oops:

அப்ப செக்கும் சொலவாக்கியாவும் புரிந்துணர்வோடு பிரிந்த மாதிரி பிரிந்தவை என்றியளோ? ஆனா அப்படி புரிந்துணர்வோடை நடந்திருந்த நீங்கள் இண்டைக்கு சுவிஸ் தமிழன் என்று சொல்லுற பாக்கியம் கிடைச்சிருக்குமோ? அங்கை இருந்து கோப்பிக் கடே எடுத்திருப்பியள் இப்ப மாதிரி வெள்ளைப்பிள்ளை கொட்டாவி விட்டு சுவிஸ்கன் பாக்கிறதை நீங்கள் லென்சிக்காலை பாத்திருப்பியளோ?

அது சரி இலங்கைக்கு இப்ப என்ன குறை? எல்லாம் நல்லாத்தானே இருக்கு? கொழும்பிலை வீட்டு விலையள் எல்லாம் எப்படி இருக்கு? நீங்கள் வித்துப்போட்டியளோ இன்னும் கொஞ்சம் ஏறும் எண்டு பாத்துக் கொண்டிருக்கிறயளோ?

இந்த தலைப்பை பார்த்ததும் நினைக்க தோன்றிய குறள்....

:roll: :roll: :roll: :roll: :roll:

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உவர் சாத்திரியார் திருப்பி பொய்சொல்லுறார்.

யாழ்கோட்டையை ENDLF தான் பிடிச்சது என்று உலகப்பிரசித்தி பெற்ற இந்துவின் ஆசிரியர் ராமே எழுதியிருக்கிறார். அதை விட அறளைபெயர்ந்த சங்கரி வேறை TBC அடசி BBC தமிழ் ஓசைக்கு ஒரு நீண்ட செவ்வியிலை விளங்கப்படுத்திறார்.

வேணும் எண்டா சொல்லுங்கோ லிங் தாறன்  :P

:P :P :P :P :P :P :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.