Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஜேர்மன் நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வி!

Featured Replies

ஜேர்மன் நாட்டு பாராளுமன்றத்தில் (Bundestag) அந்நாட்டு எதிர்க்கட்சியால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியாலேயே இப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பாரளுமன்றத்தின் 225 ஆவது தொடரின் போதே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டதாக ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவரலாயம் அறிவித்துள்ளது.

  "UN Human Rights of Sri Lanka and use the rule of law, Observance of human rights and call for reconciliation" என்ற தலைப்பில் சமூக ஜனநாயகக் கட்சியயின் தலைவரான பிராங்க் வோல்ட்டர் ஸ்டீன்மியராலேயே இப்பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தல், நல்லாட்சிக்கு வலியுறுத்தல் போன்ற விடயங்களை இப்பிரேரணை உள்ளடக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு ஆரம்பத்தில் விஜயம் மேற்கொண்டிருந்த ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜேர்கன் கிலிம்கே இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இது அவசியமற்றதொன்றென வாதிட்டுள்ளார்.

http://dailytamil.com/2013/03/02/%25e0%25ae%259c%25e0%25af%258b%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e/

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
இந்த பிரேரணை தோல்வியடைந்தமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும், ஜேர்மன் நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்புக்களும் பொறுப்பெடுக்க வேண்டும்.

இப்பிரேரணை வர இருப்பது பற்றி அறியாமை, மற்றும் ஆளும் எதிர் கட்சிகளுக்கு போதிய விளக்கமளிக்காமை உங்களது அசண்டையீனத...ை காட்டுகிறது.

ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கு எவளவு கஷ்டப்பட வேண்டும் ஆனால் வந்த பிரேரணையை வெற்றியடைய வைக்க அதற்குரிய நடவடிக்கையை அனைவரும் எடுக்க தவறிவிட்டீர்கள்.

ஐ.நா வில் நடக்க போகும் பிரேரணையை உங்களால் ஒன்றும் செய்ய இயலாது, நீங்கள் விழுகின்ற பழத்துக்கு காகம் போல தான் நடகிரீர்கள், அமெரிக்கா ஒரு பிரேரணையை கொண்டு வரும் எண்டால் பெரும்பான்மையாக அது வெல்லும்.

ஆனால் இப்படிப்பட்ட தனித்தனி நாட்டுப்பாரளுமன்றங்களில் பிரேரணையை கொண்டுவருவதும் வெற்றியடைய செய்வதும் தமிழர்களுக்கு மிகவும் சவாலான விடயம்,

van இல் சுத்துவதும் சைக்கிள் ஓடுவதும் யாருக்கு விழிப்புணர்வூட்ட?
நாட்டு மக்களுக்கு விழிப்பூட்டி அவர்களிடம் பிச்சை எடுக்கவா? உண்மையில் விழிப்பூட்டப்படவேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே.

அரசியல்ரீதியாக, வெற்றிபெறுவதற்கு பிரேரனைகளும், ஆதரவு செயற்பாடுகளும் தான் எங்கள் இனத்துக்கு ஆதரவையும் உரிமைகளையும் பெற்றுதரும்.

அதை விடுத்தது ஐ.நாவில் இவளவு தொகை மக்கள் கூடுவது எதற்கு? அது தான் பிரேரணை வந்துவிட்டதே அதுவும் அமெரிக்கர்கள் கொண்டுவருகிறார்கள். அதைனைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை, நாம் ஓரளவு வெற்றியடைந்த்துவிட்டோம். பின்னர் பன்றி கூட்டம் போல் எதற்கு கூட வேண்டும்? உண்மை இலக்கு என்ன?

கூட்டத்தொடரில் கலந்துகொள்வதும் அங்கு நம்பகத்தன்மையுள்ள ஆழமான தகவல்களை புள்ளிவிபரத்துடன் சரியான நபர்களிடம் வழங்குவதும்தான் முக்கியம்.

ஐயா உருத்திரகுமாரன் அவர்களே, இதுவரை எத்தனை நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கவைத்துள்ளீர்கள்.

இதுவரை நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கபட்ட அமைப்பாக செய்வதற்கு எவ்வகை நடவடிக்கை எடுத்துளீர்கள்?

ஐ.நா கூட்டதொடர்களுக்கு மட்டும் சென்று வருவது மட்டும் தான் உங்கள் வேலையா?
மழைகாலத்து தவளைகள் போல அல்லவா நீங்களும் உங்கள் அங்கத்தவர்களும் செயற்படுகின்றனர்.

சிந்தியுங்கள் எல்லா காலத்திலும் van நடை விளக்கமும், ஆர்ப்பட்டமும் பயனளிக்காது, இராஜ தந்திரிகளை சந்தியுங்கள் வருடம் முழுவதும் நம் உரிமைகள் கிடைக்கும் வரை அரசியலாளர்களுக்கு விழிப்புனர்வூட்டுங்கள்.

அனைவரும் Geneva செல்லும் பணத்தை எங்கள் ஏழை மாணவ செல்வங்களுக்கு கல்வி பெறுவதற்கு பயன்தர வழிசெய்யுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

    Motion against SL rejected in German Parliament

German-Parliament(1).jpgA motion against Sri Lanka titled – ‘Use the UN Human Rights Council and demand Observance of Laws, Human Rights and Reconciliation Process in Sri Lanka’ has been defeated at the German Bundestag (German Parliament).

The motion had been put forward on Thursday by the opposition Social Democratic party (SPD) group in the Parliament and signed by its chairman Dr. Frank-Walter Steinmeier, former candidate for German Chancellor and former Federal Minister of Foreign Affairs.

Parliamentarian Jürgen Klimke speaking for the ruling Christian Democratic Party (CDU) party group had argued that there is no need for the motion as the Federal Government was already actively working with the international community and the Sri Lankan government to address issues related to it. The motion had been defeated by the votes of the governing coalition in the German Bundestag.

Tom Koenigs, parliamentarian of Alliance 90 / the Greens and Chairman of the Human Rights Committee of the German Parliament in his speech however had argued that it was the responsibility of the international community to prevent internal conflicts from developing into Human Rights violations. Tom Koenigs had further stated that Germany should be the first to contribute towards better protection from grave human rights violations.  (Asian Tribune)

- See more at: http://www.dailymirror.lk/news/26112-motion-against-sl-rejected-in-german-parliament-.html#sthash.QJTOpW8e.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரேரணை தோல்வியடைந்தமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும், ஜேர்மன் நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்புக்களும் பொறுப்பெடுக்க வேண்டும்.

இப்பிரேரணை வர இருப்பது பற்றி அறியாமை, மற்றும் ஆளும் எதிர் கட்சிகளுக்கு போதிய விளக்கமளிக்காமை உங்களது அசண்டையீனத...ை காட்டுகிறது.

ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கு எவளவு கஷ்டப்பட வேண்டும் ஆனால் வந்த பிரேரணையை வெற்றியடைய வைக்க அதற்குரிய நடவடிக்கையை அனைவரும் எடுக்க தவறிவிட்டீர்கள்.

ஐ.நா வில் நடக்க போகும் பிரேரணையை உங்களால் ஒன்றும் செய்ய இயலாது, நீங்கள் விழுகின்ற பழத்துக்கு காகம் போல தான் நடகிரீர்கள், அமெரிக்கா ஒரு பிரேரணையை கொண்டு வரும் எண்டால் பெரும்பான்மையாக அது வெல்லும்.

ஆனால் இப்படிப்பட்ட தனித்தனி நாட்டுப்பாரளுமன்றங்களில் பிரேரணையை கொண்டுவருவதும் வெற்றியடைய செய்வதும் தமிழர்களுக்கு மிகவும் சவாலான விடயம்,

van இல் சுத்துவதும் சைக்கிள் ஓடுவதும் யாருக்கு விழிப்புணர்வூட்ட?

நாட்டு மக்களுக்கு விழிப்பூட்டி அவர்களிடம் பிச்சை எடுக்கவா? உண்மையில் விழிப்பூட்டப்படவேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே.

அரசியல்ரீதியாக, வெற்றிபெறுவதற்கு பிரேரனைகளும், ஆதரவு செயற்பாடுகளும் தான் எங்கள் இனத்துக்கு ஆதரவையும் உரிமைகளையும் பெற்றுதரும்.

அதை விடுத்தது ஐ.நாவில் இவளவு தொகை மக்கள் கூடுவது எதற்கு? அது தான் பிரேரணை வந்துவிட்டதே அதுவும் அமெரிக்கர்கள் கொண்டுவருகிறார்கள். அதைனைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை, நாம் ஓரளவு வெற்றியடைந்த்துவிட்டோம். பின்னர் பன்றி கூட்டம் போல் எதற்கு கூட வேண்டும்? உண்மை இலக்கு என்ன?

கூட்டத்தொடரில் கலந்துகொள்வதும் அங்கு நம்பகத்தன்மையுள்ள ஆழமான தகவல்களை புள்ளிவிபரத்துடன் சரியான நபர்களிடம் வழங்குவதும்தான் முக்கியம்.

ஐயா உருத்திரகுமாரன் அவர்களே, இதுவரை எத்தனை நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கவைத்துள்ளீர்கள்.

இதுவரை நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கபட்ட அமைப்பாக செய்வதற்கு எவ்வகை நடவடிக்கை எடுத்துளீர்கள்?

ஐ.நா கூட்டதொடர்களுக்கு மட்டும் சென்று வருவது மட்டும் தான் உங்கள் வேலையா?

மழைகாலத்து தவளைகள் போல அல்லவா நீங்களும் உங்கள் அங்கத்தவர்களும் செயற்படுகின்றனர்.

சிந்தியுங்கள் எல்லா காலத்திலும் van நடை விளக்கமும், ஆர்ப்பட்டமும் பயனளிக்காது, இராஜ தந்திரிகளை சந்தியுங்கள் வருடம் முழுவதும் நம் உரிமைகள் கிடைக்கும் வரை அரசியலாளர்களுக்கு விழிப்புனர்வூட்டுங்கள்.

அனைவரும் Geneva செல்லும் பணத்தை எங்கள் ஏழை மாணவ செல்வங்களுக்கு கல்வி பெறுவதற்கு பயன்தர வழிசெய்யுங்கள்.

இதை சொல்லிதான் நல்லா வேண்டிகட்டிட்டம் நீங்கள் வேறை ,  சைக்கிள் ஓடுறதை பிடிச்சு ஒரு நாள் சாவகசமாய் கதைக்க அவரே பயங்கர குழப்பத்தில் இதுக்குள்ளை ???????????????

Edited by purmaal

இப்போது அரசுடன் சேர்ந்து ரோட்டு போடும் கொந்துராத்துக்களுக்கு நாமும் போக முடியாது. தனி தனி பொது நல அமைப்புக்கள் எழைகளுக்கு உதவுகிறார்கள். அதற்காக அரசியல் விழிப்பு பிர்ச்சார்ங்களை மேற்கு நாடுகளில் செய்வதை சிலர் எதிர்க்கிறார்கள். இவர்கள் மேற்கு நாடுகளில்   இல்ங்கை அரசர்கள் மாதிரித்தான் அரசியல் வாதிகள் தாம் விரும்பியதை மட்டும்தான் செய்கிறார்கள் என்று படம் காட்டப் பார்க்கிறார்கள். இந்த ஆலோசகர்கள் ஒரு மேற்கு நாடு அரசியல் வாதியை சந்தித்திருந்தால் அவரின் முதல் கேள்வியாக உங்களின் அமைப்பில் எத்தனை அங்கத்தவர்கள் என்று கேட்பதை மறந்திருக்க முடியாது. (அந்த கேள்வியின் பொருள் உங்களிடம் எத்தனை வாக்கு இருக்கிறது, எவ்வளவு நன்கோடை தேர்தலுக்கு கொடுக்க முடியும் என்பதுதான்)

  • தொடங்கியவர்

ஜெர்மன் மொழி தெரிந்தவர்கள் இவருடன், Jürgen Klimke aus der CDU/CSU,  உறவுகளை வளர்க்கவேண்டும்.

http://klimke-cdu.de/index.php/indien-sri-lanka

தொடர்புகளுக்கு: 

KONTAKT UND IMPRESSUM
Büro Berlin:
Jürgen Klimke, MdB
Platz der Republik 1
11011 Berlin
Tel.: 030 - 22 77 83 67
Fax: 030 - 22 77 66 97
E-Mail: juergen.klimke@bundestag.de

Wahlkreisbüro Jürgen Klimke
Wandsbeker Königstraße 66
22041 Hamburg
Tel.: 040 / 68 91 72 38
Fax: 040 / 68 91 72 39
E-Mail: juergen.klimke@wk.bundestag.de

2009 இல் இவர்:

http://www.youtube.com/watch?v=ZyYK57-WQn4

  • தொடங்கியவர்

to: juergen.klimke@bundestag.de, juergen.klimke@wk.bundestag.de

Liebe Jürgen Klimke,

Ich möchte deutsche Parlament und Regierung zu besuchen und Zeuge aus erster Hand das Leben der Tamilen und die Fortschritte, die seit dem Ende des Krieges. Auch sollten sie andere Teile des Landes zu besuchen.

Es ist weithin dokumentiert, dass nach der derzeitigen Regelung der Rajabasa die Situation inb Sri Lanka wird immer schlimmer. Die Kernelemente der Demokratie in Gefahr sind, einschließlich der Unabhängigkeit der Justiz sysyte.

Suncerely,

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்து வெளிவிவகார முடிவுகளை எடுக்க முடியுமா?

இல்லை அவை ஐரோப்பிய ஒன்றிய முடிவுகளைத்தான் பிரதிபலிக்க வேண்டுமா?

கவலைதரும் விடயம் ..................ஆனாலும் சரியாக மொழிபெயர்க்கப்பட்டதா???? என்பதும் நியாயமான கேள்வியாகவே தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.