Jump to content

ஜெனீவா: அடுத்துவரும் தினங்களில் நடைபெறப்போகும் காட்சிகள்! (சமகாலப் பார்வை)


Recommended Posts

unhrc_09.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது.  வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி!

மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடும் இலங்கை தொட்பில் தமது நிலைப்பாட்டை  பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவை இரண்டாகப் பிளவுபட்டுப்போயிருப்பது வெளிப்படையாகியிருக்கின்றது. இந்தியா மட்டும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் தயங்கிக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் யோசனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வெள்ளிக்கிழமை உப மகாநாடு ஒன்று ஜெனீவாவில் நடத்தப்பட்ட போது இலங்கைக்கான ஆதரவு குறைவாகவே காணப்பட்டது. ஆதரவளித்த நாடுகளில் பெரும்பாலானவை வாக்களிக்கத் தகுதியற்றவை என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்கா முன்வைக்கப்போகும் பிரேரணையின் பிரதிகள் ஜெனீவாவில் இராஜதந்திர வட்டாரங்களில் விவாதங்களுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய செயல் திட்டம் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை குறித்து உரிய கவனம் செலுத்துமாறு இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

mahinda-samar.jpg

 

மேலும், இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது என அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழர் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புகூறலையும் மேம்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையை வரவேற்கும் இந்த தீர்மான வரைவு, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், மனித நேய சட்டத்தையும் மீறிய செயல்கள் குறித்து ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணைய கோரி ஆணையர் விடுத்த அழைப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.

 

இந்த ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவு கோருகிறது. அதேவேளையில், இலங்கை அரசு, ”ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்” மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி தருமாறும் இந்த வரைவுத் தீர்மானம் கோருகிறது.

 

எனினும், இது இறுதித் தீர்மானம் அல்ல. தற்போது இடம்பெற்றுவரும் ஆலோசனைகளையடுத்து இதில் மாற்றங்கள் இடம்பெறலாம். அந்த மாற்றங்களுடன் எதிர்வரும் 13 அல்லது 14 ஆம் திகதி இறுதி வரைவு முன்வைக்கப்படும். அது தொடர்பான விவாதம் 20 ஆம் திகதி நடைபெற்று வாக்களிப்பும் அன்றைய தினமே இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களைச் செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே இருப்பதால் இலங்கை அரசாங்கம் ஜெனீவாவிலும், சர்வதேச அரங்கிலும் தமது இராஜதந்திர நகர்வுகளை விரைவுபடுத்தியிருக்கின்றது.

 

”ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்” மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி வழங்க வேண்டும் என வரைபில் தெரிவிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கைக்குப் பெரும் அதிர்ச்சியைக்கொடுக்கும் விடயமாக உள்ளது. இது தமக்கு ஆபத்தானதாக அமையும் என இலங்கை அரசு அஞ்சுவதற்கும் காரணம் உள்ளது. அமெரிக்காவின் நகல் தீர்மானம் கடுமையானது என மனித உரிமை அமைப்புக்கள் பலவும் குறிப்பிடுவதற்கு இதுதான் காரணம்.

navi-pillai.jpg

இது இலங்கை அரசு எதிர்பார்க்காத ஒன்றல்ல. ஆனால், இறுதிவரையில் வரட்டும் பார்க்கலாம் என்ற நிலையிலிருந்த அரசு இப்போதுதான் களத்தில் இறங்கியிருக்கின்றது. ஒருவகையில் இலங்கை அரசின் நகர்வுகள் காலங்கடந்தவையாகவே உள்ளன. அதேவேளையில் இந்தச் சரத்தை நீக்குவதற்காக எதனைச் செய்வதற்கும் இலங்கை இப்போது தயாராகவுள்ளது.  இதற்கான பதில் ஒன்றை அரசாங்கம் தயாரித்துக்கொண்டிருப்பதாகவும், இந்த விரிவான பதில் எதிர்வரும் தினங்களில் முன்வைக்கப்படலாம் எனவும் தெரிகின்றது.

 

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உப மகாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் எகிப்து என்பன இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தன. அமெரிக்காவின் இரண்டாவது வரைவு எதிர்பார்க்கப்பட்டதைவிட கடுமையானதாகவுள்ளதால் இதனை முறியடிக்க வேண்டும், அல்லது அதன் காரத்தைக் குறைக்க வேண்டும் என்ற நிலையில் இலங்கையும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் ஆதரவையும் பெற்று பிரேரணையில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிகின்றது.

 

மறுபுறத்தில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளுடன் கனடாவும் இணைந்துள்ளது. இந்தப் பிரேரணை போதுமானதல்ல இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்ததாகத் தெரிகின்றது.

 

இதேவேளையில், இந்தப் பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்தும் தயக்கம் காட்டிவருகின்றது. இந்தியப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது, தீர்மானம் வரட்டும், அதன் வாசகங்களைப் பார்த்தபின்னர் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மௌனமாக இருப்பது தமிழகத்தில் சீற்றத்தை அதிகரித்திருக்கின்றது.  இப்போது மாணவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் எனத் தெரிகின்றது.

 

அமெரிக்கா முன்வைத்துள்ள நகல் பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பதும் இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும்தான் இந்த வாரத்தில் எழும்கேள்விகளாக உள்ளன. தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக இறுதியாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டியதாக இருப்பதால் அடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானதாக அமையும்.

 

- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.

 

http://tamilleader.com/?p=7406

Link to comment
Share on other sites

இலங்கைக்கு ஆதரவு திரட்டும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

 

ஜெனிவா இராஜதந்திரச் சமரில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

தொழில்நுட்பக் காரணிகள், காலதாமதம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே பாகிஸ்தானின்
பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்க மறுத்துவிட்டது என அறிய முடிகின்றது.

பாகிஸ்தானின் இறுதிக் கட்ட முயற்சி கைகூடாமையானது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை வாக்களிக்கும் தகுதியை இழக்கின்றன.

எனவே, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளையே இலங்கை இந்த முறை முழுமையாக நம்பியிருக்கின்றது.

இதனடிப்படையிலேயே இலங்கைக்கு ஆதரவாக மேற்படி நாடுகள் ஜெனிவாவில் களமிறங்கி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதன் பிரகாரம் இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் பிரேரணையொன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்மொழிவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசு நல்லிணக்கத்தை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.

எனவே, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும். இலங்கை இறையாண்மைமிக்கதொரு நாடு. எனவே, அதன் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது ஆகிய சரத்துகள் உட்பட மேலும் பல விடயங்கள் பாகிஸ்தானின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன என அறியமுகின்றது.

இருப்பினும், பாகிஸ்தானின் பிரேரணையை மனித உரிமைகள் சபை தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்க மறுத்துவிட்டது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=864741891911642621

Link to comment
Share on other sites

ஓ.. அப்ப இதுதான் இலங்கை வைத்திருந்த கடைசி இராமபாணமா?

 

அல்லது இன்னும் ஏதாவது மறைவில் அவிகிறதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்னும் உந்த மேற்கின் ஊடகங்களை நம்புகிறீர்களா?  ஆச்சரியமாய் இருக்கிறது. 
    • தலைப்பை மாத்திவிடுங்கள் ( டக்கி புலம்பெயர் தமிழர்கள் தலைவருக்கு நன்றிக்கடனாக இருக்கட்டாம் என்று) இல்லாவிட்டால் இப்படியான செய்திகளை வாசிக்கமாட்டேன்
    • "மாயா"     செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.   பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.   ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.   நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!   என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.   முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.   அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.   'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!   கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."   என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!   ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?   அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.   நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.     "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"   "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"   "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"   "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?"   "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"     நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.   கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!   அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'   இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.   பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !   "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து"   "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது"   "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?"   "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.