Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் – சட்டக் கல்லூரி மாணவி மோனிசா நேர்காணல் (ஒலி)

Featured Replies

  • தொடங்கியவர்

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறி இல்லாது, கடும் கொசுக்கடிகளுக்கு நடுவே, உண்ணாநோன்பு இருக்கும் 8 மாணவர்களும், 1 மாணவியும், தமிழ் உணர்வாளர்களும் இரவைக் கழித்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உறுதியாக இருக்கும் அவர், விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார்.

இவர்களுக்குத் துணை நிற்ப்போம். இவர்கள் மனதில் இருக்கும் உணர்வுத் தீ அணையாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.

(thanks to the facebook page : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?)

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் அவர் என்னமோ ஆந்திராவிலிருந்து சென்னைக்கு படிக்க வந்த தெலுங்கர் பெண் என்று கூறியுள்ளீர்கள்... இது தவறானது...

 

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழர்களுக்காக போராடும் இப்பெண்ணை தெலுங்கர் என்று கூறுவது அந்நியப்படுத்துவது சரியானதல்ல....

 

திராவிடர் பெண் என்று சொல்வதே பொறுத்தமானது....

 

// தம்பி வே.பிரபாகரன் எப்பொழுதும் தனது உரையில் "தமிழ் பேசும் உறவுகளே" என்றுதான் கூறுவார்...//

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயே...

போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோர்க்கும் நன்றிகள்; வாழ்த்துகள். பரந்துபட்ட எழுச்சி, எனவே தமிழ்நாட்டுச் சகோதரர்கள்

எல்லோரும் ஒன்றுபடுங்கள்! எண்ணிக்கை அதிகரிக்க பலம் அதிகரிக்கும்.அப்போது காவற்துறையினரோ பிறரோ உள்நுழைந்து

குழப்பவோ, தடுக்கவோ இயலாமல் போய்விடும். வெற்றி கிடைக்கும்.



எழுச்சி பெற்றுள்ள மாணவர்கள் போராட்டம்

 

http://puthiyathalaimurai.tv/video-gallery?video=1738

 

 

 

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்

Edited by மகம்

அவர் எங்கும் பிறந்திருக்கலாம். எந்த இனத்தவராகவும் இருக்கலாம். தமிழ் நாட்டு மாணவர்கள் எல்லோருக்கும் நாம் நன்றிக்கடமை பட்டிருந்தாலும், தான் சில மேலதிக சிரமங்களை அனுபவித்து மனிதநேயத்திற்காக போராட வெளிக்கிட்ட இந்த மாணவிக்கு பிரத்தியேக நன்றி சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எமது நன்றிகள்..! தமிழகத்தில் பூட்டைத் திறக்க முயற்சிக்கிறார்கள்.. நல்லபடியாக நடக்கட்டும்..!!

வைகோவும் தெலுங்குதான். வீரபாண்டிய கட்டப்பொம்மனும் தெலுங்குதான். சுப்பிரமணியசுவாமியும், தங்கபாலுவும்தான் தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
சட்டக் கல்லூரி மாணவி மோனிசா உட்பட போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோர்க்கும் நன்றிகள் ....
 
தமிழர்களாக இருந்தால் மட்டும் போதாது தமிழ் உணர்வாளர்களாகவும் இருக்க வேண்டும் தமிழீழத்தில் கருணா, பிள்ளையான், டக்கிலஸ், KP என்று தமிழர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் தங்கபாலு ஞானசேகரன் போன்ற தமிழர்களும் இருக்கின்றார்கள் என்ன பிரயோசனம் ?   
தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்

           
         

பதிவு செய்த நாள் - மார்ச் 12, 2013  at   10:27:22 P


           

இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை கோரி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும்


போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 2ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 13பேரும், புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேரும் இலங்கைக்கு எதிராக


உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு

 

இடங்களில் மாணவர்கள் இலங்கைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சையில் சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் போது, இலங்கை அரசுக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


ரயில் மறியல்


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரண்ட மாணவர்கள், மங்களூர் ரயிலை மறித்து போராட்டம் மேற்கொண்டனர்.


இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


மாணவர்களின் போராட்டத்தால், மங்களூர் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இலங்கை அரசைக் கண்டித்தும், தனித்

 

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி


உள்ளனர்.சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் நடக்கும்இந்தப் போராட்டத்தில், ஏழு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


தங்களின் நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை தொடரப் போவதாக மாணவர்கள்அறிவித்துள்ளனர்.


திராவிடர் கழகத்தினர், நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பில்லாமல், போராட்டத்தை நடத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


இந்தப் போராட்டம் விரைவில் விரிவடையும் என்றும், மேலும் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும்


சட்டக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.


http://puthiyathalaimurai.tv/student-protests-across-tamil-nadu-intensify-against-us-resolution

 

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்

திருச்சியில் மாணவர்கள் மீது தடியடி... மாணவ

சமுதாயமே அனைத்து மாணவர்களும் போராட்ட களத்திற்கு வர வேண்டிய சூழல்

இது...திரும்பி அடிப்போம்.....

நமது எதிரிகளை பின்னங்கால்கள் பிடறியில் அடிக்கும் வரை ஓட வைப்போம்...

தமிழ் நாட்டுப் பொலிசிடம் தி.மு.க ஆட்சியை திரும்ப கொண்டுவரவேண்டாம் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறோம். :(

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தோழர் அவர் என்னமோ ஆந்திராவிலிருந்து சென்னைக்கு படிக்க வந்த தெலுங்கர் பெண் என்று கூறியுள்ளீர்கள்... இது தவறானது...

 

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழர்களுக்காக போராடும் இப்பெண்ணை தெலுங்கர் என்று கூறுவது அந்நியப்படுத்துவது சரியானதல்ல....

 

திராவிடர் பெண் என்று சொல்வதே பொறுத்தமானது....

 

// தம்பி வே.பிரபாகரன் எப்பொழுதும் தனது உரையில் "தமிழ் பேசும் உறவுகளே" என்றுதான் கூறுவார்...//

 

நான் இங்கே தவறாக ஏதும் சொல்லவில்லை. அவரைப் பாராட்டும்விதமாகத்தான் முகப்புப் புத்தகத்தில் இருந்த அத் தகவலை இங்கே பதிந்தேன். நான் "நாம் தமிழர்" அல்ல தோழரே வேற்றுமை பார்ப்பதற்கு.

தொடர்ச்சியான போராட்ட நிகழ்வுகளின் காரணமாக பெரும் நிதி சிக்கலில் இருக்கிறோம். மாபெரும் திரட்டலை நிகழ்த்த பெரும் நிதி உதவி தேவைப்படுகிறது. விருப்பமுடைய தோழர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கோருகிறோம். ஓரிரு நாட்களில் இதை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். (தமிழகத் தமிழர்களிடம் மட்டும் கோருகிறோம். புலம்பெயர் நண்பர்கள் மன்னிக்க)

 

Payee: P. A. PRAVEEN KUMAR
Payee Account Number: 129601000017929
Bank Name: INDIAN OVERSEAS BANK ,
Branch : velachery, chennai
IFSC code : IOBA 0001296

 

முகநூல் - திருமுருகன் காந்தி ஊடாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.