Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையே தீக்கு இரையாக்கிக் கொண்ட இஸ்லாமிய சகோதரனே..! இன உணர்வாளன் உனக்கு கண்ணீருடன் வணக்கம்..!! உன்னைப் பிரிந்து துயருறும் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

மதுரையில் நேற்று முன்தினம் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முஸ்லிம் சகோதரர் !!!!

கலங்க வைத்து விட்டாய் தோழா - வார்த்தைக்கு வார்த்தை சிறுபான்மையினர் என்று சொன்னார்கள் ...நீங்கள் தான் உண்மையில் பெரும்பான்மையினர் !!!!

என்னால் என்ன எழுதுவதென்ற தெரியவில்லை - உங்கள் கனவு நிறைவேறும் தமிழ் ஈழம் மலரும் ... என்றும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள் !!!!

via - We Support Eezham Tamils

 

https://www.facebook.com/photo.php?fbid=577168638968057&set=a.212371062114485.58409.211901605494764&type=1&theater

 

நன்றி அண்ணா தகவலுக்கு. நீங்கள் சுட்டிக்காட்டிய இணைப்பிலுள்ள செய்தி இதுதான். ஆனால் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் இன்னும் தெரியாது.

 

531603_577168638968057_577365020_n.jpg

 

http://www.facebook.com/photo.php?fbid=577168638968057&set=a.212371062114485.58409.211901605494764&type=1&permPage=1

  • கருத்துக்கள உறவுகள்

girlssssssss.jpg
 
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எச்சரிக்கை..!

நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இலங்கை அரசை கண்டித்து பதாதைகள் மற்றும் படங்களுடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து பேராட்டம் நடத்தினர்.

இந்தியாவே கட்சத் தீவை திரும்பப்பெறு, இந்தியாவே இலங்கை தூதரகத்தை உடனே அகற்றிடு, தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை உனக்கு நட்பு நாடா? தமிழீழத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்து, என் பது போன்ற பேனர்களை தூக்கிப்பிடித்து கோஷமிட்டதுடன் இந்தியாவே இலங்கை வேண்டுமா தமிழ்நாடு வேண்டுமா என்பது போன்ற ஆவேஷ முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

போராட்டத்திற்கு மாணவர் பேரவை தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். நிதி செயலாளர் மகராஜன் முன்னிலை வகித்தனர். ”600 மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளோம். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்தான். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவார்கள்” என்று போராடிய மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
facebook


தமிழருக்காக
ஒன்றிணைந்து போராடி வரும் அனைவருக்கும் யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தின்
பணிவான நன்றிகள் Salute tamil students..... coming soon Tamil elam !

 

jaffnastudent.jpg

  • கருத்துக்கள உறவுகள்

dog%20rajapaksa%20.jpg



chennai%20protest%202.jpg



refugee%20protest%201.jpg



student%20protest%2014.jpg

மாணவர் போராட்டத்தால் மதுரை மாநகரம் ஸ்தம்பித்தது.


தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக அனைத்து கல்லூரி
மாணவர்களின் தொடர்முழக்க போராட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன்
தொடர்ச்சியாக பெரியார் பேருந்து நிலையம் நோக்கி பெரும் பேரணி நடைபெற்று
வருகிறது.

போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடை
பெற்று வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் ஆர்வமாக
பேரணியில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

madurai.jpg

 

Edited by சகானா


ராஜபக்ஷேவுக்கு தூக்கு

கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள், நாகர்கோயில் முதன்மை நீதிமன்ற வாயிலில், ராஜபக்ஷே
உருவபொம்மையை தூக்கில் தொங்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
rajapaksha.gif

 

rajapaksha.gif

rajapaksha.gifrajapaksha.jpg

நாளை

விருத்தாசலத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , கடலூர்

மாவட்டம் சார்பாக கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இருந்து கருப்பு துணியால்

கண்ணை கட்டிக்கொண்டு 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்

பேரணியாக புறப்பட்டு விருத்தாசலம் நகரத்தின் முக்கிய இடங்களுக்கு சென்று

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் , இதில் அந்த பகுதியில் உள்ள

இணையதள நண்பர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொள்ள

வேண்டுகிறோம்

தொடர்பிற்கு :-

செல்வமணி : 8015107884

நித்தியானந்தம் : 96006 51091

சார்லஸ் : 9698969277

நண்பர்களே!
நமது இளைய சமுதாயம் ஒரு புதிய விடியலை தேடி போராடி கொண்டிருக்கும் போது,
நாமும் நம் பங்கிற்கு ஏன் போராட கூடாது ?. போராட்டம் என்றால் இது
மற்றுமொரு வகை , அமைதியான முறையில் நமது ஆதங்கத்தை ஐ நா வுக்கு
தெரிவிப்போம்.ஐ நா மட்டுமல்ல ஏனைய ஆட்சியாளர்களு
க்கும் தெரிவிப்போம்.

இதோ
இங்கே குறிபிட்டுள்ள இணைய இணைப்பினை சொடுக்கி புதிய பக்கத்தில் தங்களது
முழு தகவல்கள் முதல் பெயர், தந்தை பெயர் , மின் அஞ்சல் முகவரி மற்றும்
விண்ணப்பத்தின் நோக்கம் " ஏன் தமிழ் ஈழம் மலர வேண்டும் ? " உங்களது கருத்தை
பதிவு செய்யுங்கள். சிறு துளி பேரு வெள்ளம் என்றும் உங்கள் ஆதரவுடன் -
தமிழர் வரலாறு


http://www.change.org/en-IN/petitions/urge-united-nation-to-conduct-referendum-for-tamil-eelam


Urge United Nation to Conduct Referendum for Tamil Eelam

 

-முகநூல்-
 

நண்பர்களே!

நமது இளைய சமுதாயம் ஒரு புதிய விடியலை தேடி போராடி கொண்டிருக்கும் போது,

நாமும் நம் பங்கிற்கு ஏன் போராட கூடாது ?. போராட்டம் என்றால் இது

மற்றுமொரு வகை , அமைதியான முறையில் நமது ஆதங்கத்தை ஐ நா வுக்கு

தெரிவிப்போம்.ஐ நா மட்டுமல்ல ஏனைய ஆட்சியாளர்களுக்கும் தெரிவிப்போம்.

இதோ

இங்கே குறிபிட்டுள்ள இணைய இணைப்பினை சொடுக்கி புதிய பக்கத்தில் தங்களது

முழு தகவல்கள் முதல் பெயர், தந்தை பெயர் , மின் அஞ்சல் முகவரி மற்றும்

விண்ணப்பத்தின் நோக்கம் " ஏன் தமிழ் ஈழம் மலர வேண்டும் ? " உங்களது கருத்தை

பதிவு செய்யுங்கள். சிறு துளி பேரு வெள்ளம் என்றும் உங்கள் ஆதரவுடன் -

தமிழர் வரலாறு

http://www.change.org/en-IN/petitions/urge-united-nation-to-conduct-referendum-for-tamil-eelam

Urge United Nation to Conduct Referendum for Tamil Eelam

 

-முகநூல்-

 

 

ஒருவருடைய முகவரி தொட்டு தனிப்பட்ட விடயங்களை கோரும் இவ்வகையான தளங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதும் அவசியம்.  எதேச்சாதிகார அரசுகள் கூட தமக்கு எதிரானவர்களின் விபரங்களை திரட்டுவதற்கு இவ்வாறான தளங்களையும் உருவாக்கக்கூடிய சந்தர்பங்கள் இருக்கும் போது தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்கும் போது கூடிய கவனம் தேவை. யாழ் இணையத்தில் பதிவிடப்பட்ட செய்தி / தகவல் என்பதற்காக விபரங்களைக் கொடுக்கும் போது அலட்சியமாக இருக்க வேண்டாம்.

 

நன்றி.

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஆதரிக்கமாட்டோம் - பாஜக, சமாஜ்வாடி #தகவல்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்

-சீ.தினேஷ் மற்றும் கோ.திவ்யா ஆகியோரின் கூட்டறிக்கை:-

இன்று (20/03/2013) தமிழகம் முழுவதும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர்

கூட்டமைப்பு"-னால் முன்னெடுக்கப்பட்ட "ஒரு கோடி மாணவர்கள் தொடர்

முழக்கப்போராட்டம்" சென்னை மெரினா காந்தி சிலை தொடங்கி தமிழகத்தின் அனைத்து

மாவட்டங்களிலும் பேரெழுச்சியோடு நடைபெற்றது.

இதில் தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள்,வணிகர்கள்

,வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பேராதரவு தந்தது, மாணவர்

கூட்டமைப்புக்கு பெரும் உத்வேகத்தை தந்துள்ளது.மேலும் அனைத்து அரசியல்

இயக்க தலைவர்களும் ,தமிழ்தேசிய அமைப்புகளும்,முற்போக்கு இயக்கங்களும்

மற்றும் திரைத்துறையினரும் எங்கள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவினை

தந்துள்ளனர்.அவர்களுக்கும் எங்களது நன்றியினை கூட்டமைப்பு சார்பாக

தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் அடுத்தக்கட்ட போராட்டங்களை

தமிழகத்திலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவ பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து

விரைவில் இக்கூட்டமைப்பு அறிவிக்க இருக்கிறது.இப்போராட்டம் வெற்றிபெற உதவிய

தங்கள் ஊடகத்திற்கு/பத்திரிகைக்கு அனைத்துக்கல்லூரி மாணவர்களின் சார்பாக

நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். நன்றி.

இப்படிக்கு,

ஒருங்கிணைப்பாளர்கள்,

சீ.தினேஷ்

(9791162911) )

-முகநூல்-

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நாமக்கல்லில் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் சாலை மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

65461534.jpg

56789755.jpg

Edited by சகானா

ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம்
தமிழ் நாட்டில் மாணவர்களால் முன்நெடுக்கப்பட்ட
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒளிப்பதிவு
ஒன்றை ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் ( lift)
செய்ய உள்ளது.
முடியுமான வரை அனைத்து கலைஞர்களையும்
ஒன்று கூட்டி எமது நன்றிகளையும் ஆதரவையும்
தெரிவிப்பதே இவ் ஒளிபதிவின் நோக்கமாகும்
அந்த வகையில் ஏனைய கலைஞர்களுக்கும்
இவ் விடயத்தை தெரியப்படுத்தி பங்கு கொள்ளுமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் .

ஒளிப்பதிவு நடை பெறும் நாள்
20/03/03
புதன் மாலை
15:00 மணி தொடக்கம் 17:00 வரை

மேலதிக விபரங்கட்கு :
06 51 87 31 46 சதாபிரணவன்
06 16 85 45 98 சுலச்சன்
நன்றி
ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் (lift)



 

Edited by சகானா

இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் !

எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய

மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால்

சென்னை பாண்டி சாலை சம்பித்தது

59445860.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dinaithal.20-03_68.jpgசென்னை தமிழர் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மாபெரும் மாணவர் தொடர்முழக்க போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது . ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் , தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு கோரியும் , இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கோரியும் இன்று மாணவர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . இந்த போராட்டதிற்கு பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர்கள் குவித்தனர் . தொடக்கத்தில் குறைவாக இருந்த மாணவர்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல பெரும் கூட்டமாக ஒன்றிணைந்தனர் .

இதை பார்த்த காவல் துறையே மிரண்டனர் . பின்பு மாநிலக் கல்லூரி மாவர்கள் சாலையில் பெரும் திரளாக ஓடி வந்து காந்தி சிலை அருகே அமர்ந்து சாலை மறியல் செய்தனர் . அவர்களை காவல்துறை சமாதனப் படுத்தி கடற்கரையில் உள்ள ஒன்று கூடலுக்கு அனுப்பி வைத்தனர் . அதன் பிறகு தமிழக முதல்வரும் அந்த வழியாக வாகனத்தில் செல்லும் போது மாணவர் போராட்டத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்தபடி சென்றார் . மாணவர்கள் கடும் வெயிலிலும் தொடர்ந்து முழக்கமிட்ட வாறு போராட்டம் நடத்தினர் . சோர்வுற்ற மாணவர்களுக்கு மற்ற சமூக ஆர்வலர்கள் நீர் , மோர் போன்றவற்றை கொடுத்து உதவினர் . உணவு நீர் இல்லாமல் பல மாணவர்கள் சுடும் மணலில் உட்கார்ந்து போராட்டடம் நடத்தியது அவர்களின் இன உணர்வையும் ஈழ விடுதலை வேட்கையையும் காட்டியது . இம்மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் அரசியல் கட்சி சாராத திரு பழ நெடுமாறன் அய்யா , இயக்குனர் புகழேந்தி , கௌதமன், கவிஞர் தாமரை போன்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் . மாணவர் எழுச்சி சிறுதளவும் குறையாமல் இறுதி வரை இருந்தது . தமிழீழம் அமையாமல் மாணவர் நாங்கள் ஓயமாட்டோம் என்று மாணவர்கள் சூளுரைத்தனர்.

 

இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் !

எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சென்னை பாண்டி சாலை சம்பித்தது

 
576194_596143283731034_1574004978_n.jpg
 
 

 

-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by சகானா

  சாந்தோம் கதோலிக் திருச்சபை சார்பாக முன்னூறுக்கும் மேற்ப்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்

------------------------------------

 

கோவையில்
இன்று Dr.NGP கலை அறிவியல் "தனியார்" கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில்
ஆர்ப்பாட்டம். பின்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் வழிகாட்டுதல் படி GPT
கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி மாணவர்கள் ஒரே நாளில் இணைந்து
விமான நிலையத்தை முற்றுகையிட்டு 150 பேர் கைது.

 

---------------------------

இன்று
திருநெல்வேலியில் நடைபெற்றுவரும் தொடர் முழக்க போராட்டத்தின்போது இவர்கள்
ஒலி வாக்கியை(mike) கையில் பிடித்து முழக்கம் மிட்டனர் முடிவில் ஈழம்
மலரும் ஈழம் மலரும் என்று முழக்கத்தை முடித்தனர் ஆம் அதில் ஐயமில்லை நாளைய
தலைமுறையும் இணைந்த பெருமிதத்தில் கூறுகிறோம்

 

-------------------------

நாளை
காலை எட்டு மணியளவில் பள்ளிக்கரணையில் உள்ள ஆசான் கலைக்கல்லூரி மாணவர்கள்
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்கள்,
#tamilnaduhungerstrike அணைத்து நண்பர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து
கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

தொடர்புக்கு
தோழர் வெங்கட்: 9840718716

------------------

-முகநூல் -

Edited by சகானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

544205_596175030394526_1735019480_n.jpg

பழனி

Engineering Students / போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அவர்களை வழிநடத்த,

போராட்டத்தை ஒழுங்குபடுத்த சரியான தலைமை இல்லாமல் தவிக்கின்றனர் உடனடியாக

அவர்களைத் தொடர்புகொண்டு, ஆவன செய்யுங்கள் நண்பர்களே/ மாணவர்களே

Tel: 8940254065 thamil chelvan

-----------------------

புதுக்கோட்டை

அருகே உள்ள கைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில்

மாணவிகளை போராட்டம் நடத்த அனுமதி மறுக்க படுகிறது மேலும் மாணவிகளை மிரட்டி

கல்லூரி நடைபெற்று கொண்டிருக்கிறது.

உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும்.

தொலைபேசி எண்-04322-20678/22010

----------------------------

மாணவர்கள்

போராட்டக் குழு சார்பாக நாளை காலை 11 மணி அளவில் பத்தாயிரம் மாணவர்கள்

மனித சங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே

நடைபெரும், சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் தவறாமல்

பங்கெற்கவும்

--------------------------------

இலண்டன்

அமெரிக்கத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்....முழக்கம் விண்ணை முட்டுகிறது.

1.WE WANT TAMIL EELAM 2.OUR LEADER PRABAKARAN 3.WE WANT INTERNATONAL

INVESTIGATION 4.WE WANT OUR LAND 5.WE SUPPORT TAMILNADU FRIENDS 6.UN

STOP SUPPORTING GENOCIDE 7.US STOP SUPPORTING GENOSIDE.

---------------------

 

- முகநூல் -

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நன்றி உறவுகளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா மீது ஜ.நா நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ் நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நெதர்லாந்து இளையோர்கள் போராட்டம்

 

v-maanavarpooradadamhollend%20%2811%29.j

photo.gifஇன்று 20-03-2013 புதன்கிழமை நெதர்லாந்தில் டென்காக் என்னுமிடத்தில் பாராளுமன்றத்தின் முன்பாக நெதர்லாந்து தமிழ் இளையோர் சகாப்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில்  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளையோர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள்மேல் சிங்களஅரசு கட்டவிழ்த்து விட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஜக்கிய நாடுகள் சபை தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கு வழிவகுக்கக் கோரியும் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள்.v-maanavarpooradadamhollend%20%281%29.jpv-maanavarpooradadamhollend%20%282%29.jpv-maanavarpooradadamhollend%20%283%29.jpv-maanavarpooradadamhollend%20%284%29.jpv-maanavarpooradadamhollend%20%285%29.jpv-maanavarpooradadamhollend%20%286%29.jpv-maanavarpooradadamhollend%20%287%29.jpv-maanavarpooradadamhollend%20%289%29.jpv-maanavarpooradadamhollend%20%288%29.jpv-maanavarpooradadamhollend%20%2810%29.j

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19692:2013-03-20-19-50-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.