Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக உலகத்தமிழர்கள் கொதிப்பு - அவுஸ்திரேலியாவிலும் இளையோர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

australia%20flag-270113-seithy-150.jpg

சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் காணப்படும் வலுவற்ற வாசகங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திலே குதித்துள்ள தமிழ் நாட்டு மாணவர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா இளையோர்கள் 21.03.2013 வியாழக்கிழமை பி.ப 6.00 மணிக்கு Prince Alfred Park, Parramatta எனும் இடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக அடிப்படை உரிமையும் நீதியும் வேண்டிப் போராடும் தமிழ் நாட்டு மாணவருடன் நாமும் தோளோடு தோள் சேர்ந்துள்ளோம். என்பதை எமது உண்ணாவிரதப் போராட்டம் உணர்த்துவதாக இருக்கின்றது. சிறிலங்காவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் மேலாக அது ஓர் இன அழிப்பு நிகழ்வு என்றே நாம் கூறுகின்றோம்.

  

ஐக்கிய நாடுகள் UNHCR தனது அறிக்கையிலே இப்பொழுது சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருப்பது படிப்படியான இன அழிப்பு என்று குறிப்பிடவில்லை என தமிழ் நாட்டு மக்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். உண்ணாவிரதப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ள தமிழ் நாட்டு மாணவர்களின் கோரிக்கைகளை நாங்களும் ஆதரிக்கின்றோம்.

அவையாவன

 

1 ஈழத்தமிழர்களின் இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் "சர்வதேச சுயாதீன விசாரணை"

 

2 தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

 

3 ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் சிறிலங்கா அரசு மீது 'பொருளாதாரத் தடை விதித்தல்.

 

இக் கோரிக்கைகளோடு நாமும் எமது கோரிக்கைகளை இணைத்துக் கொள்கிறோம்.

 

இராணுவ அதிகாரம் மூலம், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலே சிங்கள மக்களைக் குடியேற்றி, தமிழ்க் கிராமங்களின் பூர்வீகப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழ் அடையாளங்களை அழித்து, எல்லைகளை மாற்றி அவற்றை சிங்கள பௌத்த நிலங்களாக மாற்றுவதையும் 'இன அழிப்பு' நடவடிக்கை என்றே உறுதி படக் கூறுகின்றோம். சிறிலங்கா அரசு நியமித்த (LLRC) கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையானது, வெறும் கண்துடைப்பே அன்றி மனிதநேயத்துடன் தயாரிக்கப்பட்டதல்ல என்று கூறவிரும்புகிறோம். இன்றும் சிறிலங்காவிலே தொடரும் வன்முறைகளான, ஆள்கடத்தல், கொலை, பாலியல் வல்லுறவு பொலீஸ் பாதுகாவலர், இராணுவத்தினரின், மனித உரிமை அத்து மீறல்கள், மற்றும் சிறிலங்கா கடற்படையினர் தமிழ் நாட்டு மீனவர்களைக் கைது செய்தல், கொலை அச்சுறுத்தல் விடுத்தல், கொலை செய்தல் போன்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுதல் ஆகியன நடைபெறுகின்றன.

 

நீதி நியாயத்தை பின்பற்றி இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றி, குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பதில் சிறிலங்கா அரசு அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது. சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் இன அழிப்பு நடவடிக்கையை, சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதை அவுஸ்திரேலியா இளையோர் அமைப்பு கூற முன்வருகின்றோம். தமிழ் நாட்டு மாணவர்களுடன் கூட்டாக இணைந்து இந்த உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், இந்திய மத்திய அரசையும், ஐக்கிய நாடுகள் சபையையும் இந்த இன அழிப்பு நடவடிக்கையை நிறுத்த சுதந்திரமான ஒரு 'வாக்கெடுப்பை' நடத்துமாறு வேண்டிநிற்கின்றோம்.

 

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

 

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78585&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்



Australian Tamil Youth Fast-in-Solidarity with Students in Tamil Nadu, India.

தமிழ் நாட்டு மாணவருடன் ஒன்றிணைந்து உண்ணா விரதத்திலே ஈடுபடும் அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு.

 

The Tamil youths in Australia
will commence a 24-hour fast on Thursday 21 March 2013, 6pm at Prince
Alfred Park (Parramatta, NSW) to show our solidarity with our brothers
and sisters in Tamil Nadu, India who have embarked on a hunger-strike in
protest of the weak wording of the US-led draft resolution on Sri Lanka
at 22nd UN Human Rights Council (HRC) Session.


சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கப் படும்
மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் காணப்படும் வலுவற்ற வாசகங்களை
எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திலே குதித்துள்ள தமிழ் நாட்டு
மாணவர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா இளையோர்கள் 21.03.2013 வெள்ளிக்கிழமை
பி.பகல் 6.00 மணிக்கு Prince Alfred Park, Parramatta எனும் இடத்தில்
உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள்.

 

Our Fast-in-Solidarity is
to express that we stand firm with them on the fundamental principle of
justice and an independent homeland for the Eelam Tamil people.


சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக அடிப்படை உரிமையும் நீதியும் வேண்டிப்
போராடும் தமிழ் நாட்டு மாணவருடன் நாமும் தோளோடு தோள் சேர்ந்துள்ளோம்.
என்பதை எமது உண்ணாவிரதப் போராட்டம் உணர்த்துவதாக இருக்கின்றது.

We
agree with them that the events unfolding in Sri Lanka are far more
sinister than war crimes and violations of human rights, but a
systematic coordinated act of genocide.


சிறிலங்காவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் மனித
உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் மேலாக அது ஓர் இன அழிப்பு
நிகழ்வு என்றே நாம் கூறுகின்றோம்.

We
join in their criticisms of the UN HRC draft resolution on Sri Lanka
and agree that it fails to acknowledge and address the ongoing and
systemic oppression and genocide of the Eelam Tamil people.


ஐக்கிய நாடுகள் UNHCR தனது அறிக்கையிலே இப்பொழுது சிறிலங்காவில்
நடைபெற்றுக்கொண்டிருப்பது படிப்படியான இன அழிப்பு என்று குறிப்பிடவில்லை
என்று தமிழ் நாட்டு மக்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

 

We support the demands set out by the Tamil students currently on hunger-strike in Tamil Nadu, which include:
 

  • An independent International inquiry into alleged War Crimes monitored by the UN;
  • A
    UN-led referendum (amongst the Tamil Diaspora and the Tamil people
    living in the Northern and Eastern provinces of the island of Sri Lanka)
    for an independent Tamil homeland;
  • Economic sanctions imposed by UN-members states against Sri Lanka.

உண்ணாவிரதப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ள தமிழ் நாட்டு மாணவர்களின் கோரிக்கைகளை நாங்களும் ஆதரிக்கின்றோம்.

அவையாவன
 

  1. ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சுதந்திரமான ஒரு “யுத்த மீறல் விசாரணை”
  2. சுதந்திரமான தமிழர் தாய்நிலம்  ஒன்றை அமைப்பதற்காக ஐக்கிய நாடுகள்
    சபையின் மேற்பார்வையில், புலம் பெயர் மக்களிடையேயும், வடக்குக் கிழக்கு
    மாகாண மக்களின் மத்தியிலும் “வாக்கெடுப்பு” ஒன்றை நடத்துதல்.
  3. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் சிறிலங்கா அரசு மீது “பொருளாதாரத் தடை விதித்தல்.


In
addition, we find the accelerated militarisation and Sinhalisation of
the Tamil homeland, including the changing of names of Tamil villages to
Sinhala names, destruction of Tamil historical landmarks and
installation of Sinhala-Buddhist structures in Tamil areas is an act by
the Sri Lankan State of structural genocide of the Tamil people.


இக் கோரிக்கைகளோடு நாமும் எமது கோரிக்கைகளை இணைந்து கொள்கிறோம். இராணுவ
அதிகாரம் மூலம், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலே சிங்கள மக்களைக்
குடியேற்றி, தமிழ்க் கிராமங்களின் பூர்வீகப் பெயர்களை சிங்களப் பெயர்களாக
மாற்றி சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழ் அடையாளங்களை அழித்து, எல்லைகளை
மாற்றி அவற்றை சிங்கள பௌத்த நிலங்களாக மாற்றுவதையும் “இன அழிப்பு”
நடவடிக்கை என்றே உறுதி படக் கூறுகின்றோம்.

We believe the Sri Lankan government's own internal report, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC),
released more than a year ago, to be a whitewash and its
recommendations to be lacking in genuineness. Instead, there continues
to be reports of ongoing disappearances, torture and sexual abuse by
police and military, and deaths in custody of Eelam Tamils, and the
continuing executions and murder by Sri Lankan Navy of Tamil fishermen
from Tamil Nadu. This clearly indicates that Sri Lanka's rule of law and
its mechanisms to protect civilians are fraught, and that Sri Lanka is
clearly incapable of conducting any just inquiry into war crimes or any
crimes against humanity.


சிறிலங்கா அரசு நியமித்த (LLRC) கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்
குழு சமர்ப்பித்த அறிக்கையானது, வெறும் கண்துடைப்பே அன்றி மனிதநேயத்துடன்
தயாரிக்கப்பட்டதல்ல என்று கூறவிரும்புகிறோம். இன்றும் சிறிலங்காவிலே
தொடரும் வன்முறைகளான, ஆள்கடத்தல், கொலை, பாலியல் வல்லுறவு பொலீஸ்
பாதுகாவலர், இராணுவத்தினரின், மனித உரிமை அத்து மீறல்கள், மற்றும்
சிறிலங்கா கடற்படையினர் தமிழ் நாட்டு மீனவர்களைக் கைது செய்தல், கொலை
அச்சுறுத்தல் விடுத்தல், கொலை செய்தல் போன்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்து
விடுதல் ஆகியன நடைபெறுகின்றன.

நீதி நியாயத்தை பின்பற்றி இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றி, குற்றம்
செய்பவர்களைத் தண்டிப்பதில் சிறிலங்கா அரசு அக்கரை காட்டவில்லை என்பது
தெளிவாகிறது.

We, the Australian Tamil Youth
believe that no longer can the international community allow Sri Lanka
to continue its genocidal campaign against the Eelam Tamil people.


சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் இன அழிப்பு
நடவடிக்கையை, சர்வதேச  சமூகம் இனியும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது
என்பதை அவுஸ்திரேலியா இளையோர் அமைப்பு கூற முன்வருகின்றோம்.

We, through our Fast-in-Solidarity,
unite with our Tamil brethren in Tamil Nadu to call on India and other
UN member states to support the need for an international independent
investigation into the war crimes and crimes against humanity in Sri
Lanka, and a UN-led Referendum on Tamil Eelam.


தமிழ் நாட்டு மாணவர்களுடன் கூட்டாக இணைந்து இந்த உண்ணாவிரதத்திற்கு
ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், இந்திய மத்திய அரசையும், ஐக்கிய நாடுகள்
சபையையும் இந்த இன அழிப்பு நடவடிக்கையை
நிறுத்த சுதந்திரமான ஒரு  “வாக்கெடுப்பை” நடத்துமாறு வேண்டிநிற்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Thamiliarin Thaaham Thamieela Thayagam!

The yearning of the Tamil people is that of a Eelam Tamil homeland.

Endorsed by,

பங்கேற்கும் அமைப்புக்கள்:

 

Tamil Youth Organisation, Australia

Voice of Tamils, Australia

University of Sydney Tamil Society

University of Macquarie Tamil Society

University of Western Sydney Tamil Society

University of Technology Sydney Tamil Society

University of New South Wales Tamil Society

 

(VIDEO) Sydney Tamil youths in solidarity with the student revolution in Tamil Nadu.

Tamil: http://youtu.be/qgsvPdrNzl0   English: http://youtu.be/1oi4gOut4vg

---

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மாணவருடன் ஒன்றிணைந்து உண்ணா விரத்திலே ஈடுபடும் அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு.

        

        

        

            

DSC_0161-300x200.jpgசிறிலங்கா

அரசுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கப் படும் மனித உரிமை

மீறல்கள் பற்றிய அறிக்கையில் காணப்படும் வலுவற்ற வாசகங்களை எதிர்த்து

உண்ணாவிரதப் போராட்டத்திலே குதித்துள்ள தமிழ் நாட்டு மாணவர்களுடன் இணைந்து

அவுஸ்திரேலியா இளையோர்கள் 21.03.2013 இன்று வியாழக்கிழமை பி.பகல் 6.00

மணிக்கு prince alfred parramatta எனும் இடத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக அடிப்படை உரிமையும் நீதியும்

வேண்டிப் போராடும் தமிழ் நாட்டு மாணவருடன் நாமும் தோளோடு தோள்

சேர்ந்துள்ளோம். என்பதை இவர்களின் உண்ணாவிரத்தில் காணக்ககூயதாக

அமைத்திருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ள தமிழ் நாட்டு மாணவர்களின்

கோரிக்கைகளை இன் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மக்களும் மாணவர்களும் தமிழ்

அமைப்புக்களும் ஆதரிக்கின்றார்கள்.

இவ் உண்ணாவிரதப் போராட்டம் இன்று முதல் நாளாக ஆரம்பித்து நாளையும் இந்தப் போராட்டம் தொடரும் என்பதை அறியத்தருகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

DSC_0155-1024x682.jpg

DSC_0161-1024x682.jpg

DSC_0170-1024x682.jpg

DSC_0174-1024x682.jpg

 

-http://eelampresse.com/?p=18787

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க அவுச்திரேலிய இளையோர்...

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய இளையோருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இளங் குருத்துக்களுக்கு நன்றிகளும், நல்லாசிகளும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.