Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிஞ்சுமனம்

Featured Replies

tenterheart3lu.jpg

"குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர்

செலுத்த வேண்டும்.............."

பிஞ்சுமனம்

Tender heart

-குறும்படம்

நடிப்பு:

காவ்யா சிவன்

சிறீதர் ஐயர்

தீபா ராஜகோபால்

திரைக்குப் பின்னால்:

சிறீகாந் மீனாட்சி

சங்கரபாண்டி சொர்ணம்

வெங்கடேஸ் கிருஸ்ணசாமி

எம்.பீ.சிவா

மற்றும்

அஜீவன்

எண்ணம் - எழுத்து - இயக்கம்

தீபா ராஜகோபால்

கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில்

நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர்

பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம்.

குறும்படத்தை பார்ப்பதற்கு:-

http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49

or

http://video.google.com/videoplay?docid=-4...480155403131481

நன்றி!

அஜீவன்

ajeevan@ajeevan.com

வணக்கம் அஜீவன்

இப்படத்தைப் பற்றி விரிவாக வழங்கிய பார்வை இதோ:

http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_07.html

நம் கலைஞர்களின் இத் திறமை குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

திரு.அஜீவன் யாழில் இக்குறும்படத்தினை இணைத்ததினால் நானும் பார்த்தேன். கானாபிரபாவும் நான் நினைத்ததினை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள் அஜீவனுக்கும், கானா பிரபாவுக்கும்

இப்படத்தை நேற்று அஜீவன் அண்ணா தந்து பார்த்தேன், நான் தான் முதல் பார்த்துக் கருத்துச்

சொன்ன ஆள் என்று சொன்னார். ஒரு சின்னப்பிள்ளையின் மனதை அழகாக படம்

பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

சொல்ல நினைத்த செய்தியை மட்டும் வேறெந்த அலட்டலில்லாமல் அழகாகக்

கூறியிருக்கிறார்கள். இசை, கமரா கலைஞர்களின் நடிப்பு எல்லாமே அருமை. அதுவும்

அந்த சின்னப்பிள்ளையின் நடிப்பு சூப்பர்.

கானபிரபா நல்ல விமர்சனம். இணைப்புக்கு நன்றிகள்.

நன்றிகள் கந்தப்பு, ரசிகை

நானும் நேற்றுத்தான் இக்குறும்படத்தைப் பார்த்தேன்.மிகவும் நன்றாக தமக்குரிய பணியை அனைவரும் செய்திருக்கிறார்கள்.எனக்கு அடுத்து எட்டு வருடங்கள் கழித்துப் பிறந்த என் தங்கை மீதும் நான் முந்தி கடுப்பாகத்தான் இருந்தன் என்று அம்மா சொல்றவா ஆனால் அது நாளடைவில இல்லாம்ல் போயிற்று.அப்பப்ப தலைகாட்டும் :-) நல்ல விமர்சனம் பிரபாண்ணா.இ;தைப்பார்க்கும்போ

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன்

இப்படத்தைப் பற்றி விரிவாக வழங்கிய பார்வை இதோ:

http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_07.html

நம் கலைஞர்களின் இத் திறமை குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி

மிக்க நன்றி அன்பு நண்பன் கானபிரபாவுக்கு...............

உங்கள் எண்ணங்களை

அனைத்து கலைஞர் உறவுகளோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இது நிச்சயம் அவர்களுக்கு தென்பு தரும்.

அழகான அருமையான கானப்பிரபாவுக்கே உரித்தான

கானமழையான விமர்சனம்..............

நன்றி!

  • தொடங்கியவர்

திரு.அஜீவன் யாழில் இக்குறும்படத்தினை இணைத்ததினால் நானும் பார்த்தேன். கானாபிரபாவும் நான் நினைத்ததினை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள் அஜீவனுக்கும், கானா பிரபாவுக்கும்

நன்றி கந்தப்பு

பாராட்டுகள் கலைஞர்களுக்கு இல்லையா?

பகிர்ந்து கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

இப்படத்தை நேற்று அஜீவன் அண்ணா தந்து பார்த்தேன், நான் தான் முதல் பார்த்துக் கருத்துச்

சொன்ன ஆள் என்று சொன்னார். ஒரு சின்னப்பிள்ளையின் மனதை அழகாக படம்

பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

சொல்ல நினைத்த செய்தியை மட்டும் வேறெந்த அலட்டலில்லாமல் அழகாகக்

கூறியிருக்கிறார்கள். இசை, கமரா கலைஞர்களின் நடிப்பு எல்லாமே அருமை. அதுவும்

அந்த சின்னப்பிள்ளையின் நடிப்பு சூப்பர்.

கானபிரபா நல்ல விமர்சனம். இணைப்புக்கு நன்றிகள்.

அருமை தங்கை ரசிகைக்கு நன்றி!

பிஞ்சுமனத்தை தொகுத்ததும்

வலையில் நின்ற ரசிகைக்கு கொடுத்து

கதையை புரிந்து கொள்ள முடிகிறதா?

என்று கருத்து மற்றும் மாற்றங்கள் பற்றி

கேட்டேன்.

அவர் சொன்னதை எழுதியிருக்கிறார்.

வலைப்பதிவில் மட்டுமல்ல........

இங்கும் அவர்தான் முதல் ரசிகை.

  • தொடங்கியவர்
நானும் நேற்றுத்தான் இக்குறும்படத்தைப் பார்த்தேன்.மிகவும் நன்றாக தமக்குரிய பணியை அனைவரும் செய்திருக்கிறார்கள்.எனக்கு அடுத்து எட்டு வருடங்கள் கழித்துப் பிறந்த என் தங்கை மீதும் நான் முந்தி கடுப்பாகத்தான் இருந்தன் என்று அம்மா சொல்றவா ஆனால் அது நாளடைவில இல்லாம்ல் போயிற்று.அப்பப்ப தலைகாட்டும் :-) நல்ல விமர்சனம் பிரபாண்ணா.இதைப்பார்க்கும்போ

:P அந்த சின்ன பொண்ணு நல்லா அழகு நல்லா முகபாவனைகளை காட்டி இருக்கிறா.

ஆமா அந்த அம்மா முதலே பார்த்திருக்கலாம் தானே :twisted:

ம்ம் சினேகிதி சொன்ன போல கண்ணாடிப்பூக்கள் அண்ட் உயிரிலே கலந்தது இவ்விரு படங்களின் மையக்கருத்துக்களுடன் கூடிய குறும்படம்.

இன்று கூட என் வீட்டில் இது தொடர்கிறது. என்னமோ தெரியா என்னை விட தம்பி மீது கூடிய பாசம் வைக்கிறார்கள். பல தடவைகள் தனிமையில் இருந்து அழுகின்றேன் இன்று கூட தொடர்கிறது. இனியும் தொடரலாம் :cry: :cry: :cry:

ஏனோ தெரியவில்லை. என் மனதை கட்டுப்படுத்த முடியல்லை :cry:

நன்றிகள் அஜீவன் அங்கிள் அண்ட் கானபிரபா

  • தொடங்கியவர்

:P அந்த சின்ன பொண்ணு நல்லா அழகு நல்லா முகபாவனைகளை காட்டி இருக்கிறா.

ஆமா அந்த அம்மா முதலே பார்த்திருக்கலாம் தானே :twisted:

ம்ம் சினேகிதி சொன்ன போல கண்ணாடிப்பூக்கள் அண்ட் உயிரிலே கலந்தது இவ்விரு படங்களின் மையக்கருத்துக்களுடன் கூடிய குறும்படம்.

இன்று கூட என் வீட்டில் இது தொடர்கிறது. என்னமோ தெரியா என்னை விட தம்பி மீது கூடிய பாசம் வைக்கிறார்கள். பல தடவைகள் தனிமையில் இருந்து அழுகின்றேன் இன்று கூட தொடர்கிறது. இனியும் தொடரலாம் :cry: :cry: :cry:

ஏனோ தெரியவில்லை. என் மனதை கட்டுப்படுத்த முடியல்லை :cry:

நன்றிகள் அஜீவன் அங்கிள் அண்ட் கானபிரபா

உணர்வோடு எழுதியிருக்கிற உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி வெண்ணிலா!

இது போன்ற கருவைக் கொண்ட கதைகள்

திரைப்படங்களாய் வந்திருப்பது பற்றிய தகவலுக்கும் நன்றி!

சிநேகிதிக்கும்..............(இந்த நேரத்தில்....)

சில பெற்றோர்கள்

ஏனோ இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால்

சில வேளை மூத்த குழந்தை பெரியவள் அல்லது பெரியவன்

என்று கருதுகிறார்கள் போலும்.............

சின்னவங்களை பராமரிப்பது போல

பெரிய குழந்தைகள் மேல்

அதிக கரிசனை தேவையில்லை என்று

கருதுகிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இப்படியான இன்னொரு அன்பர் கூட

கானபிரபாவின் பதிவுகளிலும் எழுதியிருக்கிறார்.

" குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது."

என் தம்பி பிறந்த சமயம் எனக்கும் இப்படி உணர்வுகள் இருந்ததாம்.

என் அம்மாவை நான் கிள்ளி வைக்கிற மாதிரி புகைப்படம் எல்லாம் உண்டு

( என்னைக் கவனிக்காததால் ).

நல்ல குறும்படம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

- குமரன் http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_07.html

இது குழந்தைகளை மனோதத்துவ ரீதியாக

பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி பெற்றோர்

அக்கறை எடுத்துக் கொள்வதில்லையோ என்று

எண்ணத் தோன்றுகிறது.

வெண்ணிலா

உங்களைப் போன்றவர்கள்

இதை பெரிதாய் எண்ணக் கூடாது.

அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

அண்மையில் நான்

ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அங்கே இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

ஒரு குழந்தை நான் போன வீட்டாரின் குழந்தை.

அடுத்தது பக்கத்து வீட்டுக் குழந்தை.

நான் வெகு நேரமாய் அவர்களோடு இருந்தேன்.

பக்கத்து வீட்டுக் குழந்தை (4 வயது)

அழகான நல்ல தேகாரோக்கியமான குழந்தையாக தெரிந்தான்.

ஆனால் அவன் சோபாவில் அப்படியே

உட்கார்ந்து இருந்தானே தவிர

ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இவன் பேசமாட்டானா என்று

வீட்டாரிடம் கேட்டேன்.

வீட்டில் இப்படித்தான்

ஆனால் வெளியே போனால் சரியான குளப்படி

என்று அவர்கள் சொன்னார்கள்.

அதன் பின் அவனது பெற்றோர் பற்றி விசாரித்த போது

தாயும் தந்தையும் வேலை செய்கிறார்கள்.

தந்தையார் இரவு வேலை.

அவர் இரவு 10.00 மணிக்கு வேலைக்கு போய் விடுவார் காலை 9.00மணிக்கு வருவார்.

தாய் பகல் வேலை.

காலை 10 மணிக்கு போய்

இரவு 11 முதல் 12 மணி வரை வேலை செய்து விட்டு இரவு வருவார்.

தாய் வேலைக்கு போனதும் தந்தையார் தூங்குவார்.

இவன் அப்படியே வீட்டில் தனிமையில் இருந்து பழகி விட்டான் போலும்..........

அல்லது கட்டுப் படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

அவன் யாரோடு பேச............

பேச முடிந்தும் ஊமையாய் வாழ்கிறான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில்தான்

அவனை இங்கே விட்டுச் செல்கிறார்கள்.

இங்கும் அவன் அமைதியாக இருக்கிறான்.

நான் அவர்களை இணைத்துக் கொண்டு

சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன்.

நான் அவர்களை பிரிந்து வரும் போது

"போப் போறீங்களா? "

என்றான்.

அவன் கண்களில் தனிமையின் ஏக்கம் தெரிந்தது.

"நான் தூர போக வேணும்

அடுத்த முறை வந்தா பிள்ளையோட நிச்சயம் விளையாடுறன்."

என்று சொல்லி விட்டு விடை பெற்றேன்.

எத்தனை செல்வம் சேர்ந்தாலும் - அது

பிள்ளை செல்வத்துக்கு ஈடாகுமா?

ஏன் இவர்கள் கண்டு கொள்கிறார்கள் இல்லை.

எனக்குள் கோபமாய் இருந்தாலும்

அதைக் காட்டிக் கொள்ளாமல் வந்தேன்.

இருந்தாலும் காரில் வரும் போது

எனக்குள் ஏதோ உறுத்திக் கொண்டேயிருந்தது.

நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள்?

யோசிக்க வேண்டாம்?

இப்படி உங்களை விட மனதால் பாதிப்படைவோர் எத்தனையோ!

அந்த வகையில் நீங்கள் எவ்வளவோ மேல்.........

மனம் வருந்த வேண்டாம் வெண்ணிலா.

உங்கள் சகோதரனிடத்தில் அன்பு காட்டுங்கள்.

நீங்கள் பெரியவர்தானே?

நாளை அவன்

உங்கள் நண்பனாக நிச்சயம் இருப்பான்.

அது உங்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

நன்றி!

வணக்கம் வென்ணிலா, யாழ் இருக்கப் பயமேன்.

வணக்கம் அஜீவன்,

தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. நான் கூட ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது அக்குழந்தைகளை இயன்றவரை சமமாகவைத்துப் அன்பு காட்டுவதுண்டு.

வணக்கம் வென்ணிலா, யாழ் இருக்கப் பயமேன்.

வணக்கம் அஜீவன்,

தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. நான் கூட ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது அக்குழந்தைகளை இயன்றவரை சமமாகவைத்துப் அன்பு காட்டுவதுண்டு.

அதுதான் அடிக்கடி யாழுக்கு வாறனான். :P

ம்ம் எல்லா அப்பா அம்மாவும் சமமாக அன்பு காட்ட தவறுகிறார்கள். பிள்ளைகளின் மனநிலையை புரியாமல் கடைசி பிள்ளை மீது அதீத பாசத்தை காட்டி அக்கறை கொள்கிறார்கள். ஆனால் மூத்த பிள்ளையின் மனம் எப்படி சிதையும் என்பதை மறந்துடுறாங்க. ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்று பெற்றால் எவ்வளவு சந்தோசமாக வளரும் அந்த குழந்தை அப்பா அம்மாவின் முழுமையான அரவணைப்பில். :cry:

ஆனால் இப்போ எல்லாம் அம்மா அப்பா வேலை என சொல்லி போவிடுவார்கள் பிள்ளைகள் ஆயாவின் குறைந்தபட்ச அன்பில் வளர்ந்து நாளடைவில் அம்மா அப்பா மீதுள்ள பற்று அற்று போகிறதே. :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளின் சிந்தனைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற உண்மையைப் படத்தில் பிரதிபலித்தமை யாதார்த்தமானது தான். அதற்காக வாழ்த்துக்கள்!! :lol::lol:

சமீபத்தில் பார்த்தீபனின் படம் ஒன்றும் அந்த நிலையை தொட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

எங்குமே, சமதரப்பு என்பது முக்கியமானது. அதை யாரும் விட்டு கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள்! அதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்! :wink: :wink:

ஆனால் இதற்கு புறம்பான ஒரு சம்பவத்தையும் சொல்லியாக வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளை! அவளை வளர்க்கும்போது செல்லமாகத் தான் வளர்த்தார்கள். வீட்டில் பெற்றோருக்கிடையில் சண்டை நடந்தால் அவள் இல்லாத நேரம் தான் நடக்கும். என்ன சண்டை நடந்தாலும் அவள் இருக்கும்போது பிரச்சனையைப் பெற்றோர் காட்டிக் கொள்வதில்லை! மகிழ்ச்சி போலத் தான் இருப்பார்கள்!

விளைவு!

அந்தப் பெண் திருமணமாக போய், சிறிது நாளிலேயே டைவோஸ் கேட்டாள்.ஏன் என்றால் அன்பாக நடித்த, வாழ்ந்ததாகக் காட்டிக் கொண்டிருந்த போலியான பெற்றோர் வாழ்க்கை அவளுக்கு அங்கே கிடைக்கவில்லை! அவள் அதை நிஜம் என்று நம்பி ஏமாந்து போனாள்!

எனவே அதிக, அன்பு என்று உண்மைகளை மறைக்கவும் கூடாது.

( ஒவராக கதை விடுகின்றேனோ! சத்தியமாக இது உண்மையுங்கோ! :oops: :wink: )

  • தொடங்கியவர்

:arrow: கானபிரபா வெண்ணிலா தூயவன் அனைவருக்கும் நன்றி.......

:arrow: பிரபா ஏதாவது எழுதுவீர்கள் வெண்ணிலாவுக்கு என்று

நினைத்தேன்?

உங்கள் வார்த்தைகளின் பகிர்வு இதமாகலாம்.

:arrow: ஐரேப்பியர்கள் (சுவிஸ்) ஒரு குழந்தை இருப்பதை வரவேற்பதில்லை

வெண்ணிலா..............

பெற்றோர்கள் வேலைக்கு போய் விட்டால்

அல்லது வேறு எதிலாவது ஈடுபடும் போது

எப்போதும் போல குழந்தைகளை பராமரிக்க

அதிக நேரம் இருப்பதில்லை.

அதனால் அவர்கள்

ஆகக் குறைந்தது 2 குழந்தைகளையாவது

பெற்றுக் கொள்கிறார்கள்.

அதுவும் பெரிய இடைவெளி விட்டல்ல..........

பெரிய இடவெளியே குழந்தைகளுக்கு பிரச்சனையாகி விடும்.

ஒரு வருடத்துக்குள்ளான இடைவெளி............சில சமயம் சிறிது அதிகமாக.......... ?

ஒரு குழந்தைக்கு 1 வயதானால் அடுத்தவருக்கு 2 அல்லது 3 வயது...........

இக் காலம் அவர்களது செயல்பாடுகளில்

பெரிய வித்தியாசம் ஏற்படுவதில்லை.

அதிக இடவெளி விடும் போது

அவர்களது எண்ணங்கள் தேவைகளில்

வித்தியாசம் இருக்கிறது.

இதுவே பிரச்சனை?

குறைந்த இடைவெளியில் பிறக்கும் குழந்தைகள் விடயத்தில்

மூத்தவரது பொருட்கள் இளையவரது தேவைகளுக்கு

பயன்படுகிறது.

அங்கே பகிர்வு என்பது தொடங்குகிறது.

மூத்தவர் பொருளை இளையவருக்கு

கொடுக்கும் மனநிலையும்

இளையவருக்கு மூத்தவர் பொருளை பெறும் மனநிலையும்

உருவாகிறது.

இங்கே அந்யோன்ய உறவொன்று ஆரம்பமாகிறது.

இதே நாளடைவில் தம் கருத்துகளை மட்டுமல்ல

தன் சொந்த வாழ்வின் பிரச்சனைகளையும்

தீர்க்கும் மனோ நிலையை உருவாக்குகிறது.

வயதாகி பெற்றோர்கள் தவறிப் போகும் போது கூட

ஐயோ என் குடும்பத்தில் யாருமில்லையே

என்ற வேதனையை பகிர்வதற்கு

தன் சொந்த உறவு பக்கத்திலிருக்கிறது.

சிலர் இப்படி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்

எல்லோரும் அப்படி அல்ல.

:arrow: துயவனின் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

பிரச்சனை இல்லாத உலகம் இல்லை.

பிரச்சனையே இல்லாத குடும்பம் என்ற போலியான

நடிப்பு வாழ்கை கூட கெடுதலே.

ஒரு சிலர் வெளியே விருந்துகளுக்கு போனால்

இப்படியும் ஒரு குடும்பமா என்ற மாதிரி

காட்டிக் கொள்வார்கள்.

ஆனால் வீட்டில் அதற்கு நேர்மாறகவே இருக்கும்.

சிலர் குழந்தைகளுக்கு நம் பிரச்சனை தெரியக் கூடாது

என தமது அறைக்குள்ளே வைத்துக் கொள்வோர்

பற்றித்தான் தூயவன் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

இதில் உள்ள பிரச்சனை

குழந்தைகளுக்கு இவர்கள்

அவர்களது வாழ்கை பிரச்சனைகளுக்கு

தாம் முகம் கொடுத்த அல்லது கொடுக்கும்

விதங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளாமல்

இருப்பதே

பின்னர் குழந்தைகளுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இதனாலோ என்னவோ

வாழப்போன இடத்தில் பிரச்சனையாகிறார்கள்

அல்லது

பிரச்சனைக்குள்ளாகிறார்கள்.....

.....

இப்படியானவர்கள் நல்ல புத்தகங்களை வாசிப்பது கூட

நண்பர்கள் போல நல்ல பயனைத் தரும்.

பெற்றோர் எப்போதும் பிரச்சனைக்குள்ளாவது கூட

நல்ல விடயமல்ல.

உங்கள் பார்வைக்கு:

http://tamilamutham.net/amutham/index.php?...emid=49

நன்றி:நண்பன் ராஜன் (தமிழமுதம்)

வெண்ணிலா, இங்கு பல புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் வேலை, வேலை என்று அலைவதால், அஜீவன்அண்ணா கூறியது போல பலரது பிள்ளைகள் தொலைக்காட்ச்சியுடனேயே பொழுதைப்போக்க வேண்டிய நிலை. இதனால் ஒருசில குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். இப்ப ஒவ்வொரு கிழமையும் டொக்ரரிடம் அழைத்துச்செல்கிறார். இதை முன்பே கவனித்து இருந்தார்கள் என்றால், அந்தபிள்ளை எல்லாரையும் போல் பாடசாலைக்குச் சென்றிருக்கும்.

காசு காசு என்று அலைந்து திரிந்து விட்டு இப்ப கோயில்கோயிலாக ஏறி இறங்குகிறார்கள். இங்கு நிறைய பொழுதுபோக்குகள் உண்டு. ஆனால் அன்புக்கு பஞ்சம்.

வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளை விட நீங்கள் எவ்வளவோமேல்.

எல்லா பெற்றோர்களும் இளைய பிள்ளையிடம் அதிக அன்பு காட்டுவது இயல்பு. அதற்காக பெற்றோருக்கு உங்கள் மீது அன்பில்லை என்று நினைக்கக்கூடாது. அதை நீங்கள் பெரிதாயும் எடுக்கக்கூடாது. உதுக்கெல்லாம் அழுதுட்டு இருந்தால், :lol:

(என்னையே எனது பெற்றோர் சிறுவயதிலேயே இலங்கையில் விட்டுவிட்டு வெளிநாடு வந்துவிட்டனர். 8 வருடத்துக்கு பிறகுதான் அவர்களை நேரில் பார்த்தேன். ஆனாலும் ஊரில் இருந்தது போன்ற சந்தோசம் இங்கு இல்லை. ஏன்டா வந்தேன் என்று கிடக்கு. :cry: )

ம்ம்ம் உங்கள் அனைவரது சிந்திக்க கூடிய கருத்துக்களுக்கு நன்றிகள். :P :P

கண்களால் கைது செய் படத்தில் வாற கதாநாயகனும் இப்படியான ஒரு சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறான் அப்படித்தானே :wink: :arrow:

வெண்ணிலா வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளை விட நீங்கள் எவ்வளவோமேல்.

( ஊரில் இருந்தது போன்ற சந்தோசம் இங்கு இல்லை. ஏன்டா வந்தேன் என்று கிடக்கு. :cry: )

அப்படியா? அப்படியாயின் ரொம்ப சந்தோசமாக இருக்கு. ஆனால் அம்மா அடிக்கடி தம்பிக்கு தானே சாப்பாடு தீத்துறா :cry: :arrow: எனக்கு எப்போதாவது ஒருநாளைக்கு தான் :evil:

சுபித்திரன் அண்ணா அப்படின்னா அடுத்த ப்ளைட் இல் ஏறி இலங்கைக்கு வாங்கோண்ணா. :P :arrow:

அப்படியா? அப்படியாயின் ரொம்ப சந்தோசமாக இருக்கு. ஆனால் அம்மா அடிக்கடி தம்பிக்கு தானே சாப்பாடு தீத்துறா :cry: :arrow: எனக்கு எப்போதாவது ஒருநாளைக்கு தான் :evil:

உங்கட பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்குதே. :wink: (வடிவேலு சொன்ன மாதிரி சின்னப்புள்ளத் தனமாவே இருக்கு ) சாப்பாடு தீத்தாட்டி என்ன. நீங்களே கையாலை அள்ளி சாப்பிடுறது. :wink: எல்லாம் சின்ன சின்ன பிரச்சினை.

இதுக்குமேல எனக்கு என்ன சொல்லுறது என்று தெரியேல்லை. :roll:

இப்ப கொஞ்சம் கொஞ்சமாக திருந்திட்டன். அது நாளடைவில் சரியாகிடும். ஆமா வடிவேலுக்கு என்னோடை கொஞ்சம் லொள்ளு கூடிட்டு, :twisted: ஒருக்கால் நம்ம குருவிஅண்ணாட்டை சொன்னால் சரியாகும் ஆமா :P :arrow:

இப்ப கொஞ்சம் கொஞ்சமாக திருந்திட்டன். அது நாளடைவில் சரியாகிடும். ஆமா வடிவேலுக்கு என்னோடை கொஞ்சம் லொள்ளு கூடிட்டு, :twisted: ஒருக்கால் நம்ம குருவிஅண்ணாட்டை சொன்னால் சரியாகும் ஆமா :P :arrow:

நான் சொன்ன வடிவேலு களத்தில உள்ள வடிவேலு இல்லை. படத்தில வருற வடிவேலுதான் அடிக்கடி கூறுவார்.

நான் சொன்ன வடிவேலு களத்தில உள்ள வடிவேலு இல்லை. படத்தில வருற வடிவேலுதான் அடிக்கடி கூறுவார்.

ஒஹோ அப்படியா? நாங்க யாழில் இருக்கிறதால் நான் நினைச்சேன் யாழ்கள வடிவேல் பற்றி சொல்லுறீங்க என.

  • தொடங்கியவர்

அப்படியா? அப்படியாயின் ரொம்ப சந்தோசமாக இருக்கு. ஆனால் அம்மா அடிக்கடி தம்பிக்கு தானே சாப்பாடு தீத்துறா :cry: :arrow: எனக்கு எப்போதாவது ஒருநாளைக்கு தான் :evil:

சுபித்திரன் அண்ணா அப்படின்னா அடுத்த ப்ளைட் இல் ஏறி இலங்கைக்கு வாங்கோண்ணா. :P :arrow:

:P :lol: :P

:P :lol: :P

என்னைத் தனியவெல்லாம் அனுப்பமாட்டாங்கள். என்ரை குடும்பம் இங்குதானே. அவர்கள் வந்து பல வருடங்கள். நான் வந்து சில வருடங்கள். நிறைய நண்பர்களை இழந்து விட்டேன். அதுதான் வருத்தமாக இருக்கு. :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.