Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கத் தயார்! - ஜனாதிபதி மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கத் தயார்! - ஜனாதிபதி மஹிந்த 
[Tuesday, 2013-03-26 09:03:25]
 
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை இருக்கின்றது. உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய் நாடு இதுவாகும். இந்த நாட்டை எழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம். உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க திட்டமிடவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். இந்த காணிகளை மீளவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போரின் போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல் வாதிகளின் வடக்கும், தெற்கும்! :o

 

Two_Headed_Snakes_myclipta_12.jpg

அடுத்த ஒரு ஆண்டு  ஏமாற்றும் படலம் இந்திய, தென்னாபிரிக்க துணையுடன் ---- மகிந்தவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது...

இதையேதான் அமெரிக்காவுக்கு போருக்கு முதல் சொல்லி ஏமாற்றியவர்கள்.  திருகோணமையில் சுதந்திர தின கூட்டத்தில் இதை பேசவில்லை. முதலில் வடக்கு கிழக்கை இணைத்து கிழக்குமாகாண கவுனரை விலக்கட்டும். சிங்கள இராணுவம் 100% வெளியே போக வேண்டும்.

 

அதன் பிறகு மட்டும் சர்வதேச மத்தியஸ்தத்திற்கு சம்பந்தர் உடன்படவேண்டும்.



மேடை பேச்சுக்களை கேட்டு கூட்டமைப்பு மசியக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கத் தயார்! - ஜனாதிபதி மஹிந்த

 

இவன் வாயினாலே வைகுந்தம் காமித்து போடுவான்...

தலீவா .. எதுவும் வேண்டாம் .. இருக்கிற உயிர்...நீங்க தான் வேண்டும் தலீவா.. ஜெயில் ரெடி .. களி ரெடி..

கண்ணா களி தின்ன ஆசையா..? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் இழக்கப்பட்ட உயிர்களை தவிர அனைத்தையும் தரத் தயார்: ஜனாதிபதி        

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பேரனர்த்தங்களால் இழக்கப்பட்ட உயிர்களை தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராகவே உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தினால் பறிக்கப்பட்ட சொந்த இடங்களின் உரிமையை மாத்திரமின்றி அந்த மக்கள் இதுவரை கண்டிராத அபிவிருத்தியையும் வழங்க முடியும். எவரது சொந்த இடங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் நினைக்கவில்லை என்றார்.

 

http://www.virakesari.lk/

ஜனாதிபதி மஹிந்த வாழ்க :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.