Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது..ஜெயலலிதா

Featured Replies

முரளீதரன் உண்மையை கூறி தமிழர் மனத்தில் ஒரு இடம் பிடிக்கும் சந்தர்ப்பத்தை இழந்தது மட்டுமல்லாமல் வாயை திறந்து சிங்களத்திற்கு குரல் கொடுத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

  • Replies 60
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன் உண்மையை கூறி தமிழர் மனத்தில் ஒரு இடம் பிடிக்கும் சந்தர்ப்பத்தை இழந்தது மட்டுமல்லாமல் வாயை திறந்து சிங்களத்திற்கு குரல் கொடுத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

உண்மைதான் அகூதா, 
 
சிலவேளை இப்போது உள்ள நிலையை கருத்தில் கொண்டு தானும் ஒரு தமிழ் பற்று உள்ளவர் போல நடிக்கக்கூடும் முத்தையா முரளிதரன் போன்றோருக்கு இதெல்லாம் சர்வசாதரணமாக வரும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன் உண்மையை கூறி தமிழர் மனத்தில் ஒரு இடம் பிடிக்கும் சந்தர்ப்பத்தை இழந்தது மட்டுமல்லாமல் வாயை திறந்து சிங்களத்திற்கு குரல் கொடுத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

சரியா சொன்னீங்கள்...முந்தி நான் இந்த பச்சோந்தின்ட தீவிர ரசிகன்...2004ம் ஆண்டு இவர் வெஸ்சின்டீஸ் வல்ஸ்சின் உலக சாதனியை உடைக்க போரார் என்று பெருமை பட்டேன்....இவனுக்கு ரசிகனாய் இருந்ததை  நினைத்து வெக்கப் படுறேன்...முக புத்தகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இவர பற்றி படு கேவலமாய் எழுதினம் இந்த அறிக்கைக்கு பிறக்கு....

Edited by பையன்26

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.

சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.

தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.

#உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

Fb

செய்தி சரியான முறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இனி தெற்கில் ஒரு மானிலத்துக்கு பெயர்"தமிழ்நாடு" என்பதை வடக்கில் தெரிந்து வைத்துக்கொள்வார்கள். எதிர்ப்பாகத்தானும் இருந்தாலும் அது பலமாக இருந்தால்த்தான் வடக்கு அரசியல் வாதிகள் புரிந்து கொள்வார்கள்.   :)

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக .... அ தி மு க வின் ஆதரவு பத்திரிக்கை என்று சொல்லப்படுகின்ற தினமலரின் செய்தியை வாசகர்களுக்கு தருகின்றோம்.....

.

காங்கிரசின் ஆதரவு பத்திரிகைதான் தினமலர்.

சிட்னியில் சிங்கள நாட்டு துடுப்பாட்ட அணி வரும் போது சிங்களக் கொடியுடன் சென்று பார்க்கும் தமிழர்கள் தமிழகத்து உறவுகளின் உணர்வுகளைப் பார்த்தாவது திருந்துவார்களா?. புரட்சித்தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு நன்றிகள்.

இன்று NDTV தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் என்.ராம் சிறீலங்கா வீரர்களை சென்னையில் இருந்து ஒதுக்குவது தவறு எனவும் ஐபில் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தக்கூடாது என்பதே சரியாக இருக்கும் என்றும் கூறினார்.

இதன் பின் இருக்கும் அரசியல் கவனிக்கத்தக்கது:

சிறீலங்கா வீரர்களை சென்னையில் விளையாடக்கூடாது என்று தடைவிதித்தால் சிறீலங்காவை அவமானப்படுத்துவதாக அமையும். சிறீலங்கா சிங்கள அரசாங்கத்தின் இனவெறியை முன்னிலைப்படுத்துவதாக அமையும்.

அதுவே தமிழ்நாட்டில் ஐபில் போட்டிகள் நடக்காது என்றால் தமிழகத்தை தனிமைப்படுத்துவதாக, அவமானப்படுத்துவதாக அமையும்.

என்ன ஒரு அரசியல் ??

சென்னையில் சிறீலங்காவின் தூதரகம் செயல்படுவதை விட சென்னை அண்ணாசாலையில் இந்து செயல்படுவது தமிழக தமிழனான என்னை அவமானப்படுத்துகிறது.

சசி (முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பை அடுத்து இலங்கை வீரர்கள் நீக்கம்?

5d5f1b0a0906dd3630101e5ae565971a.jpg

இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னை சுப்பர் கிங் அணியில் நுவான் குலசேகர மற்றும் அகில தனஞ்செய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை அணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
போட்டிகளில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க முடியாது என்று ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.
 
எனினும் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை தொடர்ந்து ஏனைய ஐ.பி.எல் அணிகளும் இலங்கை வீரர்களை நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
#உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.

சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.

தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.

#உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

- Nallu Samy Nalan

559345_324404077661931_329692894_n.jpg

IPL புனே அணியில் விளையாடும் இலங்கை ராணுவத்தை சார்ந்த அஜந்தா மெண்டிஸ் ராணுவ உடையுடன்.

909362_10151508554051092_1253374656_n.jp

24657_599642896714406_786764705_n.jpg

530039_632500373434026_223982578_n.jpg

17994_447497095319322_779567608_n.jpg

Srilankan issue in English & Hindi
 
In English :

Why Tamil Nadu demanded ban of Sri Lankan Players playing from IPL in Chennai???

"It is exactly as Pakistan Players being banned from playing IPL"

** Sri Lankan govt killed more than 600 Indian fishermen.

** Sri Lankan govt slaughtered thousands and thousands for innocent Tamils (Women, Children)

mercilessly in the Island.

When Pakistan attacks Indians, Indian govt is ready to brake any relationship with Pakistan.

How can the Indian Govt say "Sri Lankas is our friendly nation" when this small island can kill number of Indian fishermen and they go unnoticed??

Tamils are also Indians. I support students revolution in tamil nadu.

If tamil nadu is part of india, india should treat sri lanka as it treats pakistan.

Indian govt should insist international human rights enquiry in the island and bring a referendum for tamil eelzam.

Attacks on indian fishermen by srilanka : http://www.savetnfishermen.org/

  • கருத்துக்கள உறவுகள்

135060685index.jpg

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் இவர்கள்தான்!

இந்தியாவில் இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ள இலங்கை வீரர்களது பெயர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இதன்படி 

குமார் சங்ககார,

மஹேல ஜயவர்தன, 

டி.எம். டில்சான், 

மலிங்க, 

அஞ்சலோ மெத்தியூஸ், 

குசல ஜனித், 

ஜீவன் மென்டீஸ்,

அஜந்த, 

திசர பெரேரா, 

சஜித்திர சேனாநாயக்க 

ஆகியோர் இம்முறை இடம்பெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளனர். 

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாளை ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இலங்கை வீரர்கள் எவரும் தமிழகத்தில் இடம்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இதன்படி இலங்கை விரர்கள் தமிழகத்தில் இடம்பெறும் போட்டிகளைத் தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் இடம்பெறும் போட்டிகளில் விளையாடவுள்ளனர். 

இலங்கையைச் சேர்ந்தவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள IPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஏற்பட்டிருக்கும் தடை, சமகால தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர், புகழ்பெற்ற கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர், விமர்சகர் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் கனடா ரொறன்ரோவிலிருந்து ஒலிபரப்பாகும் CMR Thamil FM(www.cmr24.fm) க்கு வழங்கிய செவ்வி.

"தமிழக தடையை மீறி IPL விளையாடத் துணியும் இலங்கை வீரர்கள்"
==================

இந்தியாவில் இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ள இலங்கை வீரர்களது பெயர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி

குமார் சங்ககார,
மஹேல ஜயவர்தன,
டி.எம். டில்சான்,
மலிங்க,
அஞ்சலோ மெத்தியூஸ்,
குசல ஜனித்,
ஜீவன் மென்டீஸ்,
அஜந்த,
திசர பெரேரா,
சஜித்திர சேனாநாயக்க
ஆகியோர் இம்முறை இடம்பெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாளை ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை வீரர்கள் எவரும் தமிழகத்தில் இடம்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி இலங்கை விரர்கள் தமிழகத்தில் இடம்பெறும் போட்டிகளைத் தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் இடம்பெறும் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள உணர்வாளர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!!

553039_436852786400546_189934705_n.jpg

செல்லும் ஒவ்வொருவரது கையிலும் தமிழீழ தேசியக் கொடியும் தமிழீழ வரைபடமும் தமிழீழ விடுதலையையும் நடைபெற்ற இனப்படுகொலையையும் வெளிப்படுத்தும் விதமான ஆங்கில வாசகங்கள் இடம்பெற்ற அட்டைகளையும் எடுத்துச்செல்லுங்கள்.

ஒருவரை தடுக்கலாம்... பத்துப்பேரை தடுக்கலாம்... நூறுபேரை தடுக்கலாம்.... ஆயிரக்கணக்கில் என்றால் முடியுமா... முடியாது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தரப்பத்தையும் எமது விடுதலைக்கான களமாக்கிப் போராடுவோம்.

575661_430887990335277_1391959571_n.jpg

நாளை காலை 10 மணிக்கு சிங்கள வீரர்களை நீக்காத சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளாரன சன்குழுமத்தின் பட்டினப்பாக்கம் சன் தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை... தமிழர்களிடம் பிழைப்பு நடத்தி அவர்கள் பணத்தை கொண்டு அவர்கள் மண்ணிலே இருந்து கொண்டு சிங்கள வீரர்களை விளையாட வைத்தால் என்ன நடக்கும் என உணர்த்துவோம்,...!!

தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!!

கருணா ஏன் இன்னும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்பது பற்றி வாய் திறக்கவில்லை.. யாருக்காவது தெரியுமா..?

- கார்ட்டூனிச்ட் பாலா

563645_4662842615387_1935706375_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.