Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு உதவி வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடுவேன் - கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
karuna-seithy-20120927-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமெ தெரியும். நோர்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன். 409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பங்கொக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் எனக்கு பணிப்புரை விடுத்தார். நோர்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்கின்றேன்.

  

அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளக்கு உதவிகளை வழங்கியிருந்தன. துப்பாக்கி துளைக்காத பிராடோ ரக வாகனமொன்றை அரச சார்பற்ற நிறுவனமொன்று பிரபாகரனுக்கு வழங்கியிருந்தது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் விநாயகமூர்த்தி முரளிதரனின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நோக்கில் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79338&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தெரிந்த இரகசியங்களை ஏன் புதிதாகச் சொல்லவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரன் பேச்சு, விடிஞ்சால் போச்சு,என்ற மாதிரி தொடர்ந்து நடக்க வேண்டியது தான்! :o

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக இலங்கை அரசின் பிரதி அமைச்சரான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 

" தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமெ தெரியும். நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.

409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பங்காக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் என்னை பணித்தார். நார்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்கின்றேன்.



 

அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளக்கு உதவிகளை வழங்கியிருந்தன. துப்பாக்கி துளைக்காத பிராடோ ரக வாகனமொன்றை அரச சார்பற்ற நிறுவனமொன்று பிரபாகரனுக்கு வழங்கியிருந்தது" என்று கூறியுள்ளார். 

கருணாவிடம்  விசாரணை நடத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் அண்மையில் கூறியிருந்தது.இந்நிலையிலேயே  அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

செய்தி மூலம்: விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அதை நிச்சயமாக வரவேற்கின்றோம். இதுவரை இரகசியமாக இருந்ததால் எங்களுக்க யார் நட்பு என்று தெரியாமல் தனித்து விடப்பட்ட உணர்வே இருந்தது. இப்படி வெளிப்படுத்தும்போது எல்லாத் தமிழ்மக்களும் பலமடைய சந்தர்ப்பம் கிடைக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
சிதம்பர ரகசியத்தையோ கருணா சொல்லப்போகிறார்?
 
புலிகள் பற்றி எழுதிய ஐயரை பற்றியோ கருணா குறிப்பிடுகிறார்??
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தெரிந்த இரகசியங்களை ஏன் புதிதாகச் சொல்லவேண்டும்?

 

ஏனென்றால் கேட்பதற்கு பல செவிகள் இருக்கின்றன

வியாபாரம்  நன்றாக நடக்கும் என்பதுதான் காரணம்

 

முரளிதரனுக்கு புலிகள் பற்றி  கனக்கத்தெரியும்  என்பது உண்மைதான்

ஆனால் தற்பொழுது சொல்வதால் எதுவும் தெளிந்தவனிடம் எடுபடாது

உலகத்தக்கும் செல்லாக்காசு

ஏனென்றால் கேட்பதற்கு பல செவிகள் இருக்கின்றன

வியாபாரம்  நன்றாக நடக்கும் என்பதுதான் காரணம்

 

முரளிதரனுக்கு புலிகள் பற்றி  கனக்கத்தெரியும்  என்பது உண்மைதான்

ஆனால் தற்பொழுது சொல்வதால் எதுவும் தெளிந்தவனிடம் எடுபடாது

உலகத்தக்கும் செல்லாக்காசு

உரக்க சொல்லி இருக்கீங்க விசுகு அண்ணா...

அண்மையில் மகிந்தா சொல்லிய சில இரசசிய விபரங்களுக்கு கருணா நெற்றியில் அடித்துக்கொண்டத்தாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிடிருந்தன. மகிந்தா, கருணா பற்றிய எந்த செய்தியும் அவர்கள் இருவரின் ஒத்துழைப்பின்றி வெளியே வர முடியாது; வந்தாலும் அது இலங்கையின் கடுமையான ஊடக விதிகளுக்கு அமைய பதிவு செய்யப்பட்டிருக்கும் ஊடகங்களால் பிரசுரிக்கவும் முடியாது. அது நினைவில் இருப்போர், இதையும், இனி கருணாவிடமிருந்து வெளிவரபோகும் பலவற்றையும் ஊக்கிக்கலாம்.

 

விசாரணைகளில் பயன் படுத்த்தக்க எந்த விபரத்தையும் சம்பந்த பட்ட பாட்டிகள் ஊடகங்களில் போடுவதில்லை. எனவே அரசோ கருணாவோ இந்த விபரங்களின் விசாரணைப் பெறுமதி சைபாராகத்தான் கருத்துகிறார்கள். மேலும் அரசு முயன்று இந்த விசாரணையை விமல் வீரவன்சா நடத்திய சிராணியின்  பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை ஆக்க முடியாது.ஐ.நா நிபுணர் அறிக்கைக்காண பதிலாக ஐ.நாவுக்கு இலங்கையால் அனுப்பி வைக்கப்பட்ட  "Lies Agreed Upon" ல் இலங்கை அரசு பாரிய நட்டமடைந்தது. இதனால் கருணாவை இப்படி குறுக்கு விசாரணைக்கு இடமில்லாத மேடை பேச்சுக்களில் இலங்கை போடுகிறது.

 

கருணா மானம்பூவில் வாளை வெட்டுக்கு நடப்பட்ட கன்னி வாளை. இவனது உதவியான பிள்ளையான் தனது அனுமார் ஆட்டங்கள் முடித்து ஒதுங்கிவிட்டான். கருணா வளை வெட்டு முடியும் வரை பந்தலில் நிறுத்தி வைக்கபட்டிருபான்.

 

மகிந்தா தான் தப்புவதற்காக, வேறு வழியின்றி மாட்டிபோய் இருக்கும் கருணாவை முன் தள்ளி தன் மீது அதிக அளவு குற்றங்களை ஏற்க வைக்காலாம். அது NGO களுக்கு விளங்கும் என்பதால்த்தான், சில குற்றங்களை ஏற்கனவே புரிந்த கருணாவிலிருந்து விசாரணையை ஆரம்பிக்கும் படி கேட்கிறார்கள். இது கருணா வலிய வந்து புலிகள் தன்னை கொண்டு குற்றம் செய்ய தூண்டுவித்தாக கூறிகொண்டே விசார்ணைகளை ஆரம்பித்து வைப்பர் என்பதற்காகவே. கவனிக்க வேண்டியது இது வரையில் NGOகள் கருணாவை விசாரிக்க சொல்லிக்கேட்பது அவன் இயக்கத்தில் இருந்த போது செய்த குற்றங்களுக்கு மட்டுமே. ஆனால் அவனையேதான் இறுதியில் அரசுக்கெதிரான குற்றங்களை விசாரிக்க தொடக்கப்புள்ளியாகவும் பாவிப்பார்கள். கருணாமீதான விசாரணைகள் அவனை புலியாக ஆரம்பித்து மந்திரியாக முடித்து வைக்கப்படும். அதாவது விசாரணையில் கருணா இரண்டுகரையிலும் இருந்து செய்த குற்ற்ங்களும் விசாரிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
 
 
கருணா விசாரிக்கப்படும் போது உயிருடன் உள்ள பல புலிகள் விசாரிக்கப்பட வேண்டும்.அப்பொழுது அரசால் இவருக்கு சோடித்து விடப்படும் குட்டுக்கள் வெளிப்படும். அரசு இவரை தம்மை பாதுகாக்க நன்கே பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். மேற்கூறிய அவரது செய்தியும் இதை போன்று பல செய்திகள் வரும் என சொல்கிறது.

சாபிடற சாப்பாட்டுக்கு விசுவாசம் காட்டத்தானே வேணும் அப்பப்ப எதையாவது சொல்ல வேணும் அதில போட்டி டக்கிளஸ் தேவன்டவா கே பியா அல்லது தயா மாஸ்ரரா என்று அதில யார் கூட கு .... மோ அவருக்குதான் அதிக கவனிப்பாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.