Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கத்தை சீண்டிப்பார்க்கவேண்டாம் – தமிழகத்துக்கு மேர்வின் மிரட்டல்!

Featured Replies

சிங்கத்தை சீண்டிப்பார்க்கவேண்டாம் – தமிழகத்துக்கு மேர்வின் மிரட்டல்! 
 

mervin1-150x150.jpgசிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது என மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கத்தை சீண்டி தமிழகம் காயமடையப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துடன் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் ஜனாதிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், உறங்கும் சிங்கத்தை எழுப்பி காயமடைய வேண்டாம் என தமிழகத்தை எச்சரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக தமிழக திரைநட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் அமைச்சர் விமர்சனம செய்துள்ளார்.

மெய்யான ஹீரோக்களாக இருந்தால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இடைநடுவில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

http://tamilleader.com/?p=9592

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிங்கம், வெறும் வாழைப்பழமும், மரவள்ளிக் கிழங்கும், சாப்பிடும் காலம், வெகு தூரத்தில் இல்லை! சிங்களத்தில், தமிழன் என்று ஒரு இனம் இல்லாமல் இருந்திருந்தால், இந்தச் சிங்கங்கள், இன்னும் கொட்டாவி விட்டபடியே இருந்திருக்கும்!

 

இன்றைக்கும், புலத்துத் தமிழன் ஒவ்வொருவரும், சிங்களத்துக்குப் போய்வருவதை நிறுத்தினால், எண்ணி ஆறே மாதத்தில், சிங்களம் குப்புறப் படுக்கும்! :o

 

இரட்டைக் குடியுரிமை, வருமானதைக்காட்டியே கொஞ்ச நாளைக்குக் கடன் வாங்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சிங்கத்தை யாரப்பா இப்படி போட்டு சாத்துறது???  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் போன்ற அரசியல் வாதிகள்தான்... நாட்டுக்குத் தேவை.

  • தொடங்கியவர்

அவர்கள் இப்ப எல்லாவற்றையும் மடக்கி பிடித்து போட்டார்கள். ரூபவாகினி சத்தம் சாவடி இல்லை.

அது என்ன ஆனா ஊன்னா சிங்களவர்கள் சிங்கம் சிங்கம் ன்னு நீங்களே உங்கள சொல்லிகிறீங்க ?

 

சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா ? இல்ல உங்க அ*** காட்டுக்கு போனாங்களா ? :rolleyes:

 

 

அது என்ன ஆனா ஊன்னா சிங்களவர்கள் சிங்கம் சிங்கம் ன்னு நீங்களே உங்கள சொல்லிகிறீங்க ?

 

சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா ? இல்ல உங்க அ*** காட்டுக்கு போனாங்களா ? :rolleyes:

 

அட நீங்க வேற.. .

  • தொடங்கியவர்

அது என்ன ஆனா ஊன்னா சிங்களவர்கள் சிங்கம் சிங்கம் ன்னு நீங்களே உங்கள சொல்லிகிறீங்க ?

 

சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா ? இல்ல உங்க அ*** காட்டுக்கு போனாங்களா ? :rolleyes:

லாலா நாட்டு அரச குமாரி ஒருத்தி காட்டுப்பதை வழியே தனியே சென்று கொண்டிருந்தாளாம். அவளை ஒரு காட்டுசிங்கம் கிட்னாப்பண்ணி போட்டுத்தாம். 

 

இரண்டு பிள்ளைகள் பிறந்ததாம் மகன் வளர்ந்த பின்னர் சிங்கத்தை குகையில் அடைத்துவிட்டு தாயையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு ஓடினானாம். பின்னர் சிங்கம் வெளியே வந்து தன் மனைவியை தேடி நாட்டு மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததாம்.(இன்று ஆமி யாழ்ப்பாணத்தில் செய்வது போன்றதாக இருக்கலாம்). இதனால் நாட்டு இராச சிங்க மகனை அனுப்பி சிங்கத்தை கொலை செய்வித்தாராம். 

அவன் திரும்பி வந்து இராவையும் கொலை செய்துவிட்டு தனது தங்கையையுடன் உறவு வைத்து 32 இரணை பிள்ளைகளை பெற்றானாம்..... இதில் மூத்த களுதையின் பெயர் விஜயன் :lol: . (வேறுபட்ட கதைகளும் உண்டு)

 

இந்த சிங் என்ற பெயர் ஆரிய திராவிட குளறுபடிகள் நடந்த போது இந்தியாவின் வடக்குப் பக்கத்தில் ந்டந்த ஆள் மாறாட்டம். இதை இலங்கைக்கு உண்மையில் விஜயன் கொண்டு வரவில்லை. விஜயன் என்று ஒருவன் வரவுமில்லை.

 

இலங்கையில் சிங்கள குடியேற்றத்தை இரண்டு பகுதிகளாக பார்க்க வேண்டும்.  ஒன்று எப்படி சுத்த தமிழ் நாடாக இருந்த இலங்கை மெல்ல, மெல்ல இன்னொரு நாடானது. மற்றயது இந்த மாக புளுகுவம்ச Beastality  கதையின் பொருள் என்ன.

 

இந்த சிங்கு கதை 6 நூற்றாண்டளில் தமிழ் நாட்டிலிருந்து(கேராளா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்துமாக இருக்கலாம். ஆனால் சமண, புத்த  பல்கலை கழகங்கள் தமிழ் நாட்டில் இருந்த படியால் அங்கிருந்தது வந்தவர்களாகத்தான் இருக்கலாம். மேலும் மதக்கலவர ஆரம்பம் தமிழ் நாட்டில்தான)  துரத்தபட்ட பௌத்த  துறவிகள் இலனகையில் தஞ்சம் அடைந்த போது தமிழ் நாட்டின் மீது துவேசம் கக்க எழுதப்பட்டவை.

 

இந்த காலத்தில் இலங்கையில் தமிழை பேசாத இனம் மிக விரைவாக வளர்ந்து கொண்டு வந்ததது. இவர்களில் இயற்கை வீரம் இருந்ததில்லை. இருந்த வீரத்தையும் புத்த மத போதனைகள் எதிர்த்தன. அன்றுவரை இலனகையர் உண்மையான பௌத்தர்கள். போர்வீராரகள் சரித்தகாலம் தொடக்கம் கேரளாவில் இருந்து  கொண்டு வரப்படுபவர்கள். சிங்களவர் இன்றும் குறுக்கு கட்டி, அப்பம் சாப்பிட்டு, கண்ணகியை வழிபடுபவர்கள். இவர்களை சுபேத்தி தமிழ் நாட்டு கல்லூரிகளில் இருந்து ஒடிவந்த வடக்கின் மதவெறித்துறவிகள் தம்மைத்தாம் காப்பாற்றிக்கொள்ள எழுதப்பட்ட கலம்பக கதைதான் புளுகு வம்சம்.

 

தாம் வடக்கிலிருந்து கொண்டு வந்த ஆபாச சிங்கு கதை திரிச்சு மகா புளுகு வம்சம் துவேச  எழுதினார்கள். இந்த கதை வெறுமனே தமிழ் பேசாத ஒரு இனத்தை தமிழ் நாடில் எழுச்சி கொண்டிருந்த பத்தி மார்க்கத்துக் எதிராக திருப்பிவிட எழுதப்பட்டது. இந்த Beastality  கதைக்கும் ஏற்கனவே   இலங்கையில் நனகு காலூன்றியிருந்த உண்மையான் புத்த மததிற்கும் தொடர்பு இல்லை. இந்த ஆபாச கதையின் சரித்திர value 0.00%. 

 

உண்மையான சிங்கள வருகை அசோகன் காலத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். இல்லையேல் வியாபாரதொடர்பு சற்று ஒரு நூற்றாணடு முன்னர் தொடங்கியிருக்கலாம். இது மிக அண்ணியோவுண்ணியமானது. இலங்கை எப்போதுமே நெல் ஏற்றுமதி செய்து வந்த நாடு. இந்த உறவுகள் காட்டிவைத்த பாதைகளால் வந்த வங்காளர் அல்லது கலிங்கர்தான் புதிய குடெயேற்ற வாசிகள். ஆரம்பத்தில் எந்த போரும் இருக்கவில்லை. இலங்கை தமிழர் எந்த எதிர்ப்பும் இன்றி கதிர்காமம் வரை இந்த புதிய குடியேற்றங்களை வரவேற்றார்கள்.

 

தமிழ் நாடு களபிரயர் கால்களில் விழுந்து விட்டது. அதன் மொழி, சமய, கலாச்சார தாக்கம் இலங்கையில் குறைந்து விட்டது. இதனால் இலங்கையில் புதிய குடியேற்றம் தனது திசையை எடுத்தது. கடைசியாக சேரன் செங்குட்டவன் கண்ணகி சிலை நிறுவ இலங்கை மன்னனை அழைத்திருந்தான். இவன் புதி குடியேற்றத்தால் கலப்பானவனாக இருந்தான். ஆனால் செங்குட்டவனின் நண்பனே.(குடியேற்ற வாசிகள் தமிழர்களின் நண்பர்கள்).  இலங்கையில் மொழி குழப்பம்( கலவரம் அல்ல) எழுந்திருந்ததது. வட இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகள் ஒரு தனி மொழி என்று ஒரு மொழியை பேசவில்லை. தமிழ் பிரதான தொடர்பு மொழி.  குடியேற்றவாசிகளின் மிக  தத்துவமிக்க புத்த சமயத்தை இலங்கை தமிழர் விரும்பி பின் பற்றினார்கள். இது போரில் வெல்லாமல் களப்பிரயர் தமிழ் நாட்டில் சணத்தை பரப்பியது போன்றதே. ஆறாம் நூற்றாண்டுவரை இலங்கையில் மத பிரச்சணைகள் இருக்கவில்லை.

 

அன்று, இந்தியாவில், பௌத்தர்கள் பாளியில் இருந்து வட மொழிக்கு மாறிவிட்டார்கள். ஆனால் இங்கையில் தமிழை தவிர இன்னுமொரு ஒழுங்கான மொழியும் உருவாகியில்லை.  புத்த மன்னர்கள் ஆன்மீக தேவைக்கு இன்னமும் பாளியைத்தான் பாவித்துக்கொண்டு வந்தார்கள். பலர் தமிழ் தான் பேசினார்கள். இலங்கைக்கு துரத்தப்பட்ட புத்ததுறவிகள் இலங்கையில் இருந்த பழைய கர்ண பரம்பரைகதைகளையும் தாம் கொண்டு வந்த ஆபாசகதைகளையும் திரித்து  ஒரு தமிழக துவேச புத்தகம் எழுதினார்கள். இதனால் தான் மகாவம் தமிழிலோ அல்லது வட மொழியிலோ எழுதப்படாமல் பாளியில் எழுதப்பட்டது.

 

இந்த வடநாட்டு beasality கதைகள் இலங்கையின் பௌத்த வரலாற்றில் தலை காட்டி இருப்பது இந்த துரத்தப்பட்ட வடநாட்டு வெறித்துறவிகள் கொண்டு வந்த போது மட்டுமே. இது அதற்கு முதலோ அதன் பின்னரோ என்றுமே இலங்கை பௌத்தத்தில் வரவில்லை.  ஆனால் வட நாட்டு புரண மதங்களில் இவை கட்டுக்கடங்காகாதவை. மேலும் கவனிக்கப்பட வேண்டியது சில பௌத்த மிருக்கக் கதைகள்தான் சிபிச்சக்கரவர்த்தி, மனு நீதிகண்ட சோழன் கதைகள். இவை புராண கதைகளுக்கு எதிராக தாயாரிக்கப்பட்ட தென் நாட்டுக்கதைகள்.

 

ஆக இலங்கையில் மதத் துவவேசம் குடியேற்றவாசிகளாக வந்த வங்காளிகள் கொண்டு வந்தவையும் அல்ல. இலங்கையில் தானாக உதித்ததுமல்ல.  தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட வடநாட்டு பௌத்த துறவிகள் விதைத்தது மட்டும்தான். கைமுனு கூட ஒரு தமிழ் மன்னனே. எப்படி திராவிடக் கதைகளான பாரதம், இராமாயணம் திரிக்கப்பட்டு கிருஸ்ணக்கறுபன் ஆரியனானானோ அப்படி திரிக்கப்பட்ட கதைதான் கைமுனு கதை கூட. கைமுனு தமிழ் பேசிய தென்னிலங்கை அரசன் மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.