Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் உள்நாட்டு போர் வரலாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Featured Replies

ஏப்ரல் 09, 2013  at   5:31:18 PM

 

தமிழர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், இலங்கையில் மீண்டும் உள்நாட்டு போர் வர வாய்ப்புள்ளதாக, இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், மனித உரிமை விவகாரத்தில், இலங்கைக்கு எதிரான அனைத்து வழிமுறைகளும் பரிசீலிக்கப்படும் என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதர் சைசன் தெரிவித்துள்ளார்.

மறுவாழ்வு மற்றும் பொறுப்பேற்பு பிரச்னைகளை சரியாக அணுகாத சமூகங்கள் மீண்டும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் அதே போர்ச் சூழலைச் சந்தித்த வரலாறுகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமானது என்றாலும், இலங்கை நிலைத்திருக்க இது அவசியம் என்றார்.

மனித உரிமை விவகாரத்தில், இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள உலகளவிலான ஒருமித்த கருத்தை உருவாக்க ஒபாமா நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும் சைசன் கூறினார். இலங்கையில் அனைத்து குடிமக்களும் ஒன்றுபட்ட நாட்டில் பாதுகாப்புடனும், அமைதியுடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்றும் சைசன் கூறினார்.

 

http://puthiyathalaimurai.tv/us-warns-sri-lanka

 

உள்நாட்டு யுத்தத்தை தவிர்த்து ஒரு தீர்வை அமெரிக்காவால் கொண்டுவர முடியும். முடிந்தால் அதை ஒபாமா நிர்வாகம் செய்தல் வேண்டும். இன்னொரு போரை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

உள்நாட்டு யுத்தத்தை தவிர்த்து ஒரு தீர்வை அமெரிக்காவால் கொண்டுவர முடியும். முடிந்தால் அதை ஒபாமா நிர்வாகம் செய்தல் வேண்டும். இன்னொரு போரை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

 

தமிழ் ஈழத்திற்கான இறுதி திறவுகோல் ஒரு ஆயுத போராட்டமாகவே இருக்கமுடியும். அதற்கான வித்து இன்று தமிழ் நாட்டில் இடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்திற்கான இறுதி திறவுகோல் ஒரு ஆயுத போராட்டமாகவே இருக்கமுடியும். அதற்கான வித்து இன்று தமிழ் நாட்டில் இடப்பட்டுள்ளது.

 

இன்னும் நீங்கள் இதில் நம்பிக்கை வைத்துள்ளீர்களா? சீமான்...தமிழ்நாடு ஒரு தனிஅரசாக இருந்திருந்தாலே எமக்கு ஈழம் எடுத்துதரமுடியாமல் தவித்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"அமெரிக்க அதிகாரியின் பேச்சு நகைப்புக்கிடமாக உள்ளது.. போர் வேண்டுமென்றால் சொகுசான அமெரிக்க வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு இவர் போய் போராட்டத்தை முன்னெடுக்கலாமே.."

 

"இவரின் பிள்ளை குட்டிகள் அமெரிக்காவில் சொகுசாக வாழ எம்மக்கள் மீண்டும் துயரத்தை அனுபவிக்க வேண்டுமா"?

 

"இப்படி இவர்கள் உசுப்பேற்றிவிட்டுத்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம்..!"

 

Spoiler
வேறு யாராவது சொல்லியிருந்தால் இப்பிடித்தான் கருத்துகள் வந்திருக்கும்.. :D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து என்ன தெரியுது நாங்கள் போர் செய்து நிலத்தை மீட்டு.. விடுதலை அடையக் கூடாது.. ஆனால் இவர்கள் விரும்பிற வடிவத்தில்.. விடாமல் சொட்டிச் சொட்டி போர் செய்து.. இவர்களின் ஆதிக்க நலனிற்கு உதவி செய்து கொண்டிருந்தால் இவர்கள் எங்களுக்கு சில பிச்சைகளைப் போட்டுக் கொண்டிருப்பார்கள்..! இன்றேல் பயங்கரவாதி ஆக்கி எம்மையே அழிக்க ஆயுதம்.. ஆலோசனை.. உதவி எல்லாம் செய்வார்கள்..! :icon_idea:

மிசேல் சிசனின் பேச்சு மற்றைய தளங்களில் விரிவாகப் போடப்பட்டிருக்கு.  எனவே அதன்படி "போராட்டம் வரும்" என்பது உண்மையில் தமிழ் மக்கள்  போராட்டம் ஒன்றுக்கு தாயார் ஆகிறார்கள் என்பதை வேவுபார்த்து வந்து பேசிய பேச்சல்ல.

 

இலங்கையில் அமெரிக்கா புதிய (கொள்கை) குழப்பம் ஒன்றை எதிர்நோக்குகிறது.

 

மிசேல் சிசனின் இந்தக் கருத்தானது அமெரிக்க அரசியலில் சீன, இலங்கையின் கடுமையான லொபியின் பின் வருவது. அதிபர் தேர்தலை விட பலமான அரசியல் நடந்துதான் சுசான் ரைஸ் தோற்கடிக்கப்பட்டவர். கெரி ராஜாங்க அமைச்சராக வரக்காரணம் அவர் ஒபாமாவின் நண்பன் என்பது மட்டுமல்ல. மக்கெனும் காரணம். மகேயினின் அண்மைய பேச்சுகளை படித்தவர்களுக்கு தெரியும் இவர் இன்றைய ஒரு அமெரிக்க எதிர்ப்புவாதி என்பது. இவர் கெரியை கொண்டுவர முயற்சித்தது அமெரிக்கவுக்கு நன்மையாக இருக்கட்டும் என்று அல்ல. மனித உரிமைகளில் ஆர்வம் உடைய சுசான் றைஸ்சை விழுத்தவே.  சீனா இலங்கைக்கூடாக மேற்கு நாடுகளுக்குசைக்கிள் மட்டும் விற்கவில்லை. எப்படி அமெரிக்கா தனது கொள்கைகளை மற்றைய நாடுகளுக்கு விற்கிறதோ அது போலவேதான் சீனா தனது திரவியங்களை அங்கும் விற்கிறது.

 

இன்றைய வட கொரியாவின் பெரும்பாலான நடத்தைகளும் கெரி சீனா, ருசியாவுடன் சினேகிதம் ஏற்படுத்திக்கொண்டுவிட்டால் தனக்கு தீமை என்பதாலேயே. இதே அரசியல்தான் இலங்கையிலும். இவர் சீனாவுடன் நட்பை அதிகரித்தால் அது இலங்கைக்கு பழைய குடியரசு கட்சி போன்றதொரு ஆதரவை கொண்டுவரமுடியும் என்பதே. இதனால் சீனா இலங்கையில் காலூன்றுவதை பழையபடி அமெரிக்கா கண்டுகொள்ளாது.

 

இந்தியாவின் நிலைமை போலவே, எவ்வளவு உதவி இலங்கைக்கு செய்தும், அமெரிக்காவுக்கு இதுவரையில் இலங்கையில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா  "நாம் என்ன செய்ய முடியும்? நாம் சொன்னால் இலங்கை கேட்குதில்லையே" என்று மன்மோகன் சிங் சொன்னது போலச் சொல்லிவிட்டு வாழாவிருக்காமல் தொடர்ந்து சிலவற்றை முயற்சிக்கிறது.

 

இலங்கையில் முஸ்லீம் சமூகமல்லாமல் வேறு எந்த சமூகமும் இப்போதைக்கு குறைந்தபட்டசம் சற்று பெரிய ஆர்ப்பாட்டங்களையே போட முயலாது. ஆனால் அமெரிக்காவுக்கு இலங்கை முஸ்லீம் சமூகம் இன்னமும் எட்டாத தூரத்திலேயே இருந்து வருகிறது. 

 

போர் நேரம் அமெரிக்கா முஸ்லீம்களைத்தான் பிரதானமாக கருத்தில் கொண்டிருந்தது. இதை அவதானித்த  அரசு அமெரிக்க  பிரேணை எதிர்ப்பில் பிரதானமாக முஸ்லீம்களை மட்டுமே பயன்படுத்தியது. இன்றைய இலங்கையின் முஸ்லீம் எதிர்ப்பு நிலையில் இனி ஒரு போர் வருவதாயின் அது முஸ்லீம் இளைஞர்கள் முன்னெடுத்தால் சரி. ஆனால் அரசு அதை முன் கூட்டியே எதிர்பார்த்துத்தான் முஸ்லீம்களைகளையும் அமெரிக்காவையும் நேரத்திற்கே பிரித்துவைத்தது.  

 

பிளேக் ஒரு காலத்தில் JVP யுடன் நல்ல உறவுகளை வளர்த்திருந்தார். அதை அவதானித்த அரசு JVPயை  முழுதாக அழித்தொழித்துவிட்டது. அமெரிக்காவால் உயர்த்திவைக்கபட்ட பொன்சேக்கா சத்தம் சாவடி இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்.

 

அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட சீராணியோ தனது பதவி போனதற்கே எதிர்ப்புக்காட்டவில்லை. அமெரிக்க சார்பு மேற்கு நாடுகள் இலங்கை பாரளுமன்றத்திற்கெதிராக செயல்ப்பட்டு தெரிவு குழுவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த முயல்கின்றன என்று  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. சம்பந்தர் ஒருவர் மட்டும் இதனால் சிறைக்கு போக ஒரு சந்தர்ப்பம் இருந்தது.  

 

சிங்கள மக்களிடம் இருந்து எதுவும் வராது.

 

தமிழ்மக்கள் முற்று முழுதாக இலங்கையில் கவனிக்கப்பட்டுவிட்டார்கள். இதை, தம்மீது வரத்தக்க பழிகளை தவிர்க்க, அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் புலிகளை மட்டும்தான் அழித்தோம் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் எம்மை விட அரசியல் முதிர்ச்சி உள்ள அவர்களுக்கு அழிந்தது இலங்கையில் தமிழர்கள்தான் என்பது நன்றாகத்தெரியும். இதனால்தான் மிசேல் சிசன் இலங்கையில் "இன்னொரு போர் வரும்" என்று சொல்வது,  தொடர்ந்து இலங்கை அரசைக் கையாள வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கும் பாதையில் ஒரு அங்கமே அல்லாமல் அவர்கள் ஒரு போர் வரும் என்று எள்ளவும் நம்பவும் இல்லை. அப்படி ஒரு போரை உசுப்பேத்தி நடத்தி தங்கள் நலங்களை இலங்கையில் இனி கவனிக்க முடியும் என்று கனவு காணவுமில்லை.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மீண்டும் உள்நாட்டு போர் வரலாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை"

 

உதுக்கு தானே இவ்வளவு பாடு. 6 லட்சம் இருக்காம் அதில ஒரு 2 எண்டாலும் அடுத்த கட்டத்தோட கொண்டு வந்திட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டத்துக்கு உங்களைத் தான் தலைவராக்கப் போகினமாம். ஏன்னா நீங்கள் 6 இலட்சத்தை 12 இலட்சமும் ஆக்கி.. தமிழீழமும் பெற்றுக் கொடுக்கும் பெரும் வித்தை கற்றவராமே..! உங்களை பாவிக்காமல் விட்டதால தானாம்.. இத்தனை அழிவும். :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.