Jump to content

கணவாய் பிரட்டல்கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கணவா மீன் - 500 கிராம்
  • வெங்காயம் - 50 கிராம்
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு/உள்ளி - பாதி
  • இஞ்சி - அரை அங்குலத்துண்டு
  • கறித்தூள் - 3 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை/தேசிக்காய் - பாதி
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

 

 

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு பல் வரும். அதனையும் எடுத்து
விடவும். உடல் பகுதியில் ஒரு ஓடு இருக்கும். அதனையும் எடுத்து விட்டு தோலை நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

 

துண்டுகளாக்கிய கணவாவுடன் ஒரு தேக்கரண்டி கறித்தூள் மற்றும் உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல், பாத்திரத்தை மூடி வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சூடானதும் கணவாவிலிருந்து தண்ணீர் வரும். அந்த தண்ணீரே கணவா வேக போதுமானது. வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி விட்டு உருவி வைக்கவும்.

 

ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

 

வெங்காயம், பச்சைமிளகாய் சற்று வதங்கியதும் நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி விட்டு, மீதமுள்ள கறித்தூளையும் அதில் போட்டுப் பிரட்டவும்.

 

அதன் பின்னர் அதனுடன் அவித்து எடுத்து வைத்துள்ள கணவாவை போட்டு நன்கு பிரட்டவும்.

 

அதில் உள்ள தண்ணீர் வற்றியதும் கரம் மசாலாவும், கறிவேப்பிலையும் போட்டு கிளறி விட்டு இறக்கி வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விடவும்.

 

சுவைமிக்க கணவாய் பிரட்டல்கறி தயார். இதில் தேங்காய்பால் சேர்த்தும்

செய்யலாம்

 

.செய்து பார்த்து அழிவுகளை  சிசி முடிவுக்ளை அறிவிக்கவும்
கணவாயும் கள்ளு போத்தலையும் மறக்கமுடியாதுள்ளது

நன்றி அறுசுவை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் பிரட்டல் கறிக்கு நன்றி...நான் எப்படித் தான் கணவாய் சமைத்தாலும் என்ட கறி பிரட்டல் கறியாய் வருகுதில்லை :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் பிரட்டல் கறிக்கு நன்றி...நான் எப்படித் தான் கணவாய் சமைத்தாலும் என்ட கறி பிரட்டல் கறியாய் வருகுதில்லை :unsure:

 

தண்ணியைக் கொஞ்சம் குறையப் பாவித்தால் நன்றாகப் பிரட்டி எடுக்கலாம் :D

 

இணைப்பிற்கு நன்றி முனிவர் ஜீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் பிரட்டல் கறிக்கு நன்றி...நான் எப்படித் தான் கணவாய் சமைத்தாலும் என்ட கறி பிரட்டல் கறியாய் வருகுதில்லை :unsure:

 

எடியே கறிக்கு தண்ணியே விடாதை.......உனக்கு  விருப்பமான அளவுக்கு கறித்தூள்,உப்பு எல்லாத்தையும் கணவாயோடை பிரட்டிப்போட்டு....அடுப்பை மெல்லியசூட்டிலை விட்டுட்டு...பிரட்டின கணவாயை ஒருசட்டிக்கை போட்டு மூடி அடுப்பிலை அரை மணித்தியாலம் வைச்சுப்பார்...அப்பதெரியும் விஷேசம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் பிரட்டல் கறியை.... புட்டு, இடியப்பத்துடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.smiley-eatdrink022.gif

தகவலுக்கு நன்றி முனிவர் ஜீ. :)

 

முனிவர் இப்ப மச்சம் சாப்பிட தொடங்கி விட்டாரா.... :o  அபச்சாரம், அபச்சாரம். :D  :lol: 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சித்தி தண்ணியை அதிகம் ஊற்றிக்கொள்ள கூடாது ஊற்றினால் அது பிரட்டல் ஆகாது  கு.சா சொன்னது போல

முக்கியமானது ....ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்[அலர்ஜ்ஜிக்]

நன்றி தமிழ் சிறி நம்மட ஊரில் கணவாய் அதிகம் கிடைக்கும் அதுதான் இந்த இணைப்பை இணைத்தேன் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி வாதியார்,கு.சா அண்ணா இனி மேல் தண்ணீர் விடாமல் கணவாய் சமைத்து விட்டு எப்படி இருக்குது என்று எழுதுகிறேன் :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் முனிவர், 
 
இந்த பிரட்டல் கறிக்கு ஓட்டுக் கணவாயா அல்லது ஊசிக் கணவாயா என்று குறிப்பிடவில்லையே ....  :D
 
குட்டி கணவாயில் பால் பிரட்டல் அந்தமாதிரி இருக்கும்.  :wub:
 
பகிர்விற்கு நன்றி முனிவர். :)   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கு கணவாய்
ஓட்டு கண‌வாய்
ஊசி கணவாய் இப்படி பல சரக்குக்குகள் உள்ளது :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.