Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகனேரி மோதல்: 12 இராணுவத்தினர்பலி. 4 புலிகள் வீரமரணம்

Featured Replies

தூயவன்.. ரெண்டுபக்க செய்தியெண்டு ஒரு சங்கதி இருக்குதல்லோ.. அதை வைச்சுத்தான் முடிவெடுக்கலாம்.. இங்கத்தைய செய்தியளிலை கொஞ்ச சிக்கலுகள் இருக்கு.. ரெண்டுபக்கமும் யுத்தநிறுத்த மீறல் எண்டுசொன்னால் எப்பிடி? யார் மீறினார்கள் எண்டுசொல்ல கண்காணிப்புக்குழு விசாரணைதான் உதவும்.. அதாலைதான் கண்காணிப்புக்குழு சொல்லுற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுறதா சொல்லுறன்..

கருணா அறிக்கைதந்தால்தான் நம்புவீரோ எண்டு கேக்கிறீர்.. நேற்று கண்காணிப்புக்குழு..பொலீசோடை வந்து தங்கடை ஓஃபீசை ரெய்ட்பண்ணி வெறுங்கையோடை போனதா அறிக்கை விட்டிருக்கிறாங்கள்.. நான் நம்பினானனே? சும்மா கதை விடுறீர்.. :P

கண்காணிப்பு குழு என்ன கண்காணிப்புக் குழு!

கறுணா அறிக்கை தந்தால் தான் நம்புபலாம் ஆக்கும்!

  • Replies 71
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்.. ரெண்டுபக்க செய்தியெண்டு ஒரு சங்கதி இருக்குதல்லோ.. அதை வைச்சுத்தான் முடிவெடுக்கலாம்.. இங்கத்தைய செய்தியளிலை கொஞ்ச சிக்கலுகள் இருக்கு.. ரெண்டுபக்கமும் யுத்தநிறுத்த மீறல் எண்டுசொன்னால் எப்பிடி? யார் மீறினார்கள் எண்டுசொல்ல கண்காணிப்புக்குழு விசாரணைதான் உதவும்.. அதாலைதான் கண்காணிப்புக்குழு சொல்லுற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுறதா சொல்லுறன்..

சரி நீங்கள் முடிவெடுங்கள், கண்காணிப்புக் குழுவின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு????? :roll:

அது சரி, கண்காணிப்புக்குழுவின் தீர்ப்புச் சொல்லுவது புலிகளுக்கும், சிங்கள அரச படைகளுக்கும் இடையில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு. அதை அந்த இரு தரப்பும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும், அல்லது நிராகரிக்கமுடியும். அப்ப நீர் எந்தத் தரப்பின் பிரதிநிதி? :P

ஐக்கியநாடுகளின் பிரதிநிதியில்லை.. கவலையை விடும்.. எனது கருத்து என்னண்டு கேட்டதுக்கு பதில்குடுத்தா அதுக்குப்பிறகு எண்டு வாலாட்டுறீர்.. :P

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கியநாடுகளின் பிரதிநிதியில்லை.. கவலையை விடும்.. எனது கருத்து என்னண்டு கேட்டதுக்கு பதில்குடுத்தா அதுக்குப்பிறகு எண்டு வாலாட்டுறீர்.. :P

அறிக்கைகளை, தீர்ப்புக்களை வைத்து என்ன செய்யமுடியும்? தமிழரின் துன்பங்களில் துள்ளி மகிழும் கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் நீர் என்பது தெரிந்த விடயமாச்சே. நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம்.

:evil:

ஐக்கியநாடுகளின் பிரதிநிதியில்லை.. கவலையை விடும்.. எனது கருத்து என்னண்டு கேட்டதுக்கு பதில்குடுத்தா அதுக்குப்பிறகு எண்டு வாலாட்டுறீர்.. :P

இங்க வந்து வாலாட்டி நரித்தனம் பண்ணுவது நீர்.

உமக்கு எமது போராட்டமும் மக்களின் அவலமும் உமது வக்கிரத்தைத் தீர்ப்பதற்கான வடிகால்கள்.

இங்க வந்து உருப்படியா என்ன கருதுக்களை எழுதி உள்ளீர்? நக்கல் செய்வதும் இங்கிருப்பவர்கள் ஆதிரமூட்டுவதையும் தான் செய்துகொண்டிருகிறீர்.

உம்மைப் போன்றவர்களின் கையாலாகத் தனம் அது தான் உருப்படியா ஒன்றும் செய்யவும் முடியாது சொல்லவும் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்.. ரெண்டுபக்க செய்தியெண்டு ஒரு சங்கதி இருக்குதல்லோ.. அதை வைச்சுத்தான் முடிவெடுக்கலாம்.. இங்கத்தைய செய்தியளிலை கொஞ்ச சிக்கலுகள் இருக்கு.. ரெண்டுபக்கமும் யுத்தநிறுத்த மீறல் எண்டுசொன்னால் எப்பிடி? யார் மீறினார்கள் எண்டுசொல்ல கண்காணிப்புக்குழு விசாரணைதான் உதவும்.. அதாலைதான் கண்காணிப்புக்குழு சொல்லுற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுறதா சொல்லுறன்..

கருணா அறிக்கைதந்தால்தான் நம்புவீரோ எண்டு கேக்கிறீர்.. நேற்று கண்காணிப்புக்குழு..பொலீசோடை வந்து தங்கடை ஓஃபீசை ரெய்ட்பண்ணி வெறுங்கையோடை போனதா அறிக்கை விட்டிருக்கிறாங்கள்.. நான் நம்பினானனே? சும்மா கதை விடுறீர்.. :P

அப்பு இதுதானண புலிக்காய்ச்சல் எண்டுறது. கண்காணிப்புக்குழு தெளிவாச் சொல்லியிருக்கே 'இப்பகுதி பொதுவாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இப்பகுதியிற்குள் ஏன் சிறீலங்கா இராணுவதத்தினர் வந்தார்கள் என்று விளக்கம் கோரப்படும்' என்று. அதனைக்கவனிக்கலயா. அதுக்குமேல வேற ஏதாவது செய்தி சொல்லணுமா. இவ்வளவு நாளும் கொஞ்ச கொஞ்ச பேரா விட்டிட்டு இப்ப கூட்டமா வந்தாங்க உங்க கூட்டம். வசமா மாட்டுப்பட்டிட்டாங்க. காய்ச்சல் பிடிச்சா இப்பிடித்தான் எதுவும் கண்ணுக்கு சரியாத் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகனேரியில் கொல்லப்பட்ட 12 இராணுவத்தினரின் சடலங்கள் ஒப்படைப்பு

[சனிக்கிழமை, 15 யூலை 2006, 15:23 ஈழம்] [ம.சேரமான்]

மட்டக்களப்பு வாகனேரியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்ட 12 சிறிலங்கா இராணுவத்தினரது உடல்கள் இன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

செங்கலடி கறுத்தப்பாலத்தில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஒப்படைக்கப்பட்ட சடலங்களை முதலில் வாழைச்சேனை மருத்துவமனைக்கு செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் கொண்டு சென்றனர். அங்கு சிறிலங்கா இராணுவ அதிகாரி சடலங்களை அடையாளம் காட்டினார். அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் அந்த சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பொலநறுவ பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் விவரம்:

லெப்ரினன்ட் எம்.ஏ.கே.ஜி. ஹனன்கல,

லெப்ரினன்ட் ரி.பி.எச்.எஸ். பெர்னாண்டோ,

கோப்பரல் வி.பி. ஜயசிங்க,

கோப்பரல் எச்.டி. ஜயசிறி,

கோப்ரல் ஏ.பி.ஆர். பத்திரன,

லான்ஸ் கோப்ரல் என்.எஸ். தலவாத்தகே,

லான்ஸ் கோப்ரல் டபிள்யு. லசந்த,

லான்ஸ் கோப்ரல் எல்.ஏ.எம். ஞானசேன,

லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.சி ரட்நாயக்க,

பிறைவேட் கே.கே. பெரெரா,

பிறைவேட் எஸ்.ஏ.ஜகத்,

பிறைவேட் எம்.எம்.எஸ்.என் அழகக்கோன்

வாகனேரியில் வெள்ளிக்கிழமை காலை பெருந்தொகையான சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் 5 கிலோ மீற்றர் தூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்தியதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 4 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு பதில் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதில் 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் நிலையிலான ஆர்.எம்.கருணாரட்ண என்பவரை விடுதலைப் புலிகள் கைது செய்துள்ளனர்.

ஆனால் சிறிலங்கா இராணுவம் அந்நபரை காணவில்லை என்று அறிவித்துள்ளது.

செய்தி மூலம் புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்.. ரெண்டுபக்க செய்தியெண்டு ஒரு சங்கதி இருக்குதல்லோ.. அதை வைச்சுத்தான் முடிவெடுக்கலாம்.. இங்கத்தைய செய்தியளிலை கொஞ்ச சிக்கலுகள் இருக்கு.. ரெண்டுபக்கமும் யுத்தநிறுத்த மீறல் எண்டுசொன்னால் எப்பிடி? யார் மீறினார்கள் எண்டுசொல்ல கண்காணிப்புக்குழு விசாரணைதான் உதவும்.. அதாலைதான் கண்காணிப்புக்குழு சொல்லுற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுறதா சொல்லுறன்..

கருணா அறிக்கைதந்தால்தான் நம்புவீரோ எண்டு கேக்கிறீர்.. நேற்று கண்காணிப்புக்குழு..பொலீசோடை வந்து தங்கடை ஓஃபீசை ரெய்ட்பண்ணி வெறுங்கையோடை போனதா அறிக்கை விட்டிருக்கிறாங்கள்.. நான் நம்பினானனே? சும்மா கதை விடுறீர்.. :P

வாகனேரி எந்த ஏரியாவிற்குள் வருது என்று தெரிந்த பிறகு வாங்க உமக்க பதில் சொல்கின்றேன். அதற்குப் பிறகு உந்தக் யுத்தநிறுத்த மீறல் ஏன் ஏற்பட்டது என்பதை விளங்கப்படுத்தலாம்!

மற்றது கறுணாக்கும்பல் தங்களின் அரசியல் பிரிவுக்குள்ள வைத்து பயிற்சி கொடுக்கமாட்டார்கள் என்ற சின்ன லொஜிக் கூடத் தெரியமாட்டீர்கள் என நினைக்கின்றேன்!

800 மீற்றர் இடைவெளியுள்ள சூனியப்பிரதேசத்தில் தான் முகாம் இட்டிருக்கினமாம்! அதாவது இராணுவக்காவலரணில் இருந்து 5கிலோ மீற்றர் தள்ளித் தானம் அது இருக்கும் எண்டு அவையின் பேச்சாளர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் சமீபத்தில் வாங்கிக் கட்டின நேரம் பிபிசிக்குச் சொன்னவர்! 800மீற்றருக்கள்ள தான் 5000 மீற்றர் வரும் எண்டு படிப்பிச்ச அந்த வாத்தியை முதலில் கண்டு பிடிக்க வேணும்!

:wink:

பயப்பிடுறியள்போலை.. அவசரப்படுறியள்.. ஏதோ நடந்து முடிஞ்சுது.. கிலோமீற்றர் கணக்குப்பாத்து வாத்திமார் போஸ்மோட்டம் றிப்போட் தருவாங்கள்.. அதுமட்டும் பொறுங்கோவன்.. நிதானம் முக்கியம்.. அவங்கடை தீர்ப்புதான் என்னுடைய தீர்ப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கடை தீர்ப்புதான் என்னுடைய தீர்ப்பு..

உம்மட தீர்ப்பை ஆர் பாத்துக்கொண்டிருக்கினம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கடை தீர்ப்புதான் என்னுடைய தீர்ப்பு..

அங்கை சுவிஸிள தீர்ப்பு வலங்கி உங்கடை ஆல் நாழு மாசமா என்னுகிரார் கம்பி!!! அவட்டை அடுத்தவர் பவுடர் டீபன் அடுத்தது பிறிட்டணிள் கிட்டடியில் என்னப் போகிராராம் கம்பி!! ... இப்படியே தொடறப்போகுது!!! ... ஆறுக்குத் தெறியும் மடிவதனனும் .. 1 2 3 4 5 6 7 8 9 ..x.. :smile2:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த வாகனேரியில் எல்லாம் கையும் மெய்யுமாக பிடிபட்டி போட்டதோட நாறிப்போச்சு!! இல்லாட்டி ...

... இங்குள்ள ஈ, இலையான். தண்ணி, பீ, கராட்டி ... எல்லாம் கோனல் கருனா பீம்பாம் வைத்து பூறிசு விட்டுட்டாரென்று போடாப் போட்டிருப்பினம்!!!! ..சிலிக் பண்ணிட்டுது!!!

உதுகள் கிடக்க, சிங்கள 200000 ஆமியும் கோணலோடை சேர்ந்திட்டாங்களாம்!!!!! ப்ப்ப்ப்ப்ப்பூஊஊஉ......

கையும் மெய்யுமா பிடிபட்டிருந்தால் அரசாங்க யுத்தநிறுத்தமீறலெண்டு கண்காணிப்புக்குழு உடனடியா அறிவித்திருக்கும்.. இன்னும் அறிவிக்கவில்லை.. என்றபடியால் இந்த மீறலில் சிக்கலிருக்கின்றது.. இது எனது கணிப்பு..

கருணாகுழு திருகோணமலையை அண்டிய பகுதிகளில்தான் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறிவருகிறார்கள்.. உங்கள் செய்திகளே அவர்களெவரும் இல்லையென்று உறுதிப்பட சொன்னதன்பின்.. வேடிக்கையான கதை..

உந்த வாகனேரியில் எல்லாம் கையும் மெய்யுமாக பிடிபட்டி போட்டதோட நாறிப்போச்சு!! இல்லாட்டி ...

... இங்குள்ள ஈ, இலையான். தண்ணி, பீ, கராட்டி ... எல்லாம் கோனல் கருனா பீம்பாம் வைத்து பூறிசு விட்டுட்டாரென்று போடாப் போட்டிருப்பினம்!!!! ..சிலிக் பண்ணிட்டுது!!!

உதுகள் கிடக்க, சிங்கள 200000 ஆமியும் கோணலோடை சேர்ந்திட்டாங்களாம்!!!!! ப்ப்ப்ப்ப்ப்பூஊஊஉ......

உந்த வாகனேரியில் எல்லாம் கையும் மெய்யுமாக பிடிபட்டி போட்டதோட நாறிப்போச்சு!! இல்லாட்டி ...

... இங்குள்ள ஈ, இலையான். தண்ணி, பீ, கராட்டி ... எல்லாம் கோனல் கருனா பீம்பாம் வைத்து பூறிசு விட்டுட்டாரென்று போடாப் போட்டிருப்பினம்!!!! ..சிலிக் பண்ணிட்டுது!!!

:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

பயப்பிடுறியள்போலை.. அவசரப்படுறியள்.. ஏதோ நடந்து முடிஞ்சுது.. கிலோமீற்றர் கணக்குப்பாத்து வாத்திமார் போஸ்மோட்டம் றிப்போட் தருவாங்கள்.. அதுமட்டும் பொறுங்கோவன்.. நிதானம் முக்கியம்.. அவங்கடை தீர்ப்புதான் என்னுடைய தீர்ப்பு..

உம்முடைய தீர்ப்பை யார் பாத்தது? ஆனால் நீங்கள் எப்படியும் நழுவப்பாக்கின்றது அப்படியே தெரியுது. ஏன் பதற்றப்படுகின்றியள்! கண்காணிப்புக் குழு ஏதும் பட்டும்படாமலும் அறிக்கை விட மாட்டுதோ என்ற ஏக்கம் அப்படியே தெரியுது! என்னசெய்வது! எல்லோரும் உண்மையைப் புட்டு வைத்த பிறகு எதிர்பார்வை வேறு யாரிலும் வைக்கவேண்டிக்கிடக்கு! :wink: :P

உதே பிரச்சனை தான் சிறிலங்கா அரசுக்கும். இராணுவப் பேச்சாளர் என்றவர் கொடுத்த பேட்டி கேட்டிருப்பிள் தானே! அவருக்கு என்ன சொல்வது என்று தேரியாமல் கதைக்கவேண்டிக் கிடந்தது. எல்லோரும் செத்துப் போனாங்கள் என்று உறுதியாகச் சொன்னபிறகு, அவர் அப்பவும் ஆட்களைக் காணவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். பேசாமல் சிஎன்என், பிபிசிக்காரன், போல ஆரையும் பேச்சாளராகப் போட்டிருக்கலாம். அவங்களுக்கு தெரிகின்ற அளவுக்கு கூட அந்த அமைப்பில் இருக்கின்ற ஆளுக்குத் தெரியவில்லை! :D:D

வழமையாக கண்ணீர் அறிக்கை விடும், மகிந்தவே மௌமாக இருக்கின்றார் என்று தெரிந்தபிறகு நீர் டூப் போடுகின்றீர்! மகிந்தவிற்கு கூட இவ்வளவு விசுவாசமே கிடையாது! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாகுழு திருகோணமலையை அண்டிய பகுதிகளில்தான் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறிவருகிறார்கள்.. உங்கள் செய்திகளே அவர்களெவரும் இல்லையென்று உறுதிப்பட சொன்னதன்பின்.. வேடிக்கையான கதை..

ஜயோ பாவம்!!

ஒரே ஒருக்கால் புலிகள் வந்து அடிச்ச பின்பு ஒரே ஓட்டத்தில் திருமலைக்கு ஓடிப் போகிவிட்டனார்களா? :roll: :P

அப்படியென்றால் நீர் சொன்ன கருத்து ஒன்று உதைக்கின்றதே! திருமலையில் கறுணா கும்பல் இயங்குது என்று தெரிந்த பின்னர், மட்டக்களப்பின் அரசியல் அலுவலகத்தில் ஏனாம் கடத்திக் கொண்டு போன குழந்தைகளைப் போய்த் தேடினவர்கள்! திருமலையில் அல்லவா தேடியிருக்க வேண்டும்!! :idea:

ஊசி தேடின கதையாத் தான் கிடக்குது! நல்லா நடத்துங்கோ! :wink:

விடுதலைப் புலிகளின் பகுதியிலேயே வாகனேரி மோதல் இடம்பெற்றது - கண்காணிப்புக் குழு தெரிவிப்பு

மட்டக்களப்பு வாகனேரியில் நேற்றுமுன் தினம் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது என யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கண்காணிப்புக் குழு வின் பேச்சாளர் ஜி.சோமஸன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடுகையில் வாகனேரியில் சம்பவ இடத்துக்கு எமது கண்காணிப்பாளர்கள் சென்று பார்வையிட்டனர். அந்தப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என கண்காணிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்றார் அவர்.

மேலே உதயன் பத்திரிகைச் செய்தி

மதிவதனன், கண்காணிப்புக்குழுவும் சொல்லிப்போட்டுது. என்ன செய்வம். வழிதவறி வந்தவங்களைச் சுட்டுப்போட்டு வீரம் கதைக்கிறாங்கள் எண்டு ஒரு றீல் வைச்சிருக்கிறியள். எடுத்து சுத்திவிடுவமா?

சா சா அதைவிட திறமானது ஒண்டு வைச்சிருக்கிறார, அப்பாவி பொதுமக்களை சுட்டுப்போட்டு இராணுவ உடைகள் போட்டு ஆயுதங்களோடு படம் போடீனம் எண்ணப்போறார்.

ம்.. எனக்காண்டி கனக்க மூளையை விடுறியள்.. அவசரப்படாதீங்கோ.. கொஞ்சம் பொறுங்கோ.. உத்தியோக பூர்வ அறிக்கை வரட்டும்..

உதைத்தானே நாங்களும் சொல்லுறம்...! இராணுவ பேச்சாளர் BBC க்கு சொல்லீட்டார் புலிகள் தங்களின் பிரதேசத்துக்குள் ஊடுருவி தாக்கினர் எண்டும் வெறும் 6 பேர் காயமாம்... ஆனால் 13 பேரைக்கானவில்லை எண்டும்... இதுக்கை எங்கை இருந்து அறிக்கை வரவேணும், வண்டு அடிதடியிலையா..??? :wink:

இந்தாரும் மேலதிக செய்தி..

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5179508.stm

மற்றவையின்ர கருத்தை தன் கருத்தாய் கொண்டு வந்து கொட்டுறதே உம்மட வேலையாப்போச்சு...! சொந்தமாய் கருத்து இல்லாதவன் எல்லாம் மாற்றுக்கருத்தாளன்....! இதுதான் தமிழன்ர தலை எழுத்து....! :wink: :P :P

பயப்பிடுறியள்போலை.. அவசரப்படுறியள்.. ஏதோ நடந்து முடிஞ்சுது.. கிலோமீற்றர் கணக்குப்பாத்து வாத்திமார் போஸ்மோட்டம் றிப்போட் தருவாங்கள்.. அதுமட்டும் பொறுங்கோவன்.. நிதானம் முக்கியம்.. அவங்கடை தீர்ப்புதான் என்னுடைய தீர்ப்பு..

அங்கை இருக்கிற சனம் ஒண்டும் ஆமிமாமா "மா" "சீனி" தருவாங்கள் எண்டு அவையின்ர பக்கத்தில வந்து குடியேற இல்லையாமே....????

இல்லை ஆமிக்காறர் அரசியல் வேலைகாகத்தான் அங்கை போனவை எண்டு சொல்லுகினம் உண்மையே....???? (கருணா ஆக்கள்தான் அனுபினவையாம்) :wink: :P :P

ம்.. பிபிஸி இக்கிலீசுக்கு புதுஅர்த்தமெல்லாம் சொல்லுறியள்.. The Sri Lankan military denies going into Tiger areas.. எண்டு சொல்லுங்கொ..

:P

உதைத்தானே நாங்களும் சொல்லுறம்...! இராணுவ பேச்சாளர் BBC க்கு சொல்லீட்டார் புலிகள் தங்களின் பிரதேசத்துக்குள் ஊடுருவி தாக்கினர் எண்டும் வெறும் 6 பேர் காயமாம்... ஆனால் 13 பேரைக்கானவில்லை எண்டும்... இதுக்கை எங்கை இருந்து அறிக்கை வரவேணும், வண்டு அடிதடியிலையா..??? :wink:

இந்தாரும் மேலதிக செய்தி..

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5179508.stm

மற்றவையின்ர கருத்தை தன் கருத்தாய் கொண்டு வந்து கொட்டுறதே உம்மட வேலையாப்போச்சு...! சொந்தமாய் கருத்து இல்லாதவன் எல்லாம் மாற்றுக்கருத்தாளன்....! இதுதான் தமிழன்ர தலை எழுத்து....! :wink: :P :P

ஏன் பிபிசி சொன்னது என்று குளப்புறீர். பிபிசி தனது செய்தியாளர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு தனது அவதானிப்புகளை கூறவில்லை. சிறீலங்கா இராணுவப் பேச்சாளரை மேற்கோள் காட்டி அவர் சொன்தைத்தான் கூறுகிறது. செய்தியின் மூலமும் முக்கியம் அதை காவும் ஊடகங்களும் முக்கியம். செய்தி அறிக்கையில் குறிப்பிடப்படுவம் தகவல்களின் மூலம் ஊடகங்களின் களத்திலுள்ள செய்தியாளர்கள் நிரூபர்களின் நேரடி அவதானிப்பா இல்லை வேறொரு அமைப்பின் பேச்சாளர்களின் கூற்றுக்களை அறிக்கைகளை மேற்கோள் காட்டி கூறுகிறார்களா என்பது முக்கியம். பிபிசி ஆனது சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் அல்லது சிறீலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் பேச்சாளர்கள் போன்றோரை மேற்கோள்காட்டி வெளயிடும் தகவல்கள் நடுநிலமையான பிபிசியின் அவதானிப்பல்ல அவர்கள் மூலத்தை மேற்கோள் செய்து செய்தியை காவுவதைத் தான் செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்

வாகனேரி தாக்குதல் சிறீலங்காவின் யுத்த நிறுத்த மீறலாகும் கண்காணிப்பு குழு அறிவிப்பு.

மட்டக்களப்பு வாகனேரில் சிறீலங்காப் படையினர் வலிந்து தாக்கியதன் மூலம் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மீறியுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.

தாக்குதலானது விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளது என்று கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சுற்றுக்காவலில் ஈடுபட்ட படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதல் நடத்தியதாக சிறீலங்காப் பேச்சாளர் தெரிவித்திருந்த கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

வாகனேரியில் தாக்குதல் நடைபெற்ற இடத்தை கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டுள்ளதாகவும் அப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப் பகுதி எனவும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஒமர்சன் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

ம்.. கண்காணிப்புக்குழு அறிக்கை வரும்.. அவசரப்படுறியள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.