Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகனேரி மோதல்: 12 இராணுவத்தினர்பலி. 4 புலிகள் வீரமரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம் போட்டுக் காட்டின பிறகும், ஆமியின் உடலைக் கொடுத்த பிறகும் பட்டும்படாமலும் கண்காணிப்பு குழு அறிக்கை விடுமா எனக் காத்திருக்குமாம் கொக்கு!!

  • Replies 71
  • Views 9.3k
  • Created
  • Last Reply

இப்படியான எல்லாத்துக்கும் கண்காணிப்புக்குழு உத்தியோகபூர்வ அறிக்கை விடும்.. அரசாங்க யுத்தநிறுத்த மீறலெண்டு சொன்னால் அதுதான் எனது கருத்தும்.. அதைத்தான் எப்பொதும் சொல்கின்றேன்.. கவனிக்கமாட்டேன் என்கிறீர்களே..

:P

ம்.. பிபிஸி இக்கிலீசுக்கு புதுஅர்த்தமெல்லாம் சொல்லுறியள்.. The Sri Lankan military denies going into Tiger areas..

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

கூட்டிக்களிச்சுப்பாரும் கணக்கு சரியா வருகுது....!

The Sri Lankan military denies going into Tiger areas.. எண்டு சொன்னால் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கை போக இல்லையாம் ஆனால் புலிகளால் 12 பேர் செத்துப்போச்சினமாம்....

கணக்கு சரியா வருகுதா இல்லையா...?? :D:D:D

14 திகதி தமிசேவையில வந்த செய்திதான் உமக்கு நான் முதலில் சொன்னது...!

உமக்கு விசயம் தெரியாதே.... ஆங்கில சேவைக்கும் தமிழ்ச்சேவைக்கும் குறைந்தது 50 வித்தியாசம் இருக்கு....!

ம்.. கண்காணிப்புக்குழு அறிக்கை வரும்.. அவசரப்படுறியள்..

செத்துப்போன ஆமிக்காறன்களின்ர உடம்பை தங்கட ஏரியாக்கு கொண்டுவந்து போட்டுட்டு போஸ் குடுக்கிறாங்கள் எண்டுறீங்களே....????

சொல்ல வெக்கமாயில்லையே உங்கட ஏரியாவில வந்து அதுவும் உங்கட கருணா பலமாய் இருக்கேக்கை வந்து போட்டு தள்ளீட்டாங்கள் எண்டு சொல்ல...!

இந்தாளுக்கு மற்ற தமிழர் எல்லாம் கேணயள் எண்ட நினைப்பாம்.. :wink:

ஆனா சொந்தமாய் கருத்துக்கள்தான் கிடையாது..... எல்லாம் அரசாங்கம் சொல்லிக்குடுக்க வேணுமாம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் கடமை இந்த கண்"கணிப்பு" க் குழுவுக்கு நடந்ததை அறிவிப்பதோடு முடிந்தது. தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் ஒவ்வொரு சிங்களப் படயினனும் வெளியேறுமட்டும் அவனுக்குப் பாடம் கற்பிப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன். இந்த கண்கணிப்புக்குழுவே ஒரு கேழ்விக்குறியாக இருக்கும் பொழுது பின்ன ஏன் BBC அல்லது அவன் இவன் என்று கவலைப் படுவான். இப்போது லெபனானை தாக்கியழிக்கும் இஸ்ராயலை உலக நாடுகள் கண்டித்தும் தன் கண்மூடித்தனமான தன் பயங்கரவாத நடவடிக்கையில் ஒரு இம்மியளவும் பின்வாங்கவில்லையே! என் கருத்து என்னவெனில் தேழ்வையற்ற மற்றயவரின் கருத்துக்கணிப்பைவிட்டு நமக்கு ஆபத்தென்றால் எதிரியை அழி என்பதே!

ம்.. எனக்காக எல்லாரும் யோசிக்கிறியள்.. பரவாயில்லை.. மற்றாக்களும் வந்து நான் வேறை என்னென்ன நினைக்கிறன் எண்டு சொன்னால் உங்களுக்குள்ள பிரச்சனையள் தீரும்.. நான் கண்காணிப்பு அறிக்கை என்ன சொல்லுதெண்டு பார்த்திட்டு கருத்தை வைக்கிறன்..

:P

செத்துப்போன ஆமிக்காறன்களின்ர உடம்பை தங்கட ஏரியாக்கு கொண்டுவந்து போட்டுட்டு போஸ் குடுக்கிறாங்கள் எண்டுறீங்களே....????

சொல்ல வெக்கமாயில்லையே உங்கட ஏரியாவில வந்து அதுவும் உங்கட கருணா பலமாய் இருக்கேக்கை வந்து போட்டு தள்ளீட்டாங்கள் எண்டு சொல்ல...!

இந்தாளுக்கு மற்ற தமிழர் எல்லாம் கேணயள் எண்ட நினைப்பாம்.. :wink:

ஆனா சொந்தமாய் கருத்துக்கள்தான் கிடையாது..... எல்லாம் அரசாங்கம் சொல்லிக்குடுக்க வேணுமாம்....!

http://www.eelatamil.com/

தெளிவாகியது உண்மை..

- பண்டார வன்னியன் ளுரனெயலஇ 16 துரடல 2006 22:34

வாகனேரிக் குளத்துமடுவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின்சிறிய முகாம்மொன்றைத் தாக்கப்போய் ஆப்பிழுத்த குரங்காகி நிற்கிறது சிறிலங்கா இராணுவம் தமது 23- மூன்று பிரிகேட் தளத்திலிருந்து 5கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த இந்த முகாமைத் தாக்கியளித்த நூற்றுக்கும் மேற்பட்ட படையினர்,

அனுப்பப்பட்டு இருந்தன வயல்வெளிகள் நிறைந்த அந்தப்பகுதிக்குள் இவ்வளவு பெருந்தொகையாக படையினரை அனுப்ப அதன் கட்டளைப்பீடம் எவ்வளவு துணிந்தது?

எல்லாமே ஒட்டுக்குழுக்களின் கணக்கிலே எழுதப்பட்டு விட முடியுமென்ற அபார நம்பிக்கையின் விளைவுதான் ஒருவேளை தாக்குதலுக்காக உள் நுழைந்த படையினர் பாதுகாப்பாக திரும்பியிருந்தாலோ அன்றி அவர்களது உடல்களும் காயமடைந்த சிப்பாய் விடுதலைப்புலிகளிடம் அகப்படாமல் இருந்தாலோ இந்தத் தாக்குதல் ஒட்டுக்குழுக்களால் நடத்தப்பட்டதென இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்காவும் ஒட்டுக்குழுவின் பேச்சாளரும் அறிக்கைகளை விடுத்திருப்பார்கள்.

இப்போது இந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதால் தாக்குதல் நடந்த இடம் வெலிக்கந்தைப் பகுதியில் இருக்கின்றது. என கரடிவிட்டுக்கொண்டிருக்கிறா

ம்.. எனக்காக எல்லாரும் யோசிக்கிறியள்.. பரவாயில்லை.. மற்றாக்களும் வந்து நான் வேறை என்னென்ன நினைக்கிறன் எண்டு சொன்னால் உங்களுக்குள்ள பிரச்சனையள் தீரும்.. நான் கண்காணிப்பு அறிக்கை என்ன சொல்லுதெண்டு பார்த்திட்டு கருத்தை வைக்கிறன்..

எருமை ஏரோப்பிளேன் ஓட்டுதாம் எண்டு சொல்லுது....! :wink: :P

உங்கடை கருத்துப்படி 5 கிலேமீற்றர் உள்ளுக்கு வந்து அடிச்சு 6 பேர் தப்பி அரசாங்க ஆசுப்பத்தரியிலை சிகிச்சை பெற்றிருக்கிறாங்கள்.. நீங்கள் எருமை ஏறோப்பிளேன் ஓட்டினதுபற்றி கதைக்கிறியள்..

:P

எருமை ஏரோப்பிளேன் ஓட்டுதாம் எண்டு சொல்லுது....! :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது சொல்லணும் எண்டு முடிவு பண்ணினா இப்பிடித்தானண அப்பு மீசையில மண் படல எண்டு சொல்லிக்கொண்டே இருக்கலாம். அப்பவே தெளிவாச் சொல்லிட்டாங்களே, இராணுவத்தை அவர்களது நிலைகளை நோக்கி கலைச்சாச் செண்டு. அப்ப ஓடினவங்களோட காயப்பட்டவங்க ஓடேலயா. சரி சரி ஒட்டுமீசைதானே எடுத்து தட்டிப் போட்டு திரும்ப ஒட்டண.

என்னவோ.. என்னுடைய கற்பனைக்கு 5 கிலோமீற்றர் வந்தவன் தப்பிப்போக வழியில்லை.. அதைவிட நடந்துகொண்டிருக்கிதா இங்கை சொன்ன நேரமும் அங்கை நடந்ததா சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் எட்டு மணித்தியாலங்கள்.. அதுதான் கண்காணிப்பு றிப்போட் வரும்வரையும் பாக்கிறன்.. அப்பத்தான் உண்மை வருமெண்டு என்ரை யோசனை..

கண்கணிப்புக் குழுவுக்கு ரிப்போர்ட் அடிக்கிறதுக்கு ஆக்கள் தேவையாம். அப்ளை பண்ணிப் பாக்கிறதுதானே. அப்படியே உங்களுக்கு சாதகமான ரிப்போர்டையும் அடிச்சிடலாம். :P :wink:

உங்கடை கருத்துப்படி 5 கிலேமீற்றர் உள்ளுக்கு வந்து அடிச்சு 6 பேர் தப்பி அரசாங்க ஆசுப்பத்தரியிலை சிகிச்சை பெற்றிருக்கிறாங்கள்.. நீங்கள் எருமை ஏறோப்பிளேன் ஓட்டினதுபற்றி கதைக்கிறியள்..

:P

உள்ள வந்த 60 பேர் 6 பேரை கொண்டு போக இயலாத கேனையள் எண்டுறீர்....! அதிரடிபடையாம் ஆனா ஆறுபேரை கொண்டுபோய் சேர்க்க பயிற்ச்சி போதாதாம்....! ஆனால் அங்கை போய் அடிச்ச புலிகள் 12 பேரின்ர உடம்பையும் ஒருத்தனை பிடிச்சுக்கொண்டு வந்தவை....!

அப்பிடி எண்டா பாருமன் எங்கட ஆக்களின் வலிமையை....! :wink: :P :P

என்னவோ.. என்னுடைய கற்பனைக்கு 5 கிலோமீற்றர் வந்தவன் தப்பிப்போக வழியில்லை.. அதைவிட நடந்துகொண்டிருக்கிதா இங்கை சொன்ன நேரமும் அங்கை நடந்ததா சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் எட்டு மணித்தியாலங்கள்.. அதுதான் கண்காணிப்பு றிப்போட் வரும்வரையும் பாக்கிறன்.. அப்பத்தான் உண்மை வருமெண்டு என்ரை யோசனை..

:P

ஐஞ்சு கிலோமீற்றர் பொடி நடையாப்போனாலும், ஒரு மணித்தியாலத்தில போய் சேந்திடலாம்....! ஆமிக்காறனின்ர ஓட்டத்துக்கும் 15 நிமிசம் போதுமே....! :wink: :P :P

கண்காணிப்பு குழு ரிப்போட் குடுக்க முதல் இராணுவத்தினர் புசத்துறதை ஒருக்கா ஒட்டுக்கேளும் ஏதோ எங்கையோ உதைக்குது....!

ஆமிக்காறர் உள்ள வந்த உடனையே உவர் தூயவன் ரெடியா இருந்தவராம், அம்மானின் படை அடிச்சு புடுங்கீட்டுது எண்டு பினாத்த ஆனால் அடி வாங்கிக்கொண்டு ஆமி வந்த உடனையே சொல்லவந்த செய்தி மறந்து போச்சாம்...! :wink: 8) 8)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கருத்துப்படி 5 கிலேமீற்றர் உள்ளுக்கு வந்து அடிச்சு 6 பேர் தப்பி அரசாங்க ஆசுப்பத்தரியிலை சிகிச்சை பெற்றிருக்கிறாங்கள்.. நீங்கள் எருமை ஏறோப்பிளேன் ஓட்டினதுபற்றி கதைக்கிறியள்..

:P

அப்படியென்றால் நீங்கள் சொல்லுகின்ற மாதிரி இராணுவாக்கட்டுப்பாட்டினுள் நடந்தது என்று வையுங்களேன். அப்ப செத்த ஆமியின் சடலங்கள் 5 கிலோமீட்டர் தள்ளிப் போய் புலிகளின் ஏரியாவினுள் விழுந்ததோ? என்ன அதிசயம்! :idea: :idea:

காயப்பட்டவர்கள் நொண்டி நொண்டியவது, அல்லது ஆராவது தூக்கிக் கொண்டாவது போகலாம். ஆனால் செத்த ஆமி புலிகளின் பகுதிக்குள் போய்ச் செத்தார்கள் என்பது தான் செம வேடிக்கை பாருங்கோ! :wink: :wink:

என்னவோ.. என்னுடைய கற்பனைக்கு

:P

அப்படியென்றால் நீங்கள் சொல்லுகின்ற மாதிரி இராணுவாக்கட்டுப்பாட்டினுள் நடந்தது என்று வையுங்களேன். அப்ப செத்த ஆமியின் சடலங்கள் 5 கிலோமீட்டர் தள்ளிப் போய் புலிகளின் ஏரியாவினுள் விழுந்ததோ? என்ன அதிசயம்! :idea: :idea:

காயப்பட்டவர்கள் நொண்டி நொண்டியவது, அல்லது ஆராவது தூக்கிக் கொண்டாவது போகலாம். ஆனால் செத்த ஆமி புலிகளின் பகுதிக்குள் போய்ச் செத்தார்கள் என்பது தான் செம வேடிக்கை பாருங்கோ! :wink: :wink:

என்னவோ.. என்னுடைய கற்பனைக்கு 5 கிலோமீற்றர் வந்தவன் தப்பிப்போக வழியில்லை.. அதைவிட நடந்துகொண்டிருக்கிதா இங்கை சொன்ன நேரமும் அங்கை நடந்ததா சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் எட்டு மணித்தியாலங்கள்.. அதுதான் கண்காணிப்பு றிப்போட் வரும்வரையும் பாக்கிறன்.. அப்பத்தான் உண்மை வருமெண்டு என்ரை யோசனை..

:P

வளமையா கற்பனை செய்யுறதுதான் வளமையாச்சே....! உம்மால கற்பனை மட்டும்தான் முடியும்...! :lol::lol::lol:

வளமையா கற்பனை செய்யுறதுதான் வளமையாச்சே....! உம்மால கற்பனை மட்டும்தான் முடியும்...! :lol::lol::lol:

ஒரு சம்பவத்தை வைத்து எவ்வாறு புலிகளிற்கு எதிரான செய்தித் திருப்புக்களை உருவாக்கலாம் என்ற கற்பனையில் தான் பதிவுகள் இங்கு இடப் படுகின்றன என்ற உண்மை மெல்ல வெளியில் வந்து விட்டது.

இந்த எண்ண ஓட்டம் ஏன் ஒருவருக்கு ஏற்பட வேண்டும்.இதன் ஆரம்பப்புள்ளி புலிகளுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து தான் ஆரம்பம் ஆகிறது.இதில எதோ நடு நிலை என்ற நடிக்கும் நிலை.

முகமூடி அறியாமல் விலகிய தருணம் ஒன்று மேலே.

என்னவோ.. என்னுடைய கற்பனைக்கு 5 கிலோமீற்றர் வந்தவன் தப்பிப்போக வழியில்லை.. அதைவிட நடந்துகொண்டிருக்கிதா இங்கை சொன்ன நேரமும் அங்கை நடந்ததா சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் எட்டு மணித்தியாலங்கள்.. அதுதான் கண்காணிப்பு றிப்போட் வரும்வரையும் பாக்கிறன்.. அப்பத்தான் உண்மை வருமெண்டு என்ரை யோசனை..

:P

தாத்தா கண்காணிப்புக்குழு இன்னும் சம்பவம் தொடர்பில அறிக்கைவிடல்ல..எனி வாற அறிக்கை பெரிசா எடுபடப் போறதும் இல்லை..புலிகளுக்கு எதிரா வந்தா நம்பிற அளவிலும் இல்ல...! அதென்ன கடலில அடிக்கேக்க சுடச் சுட அறிக்கை விட்டிச்சினம்..இப்ப மெளனமாகிட்டினம்...எல்லாத்துக

  • கருத்துக்கள உறவுகள்

வெப்பீளம் இணையத்தளத்தில் 15ம் திகதி வந்த வாகனேரிச் சண்டை பற்றிய கண்ணோட்டம்!

நேற்று அதிகாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகனேரிப் பகுதிக்குள் நுளைந்த சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளிடம் பெருத்த அடி வாங்கியுள்ளது. 150 வரையான படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் விசேட பயிற்சி பெற்ற அணி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகனேரிக்குள் 5 கி.மீ தூரம் உள் நுளைந்தது. குளத்துமடு வரை முன்னேறிய படையணி விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து உடனடியாக சிறிலங்கா இராணுவம் தாக்குதலை நிறுத்தி அவ்விடத்தை விட்டு அகல வேண்டும் என்று விடுதலைப்புலிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ் எச்சரிக்கை கண்காணிப்புக் குழுவின் ஊடாக சிறிலங்கா இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆயினும் சிறிலங்கா இராணுவத்தினர் தாம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நிற்பதாக தெரிவித்தனர். இதை அடுத்து விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலை தொடுத்தனர். இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் ஜெயந்தன் படையணி முக்கிய பங்கு வகித்தது. ஒரு மணி நேரம் நடந்த மோதலில் சிறிலங்கா இராணுவம் விரட்டி அடிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தில் 14 பேர் பலியாகினர். ஒரு கோப்ரல் தர அதிகாரி விடுதலைப்புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டார். 12 படையினரின் சடலங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் தரப்பில் 4 போராளிகள் வீரச் சாவடைந்தனர். படையினரின் சடலங்கள் இன்று சிறிலங்கா இராணுவத்தினரிடம் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கையளிக்கப்பட்டன.

சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளிடம் வாங்கிய இந்த பலத்த அடி சிறிலங்காவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தென்தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் பலத்தை சிறிலங்கா அரசு எப்பொழுதும் குறைத்து மதிப்பிட்டே வந்திருக்கிறது. ஈழப் போர் இரண்டின் போது தென்தமிழீழத்தின் பெரும்பாலன பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ஈழப் போர் மூன்றின் போது தென்தமிழீழத்தில் பல இராணுவ முகாம்கள் மூடப்பட்டு, இராணுவத்தினர் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டதை அடுத்து, பல பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தன. ஆயினும் இப் பகுதிகள் விடுதலைப்புலிகளின் பலமான தளப் பிரதேசங்களாக கருதப்பட்டிருக்கவில்லை. தென்தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி சிறிலங்கா இராணுவம் படை எடுப்புக்களை செய்த நேரங்களில், விடுதலைப்புலிகள் காத்திரமான முறயடிப்புச் சண்டைகளில் ஈடுபடாது விலகிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதே வேளை இராணுவமும் சில நாட்கள் கழித்து தானாகவே பின்வாங்கிச் சென்று விடும். தென்தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் கரந்தடித் தாக்குதல்களை ஒத்ததாகவே இருந்தன.

ஈழப் போர் மூன்றின் கடைசிக் காலங்களிலேயே தென்தமிழீழத்திலும் உறுதியான தளப்பிரதேசங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அத்துடன் வன்னியில் சண்டை அனுபவங்களை வளர்த்துக் கொண்ட போராளிகளும் அங்கு நிலை கொண்டிருந்தார்கள். ஆனால் இதை சிறிலங்கா இராணுவம் சரியான முறையில் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அத்துடன் கருணாவின் பிளவினால் தென்தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மேலும் பலவீனம் அடைந்திருப்பார்கள் என்றும், இதனால் ஈழப் போர் நான்கு உக்கிரமாக ஆரம்பிக்கும் பொழுது தென்தமிழீழத்தை உடனடியாகவே கைப்பிற்றிவிடலாம் என்றும் சிறிலங்கா இராணுவம் எண்ணியிருந்தது. ஆனால் இன்று வாகனேரியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பெரும் தோல்வியில் முடிந்திருக்கிறது. முன்னேறி வந்த படையினரை விடுதலைப்புலிகள் மறித்து சண்டை செய்து விரட்டி அடித்துள்ளார்கள். சண்டையின் போது இராணுவத்தினருக்கு துணையாக அருகில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து ஆட்லறித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. ஆயினும் விடுதலைப்புலிகள் கொடுத்த அடியின் அகோரத்தில் இராணுவத்தினர் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் ஆயுதங்களையும் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

வாகனேரியில் உள்ள ஒரு சிறு பிரதேசம் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகிறது. மெது மெதுவாக முன்னே நகர்வதன் மூலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அரிப்பை ஏற்படுத்துவதும், விடுதலைப்புலிகளின் பலத்தை சோதித்துப் பார்ப்பதும் சிறிலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்திருக்கலாம். சிறிலங்கா இராணுவம் பெரிதும் நம்பியிருந்த கருணா குழு விடுதலைப்புலிகளால் முற்றாக முடக்கப்பட்டு விட்டது. தற்பொழுது கருணா குழு "அரசியல் அலுவலகங்களை" திறந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆழ ஊடுருவும் படையணியின் முயற்சிகளும் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இப் படையணியைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளிடம் உயிருடன் பிடிபட்டு வருகிறார்கள். இப்பொழுது சிறிலங்கா இராணுவமும் நேரடியாக களத்தில் இறங்கி மூக்குடைபட்டு உள்ளது.

வாகனேரிச் சண்டையானது தென்தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் முன்பை விட பெரும் பலத்துடன் ஒரு மரபுரீதியான படையணியாக வளர்ச்சி பெற்றிருப்பதை காட்டுகிறது. உக்கிரமான போர் ஆரம்பித்தவுடன் ஒரே நேரத்தில் தமிழீழத்தின் அனைத்து பிரதேசங்களும் மீட்கப்படும் என்று விடுதலைப்புலிகளின் தளபதிகள் பேசி வருவது வெறும் வாய்ப் பேச்சு அல்ல என்பதை இச் சண்டை உணர்த்துகிறது.

தமிழீழ மரபு படையணிகளில் - மிகவும் மூர்க்கமானது - என்று பெயர்பெற்ற - சார்ள்ஸ் அன்ரனி & ஜெயந்தன் படையணி - வீரம் எதிரிகளாலயே ஒப்புக்கொள்ளப்பட்டது - எம்மில் எல்லோரும் அறிந்தது போலவே.

அது - ஆனையிறவின் - எல்லைகல்லில் 'எங்கும் செல்வோம் - எதிலும் வெல்வோம் - என்று எழுதி வைத்ததில் - உறுதிபடுத்தப்படலாமோ - என்னமோ!

அதன் பங்களிப்பு - கூட்டு படை தலைமையகத்தை - பிச்சு - எறிஞ்சதிலயும் இருக்கு - கூட இருந்து குழிபறிச்ச - கருணாவை - ஒரு வழி பண்ணினதிலயும் இருக்கு!

தலைவருக்கும் - தளபதி ஜெகாத்தனுக்கும் - பெருமை எல்லாம்!

அது நிற்க ....

அதென்ன குருவி - சந்தில புகுந்து - வித்தை காட்டுது?

ஏதாவது ஒரு விடயத்தில் உறுதியாய் இருங்கப்பா.......

ஒண்ணு உங்க தாத்தாவுக்கு .

இல்ல 20,000 நெருங்கும் மாவீரர் + 100,000 மக்கள் இழந்து நிக்கும் எங்க பக்கத்துக்கு - வாண வேடிக்கை வேணாமே!

நன்றி இணைப்புக்கு - கந்தப்பு ! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.