Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி அபகரிப்புக்கு எதிராக...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0097.JPG

வலிகாமம் வடக்கு பிரதேச காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "இராணுவமே வெளியேறு, வலி. வடக்கு, கிழக்கு எங்கள் தாயகம், சிங்கள கூலிப்படையே அங்கு உனக்கு என்ன வேலை, வேண்டும் வேண்டும் எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு தமது கோஷங்களை எழுப்பினர். 

தழிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,  நவ சம சமாஜ கட்சி  தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட பல தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வலி வடக்கு மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்)

DSCF0185.jpg

DSCF0164.jpg

DSCF0133.jpg

DSC_0165.JPG

DSC_0162.JPG

DSC_0149.JPG

DSC_0144.JPG

DSC_0139.JPG

DSC_0108.JPG

DSC_0077.JPG

DSC_0073.JPG

DSC_0070(1).JPG

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் வடக்கில் இலங்கை அரசு வேகமாக முடுக்கி விட்டுள்ள நில ஆக்கிரமிப்பை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டமொன்றை யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக இன்று நடத்தியுள்ளது.

இன்று காலை பதினொரு மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக ஒன்று திரண்ட சுமார் நானூறிற்கும் அதிகமான பொதுமக்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் நவசமாஜக்கட்சியினர்இ ஜனநாயக மக்கள் முன்னணியினர் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரென அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இடம்பெயர்ந்த மக்களது நலன்புரி அமைப்புக்களை சேர்ந்தவர்களுமென சுமார் நானூறிற்கும் அதிகமானவர்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர். ஒரு புறம் அனல்வீசும் வெயில் மறுபுறம் துரத்தி துரத்தி படம் பிடிக்கும் இராணுவப் புலனாய்வாளர்களென அனைத்து நெருக்குவாரங்களுக்குள்ளேயும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டம் நடந்திருந்தது.

இன்று காலை முதல் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களை சுற்றிவளைத்த படையினர் பிரதான நுழைவாயில்களினில் நிலை கொண்டவாறு எவரையும வெளியே செல்லவிடாது தடைபோட்டிருந்தனர். இதனால் அச்சங்காரணமாக இடம்பெயர்ந்த பலபொதுமக்களும் முகாம்களுள் முடங்கி கொண்டனர். அதே போன்று பருத்தித்துறை வீதியின் புத்தூர் சந்தியுட்பட பல வீதிகளினில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் போராட்டத்திற்கு புறப்பட்டு வந்த இடம்பெயர்ந்த மக்கள் திருப்பப்பட்டனர்.

இத்தகைய நெருக்கடிகள் மத்தியிலும் மக்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.சுமார் இருமணிநேரம் நீடித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ கஜேந்திரன் விக்கிரமபாகு கருணாரட்ணஇ பாக்கியசோதி சரவணமுத்துஇ சட்டத்தரணி பாலகிருஸ்ணன் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் உரையாற்றினர்.

இராணுவமே வெளியேறு!

எங்கள் காணிகளை எமக்கு தா!

இராணுவ முகாம்கள் எமக்கு வேண்டாம்!

ஏன பல கோசங்களால் மாவட்ட செயலக வளவு அதிர்ந்தது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91072/language/ta-IN/article.aspx

வடமாகாண காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

 

130424100952_valigamam_protest_304x171_b

 

 

வலிகாமம் வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6400 ஏக்கர் காணிகள் உட்பட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் அரச செயலகத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், நவசமசமாஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பிரதிநிதிகளும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தினர், வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு வரமுயன்ற பொதுமக்களை வலிகாமம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வசிக்கின்ற அகதிகள் முகாம்கள் மற்றும் இடங்களில் படையினர் தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

''இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். அவற்றில் அவர்களை மீள்குடியமர்த்த வேண்டும். இராணுவம் இந்தக் காணிகளில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும். இத்தகைய காணி அபகரிப்பு உட்பட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கென நிலைமாற்று நிர்வாகம் ஒன்று சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் தற்போதைய இலங்கை அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வகையில் அமைக்கப்பட வேண்டும்'' என்ற கோரிக்கைகளையும் தாங்கள் முன்வைத்திருப்பதாக கஜேந்திரன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர், யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ள பகுதிக்குச் சென்று பார்வையிடுதவற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130424_valinorthprotest.shtml

 

இந்தச் செய்திக்கு 2 செய்திகளின் இணைப்பைத் தவிர எவரும் பின்னூட்டம் இடவில்லை.

 

வாழைப்பழம் தீத்தும் திரிக்கு நிறைய பின்னூட்டங்கள்...

 

ஆராவது தமிழ் தேசியத்தினை அதனைச் சார்ந்தவர்களை சீண்டி கருத்து எழுதியிருந்தால் 10 பதில்களாவது வந்து இருக்கும்.

இந்தச் செய்திக்கு 2 செய்திகளின் இணைப்பைத் தவிர எவரும் பின்னூட்டம் இடவில்லை.

 

வாழைப்பழம் தீத்தும் திரிக்கு நிறைய பின்னூட்டங்கள்...

 

ஆராவது தமிழ் தேசியத்தினை அதனைச் சார்ந்தவர்களை சீண்டி கருத்து எழுதியிருந்தால் 10 பதில்களாவது வந்து இருக்கும்.

 

நீங்கள் எதையும் சொல்லி பாருங்க. நம்ம மாத்து கருத்து மாணிக்கங்களுக்கு  கேட்கவே மாட்டாது.

 

வந்து பார்த்து இரண்டு வரி எழுதியிருக்கலாமெல்லே?

 

:D

இந்தச் செய்திக்கு 2 செய்திகளின் இணைப்பைத் தவிர எவரும் பின்னூட்டம் இடவில்லை.

 

வாழைப்பழம் தீத்தும் திரிக்கு நிறைய பின்னூட்டங்கள்...

 

ஆராவது தமிழ் தேசியத்தினை அதனைச் சார்ந்தவர்களை சீண்டி கருத்து எழுதியிருந்தால் 10 பதில்களாவது வந்து இருக்கும்.

 

நீங்களும் இந்த திரியுடன் தொடர்புடைய கருத்தை எழுதியிருக்கவில்லை. எனினும் முதலிரு வரிகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இங்கு மூன்றாவது வரிகளை நீங்கள் சேர்த்தமைக்காக நான் உங்களுக்கு போட்ட like ஐயும் மீள பெற்றுக்கொண்டு விட்டேன். இந்த திரியில் மற்றவர்கள் கருத்து வைக்கவில்லை என்பதற்காக தமிழ் தேசியத்தையோ அல்லது தமிழ் தேசிய ஆதரவாளர்களையோ கொச்சைப்படுத்துவதையும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எனவே அங்கு தமது கருத்தை பதிவிடுகிறார்கள்.

 

மாற்றுக்கருத்தாளர்களையும, புலிகளை தான் எதிர்க்கிறோம் ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளோம் என்போரையும் ஏன் விட்டு விட்டீர்கள்?

 

இந்த திரியின் மேலுள்ள அக்கறையை விட தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தி எழுதுவோருக்கு பதில் எழுதுவோர் மீது இருக்கும் வெறுப்பை காட்டுவதற்காகவே மூன்றாவது வரி எழுதப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ம் ம் ம் .... யாழ்ப்பாணத்துக்கும் ஒரு வைகோ தேவைதானே !!! :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பதாகைகள் ஆங்கிலத்திலும் இருந்தால் தான் என்ன காரணத்துக்காக போராட்டம் நடாத்துகிறார்கள் என்பதை தமிழர்கள் அல்லாதோர் அறிவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இந்த திரியுடன் தொடர்புடைய கருத்தை எழுதியிருக்கவில்லை. எனினும் முதலிரு வரிகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இங்கு மூன்றாவது வரிகளை நீங்கள் சேர்த்தமைக்காக நான் உங்களுக்கு போட்ட like ஐயும் மீள பெற்றுக்கொண்டு விட்டேன். இந்த திரியில் மற்றவர்கள் கருத்து வைக்கவில்லை என்பதற்காக தமிழ் தேசியத்தையோ அல்லது தமிழ் தேசிய ஆதரவாளர்களையோ கொச்சைப்படுத்துவதையும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எனவே அங்கு தமது கருத்தை பதிவிடுகிறார்கள்.

 

மாற்றுக்கருத்தாளர்களையும, புலிகளை தான் எதிர்க்கிறோம் ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளோம் என்போரையும் ஏன் விட்டு விட்டீர்கள்?

 

இந்த திரியின் மேலுள்ள அக்கறையை விட தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தி எழுதுவோருக்கு பதில் எழுதுவோர் மீது இருக்கும் வெறுப்பை காட்டுவதற்காகவே மூன்றாவது வரி எழுதப்பட்டுள்ளது.

 

அது....நன்றிகள்

ம் ம் ம் ம் .... யாழ்ப்பாணத்துக்கும் ஒரு வைகோ தேவைதானே !!! :lol: :lol:

 

மகிந்த சிந்தனையில் இதுவும் ஒன்று...ஐயா ;D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.