Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அறிந்த ஈழப்பிரச்சினை!!!!

Featured Replies

தமிழ் ஈழப்பிரச்சினை என்னவென்பதே இந்த தலைமுறையைச் சார்ந்த நிறைய நண்பர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.... தெரியாவிட்டாலும் பரவாயில்லை சில ஈழ எதிர்ப்பு ஊடகங்களைப் படித்துவிட்டு என்னவென்றே தெரியாத ஒரு பிரச்சினையில் கருத்துகளும் சொல்லி வருகிறார்கள்.... இந்த தெளிவின்மையை போக்க எனக்குத் தெரிந்த ஈழப்பிரச்சினையைப் பற்றிச் சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்....

இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.... அக்காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வியாபித்து இருந்தார்கள்.... அங்கே இருக்கும் தமிழர்களில் இருவகை உண்டு.... ஒன்று மலையகத் தமிழர்கள்... இவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தமிழ்நாட்டிலிருந்து 200 - 250 ஆண்டுகளுக்கு முன்பாக தேயிலைத் தோட்டவேலைக்கு தமிழகத்தில் இருந்து கொண்டுச் செல்லப்பட்டவர்கள்.... மற்றொரு பிரிவு இலங்கையின் பூர்வகுடி தமிழ்மக்கள்....

பொதுவாகவே சுதந்திரம் கிடைத்தப் பிறகு தமிழர்கள் அங்கே இரண்டாம் குடி மக்களாக சிங்கள ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டார்கள்.... தமிழர்களின் உரிமையை காக்க அவர்களுக்கு சம உரிமைப் பெற்றுத் தரும் நோக்கில் தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு தமிழரசு என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்...

அந்நேரத்திலே சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக்கப்பட்டு தமிழுக்கு தரப்படவேண்டிய சம உரிமை மறுக்கப்பட்டது... 1956ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி திரிகோணமலையிலே மாநாடு ஒன்றினை நடத்தி தமிழுக்கும், சிங்களத்துக்கும் சம உரிமை, அனைவருக்கும் குடி உரிமை, தமிழர் வசிக்கும் பகுதிகளில் சிங்களவரை திட்டமிட்டு குடியேற்றம் செய்வதை எதிர்ப்பது போன்ற தீர்மானங்களை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்தார் தந்தை செல்வா.... இதன் விளைவாக இறங்கிவந்த சிங்கள அரசு தந்தை செல்வாவுடன் அடுத்த ஆண்டே ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டது... ஆனாலும் ஒப்பந்தங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்குச் சப்பாணி தான் என்பதற்கு சிங்கள அரசு அந்த ஒப்பந்தத்தில் இருந்தே பிள்ளையார் சுழி போட்டது....

இந்த நேரத்தில் கொஞ்சம் அந்த தீர்மானங்களை உற்றுப் பார்க்க வேண்டும்... தமிழர் நலன் மட்டும் என்றிராமல் தமிழுக்கும் இடம் கோரி தான் ஈழத்தமிழர்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.... இன்றைய தினமும் அதே அணுகுமுறை தான் ஈழப்போராளிகளிடம் இருக்கிறது....

சிங்களம் ஆட்சிமொழியாகத் தொடர்ந்த காரணத்தால் அரசுப்பணிகளுக்கான நுழைவுத்தேர்வுகளில் தமிழர்களால் பங்குபெற முடியாமல் தவித்தனர்... இதனால் திட்டமிட்டே அரசுவேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு சிங்கள அரசால் சட்டப்பூர்வமாக நடத்த முடிந்தது... இதைவிட பெரிய கொடுமை 1960ல் நீதிமன்றங்களிலும் சிங்களம் மட்டுமே பயன்படுத்துவது என்று அரசு முடிவுசெய்தது.... நீதிபரிபாலனம் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்....

இதுபோன்ற எதேச்சாதிகார ஏகாதிபத்திய கொடுங்கோல் ஆட்சிகள் தொடர்ந்த சூழ்நிலையில் 1965ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சியின் ஆதரவினைப் பெற்று டட்லி சேனநாயகா பிரதமர் ஆனார்.... தமிழர்களுக்கு சில உரிமைகள் வாக்களிக்கப்பட்டது.... அதுவும் நீரில் எழுதிய எழுத்து தான்.... வேறு வழியில்லாமல் தந்தை செல்வா தன் ஆதரவை பின்வாங்கினார்....

1970ல் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டுமானால் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று கொஞ்சமும் நியாயமற்ற ஒரு கோமாளித்தனமான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது...

1972 வரை தமிழர்கள் சம உரிமை கோரித்தான் போராடி வந்தனர்.... இந்தியா போன்ற ஒரு கூட்டாட்சி அமைப்பைத் தான் வலியுறுத்தி வந்தனர்... இதுபோன்ற சூழ்நிலையில் புதிய அரசியல் சட்டம் ஒன்றை இயற்றி தமிழர்களுக்கு விரோதமான ஒற்றை ஆட்சி முறையை இலங்கை ஆட்சியாளர்கள் நிறுவினார்கள்... இந்தச் சூழ்நிலையிலேயே தனிநாடு வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களுக்கு தோன்றியது....

1974ல் தமிழர் மாநாட்டில் சிங்களவர்கள் திட்டமிட்டே கலவரம் செய்தனர்... தமிழ் இளைஞர்கள் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்க அச்சாரம் போட்டது இந்த கலவரமே எனலாம்....

1976ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி மலையகத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து வட்டுக்கோட்டை என்ற இடத்தில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக வைத்தார்... துரதிருஷ்டவசமாக போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுக் கொண்டிருந்த தந்தை செல்வா காலமானார்... இருப்பினும் இதே கோரிக்கையை முன்வைத்து அப்போது நடந்த தேர்தலில் 19 இடங்களில் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது... "தமிழ் ஈழம்" மலர்ந்தே ஆகவேண்டும் என்று ஈழத்தமிழர்களுக்கு உணர்வு கொடுத்த சம்பவம் இது தான்....

இந்தச் சூழ்நிலையில் எவ்வளவு நாட்களுக்குத் தான் அகிம்சை வழியில் போராடி அடிபட்டே சாவது என்று கொதித்தெழுந்த சில இளைஞர்கள் பிரபாகரன் தலைமையிலான ஒரு இயக்கத்தை நிறுவி அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்தனர்....

இந்தச் சூழ்நிலையில் எல்லா அடக்குமுறைகளுக்கும் முத்தாய்ப்பாக 1983 இனக்கலவரம் நடந்தது... உலகமே கண்ணீர் வடித்தது.... யாழ்ப்பாணத்திலே ஒரு கடைவாசலில் தமிழனைக் கொன்று தலைகீழாக அவன் உடலை தொங்க வைத்து "இங்கே தமிழன் கறி விற்கப்படும்" என்று Board வைத்து வெறித்தாண்டவமாடியது சிங்கள எதேச்சாதிகார அரசு.... பெரிய கொடுமை என்னவென்றால் 1983 இனக்கலவரத்தில் நடந்த கொடுமைகள் உலகம் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டது.... சில இந்தியப் பத்திரிகையாளர்களால் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட கொடுமைகள் கூட ரொம்பவும் குறைவு தான்... அதை விட பெரும் கொடுமைகள்.... ஹிட்லர் செய்ததை விடவும் அதிகமான கொடுமைகள் வெளியுலகத்துக்கு வராமலேயே போய் விட்டது.... பெரிய குழி தோண்டி தமிழர்களை மொத்தமாக உள்ளே தள்ளி உயிரோடு மண்ணை மூடிய கொடுமை..... சினிமாவில் கூட நாம் கண்டிருக்க மாட்டோம்....

இதுவரை நான் எழுதியது நடுநிலைமையாக இருந்திருக்கக் கூடும்.... இதற்கு மேலும் இதை என்னால் ஒரு இந்தியனாக நடுநிலையோடு எழுதமுடியுமா என்பது சந்தேகமே.... அதுவும் இல்லாமல் 83க்குப் பிறகு நடந்தவை இந்த தலைமுறைக்கு ஓரளவு தெரிந்தே இருக்கும்.... அதைப் பற்றி எழுதுவது அவ்வளவு அவசியமா என்றும் தெரியவில்லை....

வணக்கம் லகிலுக்,

தங்கள் கட்டுரையை வாசித்தேன். நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. நன்றி.

இவற்றுடன் மேலும் பல விடயங்கள் இன்றைய சுூழலுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.

தரப்படுது;தல் முறை, தமிழாராச்சி மாநாட்டுப்படுகொலைகள் இப்படிப் பல விடயங்கள்.

மலையகத் தமிழ் மக்களுடைய குடியுரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்ட அநியாயமும் இன்று மெல்ல மெல்ல மறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தி இலங்கைப் பிரச்சினையை அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி (கூட இருநதவர்களின் வழிநடாத்தல் காரணமாய்) அணுகிய விதத்திற்கும் இடையிலான வேறுபாடும் இங்கே முக்கியமானது.

இவை பற்றிய நிறையப் பதியப்பட வேண்டும்.

தற்போது வேலையில் இருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.

தமிழர் என்ற உணர்வொடு எம்மீது கரிசனை காட்டும் அத்தனை தமிழ்நாட்டு உள்ளங்களுக்கும்இலங்கைத் தமிழன் என்ற வகையில் நன்றியுடையவனாயிருக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

இந்திரா காந்தி இலங்கைப் பிரச்சினையை அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி (கூட இருநதவர்களின் வழிநடாத்தல் காரணமாய்) அணுகிய விதத்திற்கும் இடையிலான வேறுபாடும் இங்கே முக்கியமானது. இவை பற்றிய நிறையப் பதியப்பட வேண்டும்.

ஒரு எழுத்தாளனாக அவற்றைப் பற்றியெல்லாம் விமர்சிக்க எனக்கு ஆசை இருந்தாலும் ஒரு இந்தியனாக எனக்கு இருக்கும் தர்மசங்கடத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....

ராஜீவின் மரணம் பற்றி விமர்சிப்பதில் உங்களுக்கு இருக்கக்கூடிய அதே தர்மசங்கடம் எனக்கு அமைதிப்படை மற்றும் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பங்கள் பற்றி எழுதுவதிலும் இருக்கிறது....

என் நாட்டுப்பற்றையும், எழுத்துக் கண்ணியத்தையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்த முடியாது என்பதே யதார்த்தம்..... :lol:

நல்ல பதிவு லக்கிலுக் நன்றி.

ஆஆஆஆஆ லக்கிலுக் . சின்னப்பு பார்த்தால் நல்லாய் சந்தோசப்படுவார்.

புரிந்துணர்வோடு எழுதிய பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்குவுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

நான் சில விஷயங்களை விட்டு விட்டதை சுட்டிக்காட்டி ஈழ அன்பர்கள் சிலர் என் வலைப்பூவில் சுட்டிக்காட்டிய விஷயங்கள் சிலவற்றை கீழே தருகிறேன்.... நான் எழுதிய கட்டுரை என் இயக்கம் எனக்குப் போதித்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.... பயிற்சிப் பாசறைகளில் எடுக்கப்பட்ட வகுப்புகளில் நான் கற்றவை தான் நான் எழுதிய கட்டுரை....

வன்னியன் said...

57 ஜூலை 26 பண்டா செல்வா ஒப்பந்தம். (இதேநாள் 1987 இல்தான் ராஜீவ்-பிரபா வின் எழுதப்படாத ஒப்பந்தமும் நடந்தது. வரலாறு பலநேரங்களில் சுவாரசியமாக இருக்கும்.)

1965 இல் டட்லி சேனநாயக்காவுடன் தந்தை செல்வா ஒப்பந்தம். இதையெதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை நடத்தினார்.

1972 ஒக்டோபரில் தந்தை செல்வா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறார். அப்போது அவர், "வரும் காங்கேசன் துறை இடைத்தேர்தலில் தமிழரின் சுயாட்சியை முன்வைத்து நான் போட்டியிடுகிறேன். தமிழர்கள் என்ன தீர்ப்பைத் தருகிறார்களோ அதை ஏற்றுக்கொள்வோம்" என்று சொல்லித்தான் இராஜினாமா செய்தார். ஆனால் இரண்டரை வருடங்களாக சிறிலங்கா அரசு தேர்தலை நடத்தவில்லை.

1975 பெப்ரவரியில் தேர்தல் நடந்தது. செல்வா மாபெரும் வெற்றிபெற்றார். (நீண்டநாட்களாக பாராளுமன்ற கூடவில்லையென்று சொல்லப்படுகிறது.)

1976 பெப்ரவரி 4 இல் (இலங்கை சுதந்திரதினம்) பாராளுமன்றம் கூடியபோது தந்தை செல்வா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

"தமிழரின் சுயாட்சியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியடைந்தேன். மக்கள் தனிநாட்டை ஆதரிக்கிறார்கள்." என்றுகூறி தனிநாட்டுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

1976 மே 14 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம். அதில் தெளிவாக "தமிழீழத் தனியரசு" என்ற தீர்மானத்தை வெளியிட்டார்கள். அதையடுத்து வந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றியடைந்தார்கள்.

பின் ஆயுதப்போராட்டத்துக்கான காலம்தான். 83 இனப்படுகொலைக்கு முன்பு 81 இல் யாழ்ப்பாண நூல்நிலைய எரிப்பு நடந்தது.

***************************************************

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறமுன்பே தனித்தமிழீழத்துக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுவிட்டது. 1921 இல் அருணாச்சலம் என்பவரால், 'சிங்களவரோடு சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாதது. தனித்தமிழ்நாடே தீர்வு' என்று கொள்கை வெளியிடப்பட்டு கட்சிகூட தொடங்கப்பட்டது.

நீங்கள் சொன்னது போல், அடிப்படையில் மொழிப்பிரச்சினைதான். இடையில் மொழிப்பிரச்சினை மங்கி இன்பிரச்சினையாக வந்துவிட்டது.

***************************************************

தொடக்க கால நிகழ்வுகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்தே நடந்துள்ளன. தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகள்கூட யாழ்ப்பாணத்தார் மீது நடத்தப்பட்டவையே அதிக கவனம் பெற்றன.

ஜெயபால் said...

பிரச்சனையைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

1974 இல் நடந்தது, 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு. அதில் கலாநிதி ஜனார்த்தனன் கலந்துகொண்டிருந்தார்.

1983 கலவரங்களில், தமிழர்கள் கொல்லப்பட்டதும், எரிக்கப்பட்டதும் கூடுதலாக நடந்தது கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அல்ல. மலையகத் தமிழரும் மிகவும் பாதிக்கப் பட்டார்கள்.

உங்கள் முயற்சிக்கு நன்றி.

அன்புடன்,

ஜெயபால்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா நன்றிகள் .உங்கள் பத்திரிகை முலம் எம் பிரச்சனையை உலகறியதாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு நண்பர் லக்கிலூக் கின் புரிந்துணர்வு தமிழக தமிழரை மாத்திரமன்றி அனைத்து இந்தியரையும் அரவணைக்கவேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எம் தந்தை செல்வா காந்திமகானின் வழியில் அகிம்சைப்போராட்டதில் ஈடுபட்டதே! இந்தியர் அனவரும் மகாத்மாவை தம் உள்ளத்தில் அரவணைக்கும் பொழுது ஏன் எமது அகிம்சை போராட்டதிற்கு இந்தியா அப்போது நமக்கு கை கொடுக்கவில்லை. அப்போதைய இந்தியாவின் நிலைமயே இன்றும்! வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் அனவரும் ஒப்புக்கொள்ளாத ஒரு பிளவு இருக்கிறது. இந்தியாவில் இந்தியா நாட்டுப்பற்று எனும் மாயையில் சிக்கித்தவிப்பவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம். நான் ஒருமுறை லண்டனுக்கு சென்றபொழுது ஒரு தமிழரல்லாத இந்தியரை தற்செயலாக சந்தித்தேன். எனக்கு தந்த மதிப்பைக்கூட இவர் தென்னிந்தியருக்குத் தரவில்லை. அவர்களை ஒரு இளக்காரமாகவே கருதினார். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் அனேகர் தென்னிந்தியர்தானே என்றேன். ஒத்துக்கொண்ட அவர், வட இந்தியர்களின் பொருளாதாரத்தையும் அவர்களின் மேற்குலக கலாச்சார தொடர்புகளையும் சுட்டிக்காட்டி தங்களின் ஆதிக்க உணர்வையே எனக்குக் காட்டியதாக நான் உணர்ந்தேன். இந்தியத்தமிழன் உலகில் இந்தியராலேயே கீழ்த்தரமாக்கப் படுகிறான். "Oh you arrre frrrommu southu inndia" என்று ஒரு கீழ்த்தரமான ஒரு மேற்கோள்! அப்படியானால் ஈழத்தமிழரைப் பற்றி அவரின் கருத்து. "You arre aall bet-ter than south indian"

இதனால்தானோ என்னவோ, மலையக எம் தமிழ் உறவுகளை இந்திய தேசம் உதாசீனப்படுத்தியது போலும்.

ஆகவே லக்கிலூக் போன்றவர்களின் நாட்டுப்பற்று அவரவர்களின் வீட்டோடேயே நின்றுவிடுகிறது. நாட்டின் குறைகளை தன் உயிருக்குப் பயமின்றிச் சுட்டிக்காட்டுவதும் நாட்டுப் பற்றுதான். என் நாட்டுப்பற்றையும், எழுத்துக் கண்ணியத்தையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்த முடியாது என்பதே யதார்த்தம் என்று நீங்கள் தயங்கவேண்டியதில்லையே. உண்மையை எழுத தயங்குவதேன்? உரிமையில்லாத நாட்டுப்பற்றை எப்படிக் கூறுவது?

  • தொடங்கியவர்

அல்லிகா!

உங்கள் கூற்றில் எனக்கு சம்மதமில்லை....

ஒரு காலத்தில் வட இந்தியர்கள் ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொண்டிருந்திருக்கலாம்.... சுமார் 40 ஆண்டுக் காலங்களில் நிலைமை ரொம்பவும் மாறி விட்டது.... தொடர்ந்து தென்னிந்தியர்கள் தான் இந்தியாவின் முக்கியப் பொறுப்புகளில் இப்போதெல்லாம் பதவி வகிக்கிறார்கள்.... இந்தியக் குடியரசுத் தலைவர்களாக தென்னிந்தியர்கள் தான் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் இதை வட இந்தியர் ஏற்றுக்கொள்வதாக் இல்லையே! பார்ப்போம்இ போக போகத் தெரியும். ஆனால் உங்களைப் போல் சிலரால் இந்த உண்மை தமிழரல்லாதவர்களுக்கு எடுத்துரைக்கப் படவேண்டும் என்பது நன்று என எனக்குத்தோன்றுகிறது.

  • தொடங்கியவர்

நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் இதை வட இந்தியர் ஏற்றுக்கொள்வதாக் இல்லையே!

ஆதிக்கம் செலுத்தி அதிகாரத்தோடு வாழ்ந்தவன்.... அந்த அதிகாரமும், ஆதிக்கமும் முடிந்த பின்னும் அதே தோரணையோடு தான் இருப்பான்.... யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான்.... காலம் தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.