Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்து கொள்ளுமா கனடா தமிழ் அமைப்புக்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே - புரிந்து கொள்ளுமா தமிழ் அமைப்புக்கள் !!

 

 

கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும் நம்மவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு பிரிவினையை விரும்பாத நம் மக்களில் பலர் முழுவதுமாக இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டனர். 

 
இது தொடர்பாக நடந்து முடிந்திருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நிகழ்வுகள் சம்பந்தமானவற்றை இகுருவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. இது தொடர்பாக கனடாவில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளுக்கும் முதலில் மக்களின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நேர்  நிலையான ஊடகம் என்ற வகையில் எங்களுடைய வருத்தங்களை பதிவு செய்கிறோம். 
 
கனடாவில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தக் கூடிய மூன்று அமைப்புக்கள்.  உண்மையில் முதலில் கடந்த வருடங்களில் இரண்டு அமைப்புக்களாக இருந்த இது , இந்த வருடம் தமிழகத்தில் தொடங்கப்பெற்ற அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து மூன்று அமைப்புக்களாக மாற்றம் பெற்றிருக்கின்றது. முதலில் பிரிவினையை மக்க்ளிடத்தில் தூண்டி விடும் இந்த நிலை ஆரோக்கியமானது அல்ல. தமிழ் மக்களைப் பொருத்த வரையிலே அது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏற்கனவே  கனடாவில் இயங்கி வந்த இரு பெரும் அமைப்புக்களுடன் போட்டி போடும் நோக்கத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட அமைப்பின் நிகழ்விற்கு வெறும் 75 பேர் மட்டுமே வந்ததே இதற்குச் சிறந்த உதாரணம். 
 
இது ஒருபுறமிருக்க குருவியார் கணக்குப்படி மற்ற பிரதான அமைப்புக்களான  கனடியத் தமிழர் தேசிய அவை குயின்ஸ் பார்க் முன்றலில் நடத்திய நிகழ்வில் 2000 பேரும் , நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் 200 பெரும் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். ஆகவே 3 நிகழ்வுகளிலும் முற்று முழுதாக எந்த நிகழ்விலும் பெரிய அளவில் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற உண்மையை இந்த மூன்று அமைப்புக்களும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். 
 
இதைப் பற்றி மேலும் பேசுவதற்கு முன்னால் சில விடயங்களை இங்கு நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. கடந்த வருடம் இதே கால கட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்ட போது  குயின்ஸ்பார்க் முன்றலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வும் , ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் உள்ள ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கத்தில் கனடியத் தமிழர் தேசிய அவையின் நிகழ்வும் நடைபெற்றது. இந்த வருடம் போட்டி மனப்பான்மையில் சுதாரித்துக் கொண்ட கனடியத் தமிழர் தேசிய அவை முன் கூட்டியேஇந்நிகழ்வுகளுக்காக குயின்ஸ் பார்க் முன்றலை பதிவு செய்து  , ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கத்தினை மோகன் ராமகிருஷ்ணன் பெயரில்   பதிவு செய்து வைத்துக் கொண்டது.இதனால் இரு இடங்களிலும் நிகழ்வினை நடத்த முடியாத நிலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால் வேறு இடத்திற்கு நிகழ்வினை இட மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.  இது ஒரு வகையில் நன்றாக உற்று நோக்கும் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை நேரடியாக தாக்கும் முயற்சியாகவே தெரிகிறது. 
 
 இது தவிரவும, இதே நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வு அமெரிக்காவில் நடந்த படியினால் அந்த அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் , ஆதரவாளர்களும் பெருமளவில் அமெரிக்கா சென்று விட்டனர். இந்த நிலையில் கனடாவில் தனியாக ஒரு நிகழ்வினை நடத்துவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் திரு.ஈழவேந்தன் வின் மகாலிங்கம் உட்பட மற்றும் பல முக்கிய பேச்சாளர்களைக் கொண்டு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை ஒலிபெருக்கியை பிடிப்பதற்காகவே நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது போன்ற தோற்றத்தையே உண்டாக்கியது. 
 
அடுத்த முக்கிய விடயம் கனடியத் தமிழர் தேசிய அவையின் நிகழ்வில் கலந்து கொண்து பேசுவதற்காக அழைக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளரான திரு. திருச்செல்வம் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளை பொது மேடையில் விமர்சித்த விடயம்.  திருச்செல்வம் அவர்கள் இது போன்று பொது மேடைகளில் குறிப்பிட்ட ஒரு அமைப்பினை விமர்சிப்பது போலப் பேசுவது இது முதன் முறையல்ல என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர்  டாக்டர். மூர்த்தி அவர்களின் அஞ்சலி நிகழ்ச்சியிலும் இது போன்ற உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்தை மேடைப் பேச்சுக்களில் தனக்கு கரவொலி கிடைக்க வேண்டும் என்பதற்காக வழங்கியிருந்தார். அய்யா திருச்செல்வம் அவர்களை வேண்டுமென்றே இப்படிப் பேச கனடியத் தமிழர் தேசிய பேரவை அனுமதித்ததா என்ற கேள்வியும் தற்போது பலரால் முன் வைக்கப்படுகிறது. 
 
அடுத்த ஆண்டுகளில் இவ்வமைப்புக்கள் தொடர்ந்து நடத்துகின்ற நிகழ்வுகளில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரு மக்கள் சார்ந்த, ஒரு இனத்தின் விடியல் சார்ந்த ஒரு விடயமென்று வருகிற போது இந்த அமைப்புக்கள் செயல்படாவிடில் மக்கள் இவர்கள் மூவரையும் நிராகரித்து விட்டு தாங்கள் நான்காவதாக ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகவே இருக்கின்றன.  தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் 30 வருட காலத்தில் இது போன்று பல நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளிலும் அப்படியான நிலை ஏற்பட தற்போது உள்ள 3 அமைப்புக்களும் காரணமாகி விடக் கூடாது. 
 
நமக்கு மட்டுமல்ல இங்கு வாழும் மாற்றின சமூகங்களுக்கும் ஒரு தெளிவான செய்தியினை ஒரே இடத்தில் இந்நிகழ்வினை நடத்துவதன் மூலம் செய்திருக்கலாம்.  ஆனால் மூன்று இடங்களில் நடைபெறுகின்ற போது அதைப் பார்க்கின்றவர்களுக்கு எழக் கூடிய கேள்விகள் தவிர்க்க முடியாதவையே. ஏனெனில் அங்கே என்ன நடை பெறுகின்றது, இங்கே என்ன நடைபெறுகின்றது , ஏன்  மூன்று இடத்தில் நடத்துகின்றார்கள். மூன்று தமிழர் குழுக்கள் இருக்கின்றனவா அல்லது 3 தமிழ் இனக் குழுமங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழத்தான் செய்யும். 
 
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே பயம், புலம் பெயர் தமிழர்கள், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது மட்டுமே தான். நம்மால் தான் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியும். அவர்களை போர்க்குற்ற விசாரணைகளுக்குட்படுத்த முடியும். அதற்கான போராட்டங்களை துணிவோடு மேற்கொள்ள முடியும் என்ற பயம் அவர்களிடம் இருக்கின்றது. ஆனால் அந்த பயத்தை  நம்முடைய  இந்தப் பலவீனம் , அல்லது நாங்கள் தனித்து நின்று எங்களால் உடைக்கபப்பட்டிருக்கின்ற மக்களின் அதரவு பலம் குறைக்கபப்டுகின்ற போது அவர்கள் பலம் பெறுவதற்கும் அவர்களிடம் இருக்கக் கூடிய பயம் குறைவடைவதற்கும் நாமே காரணமாகி விடுவோம் ஆகவே நம் மீது இழைக்கப்பட்ட அனைத்து இன அழைப்புக்களுக்கும், அனைத்து போர்க்குற்றங்களுக்கும் , அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிராக நாங்கள் கிளர்ந்தெழ வேண்டுமானால் நாங்கள் ஒற்றுமையாக இருந்து ஒரே குரலில் பேசினால் மட்டுமே அது சாத்தியமாகும். 
 
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது என்ற நமது தேசியத் தலைவரின் வார்த்தைகளை நமது அமைப்புக்களில் இருக்கும் அதிகாரப் போட்டிகளில் காற்றில் பறக்க விட்டு விடக் கூடாது என்பதை இனியாவது நினைவில் நிறுத்துங்கள்.

 

http://ekuruvi.com/ncct%20tgte%20nam%20tamilar%20awareness%202013

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
திருச்செல்வத்தின் அரசியல் ஆலோசனைகள் இப்போ வானொலி தொலைக்காட்சியில்  வருவதில்லை. முன்பு அடிக்கடி காணலாம்.
 
நா.க.அரசில் இருந்து  வெளியேற்றப்பட்டதால் அல்லது வெளியேறியதால் நா.க.அரசை போட்டு தாக்குகிறார்.இவருக்கு உருத்திரகுமாரில் நல்ல விருப்பம்.  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

 

முதலில் ஒற்றுமையை குலைத்தவர்கள் முடிவெடுக்கட்டும் என்ன பண்ணலாம் எண்டு.

 

 

 

 

கருப்பு பட்டியலில் இருக்கும் ஒரு இணைய  செய்தி இங்கு இணைக்கப் பட்டிருக்குறது 

 

 

Posted 05 June 2011 - 11:13 AM

மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது.
5. jaffnawin + tamilenn
6. tamilcnn
7. ethirinews


இதன்படி இன்றுமுதல் எந்த ஒரு செய்தியும் இத்தளங்களில் இருந்து யாழ கருத்துக்களம் பகுதியில் இணைக்க முடியாது.

 

 

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

கருப்பு பட்டியலில் இருக்கும் ஒரு இணைய  செய்தி இங்கு இணைக்கப் பட்டிருக்குறது 

 

 

Posted 05 June 2011 - 11:13 AM

மேலே குறிப்பிட்ட இணையத்தளங்களுடன் பின்வரும் தளங்களும் சேர்க்கப்படுகின்றது.

5. jaffnawin + tamilenn

6. tamilcnn

7. ethirinews

இதன்படி இன்றுமுதல் எந்த ஒரு செய்தியும் இத்தளங்களில் இருந்து யாழ கருத்துக்களம் பகுதியில் இணைக்க முடியாது.

 

 

இந்த செய்தி ஈகுருவி யில் இருந்து இணைக்கப்பட்டு இருக்கு. ஈகுருவி இந்தப் பட்டியலில் எங்கு உள்ளது?

இந்த செய்தி ஈகுருவி யில் இருந்து இணைக்கப்பட்டு இருக்கு. ஈகுருவி இந்தப் பட்டியலில் எங்கு உள்ளது?

மூலம் ஈ குருவி அல்ல 

தமிழ் cnn தான் இதன் மூலம் இதை சரி பார்க்கவும் 

 

அதில் நன்றி குருவி என்றே உள்ளது அது ஈ குருவி அல்ல செய்தி இணைத்தவரின் பெயர் .

 

அதில் உள்ள புகைப் படங்களில் உள்ளதே அது tamilcnn  என்று அது உங்களுக்கு தெரியலையா? ஈ குருவிதான் tamilcnn  இன் செய்திய போட்டுள்ளது  நன்றி.

 

 

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஈக்குருவி எழுதிச்சோ பேய்க்குருவி எழுதிச்சோ... கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று மக்கள் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்கள். நாய் வாலை நிமிர்த்த முடியாது. :rolleyes:

ஈக்குருவி எழுதிச்சோ பேய்க்குருவி எழுதிச்சோ... கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று மக்கள் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்கள். நாய் வாலை நிமிர்த்த முடியாது. :rolleyes:

 

மக்களை திரும்ப கொண்டுவருவது எல்லோருடயதுமான கடமை. அரச பக்கம் பிரிவினைகளை ஊதிப் பெருப்பிக்க நாம் தான் இடம் கொடுக்கிறோம்.

 

பென்சில்வேனியாவில் சிறப்பாக நடை பெற்ற முரசறைவிற்பையே குறைத்துதான் எழுதப்பட்டது. இப்படித்தான் அரச பக்கம் சந்தேகங்களை விதைப்பதில் வெற்றி காண்கிறது.

 

ஜனநாயக அமைப்புகளாக வெளிநாடுகளில் இயங்கும் போது நியாமான அளவு குழப்பம் ஏற்படத்தான் செய்யும். இதில் தலைவர்களுக்கு ஒரு குறித்தளவு கட்டுப்பாடுதான் இருக்க முடியும். 

 

எனவே குழப்பத்தை தூண்டுபவர்களை அடையாளம் கண்டு கவனிக்காது விடுவதுதான் பலன் தரும். பிரிகிறார்கள் என்று கூறிக்கொண்டு ஒதுங்க வைப்பதுதான் குழப்பத்தை தூண்டுவோரின் நோக்கம்.

 

நாம்தான் முன்னால் போக வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.