Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரிலும் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை

Featured Replies

லங்கா அக்டமிக் கருத்துக களத்தில் இருந்து வெளிக்கும் உண்மைகள், ஒரு சிங்களவரின் பார்வையில், புலிகள் ஏன் மகிந்தவை வெற்றி பெறச் செய்தனர் என்று சொல்லுறார்,முகத்தார் சுகமா இருக்கிறியளோ, ரணில் வெல்ல இல்லை எண்டு கவலைப் பட்டியள், இப்ப விளங்கிச்சுதோ?

Trinco is virtually under siege. The main road is heavily mined and blocked off. the approach from batticaloa runs through muttur and the ltte has grabbed muttur. the navy camp is under artilery fire preventing movement in and out. that leaves only china bay open. now do you understand why the LTTE wanted mahinda rajapakse to win the last presidential election?

  • Replies 90
  • Views 15k
  • Created
  • Last Reply

லங்கா அகடமிக் கன நேரம் வேலை செய்யாம இருந்து இப்ப தான் வேலை செய்யுது.

17 இராணுவ முகாங்கள் புலிகள் வசம் வீழந்தன. 20 மேற்பட்ட படையினர் பலி!

சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் தற்காப்பு தாக்குதல் நகர்வு நடவடிக்கையில் திருமலையில் 17 சிறீலங்கா இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகள் வசம் வீழந்துள்ளன. பல நகரங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணிமுதல் ஆட்லறி பீரங்கித் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறீலங்கா படைமுகாம்களை நோக்கி விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகள் தாக்குலை நடத்தியவாறு விடுதலைப் புலிகள் நகர்வுகளை மேற்கொள்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் தற்காப்புச் சமரில் கட்டைப்பறிச்சான் தொடக்கம் மகிந்தபுரம் வரையிலான 17 இராணுவ முகாம்கள் தகர்தழிக்கப்பட்டதோடு பல நகரங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

கட்டைப்பறிச்சான், பாலத்தோப்பூர், தச்சனூர், மகிந்தபுரம் ஆகிய பகுதிகள் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டப்பாட்டுக்குள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து மூதூர் நகரம், சேருநுவர பகுதிகளில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றன. மோதலை அடுத்து மூதூர் இறங்கு துறை, மூதூர் காவல்துறை நிலையம், சேருநுவர காவல்துறை நிலையம், அகியன விடுதலைப் புலிகளின் போராளிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மூதூர் பகுதியும் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. மூதூர் நகரம், காந்திநகர், செல்வநகர் ஆகிய பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை. பிந்திக்கிடைத்த தகவலின் படி மூதூர் இறங்குதுறையும் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்துள்ளது.

இன்றை சமர் குறித்து கிழக்கு மாகாண சிறீலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி ரொகான் அபயவர்த்த ரொயிற்றர் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கையில் விடுதலைப் புலிகள் மூதூரின் முக்கிய பகுதிகளையும் கட்டிடங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் இதனால் முன்னைய நிலைகளிலிருந்த படையினர் பின்வாங்கி இழந்த இடங்களை மீட்பதற்கான சமர் நடந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வலிந்த படையெடுப்பில் சிறீலங்கா தரப்பில் பலந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்றை தாக்குதலில் 20 மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 50 படையினர் படுகாயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. எனினும் இதனை உறுதி செய்யமுடியவில்.

உண்மை நிலையை மூடிமறைக்கும் சிறீலங்கா படையினர் இன்றை தாக்குதலில் 2 கடற்படையினரும் 3 தரைப் படையினருமாக 5படையினர் பலியானதாகவும் 24 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்க ஈடுகொடுக்க முடியாத படையினா ஆயுதங்களையும் போர்த் தளபாடங்களையும் போட்டுவிட்டு தப்பியோடுகின்றனர்.

தற்பொழுது கல்லடிப் பகுதியில் உக்கிர மோதல்கள் நடைபெறுவதாக தெரியவருகிறது.

இன்றை தாக்குதல் தொடர்வில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. இன்றை தாக்குதல் தொடர்பான உண்மையான முழுமையான செய்திகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

இதன்படி பார்த்தால் மகாவலிகங்கை ஆற்றுப்படுக்கைகளில் நிலை எடுத்து இருந்து டெல்ரா பகுதியான நடுத்தீவில் தவழுகிறார்கள் போலகிடக்கு...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை நகரப்பகுதியில் இருந்து சிறிலங்காப்படையினர் பேரூந்துகள் மூலம் மூது}ர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதி நெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்த படையினரும் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் இருந்த படையினருமே திரட்ப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் திருகோணமலை நகரப்பகுதி வீதிகளில் படையினரின் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பக்கத்தால் வளித்து துடைக்கும் தந்திரத்தைதான் புலிகள் கொண்டு இருகிறார்கள் எண்டு அவர்கள் நினைத்தால் அதுக்கு நாங்கள் என்ன செய்யமுடியும்...!

புலிகள் அந்த பகுதியால் மேற்கொண்டு முன்னேறுவார்கள் எண்டு எனக்கு தோணல...!

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறில் புலிகளின் கவனத்தை திருப்பலாம் என்று நினைத்து பெரும் எடுப்பு எடுத்தவை! கடைசியில் மூதூர் போய் விட்டது. மூதூரில் பெரும்எடுப்பு எடுக்க திருகோணமலை நகரத்தில் இருந்து நகர்த்திகினமாம்!

எனக்கு நம்பிக்கையில்லை. திருகோணமலை நகரமும் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் எனி இருக்கும் என்று!

பகிடி என்னெண்டா உங்கள் எல்லாருக்கும் விளங்கிறது உந்த அமெரிக்கா,பிரித்தனியா,இந்திய

பாவம் "பொன்ஸ்சேகா" வந்ததும் வராததுமாய் சண்டையை பிடிக்க வைச்சு இராணுவதளபதி மேல இன்னும் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்காங்களப்பா.

உந்த கால்பந்தாட்டத்தில பயிற்சியாளர் சரியில்லை எண்டு மாத்துறதுபோல உவரையும் எல்லே மாத்தப்போறாங்கள்.

20060802t110203450x314ussrilankajn2.jpg

Sri Lanka's military fire multi barrel rockets in Trincomalee in northeastern Sri Lanka August 2, 2006. (Anuruddha Lokuhapuarachchi/Reuters

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கப்பா படம் காட்டுறாங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிபிசி சன(நாய்)க வானொலி என்ன சொல்லுது என்டு பாப்பம் என்டா அவங்கட இணையத்தள வானொலியின்ர லிங் வேலை செய்யுதில்லை

அரோகரா....

உந்த ரி.பி.சி பக்கத்தால போகேக்கை, அழுகுரல்கள் கேட்குது!! இந்தியாவிலிருந்து வேள்விக்கு கொண்டுவரப்பட்ட பரந்தன் ராசனின் ஈ.என்.டி.எல்.எப் கும்பல்கள் கட்டைப்பறிச்சான், மூதூர், ... இல் கொண்டுவந்து ஆமிக்காம்புக்கை கிடந்ததுகள்!!! ஈழபதீஸானே! உந்த அகோர அடிகளோடு கும்பல் கூண்டோடு மேலை போட்டுதோ????

***********b]

அரோகரா.... :smile2: :mrgreen: :lol:

**** நீக்கப்பட்டுள்ளது-யாழ்பாடி

திருகோணமலையும் விடுதலைப்புலிகளின் வசம் வீழ்ந்துவிட்டது என்ற செய்தியும் வெகு விரைவில் வரும்.

Fighting between the Sri Lankan army and Tamil Tiger rebels in the north-eastern district of Trincomalee has spread.

Residents in the town of Muttur say the rebels have taken control of key areas in the centre, including the jetty.

Muttur is a predominantly Muslim town and thousands have taken shelter in mosques and school buildings, local people told the BBC's Tamil service.

கேணல் சொர்ணம் அண்ணாவின் தலைமையில்த்தான் தாக்குதல் நடக்கிறதாம்.... அப்பிடி எண்டால் தான் இல்லாவிட்டால் புலிகளால் தாக்குதல் நடாத்தமுடியாது எண்டும் தாந்தான் புலிகளின் வெற்றிகள் எல்லாத்துக்கும் காரணம் எண்றும் சொன்ன நாதாரி எங்கை போய் ஒழிஞ்சிட்டானாம்...???? :roll:

தல.

அந்த ஆள்தான் இராணுவத்தின் தப்பியோட்டத்தை வழிநடத்துறாரோ தெரியவில்லை. :lol: :lol:

தல.

அந்த ஆள்தான் இராணுவத்தின் தப்பியோட்டத்தை வழிநடத்துறாரோ தெரியவில்லை. :lol: :lol:

பாம்பைக்கண்டாலே ஒட்டமெடுக்கிறவர். முதல்செல் விழவே காலிக்கு ஓட்டமெடுத்திருப்பார். :lol:

சிலவேளை அங்கநிண்டு எப்பிடி தப்பிஒடுவது என்று வழிநடத்துறார் போல.

மூதூர் நகரம் முற்றாக புலிகள் வசம்?

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 22:58 ஈழம்] [காவலூர் கவிதன்]

மூதூர் நகரில், தற்போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் முழுமையான நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் நகருக்குள் நுழைந்துள்ள விடுதலைப் புலிகள், தற்போது தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருவதுடன், அவர்களது பலமான நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

சிறீலங்கா இராணுவமும் கடற்படையும், தங்களது முகாம்களிலிருந்து கடுமையான எறிகணை வீச்சுக்களை மூதூர் பகுதிகள் நோக்கி அதிகப்படுத்தியுள்ளதுடன், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=27960

மூதூர் அரசினர் வைத்தியசாலை மூடப்பட்டது!

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 22:56 ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறீலங்கா இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக வீசப்பட்ட எறிகணைகள், மூதூர் வைத்தியசாலையிலும் விழுந்து வெடித்ததால் நோயாளிகள் பலர் காயமடைந்ததுடன், வைத்தியசாலை கட்டடமும் பலத்த சேதமடைந்தது.

இதனால் தற்போது வைத்தியசாலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள், வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது.

திருகோணமலை கடற்தளத்திலிருந்து சிறீலங்கா கடற்படையினர் தங்களது எறிகணைவீச்சுத் தாக்குதல்களை மக்கள் குடியிருப்புக்கள் நோக்கி மீண்டும் அதிகரித்துள்ளதாக தற்போது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று புதன்கிழமை மாலை 4 மணியிலிருந்து தொடர்ச்சியாக வீசப்படும் ஆர்ட்டிலறி எறிகணைகள், மூதூர் கிழக்குப் பகுதிகளில் விழுந்து அழிவை ஏற்படுத்திவருகிறது.

மூதூர் வைத்தியசாலையில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர் ஒருவரும் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=27959

அது சரி என்னவாம் உவை பிபிஸி தமிழ் ஒசைகாரர்?

உதுக்குள்ள தானே கனபேர் நிண்டவை ஈண்டில்f

:P :P :P

புல்மோட்டை கடற்சமரை அடுத்து பயிற்சி பெற்ற 73 சிங்கள குடியேற்றவாசிகளும் தப்பியோட்டம்.

மணலாறு கொக்குத்தொடுவாய் பகுதியில், சிறீலங்கா அரசாங்கத்தால் ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்ட எழுபத்து மூன்று சிங்களவர்கள், குடியேற்றங்களை விட்டு தப்பியோடியுள்ளனர்.

இன்று மாலை புல்மோட்டை கடலில் இடம்பெற்ற கடற் சமரை அடுத்து, குறிப்பிட்ட எழுபத்து மூன்று சிங்கள குடியேற்றவாசிகளும், புல்மோட்டை முஸ்லிம் மகாவித்தியாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களைப் போன்று, திருமலையின் வடமுனையில் சிறீலங்கா படைகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற மேலும் ஒரு தொகுதி சிங்களவர்கள், குடியேற்றக் கிராமங்களை விட்டு வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

r3620806994ih6.jpg

Sri Lanka's military fire a multi barrel rocket in Trincomalee in northeastern Sri Lanka August 2, 2006. Sri Lanka's civil war appeared to have resumed in all but name on Wednesday as Tamil Tiger rebels attacked three army camps

மூதூர் அரசினர் வைத்தியசாலை மூடப்பட்டது!

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 22:56 ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறீலங்கா இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக வீசப்பட்ட எறிகணைகள், மூதூர் வைத்தியசாலையிலும் விழுந்து வெடித்ததால் நோயாளிகள் பலர் காயமடைந்ததுடன், வைத்தியசாலை கட்டடமும் பலத்த சேதமடைந்தது.

இதனால் தற்போது வைத்தியசாலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள், வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது.

திருகோணமலை கடற்தளத்திலிருந்து சிறீலங்கா கடற்படையினர் தங்களது எறிகணைவீச்சுத் தாக்குதல்களை மக்கள் குடியிருப்புக்கள் நோக்கி மீண்டும் அதிகரித்துள்ளதாக தற்போது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று புதன்கிழமை மாலை 4 மணியிலிருந்து தொடர்ச்சியாக வீசப்படும் ஆர்ட்டிலறி எறிகணைகள், மூதூர் கிழக்குப் பகுதிகளில் விழுந்து அழிவை ஏற்படுத்திவருகிறது.

மூதூர் வைத்தியசாலையில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர் ஒருவரும் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=27959

இந்த எறிகணைவீச்சை நியாப்படுத்தவேண்டிய களத்தின் அரசாங்க பேச்சாளர் என்ன சொல்லப்போகிறாரோ? :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரிபிசி தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விடுவித்துள்ளார் என மேலும் சுடச் சுடச் செய்திகளை தந்து கொண்டிருக்கின்றது. :lol:

கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரிபிசி தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விடுவித்துள்ளார் என மேலும் சுடச் சுடச் செய்திகளை தந்து கொண்டிருக்கின்றது. :lol:

:P :P :P :P

இந்திய பிரதமர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விடுவித்துள்ளார்

அட இந்திய பிரதமர் தொலைபேசியில புலிகளோட தொடர்பு கொண்டவரோ? :shock:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.