Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இழக்கக் கூடும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
 
மாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம் சுமத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வரும் அமீர் அலி முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Lankamuslim.org

One World One Ummah

அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தாவல் ?

with one comment

ameeraly-21.gif?w=57&h=62ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் பலர் மீண்டும் அக்கட்சியில் இணையும் சாத்தியக் கூறுகள் தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் . இதன் பிரதான அங்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுபப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தமது அரசியல் பயணத்தினை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அல்லது பாராளுமன்ற உறுப்புரிமையை பெறலாம் என்று தெரிவிக்கப் படுகிறது.

இவ்வியடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உபதலைவரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அகமட் அவர்களின் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் இன்றிரவு (25.04.2013) பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென்று பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து பின்னர் அதிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிக்கு மாறி தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவுள்ளார்.

இவருக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி வேண்டும் என அசாங்கத்திடம் கோரியோது அதனை ஜனாதிபதி தருவதாக கூறியும் அது நிறைவேறாதவிடத்து பாராளுமன்றில் பிரதியமைச்சர் பதவி ஒன்று தருவதாக ஜனாதிபதி அவர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டடிருந்தது.

இவருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி அதன் மூலம் பிரதியமைச்சர் பதவி வழங்குவதாற்காக பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா அவர்களை பதவி விலக வைத்து அவ்வெற்றிடத்திற்கு அமீரலியை இட்டு நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தான் பதவி விலகுவதாக அறிவித்தவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது பின்னர் அவர் தனது கடித்தினை மீளப் பெற்றுக்கொண்டார்.

அதன் பிற்பாடு அமீர் அலியின் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் கனவுஇடை நடுவில் கலைந்தது. இவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் வழங்கும் பொறுப்பு அமைச்சர் பஸீல் ராஜபக்ச அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது இது நிறைவேறாத பட்சத்தில் தற்போது அமீரலி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்குத் தாவவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://lankamuslim.org/2013/04/25/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

இன்று இணையத்தளங்களில் சலசலப்பை(உண்மையில் கலகலப்பை)ஏற்படுத்தும் தலைப்பு இதுதான். இவரை பதவில் அமர்த்தி பாலஸ்த்தானம் செய்த முக்கியத்துவர்களில் நமது உறவு பொய்யட் ஐயாவும் ஒருவர். இதை படித்தால் இன்று மனம் தளர்ந்து சற்று கண் கலங்க போகிறார். ஒரு வேளை இது SLFP யின் வேட்டியை உரிய கக்கீம் செய்த சதியாகவும் இருக்கலாம். மு.க. வை பதவியில் இருத்த என்று சம்பந்தர் கேட்ட போது, அதை விட நயீப் மயீத் பதவிக்கு வருவதுதான் முஸ்லீம்களுக்கு நல்லது, நான்கள் இன்று தமிழருக்கு நல்லது பற்றி கவலைப்பட முடியாது என்று கூட்டமைப்பை தூக்கி எறிந்த்து விட்டு சென்றவர். அந்த நடத்தையில் உண்மை இருந்திருக்குமானால் இன்று இவரின் பதவி பதவி போகும் வரை கூட்டங்களை பகிஸ்கரிக்க வேண்டும் என்று தனது கட்சி மாகாண சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விட்டிருக்கிறார். அப்படியாயின் இந்த அப்பாவி மூஞ்சையின் பதவியை பறிக்க வைப்பது நியாயம் இல்லை இல்லையா? இவரின் பதி பறி போனால் கக்கீம் செய்தது சதி அல்லது நியாயம் இல்லாத தொன்றாக மட்டும்தான் இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
இவரின் கட்சித்தாவல்களை பார்க்கும் போது பதவி ஆசை கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. யார் கூட எறிகிறார்களோ அப்பக்கம் செல்வார் என எதிர்பார்க்கலாம்.
 
ரிசாத்துடன் இருந்த இவர் வெளியேறுவதை ரிசாத் விரும்புவார் என நினைக்கவில்லை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையான்,கருணா இப்ப எங்கை?

அப்பாவி மூஞ்சைக்கு பிள்ளையான் வைத்திருந்த நாள் அளவுக்கு கூட மாகாண சபையை வைத்திருக்க முடியவில்லை என்பதுதான் பகிடி. இதற்குள் பொய்யட் எதிர்கட்சிக் கூட்டமைப்பு நயீப் மயீத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார். இன்று மயீத்தின் கட்சி முஸ்லீம்கள் அவர் பதவியால் விழுத்தும் போது ஒத்துழைப்பு கதையே இல்லையே. அதினிலும் பகிடி என்ன என்றால், எல்லோரும் கூட்டமைப்புகதிரைக்கு  அடிபடுகிறது என்றுதான் எழுதுவார்கள். உண்மையில் கூட்டமைப்பார் வீடுகளில் கதிரைகள் இல்லையோ அல்லது அவர்களின் வீட்டுக்கதிரைகளில் அவர்களின் மனைவிமார் ஆற அமர இருக்கவிடவில்லையோ தெரியாது: மக்களின் பணத்தில் கார்கள் ஓடும் மந்திரிகள் மாகாண சபைக்குப் போகவில்லை. கதிரைக்கு அடிபடுமபெதிக்கட்சி கூட்டமைப்பினர் தான் அங்கு போய்க் கதிரைகளை நிரப்பி வந்தார்கள் என்பது மாத்துக்கருத்துக்கள் அறிய வரவேண்டிய பரிதாபகரமான செய்தி.  :(

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.