Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் சம்பந்தனுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம்

Featured Replies

sampamthanmp.PNG
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாட கனடிய மக்களுக்கு அரிய வாய்ப்பு !!
Jun 25 2013 09:15:14

 எதிர்வரும் ஜூலை 4-7 ம் தேதிகளில் சோனி மையத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) தமிழ் விழாவினில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் , நாடாளுமன்ற உறுப்பினகளான திரு.ம.சுமந்திரன் மற்றும் திரு. ஈ.சரவணபவன் ஆகியோர் கனடா வரவுள்ளனர். 

 
பெட்னா நிகழ்வுகளுக்குப் பின்னர் ஜூலை 7 ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனான சந்திப்பிற்கும் , சமகால இலங்கை நிலவரம் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. 

நியூ ஜாஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்  தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ம.சுமந்திரன் மற்றும் திரு. ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொள்வர்.

 

கனடியத் தமிழ் மக்கள் அனைவரும் தவறாது இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விபரங்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் : 416 303 4360, 416 281 1165, 416 282 0947.

உங்கள் எதிர்கால பலன்களை அறிய ஒரு அரிய  சந்தர்ப்பம்  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து பேசி முடியச் சொல்லுவார்.. நாங்கள் எங்களை நிலைப்பாட்டை யாருக்காகவும் மாற்றுக் கொள்ள மாட்டம் என்று. பிறகென்னத்திற்கு கலந்து பேசுறதோ..??!

 

முடியல்ல.. நம்ப பெரிசுகளின் அரசியலே.. தனி வழி..! எல்லாரும் சுயபுராணத்தில் சுயமுன்னிலைப்படுத்தலில் கவனமா இருக்கினமே தவிர.. மக்களுக்கு என்ன அவசியம்.. என்ன கொண்டு செல்லனும் என்ற நோக்கம் யாரிடமும் இல்லை. அது தேசிய தலைவரின் மெளனத்தோடு மெளனமாகிவிட்டது.  :)  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

போன முறை வந்த போது ஒருவரின் கேள்விக்கு விடையளிக்காமல் கோபப்பட்டு விடையளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார். இம்முறை அப்படி செய்ய மாட்டார் என எதிர்பார்க்கிறேன்.

போன முறை வந்த போது ஒருவரின் கேள்விக்கு விடையளிக்காமல் கோபப்பட்டு விடையளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார். இம்முறை அப்படி செய்ய மாட்டார் என எதிர்பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சிநடந்தது 2010 பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் ,CTR வானொலி நேர்காணலில் 

இது திட்டமிட்டு சம்பந்தன் ஐயாவை அவமானப்படுத்த திருச்செல்வம் (1970இல் அருளம்பலத்திட்கு எல்லாமாக இருந்தவர் )தலைமையில் நடந்தது .

 

விரைவில் கனடா TNA அமைப்பின் அறிவிப்பு வெளியிடப்படும் .

Edited by Gari

கனடிய தேர்தலில்  TNA , நாம் தமிழர் போன்ற போட்டியிட்டு கனடாவை ஆள  வாழ்த்துகிறோம்  :lol: 

போன முறை வந்த போது ஒருவரின் கேள்விக்கு விடையளிக்காமல் கோபப்பட்டு விடையளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார். இம்முறை அப்படி செய்ய மாட்டார் என எதிர்பார்க்கிறேன்.

 

சம்பந்தர் பதில் அளிக்கப்போவதில்லை என்பதுதான் எனது நம்பிக்கை. இது கேள்வி கேட்க கூடாது என்றோ, அல்லது சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக தகுதி இல்லை என்றோ ஆகாது.

 

தமிழர் அரசியலின் இன்றைய காலம் செய்கை நிறையவும், கேள்விக்கு குறைவாகவும்தான் சந்தர்ப்பம் வழங்குகிறது. ஆனால், எவருக்கும் முடிவதோ, அல்லது யதார்த்தமாக இருப்பதோ செயலில் ஒன்றும் செய்ய முடியாமையும், நிறைய கேள்வி கேட்க கூடிய நிலையுமே.

 

இன்றிரவு படுக்கப் போகும் போது ஒரு தந்தை தனது மகனிடம் ஒரு கேள்வி கேட்பான். அதன் நோக்கம் தனது மகனுக்கு என்ன பிடிக்கும் என்று கண்டறியவாகும். அதன் போது அவன் மகனை அது பிடிக்குமா, இது பிடிக்குமா என்று கேட்பான். தான் கண்ட சில புதியனவற்றை விபரித்து அவற்றின் அபிப்பிராயம் பற்றி கேட்பான்.  மறுநாள் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்த வசதிபடைத்த தந்தை ஆயத்தம் செய்கிறான்.

 

இன்னொரு வீட்டில் இன்னொரு தந்தை தனது கையில் இருந்த சிறு தடியால் மகனுக்கு அடி போட்டுக்கொண்டிருக்கிறான்.  மகன் அழுகிறான். அந்த வீட்டில் தாய் கொடுத்த சுவையில்லா குப்பைப் பண்டத்தை அந்த மகன் தூக்கி எறிந்து ஒருவருக்கும் உதவாமல் பண்ணிவிட்டான். சிறு பையன்தான். சுவை பழக்கப்படாத சிறு நாக்கு. ஆனால் பகல் முழுக்க வேலைசெய்துவிட்டு வந்த தந்தைக்கு இன்றிரவு ஒன்றும் ஆகாது என்று தெரியவருகிறான். வீட்டிலிருக்கும் எதோ ஒன்றிரண்டை மனைவி விபரித்து அவனுக்கு அது சாப்பிட முடியாது, இது சாப்பிட முடியாது என்கிறாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு  இருப்பதில் ஒன்றை தெரிந்து அதை செய்து கொடு என்று சொல்லிவிட்டு சிறுவன் சாப்பிட்டு மிஞ்சுவதை தானும் மனைவியும் உண்டுவிட்டுத்  தூங்க என்று முற்றத்தில் காத்திருந்தான். உணவு வந்தபோது அதை பார்த்து ஆத்திரமடைந்த சிறுவன் மூன்று பேருக்கும் பொதுவில் இருந்த அந்த ஒரு வட்டிலையும் தூக்கி அப்படியே புழுதி மண்ணில் வீசிவிட்டான்.

 

அந்த தந்தை, பிறந்தாள் பரிசு பற்றி கேள்வி கேட்கும் தந்தை மாதிரி அந்த சிறுவனிடம் நடந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அது இன்றிரவு சிறுவன் விரும்பும் எந்த உணவையும் வீட்டுக்கு கொண்டுவராது. தந்தை அடி போட்டுக்கொண்டிருப்பது, தனது உணவையும் சேர்த்து சிறுவன் கெடுத்துவிட்டான் என்பதால் அல்ல, பாடுபட்டு தேடிக்கொண்டுவந்த தாயின் மனதை உணரவில்லை என்பதால் அல்ல, இல்லாத வீட்டில் சிறுவனாக இருந்தால் அவனுக்கும் வீட்டுப்பொறுப்பு இருக்கு என்பதை அவனை உணரவைக்கவே.

 

இலங்கையில் ஜனநாயகம் இருந்திருந்தால் சம்பந்தர் கேள்விகளுக்கு பொதுவில் பதில் அளிக்க மறுக்கும் இயல்புக்கு தலைமை பதவியை அடையச் சிரமப்பட்டிருப்பார். ஆனால் இன்றைய நிலை, அவரின் அந்த பழக்கம் அதிகம் பாதிகமில்லாதது. அவர் தமிழ் உணர்வோடு எடுக்கும் முடிவுகள் அவர் பதவியில் இருக்க போதுமானவையாக இருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan-slflag1.jpg

 

நான் கனடாவிலிருந்திருந்தால்... சம்பந்தனிடம், சிங்கக் கொடியை ஏன் தூக்கிக் காட்டினீங்கள் என்று கேட்பேன்.

2013paperad12_zpsa0d1ab0e.jpg

Edited by Gari

நுழைவுச் சீட்டுகள் தேவைப்பட்டால் என்னுடைய தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் .

உங்கள் ஒத்துழைப்புகள் வட மாகாண  தேர்தல் வெற்றிக்கு பயன்படும் .
நன்றிகள் .
 

தவிர்க்க முடியாத காரணங்களினால் சம்பந்தன் ஐயாவும் ,சுமந்திரனும் வருகை தர முடியாத காரணத்தினால் சந்திப்பும் ,இரவுவிருந்தும் பின்போடப்பட்டுள்ளது .

மீள நடைபெறும் நாள் நேரம் பின்னர் அறியத்தரப்படும் .ஏற்கனவே வாங்கிய நுழைவுச்சீட்டை மீளவும் பயன்படுத்தலாம் .

நன்றி

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.