Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அரசாங்கம் பேச்சுக்கு வருமாறு

Featured Replies

பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அரசாங்கம் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு.

மாவிலாறு தண்ணீர் தடுப்பை காராணமாக வைத்து மாவிலாறு அணையைத் திறக்கப் போவதாகக் கூறிக்ககொண்டு சிறீலங்காப் படையினர் வலிந்த படையெடுப்பை மேற்கொண்டுள்ளது.

படையினரின் வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்து விடுதலைப் புலிகளின் படையணிகள் திருமலையின் பல பகுதிகளை மீட்டு தமது ஆளுகைக்குள் பல சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை புலிகள் கட்டுக்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

திருமலை முழுவதும் புலிகள் வசம் விழப்போகின்றதே என்ற நிலையில் பொல்லுக் கொடுத்து அடிவேண்டிய நிலையில் சிறீலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக விடுதலைப் புலிகளை பேச்சுக்கு வருமாறு அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல மாவிலாறு தொடர்பில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் யுத்தத்திற்கு திரும்ப விரும்பம் இல்லை எனவும் மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலைய பிடிச்ச பிறகு பேச்சுக் போகலாம் போல இருக்கு.

_41385799_tigermen2_220bbc.jpg

இது இப்படித்தான் ஆகப் போகிறதென்று

பலருக்கு தெரியும்.

இலங்கை அரசு ஒரு போதும் தமிழர் உரிமைகளை கேட்டுக்

கொடுக்கப் போவதில்லை.

அது அன்றே நடந்திருந்தால் இன்று

இலங்கை சிங்கப்பூரை விஞ்சியிருக்கும்.

ஒரு நாட்டில் வாழும் அனைவரும்

அந்நாட்டின் குடிமக்கள்தான்

அவர்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும்

உண்டு எனும் எண்ணம் என்று தவறி

1ம் 2ம் 3ம் தரத்தில் ஒரு இனத்தை பார்க்கும் நிலை

உருவாக ஆரம்பித்தாலே அந்த நாடு

தன்னை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல

அடித்தாளம் போட்டு விட்டது என்றே கருதலாம்.

1958ம் ஆண்டு இந்த அடித்தாளம் இலங்கையில்

போடப்பட்டாகி விட்டது.

இதற்கு சிங்களவர்கள் மட்டுமல்ல

தாம் மட்டுமே முக்கிய கெளரவ பிரஜைகளாக வாழ வேண்டும்

என்ற எண்ணம் கொண்ட ஒரு சில தமிழர்களும் காரணமே.............

மாவிலாறு அணையை கைப்பற்ற

தாக்குதல் தொடுக்கப்பட்டதாக

இலங்கை அரசு கூறிய போதும்

லெபனான் நாட்டினுள் இஸ்ரேல் தாக்குவதைப்

போல நாமும் ஏன் முடியாது என

எண்ணி தொடுத்த முட்டாள் தனமான தாக்குதலின்

பின் விளைவே இன்றைய யுத்தம்.

யுத்த முஸ்தீபு எப்போது வந்தாலும்

அதற்கு தயாராகவே இருந்த விடுதலைப் புலிகள்

தமக்குக் கிடைத்த நேரத்தை சாதகமாக்கிக் கொண்டார்கள்.

ஹெஸ்பொல்லாக்கள் லெபனானில் இருப்பதை

லெபனானே விரும்பவில்லை என்பதை

அந்த போரை நன்கு பார்த்தாலே விளங்கும்.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக

மேடைப் பேச்சு போல் பேசுவதைத் தவிர

எந்த ஒரு இராணுவ நடவடிக்கையையும்

லெபனானோ அல்லது ஏனைய அரபு நாடுகளோ எடுக்கவில்லை.

ஹெஸ்பொல்லாக்களிடம் உள்ளது

இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வொன்று மாத்திரமே!

அதை விட

எந்தவொரு யுத்த உபாயங்களோ

அல்லது உத்திகளோ

அரசியல் சாணக்கியமோ

இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகள்

தம்மைத் தவிர வேறு எவரையும்

முழுமையாக நம்பாத

அதே சமயம்

யார் எதிர்த்தாலும் தம்மை மட்டுமே நம்பிய

படை பலம் ஒன்றையும்

அரசியல் சாணக்கியத்தையும் வளர்த்தே வந்திருக்கிறார்கள்.

போருக்கான சமிக்கைகளை

இந்தியாவும் சில வெளி நாடுகளும் ஏற்கனவே

விடுதலைப் புலிகளுக்கு கொடுத்ததாக

தகவல்.............?

இந்தியாவில்

காங்கிரஸ் ஆட்சி செய்தாலும்

தமிழ்நாட்டு மக்களது உணர்வுகளும்

கலைஞரது ஆட்சியும் கூட

புலிகளுக்கு சாதகமே..............

வைகோ நெடுமாறன் திருமாவளவன் போன்றோர்

மக்கள் உணர்வை தம் பக்கம்

வைத்திருக்க ஒரு சக்தியாக செயல்படுகிறார்கள்

என்றே சொல்ல வேண்டும்.

என்னதான் எதிர்ப்புகள் இருந்தாலும்

உலகத் தமிழர்கள் (விரல் விட்டு எண்ணக் கூடியவர்களை தவிர்த்து)

பெரும்பாலனவர்கள்

விடுதலைப் புலிகளை ஆதரிக்கவே செய்கின்றனர்.

அது போலவே

உலக நாடுகளும்

இலங்கை அரசின் தந்திர போக்கை

புரிந்து கொண்டதன் விளைவாக

அடிபட்டு வரட்டும் என்ற நிலைக்கு

விட்டது போன்ற தோற்றமே

தெரிகிறது.................

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த முஸ்தீபு எப்போது வந்தாலும்

அதற்கு தயாராகவே இருந்த விடுதலைப் புலிகள்

தமக்குக் கிடைத்த நேரத்தை சாதகமாக்கிக் கொண்டார்கள்.

இதைத் தான் கண்காணிப்புக் குழுத் தலைவரும் சொல்லிக் கொள்கின்றார்! யார் யுத்ததை ஆரம்பிப்பது என்று காய்களை மாறிமாறி நகர்த்தி கடைசியில் புலிகளின் காய்நகர்த்தலில் இலங்கையரசு, விழுந்து விட்டது என்ற வகையில்! தண்ணீரைத் தடுத்தால், இலங்கையரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று புலிகள் நம்பியிருந்தார்கள் என்று!

சொல்லப் போனால், இந்த 8 மாதங்களாக யுத்தம் தொடங்கியதற்கான பழியை மற்றவர் தலையில் போடுவதில் இலங்கையரசு முழுமையான தோல்வி நிலையை எடுத்துவிட்டது!

புலிகளின் சாணக்கியம் மகிந்தரை ஆட்சியில் இருந்தியதில் இருந்தே ஆரம்பிக்கிறது.இதனை அன்றே எழுதினோம்.

யார் யாரை எங்கு அமர்த்தினால் அவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்ற சிந்தனையின் அடிப்படயில் தான் புலிகளின் உபாயங்கள் யுத்திகள் இருகின்றன.

புலிகளை ஒரு இராணுவ சிந்தனை கொண்ட அமைப்பாக மட்டுமே சித்தரிக்க முயலுபவர்களும், அவர்களுக்கு அரசியல் தெரியாது என்று உபதேசிப்பவர்களும் தமது விமர்சனனங்களை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது.புலிகளின் உபயாங்கள் ஆளாமான உளவியலின் அடிப்படயில் ஆனவை.அவை இராணுவம் அரசியல் என்ற வரையறைகளைக் கடந்தவை.

எமக்கான விடுதலைக்கான சூழலை எதிரியைக் கொண்டே கட்டமைத்திருக்கும் புலிகளின் அதன் தலமையின் தீர்க்க தரிசனத்தை விளங்காதவர்களே மாற்று கருத்து என்று புலம்பித் திரிபவர்கள்.அந்த தலமையின் தீர்க்க தரிசனம் ,ஆளமான அறிவியலின் பாற்பட்ட உபாயங்கள் வழி நடத்தல் தான் போராட்டம் எழுச்சி பெறக் காரணமாக இருகிறது.இதனை விளங்கிக் கொண்டதால் தான் நாம் எல்லோரும் அந்தத் தலமையின் பால் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.அது தான் புலிகளின் பலம்.இதை துதி பாடல் குருட்டு நம்பிக்கை என்று விமர்சிப்பவர்கள் இந்த மாற்றுக் கருதாளர்களால் அவர்களுக்கு கருத்தே இல்லாத போதும் புலிகளைப்பற்றி அவர்கள் செய்த விமரிசனங்களில் எந்த எதிர்வுகூறல் நிஜமானது என்று சிந்தித்துப் பார்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மாற்றுக் கருத்தாளர் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. மாற்றுக் கருத்து என்றால், புலிகளின் போராட்டவழிpய்ல இருந்து விலகி, தங்கள் நடைமுறைச் சார்பான கருத்தினை வைக்க வேண்டும். ஒண்டுமே இல்லாமல் புலிகளைப் புறம்பாடுவது தான் மாற்றுக் கருத்து என்று வரையறுக்க முடியாது!

இவர்களை எலும்பு நக்கிகள், அல்லது அடிவருடிகள், ஒட்டுப்படைகள் என்ற அடையாளத்தினுள்ளே தான் காட்டமுடியும். மாற்றுக் கருத்து என்று சொந்தக் கருத்தில்லாத பிண்டங்களை அழைத்துக் கொண்டு திரிய இயலாது!

மாற்ருக்கருத்தாளர்கள் என்று எழுதியதை தங்களை மாற்றுக்கருத்தாளர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள் என்று திருத்தி வாசிக்கவும், சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் தூயவன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலைத் துறைமுகத்தை திறப்பதற்காக

புலிகளின் நிபந்தனைகளை அரசு பரிசீலிக்கும்!

தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் திரு கோணமலை துறைமுகத்தை மீளத் திறப்ப தற்காகவும், மாவிலாறு ஆற்று நீர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதற்காகவும் புலி கள் தரப்பின் சில நிபந்தனைகளை அரசு சாத கமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரியவருகிறது.

இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானத் தூதர் ஹன்சன் போவரும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

வடக்கு கிழக்குப் பகுதியில் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த துறைமுகப் பகுதியை மீளத் திறப்பதற்குப் பரிமாற்றாக விடுதலைப் புலிகள் விதிக்கும் சில நிபந்தனைகளை அரசு சாதகமாகப் பரிசீலிக்கிறது என்று நோர்வே யின் விசேட தூதர் ஹன்சன் போவர் ஏ.பி. செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறார்.

திருகோணமலையில் தங்களது கட்டுப் பாட்டுப் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் மற்றும் நிர்ப்பாசனத் திட்டங்களுக்கான கருவி களை அனுமதித்தல், கட்டட நிர்மாணப் பொருள்களை எடுத்து வருவதற்கான தடையை நீக்குதல் மற்றும் உணவு நிவாரணத்திட்டங் களையும், மனிதாபிமானப்பொருள்கள் மற் றும் உதவிகளையும் அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட புலிகள் பல நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கும் ஹன்சன் போவர், இந்த நிபந்தனை களையே அரசு சாதகமான முறையில் பரி சீலிக்க இணங்கியிருக்கிறது என்றும் தகவல் வெளியிட்டிருக்கிறார். தற்சமயம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள திரு கோணமலையின் கேந்திரப்பகுதியை மீளத் திறப்பதற்காக அரசு இவ்வாறு புலிகளின் நிபந்தனைகளைப் பரிசீலிக்க முன்வந்துள் ளது என்றும் ஹன்சன் போவர் குறிப்பிட்டி ருக்கிறார்.

இதேவேளை

மாவிலாறு அணையின் கதவுகள் திறக் கப்பட்டால், சமாதானப் பேச்சுக்கான கதவு களும் திறக்கப்படும் என்று அமைச்சரும் பாது காப்புத் தொடர்பான பேச்சாளருமாகிய கெஹ லிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

"" அணையில் இருந்து நீரைத் திறந்து விட்டால் அடுத்த 10 ஆவது நிமிடத்தில் அப்பகுதியில் இராணுவ நடவடிக்கையை நாங்கள் நிறுத்திக் கொள்வோம். அத்தகைய செயல் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதற் கான ஒரு சாதகமான சூழ்நிலையையும் தோற்றுவிக்கும் என்றும் அவர் தெரிவித் திருக்கிறார்.

-உதயன்

_41385799_tigermen2_220bbc.jpg

மாவிலாறு அணையை கைப்பற்ற

தாக்குதல் தொடுக்கப்பட்டதாக

இலங்கை அரசு கூறிய போதும்

லெபனான் நாட்டினுள் இஸ்ரேல் தாக்குவதைப்

போல நாமும் ஏன் முடியாது என

எண்ணி தொடுத்த முட்டாள் தனமான தாக்குதலின்

பின் விளைவே இன்றைய யுத்தம்.

-அஜீவன்

லெபனானில் இன்று நடைபெறுவது இலங்கையிலும் நடைபெறும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளை ஹிஸ்புல்லாவுடன் ஒப்பிட முடியாது.

நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுத பலத்தையும் போரிடும் ஆற்றலையும் புலிகள் கொண்டிருக்கிறார்கள்.

-- கலாநிதி குமார் ரூபசிங்க -

moorthy-L.gif

03 - August - 2006

இலங்கையில் யுத்தத்திற்கான ஒரு மூலமாக தண்ணீர்

- கலாநிதி குமார் ரூபசிங்க -

மாவிலாற்று அணை மூடப்பட்டுள்ள விவகாரம் இன்று பூதாகரமாகியிருக்கிறது. இலங்கை வரலாற்றில் நீர் காரணமாக சிங்கள, தமிழ் மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் தடவை. ஆனால், இலங்கையின் வரலாற்றில் நீரும் இனமும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன. பல்வேறு குடியேற்றத் திட்டங்களும் நீர்ப்பாசன திட்டங்களும் இதற்கு உதாரணம்.

திருகோணமலையைப் பொறுத்தவரையில் டி.எஸ். சேனநாயக்காவினால் கந்தளாய் நீர்ப்பாசனத் திட்டம் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் அல்லை, மொறவெவ, கல்லோயா ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. இலங்கை இனப் பிரச்சினை வரலாற்றில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் குடியேற்றத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.

உலக நாடுகள் பலவற்றில் முரண்பாடுகள் பலவற்றுக்கு தண்ணீர் காரணமாக இருந்திருக்கிறது. கடந்த தசாப்த காலத்திற்கும் மேலாக தண்ணீரின் அருமைத் தன்மை சர்வதேச பாதுகாப்புடன் கூடுதல் தொடர்பைக் கொண்டதாக காணப்படுகிறது. "இந்த நூற்றாண்டின் பல்வேறு யுத்தங்கள் எண்ணெய் காரணமாகவே இருந்தன. ஆனால், அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் நீருடன் தொடர்புபட்டதாகவே இருக்கும்" என்று 1995 இல் உலக வங்கியின் உதவித் தலைவர் இஸ்மெய்ல் செராஜில்டின் கூறியிருந்தார். அதேபோல் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் "தூய நீருக்கான கடும் போட்டி எதிர்காலத்தில் முரண்பாடு மற்றும் யுத்தத்திற்கான மூலமாக அமையக்கூடும்" என்று 2000 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

தண்ணீர் என்பது முடிவடையக் கூடிய ஒரு அருமைத்தன்மையான வளமாகும். இது கடும் அரசியல் அழுத்தத்திற்கு இட்டுச் செல்கிறது. ஏனென்றால், தண்ணீர் அரசியல் எல்லைகளை அலட்சியம் செய்கிறது. இதனால் அரசியல் அழுத்தங்கள் இறுதியில் முரண்பாட்டிற்கு வழி வகுக்கிறது. இதுதான் மாவிலாற்றில் நடைபெற்றிருக்கிறது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே ஏற்கனவே பல்வேறு அரசியல் பூசல்கள் இருக்கின்ற நிலையில், மாவிலாற்று அணைக்கட்டு மூடப்பட்டமை ஒரு குறுங்காலத்தில் பூதாகரமாக அரசு புலிகளுக்கிடையிலான முழு அளவிலான யுத்தத்திற்கான ஏது நிலையை உருவாக்கியிருக்கிறது.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 15,000 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கான நீர் விநியோகம் அணைக்கட்டை புலிகள் மூடியதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் கணக்கான விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டு அந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

மறுபுறத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை, உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை அந்தப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதித்தமை போன்ற காரணங்களாலேயே அணைக்கட்டை மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக புலிகள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த நடவடிக்கை அரச படைகள் வான் தாக்குதலை நடத்துவதற்கும் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வழிவகுத்திருக்கிறது. இராணுவத் தளபதி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பொழுதும், கெப்பிட்டிக்கொல்லாவவில் பஸ் வண்டி மீது கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், தற்போது மீண்டும் கடுமையான விமானத் தாக்குதல் இடம்பெறுகிறது.

பேச்சுவார்த்தை மூலம் நாகரிகமான முறையில் இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்க முடியாதா என்றதொரு கேள்வி எழுகிறது. முறையான ஒரு தீர்வுப் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

உரிய நேரத்தில் நீர் கிடைக்காது விட்டால் பயிர்கள் வாடிவிடும் என்ற நிலைமை காணப்படுகிறது. இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். அணைக்கட்டை மூடி ஆயிரக்கணக்கான மக்களை நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கியமை யுத்த நிறுத்த உடன்படிக்கையை மோசமாக மீறுகின்ற ஒரு செயலாகும்.

அதேசமயம், இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொள்வது என்பது அவர்களது அடிப்படை உரிமை. இதற்கு எதிராக செயற்படுவது என்பது அவர்களின் உரிமைகளை மறுதலிக்கின்ற ஒரு நடவடிக்கையாகும். இங்கு உண்மை என்னவென்றால் பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற வகையில் தண்ணீர் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது தான். உலகில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தண்ணீரானது இராணுவ ரீதியான ஒரு கருவியாகவும், அரசியல் ரீதியான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இது இலங்கையில் அரசியல் ரீதியான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையை மிக எளிமையான ஒரு முரண்பாட்டுக்கான தீர்வுப் பொறிமுறையினூடாக தீர்த்திருக்க முடியும் என்பதேயாகும். மாறாக பெரும் யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுகிறது. வான் படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், சில தீவிரவாத அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் மனதைத் தூண்டி விடப் பார்க்கிறார்கள். உதாரணமாக ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் பொதுமக்களை திரட்டிச் சென்று பலவந்தமாக அணையை திறக்கின்ற முயற்சியை குறிப்பிடலாம். ஒரு நாடகத்திற்கு இது சிறந்ததாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் சாத்தியம் அற்றது.

புத்தர் பிரானின் வழி வந்தவர்களான இந்த பௌத்த துறவிகள் இவ்வாறு வன்முறைக்குத் தூபமிட்டு பலவந்த முயற்சி மூலம் ஒன்றை சாதிக்க முயல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஷாக்கிய வர்க்கத்தினருக்கும் கோலிய வர்க்கத்தினருக்குமிடையே ரோஹினி ஆறு தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டபோது எவ்வாறு புத்தர் பிரான் அமைதி வழியில் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவினார் என்பதை இவர்களுக்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமானது. புத்தர் பிரான் ஷாக்கிய வர்க்கத்தை சேர்ந்தவர். அவர்களுக்கென்று ஒரு தனியான ராஜ்ஜியம் இருந்தது. அதேபோல அசுர குணம் படைத்த கோலிய வர்க்கத்தினருக்கென்று ஒரு தனியான ராஜ்ஜியம் இருந்தது. இந்த இரண்டு ராஜ்ஜியங்களுக்கும் இடையில் ரோஹினி ஆறு ஓடுகிறது. இந்த ரோஹினி ஆறு தொடர்பில் இவ்விரு வர்க்கத்தினரிடையிலும் பிரச்சினை ஆரம்பமானது. இருவரும் போருக்கு தயாராகினர். ஆற்றின் இரு பகுதிகளிலும் தமது படைகளை குவித்தனர். இந்த சண்டை பற்றி தனது ஞானத்தின் மூலம் அறிந்து கொண்ட புத்தர் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி கவலை கொண்டார்.

இந்தப் பிரச்சினையை எவ்வாறேனும் தடுக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்ட புத்தர் ஆகாயத்தினூடாக பறந்து வந்து இரு படைகளுக்கும் நடுவே இறங்கினார். யுத்தம் எவ்வளவு தூரம் கொடுமையானது. அர்த்தம் அற்றது என்பது பற்றி இரு தரப்பினருக்கும் உபதேசம் செய்தார். இந்த உபதேசத்தினால் தமது தவறை உணர்ந்த இரு தரப்பினரும் சமாதான வழியில் தமது பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர். இறுதியில் இரு தரப்பினரிலுமிருந்து தலா 250 பேர் புத்தரின் சீடர்களாகி சமாதானத்திற்காக பாடுபடலாயினர்.

ஆனால், இன்று இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்றால், குறுகிய அரசியல் இலாபம் கருதி சில பௌத்த துறவிகள் வன்முறைக்கு தூபமிட்டு வருகின்ற செயற்பாடுகளைப் பார்க்கிறோம். இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

மாவிலாறு விடயத்தை பொறுத்தவரையில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஒருவரோடொருவர் பேசுவதன் மூலம் தீர்வு காண முடியும். அகதி முகாம்களில் உள்ள மக்கள் எந்தவொரு அரசியற் கட்சிகளினதும் அரசியல் விளையாட்டிற்கு பகடைக் காய்களாவதை அனுமதிக்கக் கூடாது. சேருவிலவில் உள்ள மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

இன்றுள்ள சூழலில் யுத்த நிறுத்த உடன்படிக்கை முழுமையானதொரு இக் கட்டான நிலையில் இருக்கிறது. இரு தரப்பினருக்குமிடையிலான கனதி குறைந்த யுத்தம் (Low Intensity war) ஒரு வெளிப்படையான முழுமையான யுத்தமாக மாறி வருகிறது.

லெபனானில் இன்று நடைபெறுவது இலங்கையிலும் நடைபெறும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.லெபனானில் இஸ்ரேலானது கண்மூடித் தனமான முறையில் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு ஏராளமானோரை கொன்றிருப்பதுடன் அந்த நாட்டின் இறைமையை மீறி வருகிறது.

இலங்கை நிலைமை பற்றி பார்க்கின்றபோது இலங்கை லெபனான் அல்ல. இரு சமகால நிலைமைகளையும் ஒப்பிட்டு ஒற்றுமை வரைபவர்கள் விசேட நிலைமைகளுக்கிடையிலான முரண்பாடு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் செயற்படுகிறது. ஆனால், ஹிஸ்புல்லா இயக்கமோ ஒரு சிறிய படை. இஸ்ரேலின் விமான தாக்குதலை அதனால் எதிர்கொள்ள முடியாது. இலங்கையைப் பொறுத்தவரையில் பொதுமக்களை தாக்குதவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டாலன்றி அத்தகைய பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய விமானப்படை பலம் இல்லை. ஆனால், அத்தகைய எந்தத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மறுபுறத்தில் விடுதலைப்புலிகளை ஹிஸ்புல்லாவுடன் ஒப்பிட முடியாது. நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுத பலத்தையும் போரிடும் ஆற்றலையும் புலிகள் கொண்டிருக்கிறார்கள்.

மாவிலாறு விவகாரத்தில் நடைபெறுகின்றவற்றைப் பார்த்தால் எல்லோருமே மடையர்களாகி விட்டார்களா அல்லது சிறு பிள்ளைத்தனமாக செயற்படுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த இறுதி நிலையில் கூட நற்சிந்தை ஏற்பட இடமளிப்போமாக.

நன்றி:தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.