Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடங்கிட்டாங்கய்யா தொடங்கிடங்கா:- ஐரோப்பிய ஒன்றியம்.

Featured Replies

இரு தரப்பினரும் உடன் வன்முறைகளை நிறுத்தி பேச்சுக்கு திரும்ப வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்.

சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் வன்முறைகளை உடனடியாக முடிவுக்கொண்டுவந்து பேச்சுவார்தைக்குத் திரும்புமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறையின் ஆணையாளர் வெனிற்றா பெரேரோ வோற்னர் மாவிலாறை மூடியதை விடுதலைப் புலிகள் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

படை நடவடிக்கைகள் மூலம் நெருக்கடிக்களுக்கு தீர்வு காணமுடியாது என்றும் சகல தரப்பினரும் பொறுமையைப் பேணி அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

மாவிலாறை மூடியதை விடுதலைப் புலிகள் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின்ரை குண்டுவீச்சு, மன்னார்படுகொலை எல்லாத்தையும் எந்த வகையிலை ஞாயப்படுத்தீனம்.

அப்ப நித்திரை கொண்டுட்டு

இப்ப அரசாங்கம் தோத்து ஒடேக்கை வந்தீட்டீனம் நாட்டாமை பண்ண. :twisted:

உதத் தானே நாங்களும் சொல்லிறம் மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று,சாம்பூர் முதலிய பகுதிகளில் பொருளாதாரத் தடை, புலிகளுக்கு தடை பயங்கரவாதி என்ற பட்டம் இப்படி எல்லாம் செய்தால் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாமோ? இவ்வளவு நாளும் எங்க போயிருந்தனீங்க?

எங்கட மக்கள் சாகேக்க ,எங்கட போராளியள் சாகேக்க, எங்கட மக்கள் நீரில்லாம,உணவில்லாம கொலை செய்யப் படேக்க எங்க போயிருந்தனீங்க?வந்திடானுங்க ,முதலில தடைய எடுத்துப் போட்டு வந்து அறிக்கை விடுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்களுக்கு வேற வேலை இல்லை. தாங்களும் உயிரோட இருக்கிறம் என்டு காட்டீனம். உவங்களுக்கு பின் லாடேன் தான் சரி.

புலிகளின்ர பக்க சனத்துக்கு உரம் வராது எரிபொருள் வராது கறன்ற் வராது ஆனால் அவைக்கு தண்ணிமட்டும் வேணுமே...??? புலிகள் இது விடயத்தில் பேரம் பேசவேண்டு...!

அது சரி கண்காணிப்பு குழு எண்ட கோதாரி விழுந்தவை இருந்தவையை அனுப்பி விசாரிக்காமல் என்ன கோதாரிக்கு குண்டுவீச விமானத்தை அனுப்பினவை....????

இதை கேக்க துப்பில்லை அறிக்கை மட்டும் வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெனிட்டா அவர்களின் அறிக்கை

http://europa.eu/rapid/pressReleasesAction...&guiLanguage=en

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெனிட்டா அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் அறியத்தரவும். இவர் யெர்மன் மொழி தெரிந்தவர் என்பதால் இவருக்கு ஈமெயில் எழுத எனக்கு இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாள் சங்கரியும் தண்ணியில்லாமை சிங்களச்சனம் கஸ்டபடபோகுதாம் .. தமிழாக்களை புலிகளை மிரட்டி தண்ணியை கொடுக்கச் சொல்லச் சொல்லி டெயிலி நியுஸ்க்கு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த மனுசன் எந்த தண்ணியைப்பற்றி கதைக்கிறான் எண்டு தெரியேல்லை ..

உந்தாள் சங்கரியும் தண்ணியில்லாமை சிங்களச்சனம் கஸ்டபடபோகுதாம் .. தமிழாக்களை புலிகளை மிரட்டி தண்ணியை கொடுக்கச் சொல்லச் சொல்லி டெயிலி நியுஸ்க்கு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த மனுசன் எந்த தண்ணியைப்பற்றி கதைக்கிறான் எண்டு தெரியேல்லை ..

உடும்புக்கறி செய்யுற வேலை எண்டு நினைக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்

90ம் ஆண்டிலிருந்து, காங்கேசம் துறை, பலாலி, கீரிமலை போன்ற இடங்களிலும், அதனை அண்டிய பல ஏக்கர் நிலப்பகுதியிலும், ஆக்கிரமித்துள்ள இராணுவத்தின் செயற்பாட்டினால் இத்தனை தமிழ் மக்கள் அல்லலுற்று இப்பவும் அகதி முகாம்களில் தானே வாழ்கின்றார்கள்!

வவுனியாவில் உள்ள அகதி முகாம் இந்தச் சமாதான காலத்திலும் நிரம்பித் தானே இருக்கின்றது. இந்தக் காலத்தில் அரசு தமிழ்மக்களுக்கு ஏதும் தீர்வைத் தந்ததா? இக்காலப்பகுதியில் நாகர்கோவில், கொடிகாமம், முகமாலை, ஓமந்தை, போன்ற இடங்களில் நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, மக்கள் குடியிருப்பு அற்ற பிரதேசமாக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கு தண்ணீர் இல்லை என்றால், யுத்ததையே தொடக்கிவிடுவேன் என்கின்ற அரசு, தமிழ்மக்கள் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்ற போது, எப்படி தமிழர் அந்த அரசை நம்பிப் போகமுடியும்!

இது தண்ணீர் பிரச்சனை என்று வெளிப்படவில்லை. தமிழ்மக்களுக்கு சிங்கள தேசததில் இரட்டை நிலையையும், தமிழ் மக்கள், இரண்டாம் பிரஜைகளாகக் கணிக்கப்படும் உண்மை நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது. இதை ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்வோம்!

கூகிள் ஏத்இல், வளலாய், தெல்லிப்பளைப் பிரதேசங்களைப் பார்க்கின்றபோது. கண்ணீர் வருகின்றது. நாம் சிறுவயதில் விளையாடித்திரிந்த பிரதேசங்களில், இன்று வளலாயில் பிள்ளையார் கோவில் மட்டும், தான் காணப்படுகின்றது. எல்லோருடைய வீடகளும் இடிக்கப்பட்டு, செம்மண்ணணாக மட்டுமே தெரிகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.