Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள் கண்டனம்

Featured Replies

முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள் கண்டனம்.

திருமலை மூது}ரில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் ஒருதொகுதி உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மூது}ர் இறங்குதுறை தோப்பூர் ஆகிய இடங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட நல்ல நிலையில் உள்ள 40 மேற்பட்ட சடலங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீட்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சடலங்கள் பெருமளவாக காணப்படுவதாகவும் களமுனைச்செய்திகள் தெரிவிக்கின்றன

இதேவேளை ,ன்று 12 முஸ்லிம் சதோதரர்கள் சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

அரச படைகளின் எறிகணை வீச்சிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்: ரவூப் ஹக்கீம்

மூதூரை நோக்கி சிறிலங்கா அரச படைகள் நடத்திய எறிகணை வீச்சிலேயே பாடசாலைகளில் தங்கியிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் மீதான கோரத் தாக்குதல் தொடர்பாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் படுகொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அரச படைகளின் தாக்குதலிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இருதரப்பும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

-புதினம்

SLMC accuses SL Army of shelling Muttur civilians

[TamilNet, August 04, 2006 00:33 GMT]

Sri Lanka’s largest Muslim party Thursday accused Sri Lankan security forces of shelling Muslim civilians in embattled Muttur town, killing dozens of people and wounding scores more. As Sri Lanka’s military blamed the Tamil Tigers, Sri Lanka Muslim Congress (SLMC) leader, Rauf Hakeem told AFP: “the people were killed in attacks carried out by the security forces.”

In the third day of pitched battles in Muttur town between LTTE units and Sri Lanka Army (SLA) troops, artillery shells hit schools where Muslim civilians had sought shelter, killing over twenty people and wounding forty others.

Mr.Rauff Hakim speaking in Trincomalee

SLMC leader Rauf Hakeem Thursday accused the government of firing the shells that fell on the schools.

“The government must take responsibility for the killing of civilians,” he told AFP.

“Both sides must stop the attacks immediately and go back to the positions they had before the (2002) truce,” he added.

The SLMC also called upon the LTTE and the government to declare mosques, temples, churches and schools as war free zones, the Daily Mirror reported Friday.

Mr. Hakeem said the government and the LTTE had made the 2002 ceasefire agreement a mockery as they were going ahead with their offensives, the paper reported.

Twelve Muslim villagers sheltering in the Al Nuriah Muslim school in Thoppur, southeast of Muttur were killed by an artillery shell Thursday evening. Five people were wounded.

Earlier that day, at least ten Muslim civilians who sought refuge in Arabic College in Muttur town were killed when an artillery shell hit the premises around noon. Forty people were wounded.

The Sri Lankan government accused the LTTE of firing the shells, but the LTTE blamed the SLA.

Whilst the SLA claims to be holding Muttur and its surroundings, Muslim residents told the BBC by telephone Wednesday that hundreds of LTTE fighters had taken control of the town centre and were laying siege to four SLA camps on the town’s corners.

On Thursday, telephone lines to Muttur were no longer working, even as shells struck some of the locations, including schools and places of worship, where thousands of Muttur’s Muslim residents have taken shelter.

Sri Lanka’s Defence Ministry said: “the indiscriminate firing by the Tigers is clear evidence of their vicious plan to hit civilians and then put the blame on the security forces with a view to tarnishing their image in the eyes of the international community.”

But the Tigers say they are in control of Muttur and that Sri Lanka’s military, trying retake the town, is using heavy weapons indiscriminately against it.

On Wednesday, the Daily Mirror reported that Sri Lanka's President Mahinda Rajapakse had cracked down on some media outlets for reporting comments by the LTTE’s spokesmen and local leaders.

President Rajapakse told the heads of two private electronic media organizations that undue publicity had been given to LTTE leaders in their reporting of the fighting which unfolded in the past two weeks.

“The President had said it would show the statements of regional leaders of a terrorist organization were on par with the statements of a sovereign government,” the Daily Mirror reported.

On Friday, Sri Lanka’s state media and much of the private media reported the government’s version of Thursday’s bloody events.

-tamilnet

Another 5 civilans killed in artillery fire on Muttur school

[TamilNet, August 04, 2006 08:17 GMT]

Five Muslim civilians were killed in artillery fire that hit a school in Muttur town. The civilian victims were about to leave the school when artillery shells began hitting civilian areas, according to civilians who have fled the area. 22 civilians were killed Thursday in indiscrimate artillery fire.

மூதூர் பாடசாலை இப்போ புலிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது....!

அரசாங்கமும் "GPS system" வைச்சு செல்லடிக்குது அவர்களுக்கு தெரியும் எங்கை பாடசாலை இருக்கு கோயில் இருக்கு எண்டு...! வேணும் எண்டுதான் தாக்குதல் மேற்கொள்கிறார்கள் போலுள்ளது...!

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் எறிகணை வீச்சு: மகிந்தவுடன் மோதிய ஹக்கீம்

[சனிக்கிழமை, 5 ஓகஸ்ட் 2006, 05:58 ஈழம்] [கொழும்பு நிருபர்]

மூதூரில் மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்துகின்றமை தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் அனைத்துக் கட்சி மாநாட்டில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச தலைவர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டன.

கட்சிகளின் ஒவ்வொரு பிரதிநிதிகளும் மாநாட்டில் மூதூர் நிலைமை தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம்,

அரசாங்கம் மூதூர் மக்கள் விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்படவில்லை. நிவாரணம் வழங்குவதற்காக விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி தலைமையகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் இராணுவம் தடுத்துள்ளது எனக் கூறினார்.

அதற்குப் பதிலளித்த மகிந்த,

இராணுவத்தினர் மக்கள் மீது எறிகணை வீச்சு தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. நிவராணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சகல பகுதிகளுக்கும் அரசாங்கமே பொறுப்பு. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என ஒன்று இல்லை என்று குறிப்பிட்டார்.

மீண்டும் கருத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம்,

இராணுவத்தினரே எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேரடியாகப் பாதிக்கப்படுகின்ற மக்கள் சொல்வதைத்தான் நான் கூறுகின்றேன் என்றார்.

மீண்டும் பதிலளித்த மகிந்த,

களத்தில் போராடுகின்ற இராணுவத்தினர் சொல்வதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன் என்று கூறி இராணுவம் ஒருபோதும் மக்களைத் தாக்காது என எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன் மூதூர் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மனோ கணேசன் கருத்து

அதனையடுத்து கருத்து வெளியிட்ட மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,

வடக்கு-கிழக்கு ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உங்களினால் எவ்வாறு நிர்வாகத்தை அங்கு நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பொருளாதரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த மகிந்த,

இராணுவ அதிகாரிகள் மக்களுடன் அன்பாக பழகக் கூடியவர்கள். ஆகவே நிர்வாகம் செய்வதற்கு பிரச்சினை இருக்காது என்பதுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என ஒன்று இல்லை எனவும் கூறினார்.

பெ.இராதாகிருஸ்ணன்

மாவிலாறு நடவடிக்கை தொடர்பில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.வி.பி. மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதற்கு மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஸ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அத்தகைய தீர்மானம் கொண்டு வரக்கூடாது என சுட்டிக்காட்டினார்.

சரியான நிலைமை தெரியாது அவசரப்பட்டு இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இதற்கு நாம் உடன்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், நுஆ ஆகிய கட்சிகள் அந்த வேண்டுகோளை ஆதரித்தன. ஆனாலும் அந்த வேண்டுகோள் பின்னர் நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் தனது கருத்தை கூறி மகிந்தவுடன் சர்ச்சைப்பட்ட பின்னர் மாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

அதேவேளை மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரிலிருந்து எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்துவதனாலேயே மூதூர் பகுதியில் பெருமளவு முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் காயமடைய வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் முஸ்லிம்களை விடுதலைப் புலிகளே வெளியேற்றுவதாகவும் அங்கிருந்த பிரதிநிதிகளுக்கு விளக்கிக்கூறினார்.

ஆதாரம்: வீரகேசரி

http://www.eelampage.com/?cn=27998

  • கருத்துக்கள உறவுகள்

27 முஸ்லிம் மக்களின் உயிர்களை மூதூரில்

அரச படைகளின் ஷெல்களே காவுகொண்டன

அரச ஊடகங்கள் திரிப்பு வேலை என ஹக்கீம் கண்டனம்

""மூதூரில் முஸ்லிம் பொதுமக்கள் 27 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள இரா ணுவ முகாம்களில் இருந்து ஏவப்பட்ட ஷெல், ஆட்லறி தாக்குதல்களினாலேயே கொல்லப் பட்டனர். மூதூர் மக்கள் இதை உறுதியாக தெரி விக்கின்றனர். எமக்கு மட்டுமல்ல அரச அமைச் சர்களுக்கும் அந்த மக்கள் இதை அப்படியே தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. நேற்று மாலை கொழும்பி லுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

இராணுவத்தினரின் ஷெல் மற்றும் ஆட் லறித் தாக்குதல் காரணமாகவே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்பதையே நேற்றுமுன் தினம் மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்ற கூட்டத்திலும் நாம் தெரிவித்தோம். இருந்தும் படைத்தரப்பு உயர் அதிகாரிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.அரச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின் றன. இது வேதனைக்குரியது.

மூதூரிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்றிச் செல்வதற்கும், அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளுக்கும் புலிகளின் இணக்கத்துடன் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அனுப்பிவைத்த 18 பஸ்கள், 8 அம்புலன்ஸ்கள் மற்றும் உணவு ஏற்றப்பட்ட லொறிகள் என்பன வழியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புக்கும் மோதலைத் தவிர்த்துக்கொள்ளும்படி நாம் கேட்டுக்கொண்டோம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எமது இந்தக்கோரிக்கையை பாதுகாப்புப் படையினர் ஏற்றுக்கொண்டனர். இருந்தும் அரச படையினர் இதை மீறிவிட்டனர்.

மாவிலாறு பிரச்சினையில் அரசு அவசரப்பட்டுவிட்டதென்பதே எமது கருத்தாகும். இராஜதந்திர ரீதியில் அணுகி இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். இவ்வாறு அவர் சொன்னார்.

http://www.uthayan.com/pages/news/today/02.htm

27 முஸ்லிம் மக்களின் உயிர்களை மூதூரில்

அரச படைகளின் ஷெல்களே காவுகொண்டன

அரச ஊடகங்கள் திரிப்பு வேலை என ஹக்கீம் கண்டனம்

பொறுத்துப்பாருங்க. உந்தாள் திடீரென பிளேட்டை மாத்திப்போடுவார்.

ம்.. பிபிஸி கேட்டும் கேக்காததுபோலை எழுதிறாங்கப்பா.. நேற்று லிங் தந்ததே கேட்டு விளங்கத்தானே.. இன்னொருக்கா லிங் தாறன் வசதியா இருந்து ஸ்பீக்கர் வெலியூமை கூட்டி வைச்சிருந்து கேளும்.. நடந்ததுகளுக்கான காரணம் காரியமெல்லாம் அதிலையிருக்கு..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

பொறுத்துப்பாருங்க. உந்தாள் திடீரென பிளேட்டை மாத்திப்போடுவார்.

மதி இதையும் ஒருக்கா பார் ஹக்கீம் ஒரு நாளும் புலி ஆதரவாலன் இல்லை... இரண்டு செற்றப்பண்ணப்பட்ட சனம் சொன்னதை தூக்கி பிடிக்காமல் உண்மை என்ன எண்டு ஆராய்சு பார்...!

http://www.eelampage.com/?cn=27998

உங்கள் மரியாதைக்கு முதற்கண் நன்றி..

:P

உங்க தளங்கள் பார்க்காமலா.. எல்லாத்தளங்களும்தான் பார்க்கிறேன்.. புதினம் பதிவு சங்கதி செய்தியளைவிட பிபிஸி செய்தியளிலை எனக்கு நிறைய நம்பிக்கையிருக்கு.. இரண்டுபக்க செய்தியளையும் எடுத்து ஆராய்து செய்திசொல்லும் நிறுவனம் பிபிஸி..

மதி இதையும் ஒருக்கா பார் ஹக்கீம் ஒரு நாளும் புலி ஆதரவாலன் இல்லை... இரண்டு செற்றப்பண்ணப்பட்ட சனம் சொன்னதை தூக்கி பிடிக்காமல் உண்மை என்ன எண்டு ஆராய்சு பார்...!http://www.eelampage.com/?cn=27998

உங்கள் மரியாதைக்கு முதற்கண் நன்றி..

:P

உங்க தளங்கள் பார்க்காமலா.. எல்லாத்தளங்களும்தான் பார்க்கிறேன்.. புதினம் பதிவு சங்கதி செய்தியளைவிட பிபிஸி செய்தியளிலை எனக்கு நிறைய நம்பிக்கையிருக்கு.. இரண்டுபக்க செய்தியளையும் எடுத்து ஆராய்து செய்திசொல்லும் நிறுவனம் பிபிஸி..

அப்பிடியெண்றால் BBC எங்காவது இடம்பெயர்ந்த 15000 தமிழ் மக்களைப்பற்றி சொல்லி இருக்கிறதா...???

குறிப்பு::- தகுதி இல்லாதவனுக்கு அவனுக்கு தகுதி இல்லாததை நாங்கள் குறிப்பாய் நான் வளங்குவதில்லை...!

ம்.. உதுக்கதானே நேற்றைய பிபிஸி செய்தி லிங் தந்தனான்.. இன்னுமொருக்கா தாறன்.. ஆசுவாசமா இருந்த ஸ்பீக்கர் வொலியூமை கூட்டிவைச்சுப்போட்டு கேளும்.. அல்லாட்டில் பாரும்..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

அப்பிடியெண்றால் BBC எங்காவது இடம்பெயர்ந்த 15000 தமிழ் மக்களைப்பற்றி சொல்லி இருக்கிறதா...???

குறிப்பு::- தகுதி இல்லாதவனுக்கு அவனுக்கு தகுதி இல்லாததை நாங்கள் குறிப்பாய் நான் வளங்குவதில்லை...!

அதைதான் முஸ்லீம் நபர் தெளிவா சொன்னாரே... காதிலை வில இலையே ஏன் காது டபாரம் ஆகீட்டுதே...???

"ரேடியோவில எல்லாம் சொல்லுறாங்கள் எல்லா இடமும் எங்கட கட்டுப்பாட்டில இருக்கு ஆனா எல்லாம் உண்மை இல்லை LTTண்ட இராணுவம்தான் எல்லா இடத்திலையும் நிக்குது எண்டு..."

ரேடியோ எண்டு அவர் சொன்னது IBC இல்லை BBCயும் லங்கா புவத்தும்தான்...!

அவர்களை புலிகள் தடுத்து இருத்தி வைத்ததாகவும் சொன்னார்... கேக்க இல்லையே..??? இராணுவ கட்டுப்பாட்டு ஆள் சொன்னது அது...!

புலிகள் ஏன் முஸ்லீம் மக்களை நிப்பாட்டி வைத்தனர் எண்று சொல்லி வருத்த்தமும் தெரிவித்தனர் தெரியாதே...??? அங்கிருந்த உங்கட குழு ஆக்கள் முஸ்லீம் ஆக்களோட சேர்ந்து ஓட வெளிக்கிட எல்லாரையும் சல்லடை போட்டு சாய்ச்சு பிடிச்செல்லே கொண்டு போட்டாங்கள் தெரியுமோ இல்லையோ...???

எதையாவது தெரிஞ்சு கொண்டு வந்து கொட்டும் உம்மட குப்பையை...!

ம்.. மனித கேடயத்தை வசதிக்காக மறந்திட்டீரோ.. ராணுவம் இதைத்தான் மூண்டு நாளா சொன்னது.. அது உங்கடை காதுக்கு கேட்டும் கேக்காதமாதிரி கதைக்காதீங்கோ.. ஒவ்வொருநாளும் பிபிஸி செய்தி கேக்கிற சனம் இந்தத்தளத்திலை கூட கண்டியளோ..

ம்.. மனித கேடயத்தை வசதிக்காக மறந்திட்டீரோ.. ராணுவம் இதைத்தான் மூண்டநாளா சொன்னது.. அது உங்கடை காதுக்கு கேட்டும் கெக்காதமாதிரி கதைக்காதீங்கோ.. ஒவ்வொருநாளும் பிபிஸி செய்தி கேக்கிற சனம் இந்தத்தளத்திலை கூட கண்டியளோ..

ஏன் இராணுவம் தென்மராட்ச்சியில் செய்ததை தமிழ் சனம் மறந்துட்டுது எண்டா நினைகிறீர்...??

அப்பிடி எண்டா ஓடுறான் ஓடுறான் அடிடா அடிடா எண்டு சத்தம் வந்திருக்காது... வாறான் வாறான் பதுங்குடா எண்டுதான் வந்திருக்கும்...!

மனிதகேடயம் எண்டா இராணுவத்தினர் செல் அடிச்சிருக்க மாட்டாங்கள்.... அதை ஹக்கீமும் கண்டித்து இருக்க மாட்டார்...!

உந்த முஸ்லீம் மக்களை கேடயமாக்க வேணும் எண்டு நினைச்சு தாக்கி இருந்தால் 3நாள் அங்கை இருந்து இருக்க மாட்டார்கள் போன வேகத்தில திரும்பி வந்திருப்பினம்....!

ஆயிரம் பெடியள் 15000 முஸ்லீம் மக்களுக்கை கவர் எடுத்த கதை சூப்பர்... ஆனா அதில திரக்கதைதான் சொதப்பீட்டுது...!

ஓய் மதி ஆத்து தண்ணீன்ர கதை என்னவாச்சு...??? அவ்வலவுதானோ..!

கேணையங்கள் ஆமிக்காறர் ஏனோய் சனம் இருக்கிற இடங்களுக்கை இருக்காங்கள் போய் சனம் இல்லாத வெட்டையளில இருக்க வேண்டியதுதானே..??

பள்ளிக்கூடத்திலயும் சனம் பாவிக்கிற ஜெற்றியையும் பாவிச்சு கொண்டு சனத்துக்கை இருந்தா அடிக்க மாட்டினம் எண்டு கவர் எடுக்கிறாங்களே...! சனத்துக்கை இருந்தா அங்கை போய்த்தான் அடிப்பாங்கள்...! சனத்துக்கை இருந்து அடிக்கிறாங்கள் எண்டு கத்தினா..!

சொல்லிப்போட்டு வந்து தாக்கவேணும் எண்டே நினைகிறீர்...???

ம்.. ஆத்து நீர்பற்றி ஏற்கெனவே எழுதிவிட்டேன்.. முடிவு..திறந்து விட்டாப்பிறகு பேசுவோமே..

மூதூர் ஜெற்றியை உபயோகிச்ச சனம் தான் மூதூருக்கையிருந்தது.. சனம் மூதூருக்கையிருந்தது.. தப்பி போனபோது எங்கை போனது.. உங்க கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கா.. பிறகென்ன லொள்ளுக்கதை?

தண்ணி பற்றி உமக்கு தெளிவு போதாது....! ஆற்றை திறக்க கண்காணிப்பு குழுவை நாடாமல் கிபீரை நாடின நாதாரி கூட்டமாகிய உங்கட கூட்டத்துக்கு படை நடத்தி வெல்லுவம் எண்ட திமிர் இருந்தது அதுக்கு அவல் தந்திருக்கினம் இன்னும் வேணும் எண்டால் தருவாங்கள் வேண்டிக்கொள்ளுங்கோ...!

தண்ணீர் திறந்து விடுவார்கள் அதுக்காக அரசாங்கம் என்ன செய்ய வேணும் எண்டு அவர்கள் சொல்வார்கள் கேட்டு செய்யுங்கோ...! முன்னமே கண்காணிப்பு குழுவை அனுப்பி இருந்தா பாவம் பாத்து திறந்து விட்டு இருப்பினம் இப்ப என்ன செய்ய போயினம் எண்டு பொறுத்து பாப்பம்...

தண்ணியை புலிகள் திறந்துவிட்டால் அதுக்கு காரணம் மனிதாபிமானமாகத்தான் இருக்கும்... பொருளாதடையை மனிதாபிமானமாய் அரசாங்கம் நீக்குதா எண்டு பாப்பம்...

அது சரி மதி கெட்டவனே...! கிளிவெட்டி எண்ட இடம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது தெரியாதே...???

அங்கை வச்சு சனத்துக்கு புலிகளும் TRO வும் உதவிசெய்ததை TTNனில் போட்டு காட்டினாங்கள் பாக்க இல்லையே...??? மண்டையை களட்டி வச்சிடே யாழுக்கு வாறது...??

ம்.. மனித கேடயத்தை வசதிக்காக மறந்திட்டீரோ.. ராணுவம் இதைத்தான் மூண்டு நாளா சொன்னது.. அது உங்கடை காதுக்கு கேட்டும் கேக்காதமாதிரி கதைக்காதீங்கோ.. ஒவ்வொருநாளும் பிபிஸி செய்தி கேக்கிற சனம் இந்தத்தளத்திலை கூட கண்டியளோ..

முஸ்லீம் ஒருவர் இண்றய செய்தியில் இராணுவம் அடித்த ஆட்லறியில் 10 முஸ்லீம்கள் செத்துபோனவை எண்டு சொன்னது கேக்க இல்லையே.? அப்பிடி எண்டா புலிகள் கட்டுப்பாட்டுக்கை எவை இருந்தாலும் கொல்லுவம் எண்டுதானே அர்த்தம்.

அப்பிடி செய்யுற இராணுவம்தான் பணயக்கைதிகளை பற்றி கவலைப்படுகினமாம்.,

ஓய் உம்மட வீட்டில சொல்லிக்குடும். ஆமிமாமா நல்லவர் பிக்காதருவார், ரொபி தருவார் அரிசி தருவார், மா தருவார், சீனிதருவார், வீட்டுக்கு ஒரு பிள்ளையும் தருவார் எண்டு. ஆனா எங்களுக்கு சரியான விபரம் தெரியும். யாரும் முன்னம் ஆமிக்காறனை கானாதவனிட்ட விடும் உம்மட புலுடாவை.

ம்.. நேற்று முந்தாநாளெல்லாம் உங்கடாக்கள் அடிச்சதாத்தான் செய்தி.. இண்டைய செய்தியையும் தாறன்.. அதிலையும் பல விஷயங்கள் அடங்கியிருக்கு.. தற்போது எல்லாவற்றையும்விட பெரிய அளவிலான மனிதப்படுகொலை சம்பவம்பற்றி எல்லா உலக நிறுவனங்களையும் கூப்பிட்டு ஆராய்வதாக செய்தி.. எல்லாவற்றையும் நாளை 4.15 (16.15) வரை கேட்க..

http://www.bbc.co.uk/tamil/2115.ram

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.