Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பசில் ராஜபக்ஷ மௌனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுக்கு,

தோல்வியில் இருந்து மீழமுனையும் ஒரு இனத்தின் அரசியல் விவாதங்கள் வெறும் தர்க்க விழையாட்டல்ல என்பதை அறிந்தவர் நீங்கள். 

 

நமது மண்ணும் மக்களும் பற்றிய தேடலிலும்  அக்கறையிலும் அறிவிலும் இருந்தும் தொடர்கிற விவாதங்களே நமது காலத்தின் தேவையாக உள்ளது. 

 

இசைக்கலைஞனுக்கும் புரட்ச்சிகர தமிழ் தேசியனுக்கும் என் வரவேற்ப்புக்கள்.

 

தோல்வியிலிருந்து மீளமுனையும்  எம்மினத்தின் சொத்து ஒன்று நீங்கள்.  அறிவேன் ஐயா.

 

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்

களம் ஒன்றுதான்

குறி  ஒன்றுதான்

தொடருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாலுமிக்காக மாலுமி விரும்பும் திசையில் வீசுவதில்லை. கடல் நீரோட்டமும் மாலுமி விரும்பும் திசையில் ஓடுவதில்லை. என்றாலும் ஒரு ராசதந்திரிபோல சிறந்த மாலுமி எப்போதும் தன் இலக்கை அடைந்துவிடுகிறான். அவன் தனது இலக்கை நோக்கி பணிக்க நேரடி சாதகமில்லாத காற்று நீரின் போக்குகளை பயன்படுதி சரியான கப்பல்சோடும் உத்திகள்மூலம் நேரில்லாத சுற்று  பாதைகளூடாக  தன் இலக்கை நோக்கி பணம் செய்கிறான்.  வலுவிழந்த தேசிய இனத்தின் தலைமையின் கடினமான பணியும் கூட இதுதான். இத்தகைய சூழலில் திசை மாறாதே நேர்பாதையில் இலக்கை நோக்கி செல் என்றால் அதை மாலுமி செவிமடுத்தால் கவிழ்ந்து கொட்ட நேரிடும்.

 

அரசியலில் கேழ்வி மாலுமி இலக்கை அடைய திசைகளை மாற்றி மாற்றி ஓடுகிறான? அல்லது இலக்கில்லாமல் திசைகளை மாற்றுகிறானா என்பதுதான்.

 

இன்று சர்வதேச சக்திகளின் முன்னம் 1. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் 2. 13ம் சட்டத்திருத்தம்  என்கிற காற்று சக்திகளுக்கு முன்ம்  நம் படகுடன் நிற்க்கிறோம். எதிரியை இந்த இரு சக்திகளோடும் முரண்படும் நிலைக்கு தள்ளினால் மட்டுமே நமக்கு பாதை திறக்கும். நமக்கு விடிவுவரும்.

 

இலங்கை அரசியல் சூழலில் என்றும் நமது உடனடிக் கடமை எதிரியை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்துவதாகும். அல்லது எதிரி நம்மைத் தனிமைப் படுத்திவிடுவான். 2006 ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது நாம் உணரத் தவறியதை இப்போது உணர்தேயாகவேண்டும். ஏனெனில் இன்று நம்மிடம் ஒரு பலமான ஆயுதப் படை இல்லை.  

 

 

தவறுகள் தொடர்வதில் அர்த்தமில்லை.

 

எம்மிடம் ஆயுத பலம் இல்லை. இருந்தாலும் 1:7 என்ற விகிதத்தில் சனத்தொகை இருப்பதால் போர் வெற்றி கொள்ள முடியாது.

 

கொரில்லா படையாக இருக்கும் போது மட்டும் நிரந்தரம் இல்லா வெற்றி சாத்தியம்.

 

யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை. அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவோ, அமெரிக்காவோ தமக்கு நன்மை இருந்தால் மட்டுமே வருவார்கள்.

 

முன்னர் திருகோணமலை அமெரிக்கா கண் வைத்துள்ளது என்று சொன்னோம். அவர்களுக்கு தேவை பட்டிருந்தால் எப்போதோ எடுத்திருப்பார்கள்.

 

இப்போது சீனா, இந்தியாவுக்கு போட்டியாக, இலங்கையில் கண் வைத்து உள்ளது என்கிறோம். சீனா மேற்கில் உழைத்த காசை உயர் வட்டிக்கு விடுகின்றது. அவர்களுக்கு சிங்கள, தமிழ் பிரச்சனை தேவையும் இல்லை. ஈடுபடப் போவதும் இல்லை.

 

இன்றைய நிலையில் கிடைப்பதை எடுத்து, அதிலிருந்து மேலே செல்வதே உத்தமம். இதுதான் இப்போது உள்ள துரும்பு. இதனை எடுத்தால் தான் தமிழ் மக்களை, ராணுவ, டக்லஸ் அச்சுறுத்தல்களில் இருந்து விடுவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

 

இதனையும் விட்டால் வேறு என்ன 'நடைமுறை சத்தியமான' தெரிவு உள்ளது என புரியவில்லை.

Edited by Nathamuni

நன்றி விசுக்கு,

தோல்வியில் இருந்து மீழமுனையும் ஒரு இனத்தின் அரசியல் விவாதங்கள் வெறும் தர்க்க விழையாட்டல்ல என்பதை அறிந்தவர் நீங்கள். 

 

நமது மண்ணும் மக்களும் பற்றிய தேடலிலும்  அக்கறையிலும் அறிவிலும் இருந்தும் தொடர்கிற விவாதங்களே நமது காலத்தின் தேவையாக உள்ளது. 

 

இசைக்கலைஞனுக்கும் புரட்ச்சிகர தமிழ் தேசியனுக்கும் என் வரவேற்ப்புக்கள்.

எதையும் எழுதி திரிக்க முடியும் என்ற திமிர்தனம் தலை தூக்கும் போது  புலிகள்(புலிகள் என்ற சொல்லை அவமானப்படுத்தியற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.), பூனைகள் வருகிறது. இல்லாவிட்டால் "தர்க்கவிளையாட்டு இல்லை" என்ற மழுப்பல் வருகிறது. இதன் பொருள் புரியவில்லையே.   இந்த வனத்தின் கருத்து "என்னால் 13ம் திருத்த நடைமுறை புனரமைக்க வேண்டும் என்ற விவாதத்தை கொண்டு செலுத்த முடியாது" என்பதா கருத்து? இவர்களின் வித்தியாசாகரத்தில் வீசும் மாருதங்கள் சலித்துவிட்டதால் பாய்களை இறக்கி நங்கூரமிடுகிறார்களா? காற்று எதிர்வழமானால் தீர்வுதரும் திறமை மூளைகள், ஓய்ந்துவிட்டால் ஒரே வெறுமை மட்டும்தானா? "என்னிடம் எழுத இல்லை" என்றதை ஒத்துக்கொள்ள கூட பெருந்தன்மையான வசனம் கிடைக்கவில்லை?இது தர்க்க விளையாட்டில்லை? நீங்கள் எழுத வந்திருப்பது யாழ்- கருத்துக்களம். ஒருகரை தொடர்பாடல் உள்ள சினிமா, தொலைகாட்சி அல்ல.

 

ஒருவேளை பொய்யட் தன்னை பற்றி எதும் வித்தியாசமாக நினைக்கிறாரோ. SJV காந்திய கூட கேள்வி கேட்களாம், ஆனால் என்னை கேள்வி கேட்க்க கூட்டது என்கிறாரா? SJV, காந்தியை விட பெரிய மகாத்மாக்காளா இந்த மனிதர்களின் திணிப்புக்களை மற்றவர்கள் தர்க்கத்து அழைக்காமல் ஏற்றுக்கொள்ள?  த்ங்களை பற்றி அப்படியானதொரு நினைவாலா யாழில் தங்களுக்கு உபயோகமான அரசியல் கருத்துக்கள் மட்டும் தெரிந்து எழுதி வருகிறார்கள்? ஏன் இறந்துபோன 13ம் திருத்தம் புதிக்கஇரண்டு முரண்பட்ட கருத்துக்களை யாழில் முன்வைத்து தனது கருத்து நேர்மைகளை தோற்கடித்த ஒருவர் "இது விவாதற்திகுரிய பொருள் அல்ல" என்று சொல்வதைவிட வேறு என்னதான் சொல்ல முடியும்? 

 

13ம் திருத்ததை பற்றிய தர்க்கத்தை தனக்கு மட்டும் பொய்யட் மூடுகிறார். ஆனால் அதன் உண்மையான ஆழ நீள விவாதங்கள் இனிதான் இலங்கை இந்தியா எங்கும் வெடிக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. இலங்கை அரசு  முஸ்லீம் தலைமைகளின் உதவுயுடன் 13ம் திருத்தத்தை நீக்கி, அல்லது நீர்த்துப்போக செய்யும் போதுதான் தெரிவுக்குழு விவாதங்கள், அதன் பின்னரான விவாதங்கள் வெளிவர இருக்கு. 

 

யாழ்கள் விவாதங்களில் நீங்கள் செய்ய முயன்றவற்றை, கண்டவற்றை சுருங்க சொல்ல முடியுமா?  தர்கங்களை கண்டால், திட்டும், தூற்றும் நீங்கள் கருத்துக்களத்தில் செய்யத்தக்க மற்றய மாற்றுக்கருத்து என்ன?ஆக்க பூர்வமான விவாதம் வேண்டும் என்று திரும்ப திரும்ப எழுதிவிட்டு குயக்மாக தனி நபர் போட்டிகள், சண்டைகளை வரவளைப்பதுதானே வழமை. இதில் ஏன் புதிதாக தர்க்கம் வேண்டாம்?

 

இதுவரை பல தடவைகள் 13ம் திருத்ததை பற்றி எழுத்திருக்கிறோம். தாங்கள் முன் வைத்த அரசியல், அரசியல் அமைப்பு சட்டம், அதன் நடைமுறை, முறை முடியும் முடியாமை, பற்றி வைத்த கருத்துக்களை பட்டியல் இடமுடியுமா? இது வரையில் தனது முடிவுகளை திணிக்க முயன்றதை தவிர எந்த ஒரு Point 13ம் திருத்தம் பற்றி வைத்தது கிடையாது.

 

கருத்து திருடல்கள் பல தடவைகள் நடந்திருக்கு அவ்வளவுதான். 

Edited by மல்லையூரான்

சிறு துரும்பும் பல்லுக்கு உதவும் ,இன்றைய சூழலில் TNA அமோகமான வாக்குகளால் வடக்கில் வென்றாக வேண்டும் .இதன் பின்பு மேற்குலகம் சொன்னதை செயலில் செய்வார்களா என்று பார்ப்போம் .மக்களுக்கு சேவை செய்வதாயின் TNA யின் கையில் நிர்வாகம் இருக்கவேண்டும் .நாங்கள் இன்றைக்கு அல்லல்படும் மக்களுக்கு உதவி செய்து அரவணைக்காது விட்டால் ,சிங்களம் இதை தன்னுடைய நலனுக்காக பயன்படுத்தி தமிழர்களின் நீண்டநாள் கனவை தவிடுபொடியாக்கும் .
 
ஒரு காலத்தில் புலிகளை விமர்சித்த குமார் பொன்னம்பலம் காலவோட்டத்தில் புலிகளை ஆதரிக்கவில்லையா ?அதே போல மாற்றத்தை ஏற்றுக்கொண்டு வருபவர்களை ஏற்போம், நாங்கள் விழிப்பாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

13 க்கு தேவையான பலம் கொடுக்க இந்திய ராணுவமும் வந்தது. எனினும் எம்மவர் நோக்கம், கனவு வேறாக இருந்ததால் இன்றைய நிலைமை வந்துள்ளது.

 

ஒருவரையும் குறை கூறவில்லை. அவர்களால் முடிந்த வரை முயன்றார்கள்.

 

மீண்டும் இந்திய உதவி கிடைத்தால் பெற்று, முன்னேறுவதே ஒரே வழி.

 

மீண்டும் போராட்டம்... தனிநாடு எல்லாம் எமது விருப்பத்துக்கு உரியனவாயினும், உடனடியாக சாத்தியாமாகும் கள நிலைமை இல்லை.

 

இன்றைய நிலை தொடர்ந்தால், மீதமுள்ள மக்களும் வெளியேறி, சிங்களவர் விருப்பப்படி அது ஒரு முழு சிங்கள தீவாகும்.

 

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின் கருத்து ஏற்படையதுதான் கடந்த அறுபது வருட வரலாற்றை எடுத்து ஆராயும்போது.. ஆனால் இலங்கைத்தீவில் ஆயிரம் ஆண்டுகளாக மாறுபட்ட கலாச்சாரங்கள் இருந்து வந்துள்ளன.. தமிழரும், சிங்களவரும் மாறி மாறி தமிழகத்தின் உதவியை வரலாற்று ரீதியாகப் பெற்று வந்துள்ளார்கள்.. இந்தியாவின் உருவாக்கத்துக்குப்பின் தமிழகம் விலக்கப்பட்டு இந்தியம் அந்த இடத்துக்கு வந்துள்ளது.. அது வைத்ததே தீர்ப்பு எனும் நிலையில் இருக்க விரும்புகிறது..

அதிகப்படியாக கயிற்றை விட்டுக்கொடுப்பதும் ஆபத்தில்தான் முடியும்.. அதுவும் சிங்களத்தால் தந்திரமாக ஒதுக்கப்பட்ட இந்தியாவால் ஈழத்தமிழன் மீதான அடக்குமுறையை நிறுத்திவிட முடியாது.. இந்தியா பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் கடந்த நான்காண்டு காலமாக கேட்பாரற்ற அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது..

ஆகவே இந்தியாவை நம்பி தமிழருக்கு அடிச்சட்டிகூட மிஞ்சாது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. இவர்களைவிட அமெரிக்காவை வைத்து அரசியல் செய்யலாம்..

சிங்களவரால் ஒதுக்கப்பட்ட இந்தியாவை தமிழரும் ஒதுக்க வேண்டும்.. அதாவது நேரடியாக அல்லாமல் சமஷ்டி போன்ற தீர்வு ஒன்றைக் கோரவேண்டும்.. :D இந்தப் பதின்மூன்றை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. இலங்கைத்தீவில் யாருடைய ஆதரவும் கிடைக்காத பட்சத்தில் இந்தியா நேரடித் தலையீடு செய்ய நிர்ப்பந்திக்கப்படும்.. ஆயிரம் ஆண்டுகள் சமாளித்த தமிழினம் இன்னும் சில வருடங்கள் தாக்குப்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

 

நான் இந்த கருத்தினை முன்னரும் சொல்லி இருகின்றேன்.

 

எமக்கு இப்போது தேவை ஒரு பிடிமானம். அது இந்தியாவின் துணையோ, அமெரிக்காவின் துணையோ எவ்வாறு ஆயினும் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க வேண்டும்.

 

ஒரு பாதுகாப்பான சூழல் வந்தால், புலம் பெயர் தமிழர்கள் முதலீடு செய்வார்கள். அது ஒரு பொருளாதார வளத்தினைக் கொண்டு வர,  மேற்குலகு சீனர்களின் கையில் உள்ள சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு மாறாக தமது நாடுகளில் குடியுரிமை கொண்ட புலம் பெயர் தமிழர்களின் பகுதிகளில் முதலிட அதிக ஆர்வம் காட்டும்.

 

அந்த நிலை வந்தால் யாரையும் நம்ப தேவை இல்லை. பணம் இருந்தால் யாருமே வருவார்கள் - பின்னால். சிங்களவர்கள் கூட.

கொழும்பில் கொள்ளுபிட்டியில் இருந்து தெஹிவல வரை தமிழரின் பணம் பேசுகின்றதே.

 

ஒன்று மட்டும் உண்மை. தென்பகுதியினருக்கும் தெரியும். இந்த தீவுனுள் எல்லோரும் சேர்ந்து தான் வாழ வேண்டும்.

13 க்கு தேவையான பலம் கொடுக்க இந்திய ராணுவமும் வந்தது. எனினும் எம்மவர் நோக்கம், கனவு வேறாக இருந்ததால் இன்றைய நிலைமை வந்துள்ளது.

 

ஒருவரையும் குறை கூறவில்லை. அவர்களால் முடிந்த வரை முயன்றார்கள்.

 

மீண்டும் இந்திய உதவி கிடைத்தால் பெற்று, முன்னேறுவதே ஒரே வழி.

 

மீண்டும் போராட்டம்... தனிநாடு எல்லாம் எமது விருப்பத்துக்கு உரியனவாயினும், உடனடியாக சாத்தியாமாகும் கள நிலைமை இல்லை.

 

இன்றைய நிலை தொடர்ந்தால், மீதமுள்ள மக்களும் வெளியேறி, சிங்களவர் விருப்பப்படி அது ஒரு முழு சிங்கள தீவாகும்.

 

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

13ம் திருத்தம் இந்திய இராணுவத்தால் நடைமுறைப்படுத்தக்கதல்ல. சிங்கள் மக்களின் வாக்குரிமையால் நடை முறைப்படுத்தப் படவேண்டியது.  இராணுவம் வந்த வெளிக்காரணம்  சண்டைய நிறுத்த மட்டும்.  ஆனாலும் உண்மை அதுவல்ல.

 

"மீண்டும் இந்திய உதவி கிடைத்தால் பெற்று, முன்னேறுவதே ஒரே வழி."

 

நீங்கள் இது உண்மையாக இருந்தால் என்ற பக்கம் ஒன்றை மட்டும்தான் விவாதிக்கிறீர்கள். "உண்மை இல்லாவிட்டால் என்ன" என்றதைப் பற்றி பேச இல்லை. இது வரையில் அது உண்மை இல்லை. ஆனாலும் கடந்த காலத்தை விட்டு விட்டு, நிகழ்காலத்திலும் அது உண்மை இல்லை.

 

இந்தியா எப்பவும் உண்மையாக இல்லை. இந்தியா மட்டும்தான் புலிகளை தனக்கு எதிராக திருப்ப சகோதர சண்டைகளை ஆரம்பித்தது.

 

எல்லோருமே நடைமுறைப் படுத்த முடியாது என்று கூறிய 13ம் திருத்தத்தை தமிழர் மீது திணித்த போது இந்தியா பக்கம் அதை எடுத்துக்கூற ஒரு சாதாரண அரசியல் அமைப்பு வக்கீல் ஒருவர் கூட இருக்கவில்லையா? 26 வருடம் நடை முறைப்படுத்த முடியாமல் போய்விட்டதை இப்போது  எதற்காக கொண்டுவர வேண்டும்? இது உண்மையான உதவி இல்லை. திசை திருப்பும் முயற்சி.

 

LLRC  பரிந்துரைகள் பற்றிக் கார்த்திகையில் இலங்கை சில விபரங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  வெளிவிட வேண்டும்.   LLRC அறிக்கை 13ம் திருத்தத்தை அனுசரிக்காமல்தான் தனது தீர்வுப்  பாதை பற்றி சொல்லியிருக்கிறது.  இவற்றை தொடர்ந்து போனால், அமெரிக்க கோரிக்கை,  இலங்கை தெரிவுக்குழுவில்லாமல் சம்பந்தருடன் பேசி தீர்வு கண்டு, பின்னர் வேண்டுமாயின் அதை தெரிவுக்குழு மூலம் ஆராய்ந்து நிறை வேற்ற வேண்டும் என்பது. இலங்கை இவற்றை பற்றி பங்குனியில் ஐ.நா முழு அறிக்கை கொடுக்க வேண்டும். இது ஐ.நாவில் விவாதிக்கப்படும் சந்தர்ப்பம் வரவேண்டுமாயின், இந்தியா 13ம் திருத்தத்தை வைத்து ஐ.நாவை முடக்ககூடாதுபிந்தியா முடக்கினால் தமிழருக்கு தீர்வு ஐ.நாவில் விவாதிக்கப்படாது. ஆனாலும் இதைதான் இந்தியா நொவெம்பர் 2012ல் செய்தது. வடக்கு-கிழக்கில் தேர்தல் என்றால் கூட்டமைப்பு பங்கு பற்றலாம். ஆனால் இன்னும் ஒன்பது மாதத்திற்குள் இலங்கை பலவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று இருக்கும் போது ஏன் LLRC கூட கவனிக்காத 13ம் திருத்தம்? LLRC கேட்டது, இதே வசனத்தில் இல்லாவிட்டாலும், அரசு சம்பந்தருடம் பேச வேண்டும் என்பது. 

 

இலங்கையின் தெரிவுக்குழுவை மேற்கு நாடுகள் அங்கீகரிக்க இல்லை. கிருஸ்ணாவும், இந்த முறை வந்த பா.ஜ.க தூது குழுவும்தான் நிபந்தனை இல்லாமல் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு போக வேண்டும் என்று கூறினார்கள். எனது நினைவு, இந்தியா தெரிவுக்கு குழுவில் 13+ பற்றிய விவாதம் ஒன்று நடைபெறும்(அது பிழையாயின் இலங்கையும் சம்பந்தரும் இன்னொரு தீர்வுக்கு ஒத்து போவார்கள்)  என்று நம்பினார்கள் என்பதுதான். ஆனால் கடந்த சில மாதங்களாக சிராணி பதவி நீக்கம், மந்திரி சபை தீர்மானம்,  போன்ற 13ரை நீர்த்து போக செய்யும் முயற்சிகள் நடை பெற்றபோது மேற்கு நாடுகள் எதிர்த்தன. ஆனால் இந்தியா மட்டும்தான் எதிர்க்கவில்லை.  இப்போது இந்தியா, தான் சம்பதரை போக சொல்லி கேட்ட தெரிவுக்குழு 13ம் திருத்ததை நீக்க என்ற உண்மையை காண்கிறது.

 

26 வருடங்கள் இலங்கை அரசு ஏய்த பின்னர், இன்று 13ம் திருத்தத்தை நீக்க அமைத்த தெரிவுக்குழுவை தீர்வுக்கான தெரிவுக்குழு என்று மாறி இந்தியாவை குழம்பிப்போக  வைத்த பின்னர் ஏன் இந்தியா இனியும் அதை  தீர்வு என்கிறது? ஏன் அதை காப்பாற்ற முனைகிறது?

இதில் இந்தியா செய்ய கூடிய உதவி 13ம் திருத்தம் மாதிரி இலங்கை விரும்பும் நேரம் நீக்க முடியாத திருத்தம் வர செய்வது மட்டுமே.  இதை இந்தியா ஏற்று, தமிழருக்கு 13ம் திருத்தம் தீர்வாகாது என்று ஒரு அறிக்கைவிட்டால் அதன் பொருள் இந்தியா உதவ முன் வருகிரது என்பதாகும்.  அதன் பின்னர் இன்றைய அரசு முழு மனதுடன் 13ம் திருத்தத்தை நிறை வேற்றினால் அதை வருங்கால அரசுகளின் "தமிழர் தீர்வுக்கான" இடைகால தீர்வாகப் பார்க்கலாம்.

 

ஆனால் உங்களுக்கு இன்று மகிந்தா அரசு என்ன செய்ய முயல்கிறது என்பது மனச்சாட்சியாக தெரியும். அதாவது நல்ல ஒரு சந்தர்ப்பம் பார்த்து தான் கடாபி, காஸ்ரோ மாதிரி நிரந்தர சர்வாதிகாரியாக  வர முயல்கிறதே அல்லாமல் சிங்கள் மக்கள் இழந்து போன ஜனநாயகத்தை திருப்பி கொடுக்கும் நிலையில் இல்லை. சிங்கள மக்களுக்கே கதி அதுதான்  என்றாக்கிக்கொண்டிருக்கும் போது இதில் மிகுதிக் கதைகள் எல்லாம் வெறும் எதிர்பார்ப்புக்களும், ஆசை வார்தைகளுமே.

 

எமக்கு இப்போது தேவை ஒரு பிடிமானம். அது இந்தியாவின் துணையோ, அமெரிக்காவின் துணையோ எவ்வாறு ஆயினும் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க வேண்டும்.

 

இந்தியா செய்வது அமெரிக்கா உடபட, சர்தேச தலையீடுகள் இலங்கைக்குள் வராமல் அரன் அமைப்பதே. 

 

ஒன்று மட்டும் உண்மை. தென்பகுதியினருக்கும் தெரியும். இந்த தீவுனுள் எல்லோரும் சேர்ந்து தான் வாழ வேண்டும்.

 

அது உண்மை இல்லை. ஆனால் சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்துவாழ்வதா என்பது   பிரதானமாக சிங்களவரின் தெரிவு. சர்வதேசம் தான் விரும்பிய படி ஆட்டும் வலிமை உள்ளது. நமக்கு ஆயுதம் தந்து நம்மை  போராளிகள் ஆக்கியது இந்தியா. அதன் மிகப் பெரிய காரணம், ஒரு சின்ன தனி நபர் சண்டை.  அதன் அதி உச்சத்தில் "பெண் உருவில் திரியும் பசாசு" என்று இந்திரா காந்தியை JR திட்டினார்.  நமது பாதையை, சிங்களம், இந்த்தியா, சீனா(அரசியால் அல்ல, இலங்கைக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகள் கொடுத்து), மேற்கு நாடுகள் தீர்மானிக்கும்.

 

 

Edited by மல்லையூரான்

13க்கு அப்பாற்பட்ட தீர்வை அறிமுகமாக்குமாறு மேனன் மஹிந்தவிடம் வலியுறுத்து!

by JBEditor on 9th-July-2013
 

Menon_Mahinda.jpg

இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வாக்குறுதி அளித்தபடி, 13வது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியுள்ளார்.

சிவ்சங்கர் மேனனின் இலங்கைக்கான விஜயம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் – 13வது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற் சென்று அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை மதித்து நடக்க வேண்டும்.

தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யும் வகையில், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும், தேசிய நல்லிணக்கத்தின் மூலம், விரைவான அரசியல்தீர்வு ஒன்றை எட்ட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் சிவசங்கர் மேனன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணசபைத் தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும், நம்பகமாகவும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் விளக்கிக் கூறியுள்ளதாக  இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

 

Menon_MR03.jpg Menon_MR02.jpg Menon_MR01.jpg

 
 

Edited by மல்லையூரான்

Posted Today, 09:35 AM

எங்களுக்கு எவரும் மீட்பர்கள் இல்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களை நாம் பாத்திருக்கின்றோம். ஏமாந்திருக்கின்றோம். எமது போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவோ அந்த நாட்டு அரசின் எந்தவொரு பிரதிநிதிகளோ எங்களுக்கு மீட்பர்களா இருப்பார்கள் என்று நாங்கள் துளிகூட நம்பவில்லை என்று யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

erik-mahinda1.jpg

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே குடாநாட்டு மக்களில் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேனன் சிறிலங்காவிற்கு வந்ததை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை நாங்கள் நம்பிய காலம் இருந்தது. அது உலகத் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படுகின்ற பெரும் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த காலம். அந்தக் காலத்தில் நாங்கள் இந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை நம்பினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தப் பெருமகனைப் போன்ற ஒரு பெருந்தலைவரை நாம் இந்தியாவில் காண முடியாது. அவர் இருந்திருந்தால் இன்று நாம் தமிழீழத் தனியரசில் இருந்திருப்போம் என்றும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

tamilmakkalkural.blogspot.comculprits.jp

மேனன் வருகிறார் வருகிறார் என்று கடந்த இரண்டு வார காலமாக ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பார்க்கின்றபோது இன்னும் தமிழ் ஊடகங்கள் தமிழர்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றதா என்றே எண்ணத்தோன்றுவதாகவும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேனன் ஒன்றும் எங்கள் மீட்பர் அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதன். அவரால் தமிழருக்கு எதுவும் ஆகப்போவதில்லை. அது குறித்து நாங்கள் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.  

வலிகாமம் மயிலிட்டியைச் சேர்ந்த க.கந்தசாமி (வயது-59) என்ற குடும்பஸ்தர் இது தொடர்பில் கருத்து கூறும்போது, நாங்கள் எத்தனையோ தூதுவர்களைப் பார்த்திருக்கின்றோம். அத்தனை பேரையும் தேவ தூதர்கள் என்றே நம்பினோம். ஆனால், யாருமே எங்களுக்கு நம்பிக்கையாக நடக்கவில்லை. நோர்வே, யப்பான் போன்ற நாடுகளின் தூதுவர்கள் அடிக்கடி வந்து போனார்கள். அவர்கள் எமக்கு சமாதானம் தர வரவில்லை. எங்களை அழிப்பதற்காக வேவு பார்க்கவே வந்தார்கள் என்பது இப்போது தான் புரிகிறது என்று அந்த வயோதிபர் கூறினார்.

மீசாலையைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் காந்தரூபன் என்ற இளைஞன் கூறுகையில், நாங்கள் எவரையுமே நம்பத் தயாராக இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் வருகிறார் என்று அறிந்தோம். அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். போர் நடைபெற்ற போது அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒத்தூதியதையும் கள முனைகளை வந்து பார்வையிட்டு சிறிலங்காப் படைகளுக்கு தைரியம் ஊட்டியதையும் நாம் மறக்க மாட்டோம். எமது போராட்டத்தை அழித்த எவரையுமே நாம் ஏறெடுத்துப் பார்க்கத் தயாராக இல்லை. இவர்கள் எல்லோரும் மோசடிக்காரர்கள்.

வடமாகாண சபைத் தேர்தலில் எப்படியாவது அரசாங்கத்தை வெற்றி பெற வைக்க வேண்டுமென்பதிலேயே இந்தியா குறியாக இருக்கின்றது. சிறிலங்காவில் மாற்று நபர்கள் அரசமைத்தால் தமது போர்க்குற்ற ஆதாரங்களும் அவர்கள் மூலம் வெளிப்பட்டுவிடும் என்று பயந்தே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மகிந்தவை வெல்லவைப்பதற்கு இந்தியா கடும் முயற்சியெடுத்து அப்படியே மகிந்த வென்றார்.

இப்போது வடக்கு மாகாண சபையிலும் அரசாங்க கட்சியை வெல்ல வைக்கவே இந்தியா விரும்புகிறது. இதுவே மேனனின் வருகைக்கான காரணம். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறினார். 

மேனன் வருகை தொடர்பாக நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

ஏனென்றால் இன்று எங்குமே கருத்துச் சுதந்திரம் இல்லை. ஏதாவது கூறினால் என்ன நடக்குமோ என்று நான் அஞ்சுகின்றேன் என்று கூறினார் யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவரும் காசிநாதர் குமாரி என்ற பெண்மணி. இந்தப் பெண்மணியைப் போன்றே மேலும் பலர் கருத்து வெளியிட்டனர்.

 

-இன்னொரு திரியில் யாழ் அன்புவின் பதிவு.

 

 

இப்போது வடக்கு மாகாண சபையிலும் அரசாங்க கட்சியை வெல்ல வைக்கவே இந்தியா விரும்புகிறது. இதுவே மேனனின் வருகைக்கான காரணம். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறினார்.

 

 

இது பீதியால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதில் தோன்றும் சந்தேகங்கள்.  இந்தியா " Power Balance"யை மட்டும்தான் விரும்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாலுமிக்காக மாலுமி விரும்பும் திசையில் வீசுவதில்லை. கடல் நீரோட்டமும் மாலுமி விரும்பும் திசையில் ஓடுவதில்லை. என்றாலும் ஒரு ராசதந்திரிபோல சிறந்த மாலுமி எப்போதும் தன் இலக்கை அடைந்துவிடுகிறான். அவன் தனது இலக்கை நோக்கி பணிக்க நேரடி சாதகமில்லாத காற்று நீரின் போக்குகளை பயன்படுதி சரியான கப்பல்சோடும் உத்திகள்மூலம் நேரில்லாத சுற்று  பாதைகளூடாக  தன் இலக்கை நோக்கி பணம் செய்கிறான்.  வலுவிழந்த தேசிய இனத்தின் தலைமையின் கடினமான பணியும் கூட இதுதான். இத்தகைய சூழலில் திசை மாறாதே நேர்பாதையில் இலக்கை நோக்கி செல் என்றால் அதை மாலுமி செவிமடுத்தால் கவிழ்ந்து கொட்ட நேரிடும்.

 

அரசியலில் கேழ்வி மாலுமி இலக்கை அடைய திசைகளை மாற்றி மாற்றி ஓடுகிறான? அல்லது இலக்கில்லாமல் திசைகளை மாற்றுகிறானா என்பதுதான்.

 

இன்று சர்வதேச சக்திகளின் முன்னம் 1. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் 2. 13ம் சட்டத்திருத்தம்  என்கிற காற்று சக்திகளுக்கு முன்ம்  நம் படகுடன் நிற்க்கிறோம். எதிரியை இந்த இரு சக்திகளோடும் முரண்படும் நிலைக்கு தள்ளினால் மட்டுமே நமக்கு பாதை திறக்கும். நமக்கு விடிவுவரும்.

 

இலங்கை அரசியல் சூழலில் என்றும் நமது உடனடிக் கடமை எதிரியை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்துவதாகும். அல்லது எதிரி நம்மைத் தனிமைப் படுத்திவிடுவான். 2006 ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது நாம் உணரத் தவறியதை இப்போது உணர்தேயாகவேண்டும். ஏனெனில் இன்று நம்மிடம் ஒரு பலமான ஆயுதப் படை இல்லை.  

"விடுதலைக் கோபுர உச்சிதான் எங்கள் இலக்கு. தோல்விக்குப்பின்னர் மீண்டெழுந்து கோபுரம் நோக்கி களத்தில் பயணிப்பவர்களை நாம் ஆதரிக்கவேண்டும்.  அவர்கள் முதல் படியில் கால்வைக்கும்போதே நாம் சேற்றை வாரி இறைக்கலாமா? கோபுரத்தில் மட்டுமே ஏறு, முதல்படியில் ஏறாதே, ஏறினால் துரோகிப் பட்டம் சூட்டிவிடுவோம் என மிரட்டலாமா?  "

 

மேற்படி கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தி நேரமுள்ளபோது வேறொரு விவாத்தில் சந்திக்கும் விருப்பத்துடன் விடைபெறுகிறேன்.

"விடுதலைக் கோபுர உச்சிதான் எங்கள் இலக்கு. தோல்விக்குப்பின்னர் மீண்டெழுந்து கோபுரம் நோக்கி களத்தில் பயணிப்பவர்களை நாம் ஆதரிக்கவேண்டும்.  அவர்கள் முதல் படியில் கால்வைக்கும்போதே நாம் சேற்றை வாரி இறைக்கலாமா? கோபுரத்தில் மட்டுமே ஏறு, முதல்படியில் ஏறாதே, ஏறினால் துரோகிப் பட்டம் சூட்டிவிடுவோம் என மிரட்டலாமா?  "

 

மேற்படி கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தி நேரமுள்ளபோது வேறொரு விவாத்தில் சந்திக்கும் விருப்பத்துடன் விடைபெறுகிறேன்.

விவாதத்திற்கு அப்பால் பட்ட தெய்வீக சிந்தனை என்று சொல்லப்பட்ட 13ம் திருத்தத்தை நேரம் கிடைக்கும் போது விவாததிற்கு திரும்ப எடுப்பது இன்னொரு தெய்வ நிந்தனையாகாதா?

 

உண்மை வந்து "விடுதலைக் கோபுர உச்சிக்கு யாராவது போக வேண்டுமாயின் எனக்கு நேரம் கிடைத்தால் மட்டும்தான் ஏறவிடுவேன்" என்ற சர்வாதிகார இயல்பா?

 

திரிப்புக்களுக்கும், குழங்களுக்கும் முடிவே கிடையாது.  அது எப்படி ஏறப்போகும் முதல் படியானது பின்னர் எதிரியை தனிமைப் படுத்தும்.  அது எப்படி இந்தியா 13ம் திருத்தத்தை மட்டும் தான் ஆதரிக்கும் போதும், ஐ.நா, அமெரிக்கா போன்றவை  பேச்சுவார்த்தையை ஆதாரிக்கும் போதும் இரண்டையும் தொடுப்பது. இன்று (7/9/13ல்  அன்று ) வெளியான செய்திகள் இந்திய அழுத்தத்தை இலங்கை மதிக்காது என்று சிவசங்கர் மேனனிடம் இலங்கை சொல்லியிருப்பதாகும்.

 

அது வேறு, ஆனால் புதிய தலை முறைக்கு சொல்லப்பட்ட காரணம் அவசரம் அவசரமாக  எங்கள் நிலத்தில் நடைபெறும் குடியேற்றத்தில் இருந்து எங்கள் நிலங்களை காப்பாற்ற என்பதாகும். இந்த இரண்டும் எப்படி ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகுது என்று சொல்ல முடியுமா? அதானால்தான் தான் நான் முன்னர் எழுதியிருந்தேன் நோய்க்கு மருந்து என்று பொலிடோலை குடிக்கலாமா?

 

மேலும் இவற்றில் எதுவும், 13ம் திருத்தம் தறாகலிகமாகத்தன்னும் நடை முறை படுத்ததக்க என்பதை ஆராய்ந்து எழுதியவை.  அவசர தீர்வு, இடைக்கால அரசாங்கமே. அதன் பின்னர் தான் முதல் படியேற்றலாம். ஆஸ்பத்திரி படுக்கையில் ஒருத்தன் படுத்திருக்கிறான். அவனுக்கு இன்னொருவன் முறிந்த காலை ஒட்ட நோ புக்கை எடுத்து வருகிறான்.  நடப்பதை விளங்கிக்கொள்ள முடியாத பண்டிதர்கள், எலும்பு மூறிவாளி படியேற என்று ஓய்வெடுத்து முடித்துவிட்டான். நீ இப்போது செறு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அவன் மீது அடிக்க என்று பிணாத்துகிறார். 

 

இன்றை வரை மேற்கு நாடுகளை தடுத்து பிடிக்கும் இந்தியா நமது ஒரு பிரச்சனை.  

 

உண்மை வந்து வலிந்து கண்டுபிடிக்கும் காரணங்களில் உண்மை இல்லை.  அதை ஒத்துக்கொள்ளமால் தப்புகிறார்கள். ஏன் இந்த தாப்புதல் என்றால் இன்று நடந்த எதிர்பாராத சம்பவம். இந்திய ஊது குழல்கள் இலங்கை இந்தியாவை கண்டு மிரளும் என்ற கனவில்தான் 13ம் திருத்தத்தை வைத்து ஊதினார்கள். மற்றவர்கள் அது தான் கடைசி வேலி என்று நினைத்தார்கள். ஆனால் அரசு எப்போதும் போலவே "No Hold Barred" சணடைக்கு அழைக்கிறது. மிரண்டு போன இந்தியா பின் வளத்தில் கால் அடிக்க திரும்பி ஓட்டம் எடுத்திருக்கு. இதனால் இந்த அரசின் அதிரடி நடவடிக்கக்கு எப்ப்படி பதில் சொல்வது என்று இவர்களுக்கு தெரியவில்லை. ரோ வும் மத்திய அரசும் பதில்களை தயாரித்து அனுப்பும் வரை ப்லருக்கு இனி நேரம் வராது. இனி சிலகாலம் எழுத மாட்டர்கள். அவ்வளவுதான். இதில் என்ன புதுமை. ஆனால் திரும்பி வரும் போது 13ம் திருத்தம் 21 ஆகிவிடும் என்பதுதான் அரசியல் நகைசுவையாளிகளின் எதிர்வுகூறல்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
மல்லை
 
ஒவ்வொரு முறையும் நீங்கள் பத்தி பத்தியாக எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்ல வருவதை புரிவது கஷ்டமாக இருக்கின்றது.
 
எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது.
 
2009 ல் கிளிநொச்சி விழும் வரையில் நாம் எல்லோரும் ஒரு கனவு உலகில் இருந்தோம். மே மாதத்திற்கு பின்னர் கனவு தெளிந்து உண்மை புரிந்தது.
 
அத்தனை நாடுகளும் எம்மை எதிர்த்து போராடினால் 'ஊருடன், உலகுடன்  பகைக்கின் வேருடன் கெடும்'  என்ற நிலைமையின் யதார்த்தம் புரிந்தது. 
 
ராஜீவ் கொலைக்கு பின், புலிகள், இந்திய நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்க முடியாது என்பதும் உண்மை. எனவே பழதினை நினைத்து புலம்புவதிலும் பிரஜோசனம் இல்லை.
 
காற்றுடன் அதன் திசையில் சேர்ந்து ஓடி அங்குள்ள மக்கள் நலனுக்காக, ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை' வாடி இருப்போம்.
 
வீசும் காற்று, இந்தியாவிலிருந்தாலென்ன, அமெரிக்காவில் இருந்தாலென்ன: அது குறித்து கவலை இல்லை.
 
மறந்து விடாதீர்கள்: பிரித்தானியாவில், ஸ்காட்லாந்துக்கான உள்ளூர் விவகாரங்களை கவனிக்க , சில அதிகாரங்களைப் வாங்கிய, அப்பகுதிக்கான அரசு, மேலும் அதிகாரங்களைப் பெற, லண்டன் அரசினை அழுத்தம் கொடுக்க, இப்போது சுதந்திரத்துக்கான தேர்தல் குறித்து அறிவித்துள்ளது. 
 
ஆயிரம் மைல் பிரயானமானாலும், எடுத்து வைக்கும் முதல் அடியிலேயே ஆரம்பம் ஆகிறது என்பது சீனத்துப் பழமொழி. எடுத்தவுடன் ஒரே பாய்சலில் ஆயிரமாவது மைலில் நிற்கவேண்டும் என்றால் அது யதார்த்தம் இல்லை.
 
வடக்கு மாகாணசபை முதலாவது அடியாக இருக்கட்டும். கொழும்பு அரசு ஒன்றும் தராவிடில் அதுவும் நல்லது. ஏனெனில் அது இந்திய, சர்வதேச பிரச்னை ஆகிவிடும்.
 
ஒன்று மட்டும் உண்மை. தென்பகுதியினருக்கும் தெரியும். இந்த தீவுனுள் எல்லோரும் சேர்ந்து தான் வாழ வேண்டும்.
 
இதன் கருத்து; தனி நாடாயினும், ஒரே நாடாயினும் அவர்களுடன் சேர்ந்து தான் இந்த தீவில் வாழ வேண்டும். பிரித்து எடுத்துக் கொண்டு வேறு எங்காவதா போக முடியும். இதனால் ஒரு கட்டத்தில் அவர்களும் யதார்த்தத்தினைப் புரிந்து கொள்வார்கள்.

 

Edited by Nathamuni

எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் ய்தில் கூறுவது பொதுப் பிரச்சனையை பற்றி. ஆனால் விவாதம் 13ம் திருத்தம் பற்றி திரும்பி விட்டது(அதில் பிரதான விவாதாக்காரணாக நீங்கள் உங்களை வைத்தீர்கள்)  இதனால்தான் நான் 13ம் திருத்தத்தை பற்றி பேசும் நீங்களும் அதற்குள் உள்ளடங்குகிறீர்கள். 

 

நீங்கள் ஓடும் நீரோடு போக வேண்டும் கருத்தில் இருக்கிறீர்கள். அதில் வலி குறவு என்று நினக்கிறீர்கள். பொய்யட் படகை சுங்கான் பிடித்து திருப்பியேயாகவேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு ஓடும் நீரோடு போகாமல் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.  ஆனல் படுக்கையில் இருப்பவன் பயணிப்பானா?

 

இன்றைய மகிந்தாவின் இந்தியாவுக்கான பதிலின் பின்னர் ரகுநாதனின் கேள்விக்கு சரியான பதிலை கண்டு பிடிக்க வேண்டிய நியதிக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.  "13ம் திருத்தம் இல்லையானால் வேறு என்ன?"

 

ஆனால் அவர் அந்த கேள்வியை அங்கே போட்டதின் பொருள், "நமக்கு வேறு நல்ல தெரிவுகள் இல்லை;, ஆதலினால் 13 ஏற்றுக்கொள்ளுங்கள்; அதுதான் யாதார்த்தம்" என்பதாகும். ஆனால் உண்மையில் அது யதார்த்தம் அல்ல்.  யதார்த்தம் இன்றைய நிலைமையில் ஐ.நா ஊடாகத்தான் ஒன்று வர வேண்டும், இந்தியா அதை உணர்ந்து நமக்கு உதவ முன் வரவேண்டும். (இல்லயேல் IPKF தான் திரும்ப வரவேண்டும் - அது இன்றைஅ நிலைமையில் பகிடிக்கதை)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

Clear message on 13th Amendment conveyed to Sri Lanka: Menon

  MEERA SRINIVASAN

Menon_1513195f.jpg
The HinduNational Security Advisor Shivshankar Menon
 
The structure that is implemented should be acceptable to all parts of the country: Mahinda Rajapaksa

National Security Adviser Shivshankar Menon — who met top Sri Lanka leaders here in the last two days — emphasised the need for Colombo to fulfil its commitment to India and the international community regarding a political settlement that would go beyond the 13th Amendment of the country’s Constitution.

The amendment introduced provincial councils with specified powers based on the provisions of the Indo-Sri Lanka Accord of 1987.

Speaking to the Indian media here after a breakfast meeting with President Mahinda Rajapaksa on Tuesday, Mr. Menon said: “We have made our views clear on how we would like to see much more positive and forward movement towards reconciliation and a political resolution of the various issues which have led to ethnic politics being so polarised and fragmented in Sri Lanka in the past.”

Mr. Menon — here for trilateral talks with Sri Lanka and the Maldives on maritime security — also held bilateral meetings with Mr. Mahinda Rajapaksa, Defence Secretary Gotabhaya Rajapaksa and Economic Development Minister Basil Rajapaksa on recent political developments.

Observing that India’s views in this regard were “well known”, Mr. Menon said: “They told me their plans … and as friends and very close neighbours we exchanged opinions. It is our hope of course that they are successful in building a Sri Lanka in which every community feels at home, feels master of their own destiny and feels that they have strong stake in the success of society and country as a whole. And we will continue to work with all our friends in Sri Lanka to that end.”

‘PSC the best forum’

President Rajapaksa, during talks with Mr. Menon, said that the Parliamentary Select Committee (PSC) is the best forum to reach a consensus on the implementation of the 13th Amendment, according to statement from the President’s office.

President Rajapaksa explained to Mr. Menon the practical problems in devolving land and police powers to the provinces of a small country such as Sri Lanka and stressed that the structure that is implemented should apply and be acceptable to all parts of the country. The President also urged India to encourage the Tamil National Alliance (TNA) to participate in the PSC and said the government was committed to taking the process forward despite obstacles.

The PSC, which was constituted last month, presently has 19 members, all from the ruling coalition — United People’s Freedom Alliance — led by the Sri Lanka Freedom Party. Members of the PSC held their first meeting on Tuesday, and would meet again on July 26.

Politicians cynical

However, some politicians here are sceptical about the PSC’s ability to arrive at a fair decision on the 13th Amendment. The United National Party (UNP), the main Opposition led by Ranil Wikremesinghe, has not nominated its representative to the PSC as yet. The TNA, an amalgam of Tamil parties which has significant support base in the primarily Tamil-speaking north of Sri Lanka, has boycotted the PSC. The Sri Lanka Muslim Congress (SLMC) in the ruling alliance, which has been in favour of implementing the 13th Amendment in its original form, is not part of the PSC, either.

Even as apprehensions about possible dilution of the 13th Amendment grow among certain sections, President Rajapaksa’s recent proclamation of the Northern Provincial Council (NPC) elections has been welcomed by India. The 13th Amendment is, in fact, at the heart of all the current political debates here. It appears that India would take a strong position on any attempt to tamper with the provisions of the amendment.

Though economic and trade partnerships between the two countries are said to be growing positively, the bilateral equation rests primarily on the implementation of the 13th Amendment, at least for the moment.

Until a few days ago, after Mr. Basil Rajapaksa met the top leadership in New Delhi last week, there were indications of mixed signals emerging from the two countries.

While the Indian media reported India’s insistence on implementing the promised “13th Amendment plus”, a majority of the Sri Lankan media merely highlighted India welcoming President Rajapaksa’s proclamation of the NPC polls.

Though India seems to have delivered its message loud and clear, Sri Lanka was tight-lipped on any pressure from India, going by reports in the local media. Some papers here quoted Mr. Basil Rajapaksa as denying reports of India insisting that Sri Lanka implement “13th Amendment plus” without any dilution, but the July 7 issue of The Sunday Times quoted him as saying: “Some things can be said openly and some things cannot be said openly in diplomatic business between governments. They [india] gave us some of their views, we expressed our views. That is what usually happens.”

“Not only between countries but there must be that sort of exchange of views even in a family, between husband and wife. Then a lot of problems will be sorted out. This was like that,” he reportedly said.

 

http://www.thehindu.com/news/national/clear-message-on-13th-amendment-conveyed-to-sri-lanka-menon/article4898935.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.