Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிமேகலையின் தேவதைகள்

Featured Replies

 மணிமேகலையின் தேவதைகள்

 
leena.jpg?w=500வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்த, மற்றும் கணணி வசதிகளும் கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கும் அனைவருடனும் பகிர்வதற்கும் பல்வேறுவகையான சாதனங்களும் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இன்றுள்ளன. ஆகவே அளவுக்கதிகமான கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதைவிட அதிகமாக விமர்சனங்கள் மலிந்து போயிருக்கின்ற சூழலாக இருக்கின்றது இன்று. இருப்பினும்  இது ஒரு வகையில்  ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்த கருத்துக்கள விமர்சனங்கள் எந்தளவு பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதில் கேள்வி உள்ளது.
 
பொதுவாக பெரும்பாலான விமர்சனங்கள் எனப்படுபவை தமது நண்பர்களின் அல்லது ஓரே கருத்துடையவர்களின் படைப்புகளை புகழ்ந்தும் அதேவேளை நண்பர்களாக இல்லாதவர்கள் அல்லது எதிர் கருத்து நிலையிலுள்ளவர்களின் படைப்புகளை தாக்கியும் இகழ்ந்தும் எழுதுகின்றவையே விமர்சனங்களாக இருக்கின்றன. இவ்வாறு குறிப்பிடுவதனால்  ஒரு விமர்சனம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதல்ல. அதுவும் தவறான ஒரு நிலைப்பாடே. விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் நோக்கங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கிருப்பது ஒரே நோக்கம்தான். அது  பரந்துபட்ட மக்கள் குறிப்பாக ஒடுக்க மற்றும்  சுரண்டப்படுகின்றன விளிம்புநிலை  மக்கள் நலன்களின் அடிப்படையில் இருந்து பார்க்கவும் முன்வைக்கவும் படவேண்டும். ஆகக் குறைந்தது  கருத்தியல்களின் அடிப்படையிலாவது முன்வைக்க படவேண்டும்.  அதேவேளை மக்கள் நலன் கருதி நட்புரீதியாகவும் அக்கறையுடனும் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் கூட தமது படைப்புகளில் குறைகளைக் கண்டுபிடித்ததால் நிராகரிக்கப்படுவதும் அல்லது சுட்டிக்காட்டப்படும் தவறுகள் நியாயப்படுத்தப்படுவதும் அல்லது விமர்சனம் முன்வைப்பவரை எதிர் நிலைக்கு தள்ளிவிடுகின்ற சூழலே இருக்கின்றது. இவ்வாறானதொரு   சூழலில் விமர்சனங்கள் முன்வைப்பது தேவையா என்ற கேள்வியும் ஆகவே தவிர்ப்பமோ என்ற உணர்வும் எழுகின்றன. ஏனெனில் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது ஆரோக்கியமான மனித உறவைக் கட்டியமைப்பதே. இது ஒவ்வொரு கணமும் ஆரோக்கியமாகப் பேணப்படவேண்டும். ஆனால் விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொள்ள முடியாமையின் விளைவாக மனித உறவுகளுக்கிடையில் விரிசல்களை இவை ஏற்படுத்துகின்றன. இது ஆரோக்கியமான போக்கல்ல. இருப்பினும் பரந்துபட்ட மக்கள் நலன்களை அடிப்படையாக கொண்டு விமர்சனங்கள் தவிர்க்கப்பட முடிவாதவையாக இருக்கின்றன. ஆகவே இதனால் ஏற்படும் விளைவுகளையும் மனவருத்தத்துடன் எதிர்கொள்ளவேண்டி உள்ளது.
 
ஒரு படைப்பு யாரால் உருவாக்கப்பட்டிருந்தாலும் விரும்பியவர்கள் விமர்சிக்கலாம். அதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதேவேளை ஒரு ஆண் விமர்சகர், பெண்ணிலைவாதியாக இருந்தபோதும், பெண்களின் படைப்புகள் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது மேலதிக கவனமும் அக்கறையும் பொறுப்புணர்வும் தேவைப்படுகின்றன. ஏனெனில் பெண்கள் என்னதான் குறிப்பிட்ட ஆண் விமர்சகரை விட சமூகத் தளங்களில் உயரத்தில் இருந்தாலும் ஆண்களால் ஆகக்குறைந்தது ஆணாதிக்க சிந்தனையால் அது உருவாக்கிய கலாசாரத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகின்ற சமூகத்தில் வாழ்பவர்கள் என்பதில் இதை வாசிப்பவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்காது என நம்புகின்றேன். ஆகவே எங்களையும் அறியாது ஆணாதிக்க கருத்துக்கள் நமது விமர்சனங்களில் வெளிப்படலாம். மறுபுறம் குறிப்பிட்ட பெண் படைப்பாளிகள் கூட தமது படைப்புகளில் ஆணாதிக்க கருத்தியல்களை தம்மையறியாது வெளிப்படுத்தும் சாத்தியங்களும் உள்ளன.  உதாரணமாக மொழியில் இருக்கின்ற பால் சார்பு ஆதிக்கம் தொடர்பாக அதிகம் அக்கறை கொள்கின்ற மணிமேகலையின் நேர்காணலில் கூட ஆண் மொழி (கலைஞன்)காணப்படுகின்றது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே இப் பதிவு எழுதப்படுகின்றது. 
 
கடந்த வாரயிறுதி விடுமுறையின்போது  கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலையின்  பல்வேறு படைப்புகள் தொடர்பான அறிமு விமர்சன நிகழ்வுகள் நடைபெற்றன. தேவதைகள் மற்றும் பெண்ணாடி விபரணத்திரைப்படங்கள், அந்தரக்கன்னி, பரத்தையருள் ராணி ஆகிய கவிதைத் தொகுப்புகளின்  வெளியீடுகளும் விமர்சன உரைகளும் மற்றும் செங்கடல் திரைப்படம்(?) என்பவற்றை பார்ப்பது கேட்பது உரையாடுவது என கடந்து சென்றன….  இவை தொடர்பான ஒரு விமர்சனப் பார்வையே இது.
 
முதலில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வை பொறுப்பெடுத்து ஒழுங்குபடுத்தியதில் தர்சி, சுமதி மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த சுல்பிகா, சத்தியா,  சமீரா ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நிதி மற்றும் ஊடகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தி விளம்பரம் செய்வதும்  ஒழுங்கு செய்வது மிகவும் சிரமமான, தடைகள் பல நிறைந்த செயற்பாடுகள். ஆனாலும் நம் சமூகத்தில் இவ்வாறு முகம் கொடுக்கவேண்டிய பல தடைகளையும் எதிர்கொண்டு இந்த நிகழ்வுகளை இவர்கள் நடாத்தியமை மதிக்கப்படவேண்டிய ஒன்று. இது எந்தவிதமான இலாபநோக்கமுமற்று தம் பெண் நண்பர் ஒருவரின் படைப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக பெண் நண்பர்களால் நட்பிற்காகவும் தோழமையுணர்வுடனும்   மேற்கொள்ளப்பட்டது என்றால் மிகையல்ல.
 
இரண்டாவது பலர் தமக்கிருக்கும் நிதி வசதிகளைப் பயன்படுத்தி வெகுஜன திரைப்படங்களை எடுத்து பணம் உழைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்ற சூழலில் மணிமேகலை அவர்கள் சமூக அக்கறையுடன் இவ்வாறான விபரணப்படங்களை எடுத்தமை வரவேற்கவும் மதிக்கப்படவும் பாராட்டப்படவும் வேண்டும். இவ்வாறான முயற்சிகள் இலாபம் தராதபோதும் தனிப்பட்டளவில் அவருக்கு  பயனுள்ளதாகவோ அல்லது அவ்வாறான பயனைப் பெறுவதற்கோ பயன்படுத்தப்படலாம். அதற்காக   இந்த படைப்புகளையோ அல்லது  படைப்பு முயற்சிகளையோ எந்தவகையிலும் குறைவாக மதிப்பீடுவதற்கு வழிவகுக்காது. ஏனெனில் இந்தப் படைப்புகள் நமது சமூகத்தில் பிராதான சமூக நீரோட்டத்தினால் கவனிக்கவோ அக்கறையோ கொள்ளப்படாத விளிம்பு நிலையில் வாழ்கின்ற மனிதர்களை  குறிப்பாக பெண்களைப் பற்றிய படைப்புகள். அந்தவகையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. பெறவேண்டியவை.imagescaoq6ix8.jpg?w=275&h=183
 
மூன்றாவது தேவதைகள் விபரணப்படம் என்னில் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.. சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் மேலும் ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டும் அவர்களால் சுரண்டப்பட்டும் விளிம்புநிலையில் வாழ்கின்ற  மூன்று (லஷ்மி, சேதுராக்கம்மா, கிருஷ்ணவேணி) பெண்களின் வாழ்நிலை தொடர்பான நேரடி விபரணங்கள் இது. வெகுஜன சினிமாவில் இவ்வாறான பாத்திரங்களும் தொழில்களும் அதன் உண்மைத்தன்மையுடன் காண்பிக்கப்படுவதில்லை. அவ்வாறு காண்பிக்கப்படுகின்றவையும் அவர்களை நையாண்டி செய்பவையாகவும் செயற்கையானவையாகவும் இருக்கும்.  அந்தவகையில்  இவ்வாறான பெண்களின் வாழ்வை உயிர் துடிப்புடன் நம் முன்  கொண்டுவந்திருக்கின்றார் மணிமேகலை. 
 
இந்த விபரணப்படத்தில் வருகின்ற மூன்று (லஷ்மி, சேதுராக்கம்மா, கிருஷ்ணவேணி) பெண்களின் நடைமுறை வாழ்வு  முக்கியமானவை. கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. இவர்கள் பொதுவான சமூக நீரோட்டத்திற்கு மாற்றாக தமது வாழ்வை நிலைநிறுத்த போராடுகின்றார்கள். ஏனெனில் பெண்களுக்கு என ஓதுக்கப்படாத ஆண்கள் செய்கின்ற சில தனித்துவமான தொழில்களை இவர்கள் செய்து வாழ்வது மிகவும் சவாலான ஒன்று. அவையாவன மரண வீடுகளில் ஒப்பாரியுடன் ஆடுவது. இறந்த உடல்களை அடக்கம் செய்வது (வெட்டியாள்). கடலில் மீன் பிடிப்பது. மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் தமிழுக்கு புதிய சொற்களையும் (வெட்டியாள்) பெண்களுக்கான  புதிய தொழில்களையும் அறிமுகப்படுத்துகின்றார்கள் என்கின்றார் மணிமேகலை. அந்தவகையில் இந்தப் பெண்கள் புரட்சிகர தேவதைகள் என்றால் மிகையல்ல. இது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த ஆவணப்படத்தை பார்ப்தன் மூலமாகவும் மணிமேகலை அவர்களின் பின்வரும் நேர்காணலை (http://www.penniyam.com/2013/03/blog-post_23.html) வாசிப்பதடுனடாகவும் அறிந்து கொள்ளலாம்.
 
e0aeaae0af86e0aea3e0af8de0aea3e0aebee0ae நான்காவது பெண்ணாடி ஒரு குறியீட்டுத் விபரணப்படம். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பெண்களின் படைப்புகளை உதவியாக கொண்டு ஒரு பெண்ணின் வாழ்வை   படைத்திருந்தார். மேலும் இதற்கான விமர்சனத்தை பழந் தமிழ் இலக்கியம்,  சினிமா ஊடகம் மற்றும் குறியீடுகள் தொடர்பான ஆழமான பரந்த அறிவுள்ளவர்கள் செய்வதே சிறந்தது. ஆகவே என்னால் முடியாத காரியம் இது. பல்வேறு குறியீட்டு அம்சங்கள் உள்ளடக்கிய இந்தப் படைப்பு மீண்டும் ஒருமுறை பார்த்த பின்பே கருத்தோ விமர்சன முன்வைக்கலாம். ஆனால் அதன் அழகியலுக்காகவும் புதுமையான படைப்பு முயற்சிக்காகவும் பழந் தமிழ் பெண் பாடலாசிரியர்கள் கவிஞர்களின் பாடல்களின் அடிப்படையில் வெளிப்படுத்தியமைக்காவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். பழத்தமிழ் பாடல்களை அழகிய குரலில் கேட்ட பொழுது காதுக்கு இனிமையாகவும் உள்ளத்திற்கு இதமாகவும் இருந்தது. ஆனால்  சிவரமணியின் கவிதையை வெளிப்படுத்திய விதம் உணர்வுகளற்ற வெறும் வாசிப்பாகவே இருந்தமை ஒரு குறைபாடாக இருந்தது.  e0aeaae0af86e0aea3e0af8de0aea3e0aebee0ae
 
இந்த இரு விவரணப்படங்களும் இவரது பிற விவரணப்படங்களான மாத்தம்மா, பறை, பலிபீடம், தீர்ந்து போயிருந்தது காதல், … என்பவற்றை பார்க்க துண்டுகின்றன என்றால் மிகையல்ல.
 
imagescas5qcpr.jpg?w=167&h=155ஐந்தாவது இந்தப் பாதிப்புகளினாலும் மற்றும் சிலரின் செங்கடல் தொடர்பான நேர்மறையான  குறிப்புகளை வாசித்தமையாலும் செங்கடல் மீது எதிர்பார்ப்புடன் சென்றமர்ந்தேன். தமிழக  குறிப்பாக ராமேஸ்வர மீனவர் மற்றும் ஈழ அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்த ஒரு படைப்பு செங்கடல். இது திரைப்படமா? விபரணப்படமா? அல்லது இரண்டுமில்லாத ஒன்றா? இரண்டையூம் கடந்த புதிய படைப்பாக்க முயற்சி ஒன்றா?  என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.  இதற்கான பதிலை மணிமேகலை தனது நேர்காணலிலும் குறிப்பிட்டிருக்கின்றார். இது எவ்வகையான சினிமான எனத் தீர்மானிப்பது ஒரு கோட்பாட்டுரீதியான பிரச்சனை. வரையறைகள் சம்பந்தப்பட்டது. இதனை இத் துறை சார்ந்தவர்கள் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. அதை அவர்களிடமே விட்டுவிடுவோம்.imagescaawv3zc.jpg?w=500
 
இப் படைப்பு இரு வகையான மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பேசுகின்றது. ஒன்று தமிழக   குறிப்பாக இராமேஸ்வர மீன் பிடி தொழில் செய்கின்ற மக்கள். இரண்டாவது தமிழகம் வருகின்ற மற்றும்  அங்கு வாழ்கின்ற  அதிகாரமற்ற ஈழத்து தமிழ் அகதிகள். இன்னுமொரு தளத்தில் ஈழத்தில் மீன் பிடி தொழில் செய்கின்ற கரையோ தமிழ் மக்களுடன் தொடர்புபட்டதும் எனலாம். இவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனை பல்வேறு பட்ட ஆதிக்கங்களினால் உருவானது. ஒரு புறம் இந்திய அரசு, தமிழக அரசு, தமிழக மக்கள், மற்றும் தமிழக கரையோர முதலாளிகள் . மறுபுறம் சிறிலங்கா அரசு, சிறிலங்கா இராணுவம், சிங்கள மீன்பிடி முதலாளிகள் மற்றும் உழைப்பாளர்கள் . இந்த ஆதிக்க சக்திகளினதும் இவர்களினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் பிரச்சனையாக இருக்கின்றது.
 
அந்தவகையில் மணிமேகலையில் படைப்புகள் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சமரசமின்றி முன்வைக்கின்றது. ஆனால் இப் பிரச்சனைகளை முரண்பாடுகளை முன்வைத்த விதம் அதாவது வெளிப்படுத்தியமை செங்கடல் திரைப்படம் (?)  எவ்வாறான  படைப்பு என்பதில் கேள்வி உள்ளது. மேலும் இத் திரைப்படம் (?)  பார்வையாளர்களில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுதியதா என்பதிலும் கேள்வி உள்ளது.
 
ஏனெனில் செங்கடல் தொடர்பாக எதிர்பார்ப்புடன் இருந்த எனக்கு திரைப்படம் (?)  எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா என்பதை உறுதி செய்ய அருகிலிருந்த நண்பர்களிடமும் பின் சந்தித்த நண்பர்களிடமும் கேட்கபொழுது  அவர்களுக்கும் அப்படியே இருந்தது எனக் கூறினார்கள். மேலும் இந்தப் படைப்பு தொடர்பாக பல கேள்விகளும் எழுகின்றன எனக் கூறினார்கள்.  இவர்கள் தனிப்பட மணிமேகலை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் அல்ல.  அதேவேளை சில நண்பர்கள் நல்ல படம் என பாராட்டியதையும் குறிப்பிட வேண்டும்.
 
imagescaq2go0z.jpg?w=500இதற்கு என்ன காரணம்? சில விபரணப்படங்களைப் பார்த்தபின் எழும் உணர்வு இந்தப்படத்தைப் பார்த்போது இருக்கவில்லை. இது விபரணப்படமாகவும் இருக்கவில்லை. வழமையான கதை கூறுகின்ற திரைப்படமாகவும் இருக்கவில்லை. அதேவேளை பல கதைக் கூறுகளும் நல்ல வசனங்களும் ஆங்காங்கே இருந்தன. ஆனால் இவற்றுக்கு இடையில் ஒரு தொடர்ச்சியும் உறவும் இருக்கவில்லை. இதற்குக் காரணம் பார்வையாளர்களான நாம் வழமையான வரையறைகளுக்கு உட்பட்ட சினிமாவை எதிர்பார்த்தது காரணமா? அல்லது மணிமேகலை அவர்கள் வழமையான பாணியை உடைத்து உருவாக்கியதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா? மறுபுறம் சில எதிர்வினைகளை செய்ய வேண்டும் என்பதற்காக சில காட்சிகளை வலிந்து சேர்த்திருந்தமை திரைப்படத்துடன் இணைந்துபோகவில்லை. மாறாக இயக்குநரை முன்னிலைப்படுத்துவதாகவே இருந்தது. இதை தவிர்த்திருக்கலாம். அல்லது ஒழுங்கான கதையோட்டத்துடன் இயல்பான ஒன்றாக இவற்றை இணைத்திருக்கலாம். மேலும் சில கடல் காட்சிகளும் இசையும் கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை நினைவுட்டின என்பதையும் குறிப்பிடவேண்டும்.imagesca65hkmt.jpg?w=500
 
பொதுமக்களை நடிக்கவைத்து ஒரு மக்கள் சினிமா எடுக்க முயற்சித்தமை பாரட்டுக்குரியது. இந்திய தமிழக மட்டுல்ல உலக சினிமா கூட ஆண்களாலும் அவர்களின் கருத்தியலாலும் கட்டுண்டு இருக்கின்ற சுழல் இது. சில ஆண்கள் மட்டுமே இதிலிருந்து வெளியேறி உயர்ந்த சினிமாக்களை எடுக்கின்றனர். ஆனால் பெண்கள் என வரும் பொழுது மிக குறைந்த எண்ணிக்கையானவர்களே ஈடுபடுகின்றனர்.  அதிலும்  சிலரே வெற்றி பெருகின்றனர். அந்தவகையில் போராட்ட குணமும் தைரியமும் உள்ள மணிமேகலை அவர்கள் அனைத்து (எதிர் மறையான) விமர்சனங்களையும் உள்வாங்கி  சிறந்த சினிமாக்களை உருவாக்கி வெற்றி பெற வேண்டும். இதுவே என்னைப்போன்ற நண்பர்களின் விருப்பம் என நம்புகின்றேன். இறுதியாக இவருடனான சந்திப்பின்போது கே.ஏ.குணசேகரன் அவர்களின் பாடலைப் பாடி நம்மை ஆட வைத்தமைக்கு நன்றி கூறவேண்டும். இது நல்லதொரு அனுபவம்.
 
மீராபாரதி
06.07.2013
சாதனைப் பெண்கள்:லீனா மணிமேகலை
 
தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் … லீனா மணிமேகலையுடன் ஒரு நேர்காணல்
 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இப்படத்தில் ஷோபா சக்தியின் பாத்திரமென்ன??

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இப்படத்தில் ஷோபா சக்தியின் பாத்திரமென்ன??

Story, Direction Leena Manimekalai

Producer Janaki (Tholpaavai Theatres)

Screenplay C Jerrold, Shobasakthi, Leena Manimekalai

Dialogue Shobasakthi

Additional Dialogue C Jerrold

Cinematography M J Radhakrishnan

Music LV Ganesan

Supervising Edit Sreekar Prasad162-300x199.jpg

Edit Tuhinabho Majumdar

Art Mayakannan, Gandhirajan K T

Live Sound Harikumar Madhavan Nair

Studio Sound Subhadeep Sengupta

Executive Producer Elang

 

 

கதை வசனம்: சோபாசக்தி  எண்டு மேல போட்டிருக்குது, ரகு!

 

http://senkadal.directorjailani.com/cast-crew/

காலத்திற்கு ஏற்ற வியாபாரிகள்

ஒரு நல்ல படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு -அண்மையில் பார்த்த- பிரசன்ன விதானகேயின் With You Without You கூறலாமோ அப்படியே ஒரு திரைப்படத்தை எப்படி மோசமாக எடுக்கலாம் என்பதற்கு 'செங்கடலை' உதாரணமாய்க் கூறலாம். தமிழக மீனவர்கள், தமிழகத்திலிருக்கும் ஈழத்து ஏதிலிகளை மட்டுமின்றி முள்ளிவாய்க்கால் மக்களையும் exploitation செய்த ஒரு திரைப்படம். இவற்றைக் கூட அநேகர் செய்வதுதானே என ஒரளவிற்குத் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் திரைப்படத்தில் நீளும் சுயவிம்பப் பெருக்கத்தை சகித்துக்கொண்டு இந்தத் திரைப்படத்தை பார்த்து முடித்தவர்கள் எல்லோருமே பாக்கியவான்கள்தான்.

-முகபுத்தகத்தில் டி சே எழுதியது .


' தனுஸ்கோடியில் மணிமேகலை' படம் காட்டினாங்கள். செங்கடல் எனவும் The Dead Sea எனவும் அறியப்பட்ட றீல்தான். இதை ரொரண்டோவில் ஒட்டிக்காட்டிய சகோதரி தர்சிக்கு நன்றி பல. வர மறுத்த மகளுக்கு வாழ்த்து. வந்தும் லீனாவுக்கு நாலு கிழியல் கிழிக்க முடியாமல் போனதையிட்டான கோபத்தை என்னிடம் காட்டாமைக்கு எனது துணைக்கும் நன்றி. லீனா மணிமேகலை நல்லொதொரு விபரணப்பட கர்த்தா. பலரும் தட்டிக் கழித்து செய்ய முனையாத விடயங்களை துணிச்சலுடன் செய்ய முனையும் அவரின் கெட்டிப்பிடியிலிருந்து எம்மால் விலகிவிட முடியாது.

செங்கடல்... திரைப்படம், விபரணப்படம் அல்லது விபரண நாடகம் எந்தவொரு அளவுக்குள்ளும் வந்து விழாத ஏதோ ஒன்று. கடலை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லோரும் 'கருவாட்டுக்கு போனவன் கருவாட்டு மணத்தோடு வந்தவன் கதைபோல்' நாற்றிவிட்டு போனார்கள். செங்கடலில் மீனவர் பிரச்சினை மனிதாபிமானத்தோடு அனுகப்பட்டடிருக்கிறது. அந்தளவில் சட்டியில் கருவாடு இருந்தது. திரைக்கதைக்கு மூவரின் பெயர்கள் ... லீனா, ஜெரால்ட்,சோபா சக்தி. சரீ..... திரைக்கதை எங்கே...? .

லீனாவின் நெறியாள்கையில் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். நடித்தால் பொலிஸ் பயம் இருப்பதால் மணிமேகலை என்ற பாத்திரம் நடிக்கவில்லை. செங்கடல் பற்றி இதுவரை இருந்த மாயை நேற்றோடு கலைந்தது. சோபா சக்திக்கு கௌரவ தோற்றம் வேற... 'கௌரவ தோற்றத்தில் சோபாசக்தி' என்று ஒரு கட்டவுட் வைப்போம். இனியும் எம்மவர் மத்தியில் ஓட்டுவதற்கு அனுசரணையாக இருக்கும்.

-முகபுத்தகத்தில் ஜெயகரன் எழுதியது .

இது முகபுத்தகத்தில் என்ரை பங்கிற்கு நான் எழுதியது .

யூலை முதலாம் திகதி யாழ் இந்து பிக்னிக், அதைவிட  நண்பன் லண்டனில் இருந்து வந்திருந்தார் .அதே நாள்தான் செங்கடல் திரையிட்டார்கள் .லண்டன் நண்பனையும் இழுத்துக்கொண்டு செங்கடலுக்கு போனேன் . படம் முடிய கலந்துரையாடல் .நாலு திட்டு திட்டுவம் என்றால் மனைவியும் அக்காவும் தயவு செய்து வாயை திறக்கவேண்டாம் என்றுவிட்டார்கள்(படம் ஓடியவர்கள் வேண்டப்பட்டவர்கள் என்பதால் மனத்தாங்கல் ஏற்பட்டு விடுமாம் ).இருந்தும் படம் முடிந்து கேள்விகளுக்கு லீனா பதிலளிக்கும் போது சற்று உரக்க "ஒருக்கா தியேட்டர்ல ஓடியாச்சு இப்ப வாயால ஓடுகின்றா " என்று விட்டு வெளியேறினேன் .

 

செங்கடல் ?
பாதுகாப்பு வலையத்திற்குள் போக சொல்லிவிட்டு செல் அடித்தமாதிரி ஆகிவிட்டது என் கதை .படம் முடிய என்றாலும் வாயை திறப்பம் என்றால் அதற்கும் தடா .எந்த மலைவிழுங்கி என்றாலும் இப்படியான சந்தர்பத்தில் குணக்குன்று என்றுதான் சொல்லவேண்டுமாம் .
லீனா எவ்வளவு செலவு என்று சொல்லுங்கள் அதற்கு மேலாக ஒரு பத்து தரலாம் கொப்பியை கொழுத்திவிடுங்கள்.இலங்கை பிரச்சனையா ? தமிழக மீனவர் பிரச்சனையா ? பெண்ணிய பிரச்சனையா ? அல்லது எல்லாம் சேர்த்தா?
ஒட்டுமொத்தமாக மிக மலிவான சுயவிளம்பர கலவையாகத்தான் எனக்கு பட்டது .Better luck next time.

சிலவேளைகளில் Michael Moore ,Prasanna Vithanage போன்றவர்களின் படம் மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்த என்னில் தான் பிழையோ தெரியவில்லை .

காலத்திற்கு ஏற்ற வியாபாரிகள்

 

ஊடகத்துறை, சினிமா எல்லாமே வியாபரம்தான். அதுதான் முதலாளித்துவமும் ஜனநாயகமும் என்ற முள்ளும் மலரும்.  எங்கே அடிமைத்துவம் ஆள்கிறதோ எங்கே எழுத்தாளர்களின் படைப்புகள் விலை போகாது. அதனால் எழுதாளர்கள், படைப்பளிகள் என்ற போலிகள் தமது விடுதலை, சுதந்திரம் போன்ற டமாரங்களை விலை கிடைக்கும் இடங்களில் பார்த்துதான் அடித்துகொள்வார்கள்.  ஊடக சுதந்திரம் மூடப்பட்ட இலனகையில் இவங்க கவனமாகத்தான் நடந்து கொள்வாங்கள். 

வெளியிலை பிரிச்சு எறிஞ்சு போடுவாங்க. சும்மா பம்மாத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி கட்டாயம் படம் பார்த்திருப்பார் என நம்பலாம். அவரின் விமர்சனம் எப்படி இருக்கப்போகிறது என அறிய ஆவல்.

  • தொடங்கியவர்

nunavilan என்ன கட்டுரையை வாசிக்கவில்லை போலிருக்கின்றது... செங்கடல் தொடர்பான எனது குறிப்பு கட்டுரைக்குள் இருக்கின்றது...

 

"சிலரின் செங்கடல் தொடர்பான நேர்மறையான  குறிப்புகளை வாசித்தமையாலும் செங்கடல் மீது எதிர்பார்ப்புடன் சென்றமர்ந்தேன். தமிழக  குறிப்பாக ராமேஸ்வர மீனவர் மற்றும் ஈழ அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்த ஒரு படைப்பு செங்கடல். இது திரைப்படமா? விபரணப்படமா? அல்லது இரண்டுமில்லாத ஒன்றா? இரண்டையூம் கடந்த புதிய படைப்பாக்க முயற்சி ஒன்றா?  என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.  இதற்கான பதிலை மணிமேகலை தனது நேர்காணலிலும் குறிப்பிட்டிருக்கின்றார். இது எவ்வகையான சினிமான எனத் தீர்மானிப்பது ஒரு கோட்பாட்டுரீதியான பிரச்சனை. வரையறைகள் சம்பந்தப்பட்டது. இதனை இத் துறை சார்ந்தவர்கள் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. அதை அவர்களிடமே விட்டுவிடுவோம்.imagescaawv3zc.jpg?w=500

 
இப் படைப்பு இரு வகையான மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பேசுகின்றது. ஒன்று தமிழக   குறிப்பாக இராமேஸ்வர மீன் பிடி தொழில் செய்கின்ற மக்கள். இரண்டாவது தமிழகம் வருகின்ற மற்றும்  அங்கு வாழ்கின்ற  அதிகாரமற்ற ஈழத்து தமிழ் அகதிகள். இன்னுமொரு தளத்தில் ஈழத்தில் மீன் பிடி தொழில் செய்கின்ற கரையோ தமிழ் மக்களுடன் தொடர்புபட்டதும் எனலாம். இவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனை பல்வேறு பட்ட ஆதிக்கங்களினால் உருவானது. ஒரு புறம் இந்திய அரசு, தமிழக அரசு, தமிழக மக்கள், மற்றும் தமிழக கரையோர முதலாளிகள் . மறுபுறம் சிறிலங்கா அரசு, சிறிலங்கா இராணுவம், சிங்கள மீன்பிடி முதலாளிகள் மற்றும் உழைப்பாளர்கள் . இந்த ஆதிக்க சக்திகளினதும் இவர்களினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் பிரச்சனையாக இருக்கின்றது.
 
அந்தவகையில் மணிமேகலையில் படைப்புகள் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சமரசமின்றி முன்வைக்கின்றது. ஆனால் இப் பிரச்சனைகளை முரண்பாடுகளை முன்வைத்த விதம் அதாவது வெளிப்படுத்தியமை செங்கடல் திரைப்படம் (?)  எவ்வாறான  படைப்பு என்பதில் கேள்வி உள்ளது. மேலும் இத் திரைப்படம் (?)  பார்வையாளர்களில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுதியதா என்பதிலும் கேள்வி உள்ளது.
 
ஏனெனில் செங்கடல் தொடர்பாக எதிர்பார்ப்புடன் இருந்த எனக்கு திரைப்படம் (?)  எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா என்பதை உறுதி செய்ய அருகிலிருந்த நண்பர்களிடமும் பின் சந்தித்த நண்பர்களிடமும் கேட்கபொழுது  அவர்களுக்கும் அப்படியே இருந்தது எனக் கூறினார்கள். மேலும் இந்தப் படைப்பு தொடர்பாக பல கேள்விகளும் எழுகின்றன எனக் கூறினார்கள்.  இவர்கள் தனிப்பட மணிமேகலை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் அல்ல.  அதேவேளை சில நண்பர்கள் நல்ல படம் என பாராட்டியதையும் குறிப்பிட வேண்டும்.
 
imagescaq2go0z.jpg?w=500இதற்கு என்ன காரணம்? சில விபரணப்படங்களைப் பார்த்தபின் எழும் உணர்வு இந்தப்படத்தைப் பார்த்போது இருக்கவில்லை. இது விபரணப்படமாகவும் இருக்கவில்லை. வழமையான கதை கூறுகின்ற திரைப்படமாகவும் இருக்கவில்லை. அதேவேளை பல கதைக் கூறுகளும் நல்ல வசனங்களும் ஆங்காங்கே இருந்தன. ஆனால் இவற்றுக்கு இடையில் ஒரு தொடர்ச்சியும் உறவும் இருக்கவில்லை. இதற்குக் காரணம் பார்வையாளர்களான நாம் வழமையான வரையறைகளுக்கு உட்பட்ட சினிமாவை எதிர்பார்த்தது காரணமா? அல்லது மணிமேகலை அவர்கள் வழமையான பாணியை உடைத்து உருவாக்கியதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா? மறுபுறம் சில எதிர்வினைகளை செய்ய வேண்டும் என்பதற்காக சில காட்சிகளை வலிந்து சேர்த்திருந்தமை திரைப்படத்துடன் இணைந்துபோகவில்லை. மாறாக இயக்குநரை முன்னிலைப்படுத்துவதாகவே இருந்தது. இதை தவிர்த்திருக்கலாம். அல்லது ஒழுங்கான கதையோட்டத்துடன் இயல்பான ஒன்றாக இவற்றை இணைத்திருக்கலாம். மேலும் சில கடல் காட்சிகளும் இசையும் கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை நினைவுட்டின என்பதையும் குறிப்பிடவேண்டும்.
 
பொதுமக்களை நடிக்கவைத்து ஒரு மக்கள் சினிமா எடுக்க முயற்சித்தமை பாரட்டுக்குரியது."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.