Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச போட்டியில் 3வது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி! தமிழீழம் 5 : ரேசியா 0(படங்கள்)

Featured Replies

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச உதை பந்தாட்ட போட்டியின் கடைசி நாளான நேற்று மாலை மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழீழ அணி Rateia அணியுடன் மோதினார்கள். இப்போட்டியில் தமிழீழ அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

இந்த சர்வதேச போட்டியானது கடந்த வியாழக்கிழமை Isle of man இல் Tynwald என்னும் மைதானத்தில் தொடங்கியது.

மொத்தம் ஆறு அணிகளுக்கான இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக தொடங்கி குழு A மற்றும் குழு B என்ற நிலைப்பாட்டில் குழு A இல் மூன்று அணிகளும் குழு B இல் மூன்று அணிகளும் மோதி அதில் தெரிவடைந்த அணிகள் மீண்டும் இன்று முதலிடம் மற்றும் மூன்றாவது ஐந்தாவது இடங்களுக்காக போட்டியிட்டனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் குழு A இல் இருந்து Occitania அணியும் குழு B இல் இருந்து StJohnsஅணியினரும் பங்கு பெற்ற அனைத்து போட்டிகளிலும் வென்று முதல் இடத்துக்காக இன்று மோதுகின்றனர்.

அதே போல குழு A இல் இருந்து தமிழீழ அணியும் குழு B இல் இருந்து Raetia அணியினரும் மூன்றாவது இடத்துக்காகவும் குழு A இல் இருந்து Sealland அணியினரும் குழு B இல் இருந்து Alderney அணியினரும் ஐந்தாவது இடத்துக்காக இன்று போட்டியிடுகின்றனர்.

நேற்று மாலை (6 ஜூலை 2013 ) Occitanaia அணியினருடன் மோதி முதல் இடத்துக்கான போட்டி வாய்ப்பை இழந்த தமிழீழ அணி இன்று மூன்றாவது இடத்துக்காக Raetia அணியினருடன் மோதினர்.

தமிழீழ தேசிய கீதத்துடன் உற்சாகமாக தொடங்கிய இன்றைய போட்டி கட்டாயமாக வெற்றி காணுவோம் என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக நடந்தது.

இன்று அந்தோனி நாகலிங்கம் (23) பந்து காப்பாளனாக பொறுப்பேற்று சிறப்புடன் விளையாடினார்.

அவருடன்

அருண் விக்னேஸ்வராஜா (14)

கதிரவன் உதயணன்(18)

சிவரூபன் சத்தியமூர்த்தி (5)

கெவின் நாகேந்திரா (6)

கஜேந்த்திரன் பாலமுரளி (10)

ரொன்சன் வல்லிபுரம்(7)

மதன்ராஜ் உதயணன்(15)

பிரவீன் நல்லதம்பி(20)

ஷாசில் நியாஸ்(4)

பனுஷன் குலேந்திரன் (8)

பிரஷாந்த் ராகவன் (9)

மேனன் நகுலேந்திரன் (2)

ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் (11) ஆகியோரும் பங்குபெற்றனர்.

போட்டி மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டு இருப்பதையும் வீரர்களின் வேகமான விளையாட்டையும் பார்த்து எமது அணி ஆதரவாளர்கள் பெருமை கொண்டனர்.

முதலாவது இலக்கை இலாவகமாக கைப்பற்றிய சிவரூபன் (5) அவர்கள் போட்டி தொடங்கி 3 நிமிடத்துக்குள் தமிழீழ அணிக்கு தமது முதல் பந்தினை கோல் கம்பத்தினுள் செலுத்தி போட்டியின் சமநிலையினை மாற்றினார்கள்.

அதை அடுத்து 15.20 க்கு கஜேந்திரன் (10) உதவியுடன் மதன்ராஜ் (15) அணிக்கான இரண்டாவது இலக்கை உள்ளே செலுத்தி அணியின் இலக்கை இரண்டாக உயர்த்தினர்.

மத்தியஸ்தரின் எச்சரிக்கைளையும் மீறி தமிழீழ அணி வீரர்களின் ஆட்டத்தை முறையற்ற வகையில் தடுத்து விளையாடிய Raetia அணியில் மூன்று பேருக்கு சிவப்பு மட்டை காட்டப்பட்டு போட்டியை விட்டு வெளியேற்றபட்டனர்.

முதலுதவிக்கு பொறுப்பாக இருந்த தீபன் அவர்கள் வீரர்களின் காயங்களை உடனுக்குடன் சரி செய்து அவர்களுக்கு உற்சாகம் தெரிவித்து வீரர்களை போட்டியில் தொடர்ந்து பங்கு பெறுமாறு வழி வகுத்து கொண்டு இருந்தார்.

போட்டியின் கடைசி சுற்றில் பனுஷனுக்காக (8) மைதானத்தில் இறங்கிய ஜிவிந்தன் (11) தொடர்ந்து மூன்று உதைபந்தாட்ட இலக்கை எதிர் அணி பந்தாட்ட இலக்கு வலைக்குள் இறக்கி ஈழ அணியின் மொத்த இலக்கு எண்ணிக்கைகளை ஐந்தாக உயர்த்தி அணிக்கு பெருமை சேர்த்தார்.

மொத்தம் ஏழு முயற்சியில் இரண்டு இலக்குகள் Raetia அணி பந்து காப்பாளரால் பாதுகாக்கப்பட்டதால் தமிழீழ அணி ஐந்து உதைபந்தாட்ட இலக்குகளை எடுத்து இந்த போட்டியை வென்றனர்.

இங்கிலாந்து முன்னாள் உதைபந்தாட்ட வீரர் திரு Paul Reaney அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தமிழீழ அணி வீரர்களை பாராட்டி அவர்களுக்கு மூன்றாவது இடத்துக்கான வெற்றிக் கோப்பையையும் ஆட்ட நாயகனுக்கான கோப்பையையும் பங்கு பற்றிய அனைவருக்கும் பதக்கமும் அணிவித்தார்.

இவர்களின் வெற்றியை உலகெங்கும் பரவச் செய்வதில் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் பெருமை கொள்கிறது.

இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் தமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

மீண்டும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டியில் தமிழீழ அணி பங்குபெறும்.

tamileelam_fball1.jpg

tamileelam_fball21.jpg

tamileelam_fball3.jpg

tamileelam_fball4.jpg

tamileelam_fball5.jpg

tamileelam_fball61.jpg

tamileelam_fball71.jpg

tamileelam_fball82.jpg

tamileelam_fball91.jpg

tamileelam_fball101.jpg

www.irruppu.com
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக பயிற்சி செய்து, திறைமையாக விழையாடியானார்கள்.

இன்னும் வளர பெரிய தமிழ் வர்த்தகங்கள் இவர்களை விளம்பரபடுத்தி தாமும் பயன் பெற்று, அணியையும் ஸ்பொன்சர் பண்ணலாம். எமது இளையோருக்கும் நல்ல உதாரணங்களாகவும் இருப்பார்கள்.

 

மகிழ்ச்சியான செய்தி. :) 

விவசாயி விக் குறிப்பிட்டது போல்... தமிழ் வர்த்தக நிறுவனங்கள், இவர்களது விளையாட்டுக்கு அனுசரணை வழங்கி... அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கலாம்.

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு வாழ்த்துகள்

விளையாட்டும் ,வீரமும் ,காதலும்,பண்பாடும் ..............இவையே நாங்கள் .............அதை பலமுறை நிரூபித்துவிட்டோம் ...........இன்னும் இன்னும் நிரூபிப்பொம் ,,,,,,,

 
 
வாழ்த்துக்கள் எங்கள் வீரசெல்வங்களுக்கு.

வளரட்டும் மேலும்!

 

அரிச்சுன் சொக்கர் பார்த்து ரன்னிங் கமெண்ட் எழுத மாட்டாரா? :D

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர வேண்டும் !! வாழ்த்துகள் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மென்மேலும் வளர வேண்டும் !! வாழ்த்துகள் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.