Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடியுடன் கடிப் மைதானத்தில் ஓடியது ஏன்? – பிடிபட்டவர் நீதிமன்றத்தில் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கடந்தமாதம் 20ம் நாள் இந்திய – சிறிலங்கா அணிகளுக்கு இடையில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, மைதானத்துக்குள் நுழைந்து சிறிலங்காவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய எட்டுத் தமிழர்களும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

கடிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட எட்டுப் பேரில், ஏழு பேரும் செப்ரெம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, எந்தவொரு தேசிய, அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் செல்லக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மைதானத்துக்கு வெளியே கார் ஒன்றின் மீது கல் வீசியதாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் மீதான விசாரணை வரும் ஜுலை 23ம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, தனது தந்தையை சிறிலங்காப் படையினர் கைது செய்து படுகொலை செய்ததாக, மணிமாறன் சதாசரமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எதற்காக மைதானத்தில் ஓடினீர் என்று அவரிடம் நீதிவான் கேட்டதற்கு, ஒரு தொகுதி சிறிலங்கர்கள் நீங்கள் சிறிலங்காவுக்குத் திரும்ப முடியாது என்று உரத்துக் கத்தியதாகவும், அங்கு வந்தால் தன்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு, ஜனநாயக நாடான பிரித்தானியாவில் அவர்கள் இருப்பதாகவும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று தான் பதிலளித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனால் தான் கொடியுடன் மைதானத்தில் ஓடியதாக மணிமாறன் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து நீதிபதி, ஏழு நாட்களுக்குள் அவரை 250 பவுண்ட் அபராதம் செலுத்தும்படியும், 85 பவுண்ட் நீதிமன்றச் செலவுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இவருடன், றீகன் சரஸ்குமார் பாலச்சந்திரன், நியூட்டன், சுகிதர்சன் கார்த்திகேசு, திலக்சன் குலசிங்கம். கௌசாந்த் மகேஸ்வரன், சிவேந்தரன் நடராஜா, தயாளன் ரத்தினம் ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

 

http://tamil24news.com/news/archives/86397

நல்ல பரப்புரை. ஈழ அரசியல் போராளிகளுக்கு நன்றி.

பொடியளின்ரை காசிலைதான்(தண்ட பணம்) என்றாலும், மறுப்பு கூறாமல்  செய்ய முன் வந்த பிரித்தானிய கோடுக்கும் நன்றி தான், :D

நல்ல பரப்புரை. ஈழ அரசியல் போராளிகளுக்கு நன்றி. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

பொடியளின்ரை காசிலைதான்(தண்ட பணம்) என்றாலும், மறுப்பு கூறாமல்  செய்ய முன் வந்த பிரித்தானிய கோடுக்கும் நன்றி தான், :D

 

கள்ள  மட்டைக்காசு என்று இங்கு குத்தி  முறிந்தார்கள்.

அவர்கள் நீதிபதியிடமே  நீதி  கேட்டு உண்மை   உரைக்கிறார்கள்

தானும் செய்யாது தள்ளியும் படுக்காத இனத்தில் இவர்கள் போற்றப்படவேண்டியவர்கள்

Edited by விசுகு

இனிமேல் இதுபோன்ற செய்திகளுக்குத்தான் சந்தோசப்படவேண்டும் .

முகாம் எல்லாம் இனி அடிக்க போகின்றார்களா என்ன ?

பிரித்தானியாவில் வாழும் வீரத்தமிழர்கள் மணிமாறன் சதாசரமூர்த்தி, றீகன் சரஸ்குமார் பாலச்சந்திரன், நியூட்டன், சுகிதர்சன் கார்த்திகேசு, திலக்சன் குலசிங்கம். கௌசாந்த் மகேஸ்வரன், சிவேந்தரன் நடராஜா, தயாளன் ரத்தினம் ஆகியோருக்கு நன்றிகள்.

புலிக்கொடியை மீண்டும் பார்த்ததும் சிலருக்கு "குரைப்பன்" காச்சல் வந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.