Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் 13 வது சட்டத்திருத்தம் ஏமாற்று வேலை விளக்குகிறார், குருபரன், யாழ் பல்கலையின் சட்ட விரிவுரையாளர்.

Featured Replies

இலங்கையின் 13 வது சட்டத்திருத்தம் குறித்த கருத்து, அது ஏமாற்று வேலை என்பதை அழகாக விளக்குகிறார், குருபரன், யாழ் பல்கலையின் சட்ட விரிவுரையாளர். இவர்களை போன்றவர்களிடம் ஈழ விடுதலை போராட்டம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கிறது என்பது மிகுந்த‌ நம்பிக்கையை தருகிறது

இரண்டு காணொளிகளையும் முழுமையாக பாருங்கள், பகிருங்கள்:

1. http://www.youtube.com/watch?v=wGROiPZNuRE
2. http://www.youtube.com/watch?v=89dIfVIjBNA


https://www.facebook.com/guruparank?hc_location=stream

  • கருத்துக்கள உறவுகள்

இதே விடயத்தில் GTV யில் அண்மையில் ஒளிபரப்பான MCM IQBAL அவர்களின் பேட்டியை பாருங்கள். http://www.ruleoflawsrilanka.org/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள அரசியல் வித்தகர் எல்லாம் சரியாக போகிறது என்று திருவாய் மலர்ந்தருளி உள்ளார். காணொளியை பார்த்த பின் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.


  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் திருகுதாளங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியுள்ளார்..! இதுதான் மேற்கின் இராஜதந்திரிகளுக்கும், கிழக்கின் இராஜதந்திரிகளுக்கும் உள்ள வேறுபாடு..!

குருபரன் தனக்கு விளங்காதவற்றை மற்றவர்களுக்கு விளங்க வைக்கும் போதுதான் அபத்தத்தை உண்டாக்குகிறார். 

பல சின்ன சின்ன தடுமாற்றங்கள் ஆடுகிறார். Town Hall Style Meeting பற்றி பேசுகிறார். அதில் அவருக்கு நினைவுக்கு வருவது கூட்டமைப்பும், மாவையும் தான். இன்னுமொருபக்கம் இருப்பதை அறவே மறந்து போகிறார்.

 

அமெரிக்காவில் பேசும் சுதந்திரத்துடன் இலங்கையில் கூட்டமைப்பு கேள்விகளுக்கு மறுமொழி கொடுக்க முடியாது. பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டிகளுடந்தான் அசாத் சாலி, சுரேஸ், சிறிதரன் போன்ற்வர்கள் விசாரிக்கபட்டவர்கள். ஆனால் அதே நேரம் தாம் எதை பேசினாலும் தேவானந்தா போன்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மிக சின்ன உதாரணம்: இவர் தானே மாவையை தாக்குவதில் இறங்கும் போது, தேவானந்தாவின் பெயரை மட்டும் அல்ல அரச பக்கம் இருப்பதையே சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார்.  இவரின் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் பேச்சு,(அங்கு தமிழில் எழுதியும் இல்லை) ஒபாமா கூட்டும் பத்திரிகையாளர்களின் மகாநாடு மாதிரியா இருந்தது. யாராவது இவரை பற்றிக்கூட கேட்ட கேள்விகள் இதில் சேர்க்க படவில்லை. அப்புறம் இவரிடம் பத்திரிகையாளர்கள் அரசை பற்றி என்ன கேட்டார்கள்? அனால் ஒபாமா, பத்திரிகையாளர்கள் மகாநாடு நடத்தினால் அமெரிக்காவில் நிற்க வைத்து கேள்வி கேட்டுத்தான் முடிப்பார்கள்.

 

இதில் ஒரு சுவாரசியமான சரித்திரம், ரீகனும் சாம் டொனால்சனும் காலத்தில் நடந்தது. டொனால்சன், றீகன் வெள்ளை மாளிகைக்குள் போன  பின்னரும் நாங்கு கட்டைகளிற்க்கு கேட்க தனது கேள்விகளைக் கத்துவார். கூட்டங்களில் அவர் கேட்கும் கேள்விகள் யரையும் துள்த்தெடுக்கும். அதற்குப்பதிலாக ரீகன் ஒரு நகைச்சுவை சொல்லித்தப்புவார்.  ஒரு தடவை றீகனுக்கு தாய்லாந்தில் வைத்து மிக்க கண்ணைக்குத்தும் கறுப்பு சிவப்பில் ஒரு "பத்திக்"  சேட் கொடுத்திருந்தார்கள். அடுத்த கூட்டத்தில் ரீகன் அதை அணிந்துவந்திருந்தார். அவரின் பயணம் பற்றி கேள்விகள் வந்தது. அவரின் சேட்டும் பற்றியும். அப்போது அவர் சொன்னது "At last I have got something louder than Sam (Donaldson)"  என்பது :D . டொனால்சன் கேள்வி கேட்பது யாரும் தாங்கொள்ள முடியாத அவ்வளவு கடூரம். அமெரிக்காவில் அதிபர் வரையும் நிற்க வைத்து கேடக்கப்படுவார்.

 

மகிந்தா தன்னை நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பாக கேள்வி கேட்க இருப்பத்தாக கூறி பிருத்தானிய பாரளுமன்ற அங்கத்தவர்களை சந்திக்க மறுத்தார். நிலுவையில் இருக்கும் வழக்குதான் பிரச்சனை என்றால் மகிந்தா அதை அவர்களிடம் கூறியிருக்கலாம்.  அதில் உண்மை இல்லை என்பதும், கேள்வி கேட்பது அரச பக்கத்தில் ஆதரிக்கப்படுவதும் இல்லை என்பதும் தான் உண்மை. மகிந்தா பிரித்தானிய பா.உ.க்கள் புதிய தொடக்கம் தொடங்க விடவில்லை. பின்னர் எங்கே Town Hall Style Meetings களுக்கான ஜனநாயகம்? இவர் கூட்டமைப்பிடம் மட்டுதான் பால் குடிப்பேன் என்றால் அவர் அப்பாவிக் குழந்தையாகவே இருந்துவிடுவதுதானே. ஏன் அரசியல் பேசுவான்.

 

எனவே கூட்டமைப்பிடம் மட்டும் தான் என்று ஜனநாயகம் வளர்க்காமல் இருக்க தெரிய வேண்டும்.  6ம் திருத்தத்தை அரசை விலக்க வைக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர் மேலதிக சத்திய கடதாசிகள் கேட்பது வேட்பாளர்கள் தமது கொள்கைகளை வெளியில் சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு வரும் என்பதை இவர் அரசுக்கு பத்திரிகையாளர்கள் மகாநாடுகளில் வைத்து தெரிவிக்க வேண்டும். 

 

அவரின் இந்த சின்ன சின்ன கருத்துக்களை விட பிரதானமான இரண்டான: 

 

1). 13ம் திருத்தத்தை தீர்வாக காணுவார்கள் என்பது.  மேற்குநாடுகள் தங்கள் நிலைப்பாடுகளை இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்ந்துவிட்டதா என்பதை வைத்து முடிவு செய்வதில்லை என்பது இவருக்கு தெரியவில்லை. 150,000 மக்கள் கொல்லப்பட்டதை சட்டலைட்டில் வைத்து பார்த்துவிட்டு "கம்" என்றுதான் இருந்தார்கள். இன்று அவர்கள் ஏன் தமிழ் மக்களுக்கு சாதகமாக குரல் கொடுக்கிறார்கள் என்பதை இவர் உணராவிட்டால் அவர்களின் வரவிருக்கும் ஆதரவு வராமல் போய்விடும். அவர்கள் ஆரம்பித்தது, 2009 ஆண்டு காரியதரிசிக்கும்,  HRCக்கும்  கொடுத்த வாக்குறுதிப்படியாக நடித்து அமைக்கப்பட்ட  LLRC யில் இருந்து தான். இலங்கை வழமை போல் ஒப்பந்தம் எழுதி கிழிக்கக் கொண்டு வந்த LLRC இன்று  அரசை மாட்டி விட்டது. அதே போன்ற ஒரு நடவடிக்கைக்கு இலங்கையை இறக்கத்தான் அவர்கள் 13ம் திருத்தத்ததின் கீழ் மாகாண சபை தேர்தல் கேட்டார்கள்.

 

எத்தனுக்கு எத்தனாக மகிந்த LLRC யில் படித்த பாடத்தை வடமாகாணசபை தேர்தலில் தவிர்க்க முயன்றார். ஆனால் சீனாவிடம் பெறும் கமிசனுக்காக பொதுநலவாய கூட்டத்தை இலங்கையில் நடத்த வேண்டியிருக்கு. இதனால்த்தான் கஸ்டப்படுகிறார். அவர் நினைத்தபடி 13ம் திருத்தத்தை திருத்த முடியவில்லை ஏன் எனில் காங்கிரசின் மத்திய அரசு தேர்தல், தமிழக மாணவர்களால் அதனுள் செருகப்பட்டுவிட்டது. சிங்கள் அரசுகள் சிங்கள் மாகாணங்களில் கூட தேவையான அதிகாரங்களை கொடுக்கவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் அது அவர்களின் மாகாணங்கள் தானே என்று நொண்டிச்சாட்டு சொல்கிறார்கள். அதாவது மாகாணசபை அங்கத்துவ சிங்களவருக்கு அந்த அதிகாரங்கள் மீது விருப்பம் இல்லையா? அதிகார ஆசை இல்லாத சிங்களவர்களா தங்காலையில் வன்முறைக்குள் இறங்கியது, ஆசிரியை முட்டுக்காலில் நிறுத்தியது?

 

மகிந்தா அரசோ அல்லது எந்த சிங்கள அரசோ தமக்கு வந்து கிடைக்கும் அதிகாரத்தை எங்கும் போக விடமாட்டர்கள் என்பதால்தான் மாகாணங்கள் தமது அதிகாரத்தை மத்தியிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. இது வடமாகாணத்திற்கு தனித்துவமானதாக இருக்கப்போவதில்லை. கிழக்கில் மு.க ஏமாற்றப்பட்ருக்கிறது.  இதை வெளிநாடுகள் சரியாக புரிந்து வைத்திருக்கின்றன. அவை தமது தேவையுடன் இலங்கையில் தலையிடும். அதற்கு நாம்தான் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதை கூட்டமைப்பு Town Hall Style Meeting குகளில் சொல்ல முடியாது. எனவே வடமாகாணத்தை குத்திக்கு கொடுக்காமல் இருக்க தேர்தலில் போட்டி போடுவது அவசியம். இது வெளியார் தலையீடுக்கும் ஒரு ஆரம்பமாகலாம். "அமெரிக்கன் சென்றர்" திரிகோணமலையில் அமைக்க முயன்றது ஒரு உதாரணம். 

 

2). இரண்டாவது போர்க்குற்ற விசாரணை மலினப்படுத்தபடும் என்பது. இதை கூட்டமைப்பிடம் சொல்லி எந்த பலனும் இல்லை. கூட்டமைப்பு இதை 2009,2010களில் எதிர்த்தது என்பதுதான் உண்மை.இதை முன்னால் தள்ளுவது ஐ.நாவில் நவநீதம் பிள்ளையும் சிலரும், அமெரிக்காவில் சிலரும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும், புலம் பெயர் தமிழர்களும்.  Accountability என்று அவர்கள் கேட்பது நடந்து முடிந்தவற்றுக்கே.  இதில் வடமாகாண சபை தேர்தல் தீர்ப்பாக கருதப்படும் என்பதும் இவர்கள் இனிமேல் அதை கைவிடுவார்கள் என்பதும் முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் போடும் முடிச்சு. அமெரிக்கா அதை எடுக்காமல் விடுவதாயின் சீனா விவகாரம் சீர் செய்யப்பட வேண்டும். நவநீதம் பிள்ளைக்கு அவவின் பதவிக்காலம் முடிய வேண்டும். தன்னார்வ நிறுவனங்களுக்கு   எதுவும் உறுதியானதாக முடியாது. புலம் பெயர் தமிழரிடம் இழப்புகள் சரிசெய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர்கள் இதைக் கைவிட மாட்டார்கள்.

 

போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையில் தாயக மக்களின் பங்கு குறைவு. எனவே இப்படியா தேர்தல் அவர்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவரமாட்டது. மகிந்தா தேர்தலை கொண்டுவர மறுத்ததே, வடக்கில் நீதி அதிகாரம் கிடைத்தால் அது தெற்கில் உள்ள மாகாணங்களுக்கும் போகும். இதனால் 9 மாகாணங்களிலும் உள்ளவர்களில் யாராவது ஒரு எதிரி தன்னை ஒருநாள் கோட்டுக்கு இழுக்கலாம் என்பதே. எனவே போர்க்குற்றம் சம்பந்தமாக, மகிந்த தேர்தலால் பயப்படுகிறாரே அல்லாமல் தேர்தல் அதற்கு இடைஞ்சலாகும் என்ற விளக்கம் சரியல்ல.  

 

 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.