Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு: - நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? படீங்க..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
womens-food-news-150.jpg

இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் சிற்சில விஷயங்கள், பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.

  

சாப்பிடும் உணவு நிறைவையும், திருப்தியையும் தரவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற் குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? ஆம் என்றால், சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்ட பின், அதில் திருப்தியையும் மற்றும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களை கொடுத்திருக்கிறோம்.

அதை படித்துப் பயன்பெறுங்கள்.உணவுப் பழக்கம் சாப்பிடும் போது டி.வி. பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செல விட வேண்டும். அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளைகளில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த திருப்தி கிடைக்கும்.

மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட் பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்தி விடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.

நுகர்தலும், மெல்லுதலும்:

உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி திருப்தி ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! எப்படி யெனில் நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் செல்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்கு கொண்டு செல்லும். இதன் மூலம் 'பேஷ், பேஷ் சூப்பரா சாப்டாச்சு!!' என்ற உணர்வும் கிடைக்கும்.

ஈரப்பதமான உணவுகள்:

நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந் தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும் என்பதாலேயே. எனவே பாப்கார்ன்களுக்குப் பதிலாக காய்கறி சூப்பும், முந்திரிப் பழங்களுக்கு மாற்றாக திராட் சைகளையும் சப்பிடலாம்.

கொழுப்புச்சத்து உணவுகளை தவிர்க்கவும்:

புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவு கள் திருப்திப்படுத்தும் உணர்வுகளை தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும் .

தூக்கம்:

தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வரு பவை. வயிற்றில் உற்பத்தி யாகும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் திருப் திக்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், துக்கமும் தேவை.

தண்ணீர்:

தினமும் சரா சரியாக 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் அடிக்கடி பசியெடுக்கும். இதற்கு உண்மையான காரணம் தாகமாக இருப்பது தான்! எனவே சாப்பிடும் முன் 2 டம்ளர் அல்லது அதற்கும் மேல் தண்ணீர் குடிக்கவும். இதனால் சாப்பாட்டில் திருப்தியும், முழுமையும் கிடைக்கும்.

சிறிய தட்டுகள்:

சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் சாப்பாடு போட்டு, தட்டு காலியாகும் வரை சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமையாக மற்றும் திருப்தியாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக் குவது தான் என்று மாறி விடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், திருப்தியை உணரலாம்.

நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள்:

சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவுகளை சாப்பிடும் போது, சாப்பாட்டில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் திருப்தி ஏற்படும். எடுத்துக்காட்டாக, முட்களையுடைய மீன்கள், காரமான குழம்பு ஆகிய உணவுகள் சாப்பாட்டு நேரத்தை அதிகப் படுத்தும்.

ஆப்பிள்:

சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், சாப்பாட்டின் அளவு குறைவதுடன், திருப்தியும் கிடைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.

இயற்கை உணவுகள்:

செயற்கையாக தயாரிக் கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளை கொண்டது. எனினும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்பதால், ஒவ் வொருமுறை மெல்லும் போதும் திருப்தியும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேற்கூறியவற்றையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமடையச் செய்யும் பழக்கமான அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவ தோடு, இத்தகைய ஆரோக்கியமான பழக்கத்தால் உடலும் நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88827&category=CommonNews&language=tamil

 

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு' என்பது ஒளவையார் மொழி.
ஒவையார் கம்பருக்கு நிகராக கவிப்பாடும் வல்லமை படைத்தவர். ஆனாலும் கம்பரைப்போல் பொன்னுக்குக் கவிப்பாடாமல் கூழுக்கு கவிபாடிய எளிமையின் நாயகி.

சிலம்பி என்னும் தாசியிடம் பொன் வாங்கிக் கொண்டு பாதி பாடல் மட்டுமே பாடினார் கம்பர். மீதி பாடலை முடிக்க இன்னும் கொஞ்சம் பொன் கேட்க, அந்தப் பெண்ணிடம் பொன் இல்லை. ஆகையால் சுவற்றில் பாதியோடு நின்றது கம்பர் எழுதிய கவிதை. அவ்வழியாக பிரிதொரு நாள் வந்த ஒவையார் சுவரில் எழுதப்பட்டிருந்த கவிதை குறித்து அப்பெண்ணிடம் கேட்க, அப்பெண் காரணத்தை தெரிவித்தாள். ஒவையார் அவள் வீட்டில் பசிக்கு கூழ் வாங்கிக் குடித்து விட்டு அக்கவிதையை முழுமையாக பூர்த்தி செய்து விட்டுப் போனார்.

அந்த வழியாக மறுபடியும் வந்த கம்பர், ஒவையாரால் பூர்த்தி செய்யப்பட்டிருந்த கவிதையைக் கண்டு கோபம் கொண்டார். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அவர் ஒரு நாள் சிலேடையாக `நாலிலைப் பந்தலடி' என்று டி போட்டு பாட கோபம் கொண்ட ஒவையார்,
எட்டேகால் லட்சணமே எமனேரும் பரியே...எனத் தொடங்கும் அந்தப் பாடலில் கம்பரை அவலட்சணமே, குட்டிச்சுவரே, குரங்கே, எருமைமாடே என்றெல்லாம் திட்டிவிட்டு `ஆரையடா... சொன்னாய் அது' என்று பதிலுக்கு` டா' போட்டு பாடியவர்.
அப்படிப்பட்டவரா பெண்களை குறைத்து சாப்பிடு என்று கூறியிருப்பார்?
ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்குகேலென்றாய் ஏலாய்
ஒருநாளும் என்நோயறியாய்
இடும்பைகூர்ரென்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது
என்று பசியெடுக்கும் வயிற்றின் மீதே நொந்துக்கொள்கிறார்.
மற்றொருப் பாடலில் `நாழி அரிசிக்கே நாம் ' என்பவர், தகுதி இல்லாதவரையும் வயிற்றுக்காக பாராட்ட வேண்டியுள்ளது என்று வேதனையை வெளிப்படுத்துகிறார்.
வறுமையோடு வாழ்ந்தாலும் வற்றாத கவி வளம் படைத்த பெண்ணின திலகம் ஒவையார் உண்மையில் `உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு' என்றுதான் கூறியிருக்க வேண்டும்.
பண்டி என்பது வயிற்றைக் குறிக்கும்.
வயிறு இருபாலருக்கும் பொதுவானது. ஆண், பெண் இருபாலருமே அளவோடு சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதைத்தான் ஒiiவாயர் இப்படி கூறியிருக்க வேண்டும்.
ஓலைச்சுவடியில் இருந்து அச்சேற்றும் போது இந்தத் தவறு நடந்திருக்க வேண்டும்.
இனி
உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என்றுதான் வாசிக்க வேண்டும்
 
 

 

 

உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு

 

அருமையான கருத்து. வாழ்த்துக்கள் வந்தி.   :D

 

2314701626_pig_in_mud_answer_3_xlarge.jp

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் "உண்டி பெருக்குதல் பெண்டிற்கு ஊன் பெருக்கி ஜிம் போக உதவும்"... என்று தான் சொல்லனும். இல்லைன்னா.. கோவிப்பாங்க. ஆண்களுக்கு பானை வண்டி வைக்க விடுற உலகம் ஜிம் போக விடுற உலகம்.. எங்களுக்கு சாப்பாட்டில் கட்டுப்பாடு போடுவது ஆணாதிக்கம்.. பெண் அடக்குமுறை.. அடிமைத்தனம் என்று சொல்லிடாமல் இருக்க இது தான் ஒரே வழி..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.