Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த ரதன்? வவுனியாவில் ரதனை புறக்கணிக்குமாறு மீண்டும் ஒட்டுக்குழுக்கள் துண்டு பிரசுரம்!

Featured Replies

எதிர்வரும் செப்ரெம்பர் 21இல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் திழரசுக்கட்சி சார்பாக வவுனியா நகரசபை உப தலைவர் எம்.எம்.ரதன் அவர்கள் நியமிக்கப்படுவதற்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, வவுனியா மாவட்ட புத்திஜீவிகள், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள், வவுனியா நகர எல்லைக்குட்பட்ட மக்கள் என  ஒட்டுக்குழுக்கள்    துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர்.

  இந் நிலையில் அதனையும் மீறி கூட்டமைப்பின் தன்னிச்சையான முடிவால் அவ் வேட்பாளர் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்கள் என்னும் பெயரில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது

அத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகம்

தமிழரசுக் கட்சி வேட்பாளர் யார் இந்த ரதன்?

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி பலத்த எதிர்பாhர்ப்புக்கு மத்தியில்  மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொருத்தமான வேட்பாளர்களை நாம் ஆதரிக்க வேண்டிய நிலையிலுள்ளோhம். வவுனியாவின் வேட்பாளர்களாக சிலரது பெயரை வவுனியா மக்கள் பரிந்துரைத்த போதும் அதனை பொருட்படுத்தாது  கூட்டமைப்பின் தன்னிச்சையான முடிவுகளாலும் சிலரது மிரட்டல்களாலும் பொருத்தமற்ற வேட்பாளர்கள் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் நாமும் எமது மக்களுக்கு பொருத்தமற்ற வேட்பாளர் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.

யார் இந்த ரதன்?

மாங்குளத்தில் சாதாரணமான நடுத்தர குடும்பத்தில் பிறந்து வவுனியா விபுலானந்தா கல்லூரி அதிபர் திரு.பேரம்பலம் அவர்களின் புண்ணியத்தால் பாடசாலை விதிமுறைகளை மீறி உயர்தரம் படிச்சு முடித்தவர் தான் ரதன். அதன் பின் ரீயூசன் மாஸ்ரர். பிறகு வவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு துணையாக நின்ற கும்பலின் தலைவன் என எல்லோராலும் அறியப்பட்டவன் தான் ரதன்.

உங்களுக்கு தெரியுமா?

கடந்த சில வருடங்களுக்கு முன் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வவுனியா நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக ஒரு கொலைச்சம்பவம் இடம்பெற்றது. வவுனியா வைரவபுளியங்குளத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றினை நடத்திய பிரபல நிர்வாகியும் தொழில் அதிபரும் ஆகிய சந்திரன் ஒரு கொலைவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது குடும்பம் படும் துன்பங்களுக்கு அந்த கொலை வெறியனே காரணம்.

யார் அந்த கொலைகாரன்?

தென்பகுதியில் புலிகளின் கட்பாட்டுப் பகுதிகளுக்கு வாகனம் கடத்தி கொடுக்கும் கும்பலுடன் இணைந்து செயற்பட்டவனே கஜன். தனிப்பட்ட சில காரணங்களுக்காக பிறரின் துணையுடன் சந்தோசமாக ஓடிக் கொண்டிருந்த சந்திரனின் வாழ்கையில் விளையாடியவன் தான் இந்த கஜன். சந்திரனை சுட்டு விட்டு திரிந்த கஜன் மீது பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் சந்தேகம் ஏற்பட மலேசியா நின்று விட்டு மீண்டும் இங்கு வந்து திருமணம் செய்து உள்ளான் இந்த கஜன்.

ரதனுக்கும் கஜனுக்கும் என்ன தொடர்பு?

வவுனியா நரகசபையின் உப தலைவரும் தற்போதைய மாகாணசபை வேட்பாளரும் ஆகிய ரதனின் அன்புத் தம்பியே கஜன். தனது தம்பி தனது நிர்வாகியை சுட்டது தெரிந்தும் மௌனியாக இருந்தவன் தான் ரதன். மலேசியாவில் இருந்து வந்த கஜன் திருமணம் செய்த போது ரதன் தனது சீற்றுக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் சென்றிருந்தார்.

இராணுவத்துடன் தொடர்பா?

மலேசியாவில் இருந்து வந்த கஜனுக்கும் இராணுவத்திற்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கஜன் புலிகளின் பெயரை பயன்படுத்தி குற்றங்கள் பலவற்றை செய்த போதும் இன்றும் சந்தோசமாக இலங்கையில் இருக்க முடிகிறது. அவருக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றால் பாருங்களேன்.

ரதனுக்கும் இராணுவத்துடன் தொடர்பா நம்ப முடியவில்லை?

அன்புத் தம்பி கஜனின் உதவியுடன் ராணுவ புலனாய்வு துறையினருடன் நெருக்கமான தொடர்புகனை ரதன் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே துணிந்து முள்ளிய வாய்க்கால் பற்றியும் நடக்காத சம்பவங்களை நடந்ததாகவும் கூறி மக்கள் ஆதரவை பெற முனைகிறார். இராணுவத்துடன் தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்த எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. விரைவில் வரும்.

முடிவெடுங்கள்?

இப்போ முடிவெடுங்கள் யார் இந்த ரதன் என்று. குடும்பம் ஒன்றின் பொட்டழித்து வேடிக்கை பார்க்கும் இவன் தேவைதானா? இராணுவத்துடன் கூட்டியங்கும் இவன் தேவைதானா? முடிவு உங்களிடம். எனவும் கூறப்பட்டுள்ளது.

 

http://goldtamil.com/?p=4921

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, வவுனியா மாவட்ட புத்திஜீவிகள், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள், வவுனியா நகர எல்லைக்குட்பட்ட மக்கள்

 

அப்ப நீங்கள் எல்லாம் இராணுவத்துக்கு எதிரானவர்கள் என்றால் இதுவரை என்ன செய்து கிழித்தீர்கள் என்று ஒரு பட்டியல் போடலாமே?

 

அதுக்குப்  பிறகு மிச்சத்தை உண்மையோ பொய்யோ என்று பார்க்கலாம்!

கூட்டமைப்பு தேவைக்கு மேலதிகமான வேட்பாளர்களைப்ளி போட்டிருக்கு. எனவே ரதன் வெல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால்:

 

கட்டுரையே எந்த இடத்திலும் ஒழுங்ககாக எழுதப்படவில்லை. தேர்தல் நேரம் இதை மேடைகளில் கூறாமல் ஏன்தானோ துண்டுபிரசுரம்?

இந்த கட்டுரையே பெரும் குழப்பமா இருக்கு புத்தியீவிகள் என்று இருக்கு அதற்க்குள் ஓட்டுக்குழுக்கள் என்று இருக்கு. புலிகளுக்கு உதவினார் என்று இருக்கு இல்லை என்று இருக்கு இனி இதை வாசிக்க எஸ் ஜே சூர்யா தான் வரணும்  :blink: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.