Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமெல்லாம் கோழைகளா ?? இல்லை நம் நாடு கோழை நாடா??

Featured Replies

536734_229185587229958_559241494_n.jpg
நாமெல்லாம் கோழைகளா ?? இல்லை நம் நாடு கோழை நாடா??

6 வருட பாஜக ஆட்சியில் நாடு எப்படி இருந்தது?

நான்கு மற்றும் ஆறு வழி சாலை, அணுகுண்டு சோதணை 4 இந்திய ராணுவ வீரர்களை கொன்றதற்கு கார்கில் போர்..... போரில் வெற்றி.... பாகிஸ்தான் பயந்தது....சீனா வாயே பேச வில்லை... அணுகுண்டு சோதணை நடந்த போது அமெரிக்கா நம் மீது பொருளாதர தடை விதித்தது... பின் அமெரிக்காவே அந்த தடையை விலக்கியது....ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து... மற்ற எல்லா நாடுகளும் நம்முடன் நெருங்கி வந்தது... ஜ.நா சபையில் இந்தியாவை உறுப்பினராக்க வேண்டும் என்று எல்லா வல்லரசு நாடுகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தன...

உலகமே இந்தியாவை கண்டு பயந்தன.... இவையெல்லாம் யாரால் நடந்தது... ஒரு தேச பக்தி மிக்க பாஜக தலைவன் வாஜ்பாய் அவர்களால்.....

ஆனால் இன்று இலங்கை, பங்களாதேஷ், மியான்மர் போன்ற சின்ன நாடுகள் கூட நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன..... நாமெல்லாம் கோழைகளா ?? இல்லை நம் நாடு கோழை நாடா??

அந்த அளவு நாம் கோழை நாடாகி விட்டோம்..... 

இது யாரால் .......?

நன்றி திரு .பாரதி ராஜா...

 
நன்றி முகனூல் 
 

 

 

ஆனால் அத்வானி போன்ற பா.ஜ.க.காரர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்களைப்  போல மிக மோசமான பேர்வழிகள்!

பஜக வந்தால் இனி மாலைதீவுதான் இந்தியாவுக்கு அடிக்கப் போகும். அதிலும் பார்க்க காங்கிரசோடையே இருந்துவிடலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்
அந்த அளவு நாம் கோழை நாடாகி விட்டோம்...

 

 

மணிசர்மாவுக்கு யாராவது கும்மி இருந்தால் கோழை நாடில்லை என்று சொல்லி இருக்கலாம். :D  அது கூட நடைபெறவில்லையே.

நரேந்திர மோடி ஒருவர்தான் ஏதாவது தகுதி உள்ளவர் போல இருக்கிறார். அவரால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். மேற்கு நாடுகளிடம் அவரைப்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மேற்கு நாடுகளுக்கு முஸ்லீம் மதத்தை தெரியும். பாகிஸ்தானை தெரியும். இதனால் அவர்கள் தெரியாத இந்து பக்கத்து மோடியை மதிக்கப் போவதில்லை. அவர்களுக்கு சோனியா பழகிக்கொள்ள பரீட்சயமான இத்தாலி முகமுள்ள ஆள்.

 

சென்ற தடவை ப.ஜ.க பதவிக்கு வந்த போது இந்திரா காந்தி கிழக்குப் பாகிஸ்தானை பிரித்திருந்தா. இலங்கையை தாக்க தயார் பண்ணியிருந்தா. ரீகன் இந்திரா காந்திக்கு பாடம் படிப்புக்க சந்தர்ப்பம் தேட வேண்டியிருந்தது.  ரஜீவ் இலங்கை மீது படையெடுத்திருந்தார்.  தோல்வி என்றாலும் அது சமாதான படையாக பார்க்கப்பட்டது. அந்த தோல்வி கூட பயங்கரவாதமாக புலிகளின் மீதி பழி போடப்பட்டது. அமெரிக்கா வியட்நாமில், சோவியத் ரஸ்சியா ஆப்கானிஸ்தானில், இந்தியா இலங்கையில் என்று இந்தியாவை அது அமெரிக்க, சோவியத் ரூசிய வரிசைக்கு  நகர்த்தியிருந்தது. இதில் ப.ஜ.க. இலங்கையில் மட்டும் தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்தது. அதை சீனா, பாகிஸ்த்தான் போன்ற எதிரி நாடுகள் இந்தியாவின் பலவீனமாகப் பார்க்கவில்லை. 

 

இன்று இந்தியா என்ற சுப்ப பவர் உள்ளெ கறையான் அரித்த கோறை போந்த மரம் என்பது இலங்கையின் அண்மைக்கால நடவடிக்கைகளால் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. மன்மோகன் சிங் வெளிப்படையாக, இந்தியாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது என்று பல தடவைகள் கூறிவிட்டார். பொதுநல வாயத் தலைமைப் பதவி கிடைத்த பின்னர், இலங்கை இந்தியாவை இரண்டு வருடங்கள் போட்டு குட்டு குட்டு என்று குட்ட போகிறது. இதை பற்றி விபரமான திட்ட மொன்றை சீனா - பாகிஸ்த்தான் - இலங்கை என்று மூன்று நாடுகளும் சேர்ந்து தம்முள் விவாதித்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்தப் பயத்தால் கமலேஸ் சர்மா இலங்கையுடன் ஒத்து மட்டுமே போக வேண்டும், எதிர்க்கக் கூடாது என்று சொல்கிறார். கியூபாவை அடக்க அமெரிக்கா தான் சோவியத் ரூசியாவை தாக்குவேன் என்று மிரட்டித்தான் கியூபாவை அடக்கியது. கமேஸ்சர்மா இப்படி ஒரு சின்ன நாட்டை எதிர்க்க கூடாது என்ற வெக்க கேடான கதையை இலங்கை அதிகாரிகளிடம் வாங்கும் பணதுக்காக சொல்லியிருக்கிறார்.

 

மாலை தீவும்  இதே பொறிமுறையை பாவிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது இந்தியா மீது சின்ன எதிர்ப்புக்காட்ட சீனாவிடம் இருந்து கணக்கில்லாத உதவிகளை பெற ஆரம்பித்துவிட்டது. அதுவெளிப்படையாகவே, அடக்குமுறை சுப்ப பவர் நாடுகளை சமாளிக்க, தான் இலங்கையின் பாதைகளை பின்பற்றுவதாக கூறிவிட்டது. 

 

இந்த நிலையில்,   இந்திய பாதுகாப்பு கொள்கையும், வெளியுறவுகொள்கையும், பழிவாங்கலுக்காக அழிக்கப்பட்டு, சீனாவின் பணத்தை சிவசங்கர மேனன் போன்றோர் இலங்கை அரச குடும்பத்திடமிருந்து கைநீட்டி வாங்கி, அடிமை சீட்டு எழுதிக்கொடுத்த பின்னர், இன்று  மோடியால், இந்த அவரச நிலையை சமாளிக்க என்ன செய்யலாம் என்பது தெரியாது.

 

இந்த பலவீன பார்வையை மாற்ற இன்னொரு தடவை பாகிஸ்தானை பிரிக்க வேண்டும்.(பாலூயிஸ்த்தான- பாகிஸ்த்தான்) அல்லது காஸ்மீரை முழுவதாக பிடிக்க வேண்டும்.  அது இல்லாதவரைக்கும் இனி சீனாவும், பாகிஸ்த்தானும் ஏறி மிதிப்பதை மோடியால் எதுவும் செய்ய முடியாது. 

Edited by மல்லையூரான்

இதைதான் தான் போக வழியில்லை அதற்குள் எலிக்குஞ்சு விளக்குமாறையும் தூக்கிய கதை .

இதைதான் தான் போக வழியில்லை அதற்குள் எலிக்குஞ்சு விளக்குமாறையும் தூக்கிய கதை .

ஆனால் "சக்கரை மலையை எறும்புகள் காவிக்கொண்டு போவது" உண்டு.

 

என்ன செய்ய PLOTE  மாலைதீவை தாக்குகிறது. இலங்கை இந்திய மீனவரை தாக்குகிறது.  

 

தனது பலத்தை அறிந்த பட்சர் நாய் (Badger) கரடியை தாக்குகிறது. மூக்குக்குள் உள்ளடும் சிலந்தி யானையை விழுத்துகிறது. சிங்கத்தின் பலத்தை அறியாத கையீனாக பலதடவைகள் மாட்டுப்படுவதுண்டு.

 

கன எலிகள் பின்னாலும் முன்னாலும் தொடர்ந்து திருத்தும் போது ஒரு எலியும் மண் எடுப்பதில்லை. இப்படியே சுண்டெலிகள் சேர்ந்து விளக்குமாற்றை காவுவதில்லை. எறுபுகள் அப்படியல்ல என்பதை "சக்கரை மலையை எறும்புகள் காவிக்கொண்டு போனது" என்ற பழமொழி சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

------

இன்று இந்தியா என்ற சுப்ப பவர் உள்ளெ கறையான் அரித்த கோறை போந்த மரம் என்பது இலங்கையின் அண்மைக்கால நடவடிக்கைகளால் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

------

இந்த பலவீன பார்வையை மாற்ற இன்னொரு தடவை பாகிஸ்தானை பிரிக்க வேண்டும்.(பாலூயிஸ்த்தான- பாகிஸ்த்தான்) அல்லது காஸ்மீரை முழுவதாக பிடிக்க வேண்டும்.  அது இல்லாதவரைக்கும் இனி சீனாவும், பாகிஸ்த்தானும் ஏறி மிதிப்பதை மோடியால் எதுவும் செய்ய முடியாது. 

 

சரியான உதாரணம் மல்லையூரான்.

இந்தியாவை புற்று நோய் முற்றிய, நோயாளியின் நிலைக்கு... தள்ளி விட்டது காங்கிரஸ்.

காங்கிரசின் இத்துப் போன அயலுறவுக் கொள்கையும், துணிவில்லாத அரசியல் வாதிகளும் செய்த வேலை இது.

இனி... இந்தியா தப்பிப் பிழைக்க வழி ஏதும், இருப்பதாக தெரியவில்லை. மரணம் நிச்சயம்.

இந்தியாவை முதலில் ஒரு இந்தியன் ஆழவேண்டும். நேரு குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்கி சுருட்டிய 200 பில்லியன் டொலர்களை இத்தாலியில் அனுபவிக்கலாம்.

இந்தியாவை இந்தியன் ஆளவேண்டும் தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும்.

 

அதிலும் மானமுள்ள தமிழனாக இருக்க வேண்டும்.

 

 

நடப்பதுக்கு சந்தர்ப்பங்கள் குறைவா? இருந்தாலென்ன உண்மையை சொல்லித்தானே ஆகவேண்டும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கும்பல் இங்க .. ???எதுக்கு கூட்டம் போடறீங்க.. 

என்னது பாகிஸ்தான்காரன் இந்திய ராணுவ வீரன் தலையை கொய்துட்டானா.. அஞ்சு பேரையா .. அதுக்கு இன்னா பண்ணணும்குற நீ.. போருக்கு போகணுமா .. 

மடப்பயலே போருன்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு.. என்னமோ ஊருக்கு போறது மாதிரி அவ்வள சுலபமா சொல்றே.. 

போய் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பாரு.. அவனுங்க எடுத்த அஞ்சு விக்கெட்டுக்கு நம்ம ஆளுங்க பத்து விக்கெட்டும் எடுத்து பதிலடி தருவானுங்க .. நீ விசிலடிச்சிட்டு கண்ணை தொடைச்சிக்கோ.. கவலைப்படாதே.. போ, போ, போயிட்டே இரு, அங்க கூட்டம் போடாதே.. 

ஏய் வண்டிக்காரா, எங்கடா தொண்டில வரே.. போடா அந்தப்பக்கம் !

 

-முகநூல்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.