Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் நான்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரங்களின் விரைவான fatigue இயல்பு காரணமாக.. காங்கிரீட்டை பாவிக்கிறார்கள். பிரிட்டனிலும் அதிகம் காங்கிரீட் இரயில் பாதைகள் தான் அமைக்கப்படுகின்றன. இவை மரங்களை விட நீண்ட காலம் உபயோகத்தில் இருக்கக் கூடியவை..! கட்டடங்கள் போல..! :)

மரம் போடுவது மலிவாக இருக்கும்! ஆனால், காட்டுப்பகுதிகளால் போகும் புகையிரதப் பாதைகளில், 'கறையான்' பிரச்சனை அதிகம்! 

மரத்தைக், கழிவு எண்ணெய்' மூலம் அடிக்கடி, பராமரித்துக்கொண்டிருக்க வேண்டும்! 

ஆனால், சீமேந்துச் சிலிப்பர்கள். கல்லுக்கு மேலே மிதப்பதைப் பார்ப்பது, இது தான் முதல் தடவை! :o

'அறுதலி' தலையில அம்பட்டன் பழகிற மாதிரியோ தெரியாது! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பெராவில் சிவில் படிச்ச எனது நண்பனின் தம்பி ஒருவன் ரயில்வேத் திணைக்களத்தில் தான் வேலை செய்கிறான். ஓமந்தை - காங்கேசன்துறை திட்டத்தில் அவனும் இளைய பொறியியலாளராக (junior engineer) வேலை செய்கிறான். மார்கழிக்குள் யாழ்மட்டும் பாதையை போட முயற்சிக்கிறார்கள். அநேகமான பால வேலைகள் முடிந்துவிட்டன. புகையிரத நிலையங்ககளை மீள அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு, குறிப்பாகப் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதற்கு புகையிரதம் மிகச்சிறந்த ஊடகம்.

இதென்ன சிலிப்பர் கட்டைகள் (கான்கிரீட் ஸ்லாப்) சரளை கற்களுக்கு மேலாக மிதக்கிறது? கற்களினுள்ளே அமிழ்திருக்க வேண்டாமோ? இங்கெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. :o

ஆனையிறவு, நாவற்குழி ரயில் பாலங்களெல்லாம் சரிசெய்தாயிற்றா? :huh:
 
வேகமாக நடக்கும் வேலைகளைப் பார்த்தால், இவை வளங்களை மொத்தமாக கூடிய விரைவில் நகர்துவதற்க்கான வசதிக்கு என தோன்றுகிறது.

வணக்கம் வன்னியன் அண்ணா, 25 வருடங்களுக்கு முன்னர் புகையிரதம் ஓடியபோது நகர்த்தாத வளங்களையா இப்போது நகர்த்தப் போகிறார்கள்? அதுசரி, தெற்கில் இல்லாத யாழ்ப்பாணத்தில் உள்ள வளம் என்ன? யாழ்ப்பாணத்தில இப்ப மனித வளம் கூட இல்லை. ரோட்டுப் போட, வீடு கட்ட, மேசன், தச்சு வேலை செய்ய, ஏன் கூலி வேலைக்குக் கூட தெற்கிலிருந்து தான் ஆக்கள் வந்து செய்கிறார்கள். தற்போது யாழில் இருக்கும் skilled labour இன் அளவு மிகவும் குறைவு.

அவ்வளவுயர சிலீபர் கட்டைகளை பார்த்தில்லை. பார்த்தால் சிலீபர் கட்டைகள் மாதிரியில்லை. ஸ்ராண்டர் கட்டைகள் மாதிரி இருக்கு. இந்த உயரத்திற்கு கல்லு போட்டு நிறைப்பார்களா?

இது பறக்கும் தொடரூந்தாம்! அதுதான் உயர்த்திப் போட்டுள்ளார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னியன் அண்ணா, 25 வருடங்களுக்கு முன்னர் புகையிரதம் ஓடியபோது நகர்த்தாத வளங்களையா இப்போது நகர்த்தப் போகிறார்கள்? அதுசரி, தெற்கில் இல்லாத யாழ்ப்பாணத்தில் உள்ள வளம் என்ன? யாழ்ப்பாணத்தில இப்ப மனித வளம் கூட இல்லை. ரோட்டுப் போட, வீடு கட்ட, மேசன், தச்சு வேலை செய்ய, ஏன் கூலி வேலைக்குக் கூட தெற்கிலிருந்து தான் ஆக்கள் வந்து செய்கிறார்கள். தற்போது யாழில் இருக்கும் skilled labour இன் அளவு மிகவும் குறைவு.

வணக்கம் தும்பளையான்...

நான் 'வளங்கள்' என குறிப்பிட்டது இராணுவ மற்றும் பாதுகாப்பு வளங்களையும், அதன் வழங்கல் வழிகளையும்தான்...

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

'இந்திய ரயில்வே'யின் தண்டவாளங்கள் அமைப்பு

2il0h35.jpg

மரத்தாலான சிலிப்பர் கட்டைகள், சரளைக் கற்களுக்குள் அமிழ்த்தி தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது

1z4bz1c.jpg

தற்பொழுது கான்கிரீட் சிலிப்பர் கட்டைகள், சரளைக் கற்களுக்குள் அமிழ்த்தி தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

.

பெராவில் சிவில் படிச்ச எனது நண்பனின் தம்பி ஒருவன் ரயில்வேத் திணைக்களத்தில் தான் வேலை செய்கிறான். ஓமந்தை - காங்கேசன்துறை திட்டத்தில் அவனும் இளைய பொறியியலாளராக (junior engineer) வேலை செய்கிறான். மார்கழிக்குள் யாழ்மட்டும் பாதையை போட முயற்சிக்கிறார்கள். அநேகமான பால வேலைகள் முடிந்துவிட்டன. புகையிரத நிலையங்ககளை மீள அமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு, குறிப்பாகப் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதற்கு புகையிரதம் மிகச்சிறந்த ஊடகம்.

மிகவும் நல்ல விடயம் ,,,,தலையிடி இல்லாமல் யாழ்ப்பாணம் போகலாம்

இங்கு நிறைய பேர் RailwayEngineers இலும் பார்க்க கெட்டிக்காரர்களாக இருப்பதை நினைக்க... புல்லரிக்குது... :)

'இந்திய ரயில்வே'யின் தண்டவாளங்கள் அமைப்பு

2il0h35.jpg

இது இந்தியாவிலா? சந்தேகமா இருக்கிறது

(இந்த track US இல் Charleston என்னும் இடத்தில் உள்ளது http://www.charlestonrail.org/tag/north-charleston/page/2/)

Edited by naanthaan

இனி வெள்ளை வானிலை மினக்கெட மாட்டாங்கள். அக்கிடென்ற், தற்கொலை என்ட பெயரில மாற்றரை முடிச்சிருவாங்கள். :o

இந்த தண்டவாளத்தில என்னென்ன நடக்கப்போவுதோ? :o

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவிலா? சந்தேகமா இருக்கிறது

மரத்தாலான தண்டவாள மாதிரிக்காக (Sample) இணைக்கப்பட்ட படம் அது...

எந்த இடமென்பது தெரியாது..கூகிளாண்டவர் புண்ணியம்.

தவறிருப்பின் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

மரத்தாலான தண்டவாள மாதிரிக்காக (Sample) இணைக்கப்பட்ட படம் அது...

எந்த இடமென்பது தெரியாது..கூகிளாண்டவர் புண்ணியம்.

தவறிருப்பின் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

உங்களை குறை பிடிக்கவேண்டும் என்று நான் இதை கூற வில்லை...இந்தியாவிலும் நல்ல Railway Engineers and Managers உண்டு...ஆனால் என்ன Indian finishing quality உடனடியாக அடையாளம் காணலாம்...

கீழே உள்ளது same track switch in Shimla

trachswitch.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.